வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வழிபடுவதன் பலன்!!

நாங்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறோம். என் கணவர் சொந்தமாகத் தொழில் செய்கிறார். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது. அவர் அதையும் பொருட்படுத்தாது காரில் பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கும், எனக்கும் சுக்ர திசை நடக்கிறது. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். 
இங்கு என்னைத் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார். ஆனால் எனக்குத் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை உண்டு.
 எங்கள் குடும்ப நலன் கருதியும், அவரது ஆரோக்கியம் சீராகவும் பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரவும், பொருளாதார முன்னேற்றம் காணவும் வீட்டிலேயே நாங்கள் தெய்வ வழிபாடு செய்வதாக இருந்தால் எனது ஜாதகப்படி எந்த மாதிரியான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்? வீட்டில் தெய்வீகச் செடி வளர்த்தால் எந்த மாதிரிச் செடி வளர்க்கலாம்? (ஜானகி கிருஷ்ணன், பெங்களூர்).
பதில்:- தாங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்வதன் மூலமே விரும்பிய பலனை அடையலாம். குறிப்பாக 
உங்கள் பூஜை அறையில் உங்கள் இஷ்ட தெய்வப் படங்கள் அனைத்தையும் வைத்து வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்திருக்கிறீர்கள். எனவே தாங்கள் விரும்பிய விருட்ச வழிபாடும் பலன் தரும். வெளியில் தனியாக செல்ல இயலாத சூழ்நிலை இருப்பதால், உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேற வீட்டின் முன்புறத்தில் யோகம் தரும் இடத்தில் தொட்டியில் ஒரு மாடம் கட்டி அதில் துளசிச் செடியை வைத்து வழிபாடு செய்யலாம்.
துளசி செடிக்கு அருகில் அதன் கீழே விளக்கேற்றி வைத்து, தினமும் மாலை நேரத்தில் வழிபடுவது நல்லது. ஜோடி தீபமாக ஏற்றுங்கள். கீழே கோலம் போட்டு அதன் மீது ஒரு தட்டு வைத்து அதில் விளக்கேற்றுவது நல்லது. கிருஷ்ணன் பாதமுள்ள அச்சு கோலத்தட்டு இருப்பது நல்லது.
 குறிப்பாக இருவருக்கும் சுக்ரதிசை நடப்பதால் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி கவசம் பாடி, துளசி மாதாவை வழிபட்டால் துயரங்களிலிருந்து விடுபட இயலும். ஒளி மூலம் தான் லட்சுமியை இல்லத்திற்கு வரவழைத்துக் கொள்ள முடியும். கலக்கும் இருளை விலக்குவது விளக்கு. நம் கலக் கத்தை போக்குவதும் விளக்கு வழிபாடுதான். இதை அடிப்படையாக வைத்து ஆலயங்களில் கூட விளக்கு பூஜை வைக்கிறார்கள்.
எனவே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே விளக்கேற்றி வழிபட்டாலும், உள்ளன்போடு கசிந்துருகி வழிபட்டாலும், கோவிலை விட்டுக் கும்பிடும் வீட்டு வாசலில் வந்து வரத்தைக் கொடுப்பாள் லட்சுமி என்பதை அனுபவத்தில் அறிந்து கொள்வீர்கள். தெய்வீகத் தாவரங்களில் முதன்மையான தாவரமாக விளங்கும் துளசிச் செடி உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற தாவரமாகவும் அமைகின்றது.
கேள்வி:- என் மகளுக்கு வரன் பார்த்து வருகிறோம். அவர் அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்து வேலை பார்த்து வருகிறார். அமெரிக்க மாப்பிள்ளையே வேண்டுமென்று சொல்கின்றாள். வெளிநாடு செல்லும் முன்னதாக சூரியனார் கோவில், ஆலங்குடி, திருப்பாம்புரம், திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டு வந்தோம். திருமணம் எப்பொழுது முடிவாகும்? (எஸ்.காந்தரூபி, சுப்ரமணியன், சென்னை. 
பதில்:- தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி பார்க்கும் பொழுது சூரியனோடு, கேது இணைந்திருக்கிறார். கேது உங்கள் லக்னத்தைப் பாக்கிறார். 7-ல் செவ்வாய் குரு வீட்டில் இருப்பதால் செவ்வாய் தோஷமில்லை. களத்திர ஸ்தானாதிபதி 6-ல் மறைந்து விட்டார். உங்கள் புதல்வி பிறந்த தேதியும் 8, மாதமும் எட்டு, வருடத்தின் கூட்டுத் தொகையும் எட்டு, “எட்டுக்குரிய சனியோ ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாக இருக்கின்றார்.
 அவரோ வக்ர இயக்கத்தில் இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி ஜல ராசியில் இருப்பதால் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்கும். பிப்ரவரி 15-க்கு மேல் வரும் திருமணப் பேச்சுக்கள் பொருத்தமாக அமையும். சூரியனார் கோவில், திருப்பாம்புரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற தலங்களுக்கு சென்று யோகம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் நல்ல வரன்கள் அமையும்.
கேள்வி:- எனது ஜாதகத்தையும், எனது கணவரின் ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி உடல்நிலைத் தொல்லைகள் ஏற்படுகிறது. மும்பையில் சொந்த வீடு வாங்கலாம் என்று நினைத்துள்ளோம். எப்பொழுது அமையும்? (எல்.கீதா, மும்பை).
பதில்:- தங்கள் ஜாதகத்திலும் லக்னத்திற்கு 4-ல் சனி சஞ்சரிக்கின்றார். அதே நேரத்தில் அஷ்டமத்து சனி விலகிவிட்டது. 
எனவே இனி வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு கைகூடி வரும். தங்கள் கணவர் ஜாதகப்படி குரு ராசியைப் பார்க்கிறார். எனவே குரு பார்க்கக் கோடி நன்மை என்பதற்கேற்ப தற்சமயம் சொந்த வீடு வாங்கும் யோகம் உருவாகும். ஆனால் அதே நேரத்தில் பூமி காரகன்  செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே பூமி வாங்கும் பொழுது நன்கு ஆராய்ந்து வாங்குவது நல்லது.
கேள்வி:- எனது புதல்வரின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் உண்டா? வாடகை வீட்டில் வசிக்கும் யோகம் உண்டா? தற்சமயம் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றேன். ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? ஜாதகத்தை பார்த்துச் சொல்லும்படி கேட்டுக் கொள்கின்றேன். (ஜி.ராமகிருஷ்ணன், சென்னை).
பதில்:- தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கிறார். செவ்வாய்தான் பூமிகாரகன் என்பவர். அவர் ராகுவோடும் இணைந்து 12-ல் மறைந்திருக்கிறார். எனவே தான் வீடு வாங்கும் யோகம் இயற்கையிலேயே வந்து சேரும். பூமி நாதசுவாமி வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
கேள்வி:- எனது ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். இதுவரை நான்கு வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். இப்பொழுது சொந்த ஊர் வந்த பிறகு நிலையான வேலை இல்லை. எப்பொழுது வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லலாமா? சொந்தத் தொழில் செய்யலாமா? (வி.ரகுபதி, மதுரை).
பதில்:- உங்கள் ஜாதகப்படி தற்சமம் அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. இப்பொழுது சந்திரனுக்கு 9-ல் சனி, செவ்வாய், கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே, சுயதொழில் செய்வதை காட்டிலும் வேலைக்குச் செல்லும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது. ஏப்ரலுக்கு மேல் வெளிநாட்டு யோகம் கைகூடும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றன. சனி விலகியதால் வாய்ப்பிருக்கும் பொழுது திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது.
கேள்வி:- நான் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கின்றேன். எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? வீடு வாங்கும் யோகம் உண்டா? அல்லது வீடு கட்டும் யோகம் உண்டா? (ஆர்.ஸ்ரீதேவி, மயிலாடுதுறை).
பதில்:- தங்கள் ஜாதகத்தில் சகாய ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் பெற்று சனியோடு கூடியிருக்கிறார். எனவே வீடு கட்டும் யோகத்தை விட, வீடு வாங்கும் யோகமே அதிகம் இருக்கின்றது. உத்தியோக ஸ்தானாதிபதி சுக்ரன் பகை கிரகங்களுடன் இணைந்து சஞ்சரிப்பதாலும், ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதாலும், வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கேள்வி:- எனது சகோதரியின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? அவரின் ஜாதகத்தை பொருத்தம் பார்த்து அனுப்பினால், எந்த பதிலும் வருவதில்லை. திருமணத் தடைக்கு என்ன காரணம்? (ஆர்.அம்சவள்ளி, கோளியனூர்).
பதில்:- தங்கள் சகோதரியின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி சுக்ரன் பகை வீட்டில் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் சூரியன், கேதுவுடன் அஷ்டமாதிபதி புதனும், ராசிநாதன் 
செவ்வாயும் இணைந்திருக்கிறார்கள். மேலும் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகின்றது. எனவே, வரன்கள் வந்தாலும் பலன் இல்லை. இப்பொழுது குருவின் பார்வை அவரது ராசியில் பதிகிறது. எனவே திருமணப் பேச்சுகள் முடிவடையக்கூடிய வாய்ப்பு உண்டு. இனி மேல் வரும் திருமணப் பேச்சுக்களை பரிசீலனை செய்யலாம். அந்நியத்தில் நல்ல இடத்தில் திருமணம் முடியும். சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்

சென்னை பாரிமுனையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு   சனிதோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம். 
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்சனை இருந்தால், கனிகள் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், பிரச்சனைகள் தீருவதாக நம்பிக்கை. 
இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். 
இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது. திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருக்கவும், சனி தோஷம் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர். சிவன் சன்னதிக்கு முன்வலப்புறத்தில் தூணில் சிவ ஆஞ்சநேயர் இருக்கிறார். 
இவருக்கு வெள்ளி நிறத்திலான ஜரிகை பூசி, துளசி மாலை சாத்தி வணங்கினால் நாம் கண்ட நற்கனவுகள் பலிக்கும், தீய கனவுகளாக இருந்தால் அவை நம்மை அண்டாமல் விலகிஓடும் என பக்தர்கள் நம்புகின்றனர். 
எனவே, இவரை "கனவு ஆஞ்சநேயர்'  என்றும் அழைக்கிறார்கள். பிரகாரத்திலும் ஒரு ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடி உள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி.19.01.15

உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி அவர்களின் நாற்பதாவது பிறந்த நாள் இன்று ,19.01.2015..இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் தோழிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார் இறை அருள் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை..கொம் நவக்கிரி.கொம்.இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
பிறந்து விட்டாய் இந்த
பூமியை புரிந்து கொள்ள
பிறந்து விட்டாய் ....!!!
இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும்
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து
வீழ்ந்து விடாதே ....!!!
தூய சிந்தனைவேண்டும். 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


13வது திருமண நாள் வாழ்த்து சுதா ஜசோதா [19.01.15

பதின்மூன்றாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2015. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன்  தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை  அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
திருமண வாழ்த்து கவிதை
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும்
உயிருண்டென!
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
இவர்களின்
                                                              நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
இனியதிருமணநாள் நல் நல்வாழ்த்துகள்...

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

நோய் தீர்க்கும் இடுக்குப் பிள்ளையார்

கிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழைமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாயில்கள் உள்ளன. 

பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாயிலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

மேலும், இக்கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கிரிவலம் வருவோருக்கு வலி குறையும் என்பது ஐதீகம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

3வது திருமண நாள் வாழ்த்து லோவி ரஜீ [19.01.15]

  மூன்றாவது திருமணநாள் லோவி ரஜீ  இன்று 19.01.2015.  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு மகள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் >இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
 கல்யாண நாள் வாழ்த்து
கவிதை
அறுகு போல் வேரோடி
ஆல் போல் தழைத்து
இந்தமிழ்ச்சுவை போல் கூடி
ஈகை பல புரிந்து
உற்றமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த உடல் பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய்
ஓங்காரத்துடன்
ஓளடதங்கள் அருளி
ஃதோடு வாழ்வாங்க்கு வாழியவே.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

பிறந்தநாள் வாழ்த்து பாக்கியராஜா கணேசலிங்கம் .17.01. 15


யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்  சு  தனது  அம்பதாவது
 பிறந்த நாளை  இன்று17.01..2015 சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் கொண்டாடுகின்றார் .இவரை
அன்பு அம்மா அன்பு மனைவி மகள் மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
  பிள்ளையார் இறைஅருள் பெற்று  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


                                 

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன் - 10 சுற்றுகள்
சுக்கிரன் - 6 சுற்றுகள்
சந்திரன் - 11 சுற்றுகள்
சனி - 8 சுற்றுகள்
செவ்வாய் - 9 சுற்றுகள்
ராகு - 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் - 5, 12, 23 சுற்றுகள்
கேது - 9 சுற்றுகள்
வியாழன் - 3, 12, 21 சுற்றுகள்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தைப்பொங்கல் கொண்டாட்டம்.

அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய தைப்பொங்கல் கொண்டாட்டத்தை 
வெகு விமர்சையாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் அடியர்கள்  கொண்டாடியிருந்தனர்.,இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு தமது தைப்பொங்கல் திருநாளை சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து தமது நன்றிகளை தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .15.01.15

எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்களுக்கும் இந்த இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் http://lovithan.blogspot.ch/.. சார்பாக என் இதயம் கனிந்த  இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நிழல்படங்கள்...

பிள்ளையார் துணை அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  
வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய நிகழ்வும் எம் பெருமான் விற்ரிருக்கும் அலைய..
                                                       நிழல்படங்கள் இணைப்புகள்...
                                                     ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை.----
 



 






இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.01.15.

நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ்  தனது  பிறந்தநாளை இன்று .11.01.2015.கொண்டாடுகி​றார். இவரை அன்பு அப்பா அம்மா ,தங்கை, மசன் மருமகன் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில்உற்றார்.உறவினர்களுடன் நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும்   மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில்சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றோம் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 
 

தோஷம் இருப்பவர்களுக்கு, வழிபாடுகளும் பரிகாரங்களும்

நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடுகளும் பரிகாரங்களும் உள்ளன. 

* செல்வ செழிப்புக்கு – தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். 

* கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு – பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும். 

* உடல் நலம் பெற – உப்பு காணிக்கை செலுத்த வேண்டும். 
* விஷத்தன்மை நீங்கிட – மஞ்சள் காணிக்கை செலுத்தலாம். 
* ஆரோக்கிய வாழ்வுபெற – நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தலாம். 
* சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு – தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கி சமர்ப்பிக்கலாம். 
* நீண்ட ஆயுள் பெற – நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
* நினைத்த காரியம் கை கூடுவதற்கு – பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும். 
* குழந்தை பாக்கியத்திற்கு – மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும். 
* மரங்களின் செழிப்புக்கு – மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் சமர்ப்பிக்க வேண்டும். 
* நாக தோஷ பரிகாரத்திற்கு – மஞ்சள் பொடி காணிக்கை, பால்– பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

குப்த கங்கை தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும்

தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. 
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்,
அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில்
ஆசி வழங்கி அருளுகின்றனர். 
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச்சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேர்த்திருவிழா

பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ பஞ்சரதபவனி  ஞாயிற்றுக்கிழமை.04.01.2015. காலை பல்லாயிரக்கணக்காண பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் இடம்பெற்றது.தரிசிக்க  நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பத்தர்ககள் திரண்டிருந்தனர்.  இடம்பெற்ற பஞ்சரத பவனிக் காட்சிகளை புகைப்படங்களில் காணலாம்.





இங்கு அழுத்தவும் தேர்த்திருவிழா நிழல் படங்கள் இணைப்பு

சனிப்பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்யும் முறை

ஒன்பது நவக்கிரகங்களுள் சனிபகவான் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்யும் கிரகமாவார். அதனாலேயே அவருக்கு மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. வான வீதியில் ஒருபாகை தூரத்தை கடந்து செல்வதற்கு சராசரியாக ஒருமாத காலம் ஆகிறது. 
ஆகையால் சனிக் கிரகத்தின் சராசரி தினசரி கலைகள் ஆகின்றன. வக்ரம், அதிகாரம் இரண்டு நிலைகளிலும் இந்த காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள் கதிகளின் முடிவாகும். 
இந்த முடிவின்படி சனிபகவான் ஒரு பாகையை கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு மாத காலமும் சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலமாகவே கொள்ள வேண்டும். 
எனவே சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்ட 15 நாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சனிபகவானை தரிசனம் செய்யலாம். இது பூரண நற்பலன்களைத்தரும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, ஆண்டு (2015) ஜனவரி 1–ந் தேதி

  ஆங்கில புத்தாண்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  (2015) ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு ஆஸ்தானமும், 2–ந் தேதி வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவும் நடக்க உள்ளன. அதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்கள் அவதிப்படாமல் இருப்பதற்காகவும், தரிசன வரிசைகளில் தள்ளுமுள்ளு நடக்காமல் தவிர்க்கவும் திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு திருமலை முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:– 

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய 2 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். முதியோர்கள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 1, 2–ந் தேதிகளில் திவ்ய தரிசனத்துக்கு அனுமதி சீட்டு வழங்குவதும், ஏகாதசி அன்று பிரத்யேக பிரவேச தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. 

300 ரூபாய் தரிசன டிக்கெட் துவாதசி அன்று வழக்கம்போல் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். 1–ந் தேதி விசேஷ நாட்களாக இருப்பதால் மூலவருக்கு பூலங்கி சேவை தரிசனமும், 2–ந் தேதி மூலவருக்கு அபிஷேகமும் நடப்பதால், தரிசன நேரம் குறைவாக உள்ளது. எனவே நேரடியாக வரும் வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். 

பக்தர்கள் கொண்டு வரும் தரிசன சிபாரிசு கடிதங்களும், தங்கும் விடுதிக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படும். வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் ஒரு டிக்கெட்டுக்கு 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வி.ஐ.பி.டிக்கெட் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும். 2 நாட்களுக்கு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. லட்டு பிரசாதம் 5 லட்சம் இருப்பு வைக்கப்படும். 

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் தரிசன வரிசைகளில் அதிக நேரம் காத்திருப்பதால் பந்தல்கள் அமைக்கப்படும். பல இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Powered by Blogger.