சிவனைப் பாடியே திட்டியவர்!


ஒருசமயம் சுந்தரர், தனது நண்பர் சேரமானை சந்திக்கச் சென்றார். அவர் சுந்தரருக்கு சில பரிசுகளை கொடுத்தார். அப்பொருள்களுடன் சுந்தரர் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, அவரிடம் விளையாட எண்ணிய சிவன், பூதகணங்களை அனுப்பி அவரிடமிருந்த பொருட்களை கவர்ந்தார். கலங்கிய சுந்தரர் அங்கிருந்த விநாயகரிடம் முறையிட்டார். அவர் சுந்தரரிடம், தனது தந்தைதான் அவரது பொருட்களை திருடச் செய்தார் என்று சொல்லியதோடு, அவர் மறைந்திருந்த இடத்தையும் காட்டினார். அதன்படி சிவன் மறைந்த இடத்திற்கு சென்ற சுந்தரர், தன் பொருளைக் கவர்ந்த சிவனை திட்டி பதிகம் பாடினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, அவரிடமே பொருட்களை திருப்பிக் கொடுத்தார்.  இந்த நிகழ்வு திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி தலத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் இக்கோயிலில் சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்தது, அதனை மீட்க சிவனிடம் முறையிட்டது, பொருட்களை மீட்டதும் மகிழ்ந்தது என மூன்று விதமான முகபாவனைகளுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.  இங்குள்ள சிவனை முருகன் வணங்கியதால், திருமுருகநாதர் எனப்படுகிறார். பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால், திரும்பக் கிடைப்பதாக நம்பிக்கை.

அருகம்புல்லும் பிள்ளையாரும்!


சுலபன் என்ற மன்னன் ஜம்பா என்ற தென்னாட்டு நகரம் ஒன்றை பெருமையுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனும் அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் நகரில் நடைபெறும் கதாகாலட் சேபத்தைக் கேட்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு கோயிலில் கதாகாலட்சேபம் நடக்கும் அரங்கில் ஏழை அந்தணன் ஒருவர் அமர்ந்திருந்தார். வறுமையின் கொடுமையினால் குறைந்த அளவு உடையுடனே அவர் காணப்பட்டார். தர்ம நெறியோடும்,

கருணையுள்ளத்தோடும் அரசாளும் மன்னன் அன்று ஏனோ விதியின் காரணமாக அந்த அந்தணரைப் பார்த்து சிரித்து விட்டார். மன்னரின் சிரிப்பால் மேலும் அவமானமடைந்த அவர் கூனிக்குறுகி அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் போய் நின்றார். அந்த நிலை மன்னனை மேலும் சிரிப்புக்குள்ளாக்கியது. அதைக் கண்டு அந்தணருக்குக் கோபம் தலைக்கேறியது. மன்னரைப் பார்த்து, ஏழ்மையில் வாழும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவு கெட்ட அரசே ! பல்லைக்காட்டி என்னைக் கேலி செய்ததால் நீ ஒரு எருதாக மாறக் கடவாய் ! என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணம் மன்னன் எருதாக உருமாறினான். தன் கணவர் எருதாக மாறியதைக் கண்ட அரசி அந்தணன் மீது கோபமுற்று, மன்னர் என்றும் பாராமல் கோபமுற்று என் கணவரை எருதாக மாறிட சாபம் கொடுத்த நீ பொதி சுமக்கும் ஒரு கழுதையாக மாறக் கடவாய் ! என்று சபித்தாள். அந்தணர் அடுத்த கணம் கழுதையாக மாறினார். கழுதையாக மாறினாலும் நெறி தவறாது அந்தணன் வாழ்ந்ததால் அவர் மீண்டும் அரசியாரை புல் சுமக்கும் பெண்ணாக சபிக்கவே அவ்வாறே அரசியாரும் உருமாறினாள்.

புல் சேகரித்துக் கொண்டு ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது காற்றும் மழையும் வேகத்தோடு துவங்கியது. மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆலயத்துக்குள் நுழைந்தாள் புல் சுமக்கும் பெண்ணாகிய அரசி. அதே கோயிலுக்குள் அடைக்கலம் பெற கழுதையான அந்தணரும், எருதாக மாறிய மன்னனும் நுழைந்தார்கள். புல்லைத் தின்று பார்ப்போமே என்றெண்ணி இருவரும் புல் கட்டை வாயைக் கொண்டு இருவருமாக அவிழ்த்தார்கள். சுவைத்து சற்று உண்டனர்.  அப்போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. புல் கட்டிலிருந்த அருகம்புல் கோயிலில் அருளாட்சி புரியும் விநாயகர் மீது பரந்து சென்று விழுந்தது. அன்று விநாயக சதுர்த்தியாதலால் விநாயகர் சன்னதி திறந்திருந்தது.

 பெருங்கூட்டமும் சன்னதிக்கு முன்னால் இருந்தது. பூஜை நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த கழுதையையும், எருதையும் மக்கள் விரட்டி அடித்தனர். புல்கட்டையும் அவை இழுத்துச் சென்றதால் புல் சுமக்கும் பெண்ணும் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன்னைச் சுற்றி சுற்றி வந்ததாலும், அவர்கள் மூலம் அருகம்புல் தன் மீது விழுந்ததாலும் விநாயகர் பேரானந்தம் கொண்டார். அம்மூவருக்கும் சுய உருவத்தை மீண்டும் அளித்து அழகிய வாகனத்தில் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். விநாயகருக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா இடத்திலும் கிடைத்திடும் அருகம்புல்லினால் மனதார அர்ச்சனை செய்தால் போதும், எந்தத் தீவினையும் நீங்கி விடும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறது இக்கதை.

சல்லி பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா

பொலிகண்டி சல்லியம்பதி விநாயகப் பெருமானுடைய தேர் திருவிழாவானது புதிய சித்திர தேரில் நடைபெற்றது அதன் காணொளி

ஒரே நேரத்தில் நான்கு தீர்தோற்சவம்சாமிகள் காணொளி

பொலிகண்டி சல்லிபிள்ளையர் ஆலய தீர்தோற்சவம் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒன்றாகும். மாசி மக நாளில் சல்லிபிள்ளையார் தீர்த் தோற்சவமும் வருவதால் பொலிகண்டியில் அமைந்துள்ள ஆலயங்களான உப்புத்தண்ணிர் பிள்ளையார், சல்லி பிள்ளையார், பத்ரகாளி அம்மன் மற்றும் கந்தவனக்கடவை முருகப்பெருமான் ஆகிய ஆலயங்களில் இருந்து பொலிகண்டி சந்தியில் அமைந்துள்ள தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தமாட வரும் காட்சிகள்.


Powered by Blogger.