வாரம் ஒரு கீரை! மணத்தக்காளி!

தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தக்காளியும் ஒன்று. அதிக அளவில் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்துக் குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம். இப்படிப் பயன்படுத்தும்போது, கீரை சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும். மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்துச் சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் சரியாகிவிடும். மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது!

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.