பிறந்தநாள் வாழ்த்து ராஜசசேகரம் மதுசன்.25.04.2014

 தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும் ராஜசசேகரம் மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2014.இவர்தனது உறவினர்கள் உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் தேவன் குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்{காணொளி ] .
                         

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
 
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையான சக்தி பீடமாக கருதப்படுகிறது. பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக் கோயில் அம்மனின் தனிச்சிறப்பு.
பச்சைப் பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்திகளையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் உள்ளிட்ட 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாள்களில் அம்பாள் அருள்புரிந்து வருவது இக்கோயிலின் புராண மரபு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் சித்திரை தேரோட்ட விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தினசரி காலையில் பல்லக்கு புறப்பாடும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தொடர்ந்து, தேர் கோயிலைச் சுற்றி வலம் வந்து பிற்பகல் 1.40 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவை முன்னிட்டு 1,200-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
17-ஆம் தேதி முத்துப்பல்லக்கும், 18-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும்  நடைபெற்றன..

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 29-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
தென்னிந்திய அளவில் மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஆகியவற்றை மையமாக வைத்து நடைபெறும் இத்திருவிழாவானது சைவ, வைணவ சமய ஒற்றுமைத் திருவிழாவாகத் திகழ்கிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 8-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா, தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. வரும் 29-ஆம் தேதி காலையில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
மே 10-ஆம் தேதி அழகர் கோயிலில் திருவிழா தொடங்குகிறது. 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் தோளுக்கினியனாக பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார். அவர் கள்ளழகர் திருக்கோலத்தில் வழியெங்கும் திருக்கண்ணில் எழுந்தருளியவாறு வருகிறார்.
13-ஆம் தேதி பகலில் மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறும். அன்று மாலை தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியில் கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 13-ஆம் தேதி இரவு தங்கி திருமஞ்சனமான பின்னர் தங்கக்குதிரையில் புறப்படும் கள்ளழகர் 14-ஆம் தேதி காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் மண்டகப்படியில் இறங்கி அருள்பாலிக்கிறார். அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் தங்குகிறார். 15-ஆம் தேதி காலையில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த பின்னர், அன்று இரவு ராமராயர்
 
மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். தசாவதாரம் விடியவிடிய நடைபெறுகிறது. 16-ஆம் தேதி நள்ளிரவு பூப்பல்லக்கும், 17-ஆம் தேதி காலையில் அழகர்மலைக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு ஆழ்வார்புரம் பகுதியில் தாற்காலிகப் பாலம், மண்டகப்படி அமையும் இடங்கள் சீரமைக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால், சிமிண்ட் தொட்டி கட்டி அதில் நீரை நிரப்பி அழகர் அதில் இறங்குவதற்கான ஏற்பாடும் நடந்து வருகிறது

திரு சின்னத்தம்பி அருளின் பிறந்தநாள் வாழ்த்து .22.04.2014.

பிறந்தநாள் வாழ்த்து நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்டதிரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் இன்று ,22.04.2014..இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்{காணொளி }

 

தமிழ் புதுவருடநல்வாழ்த்துக்கள் .2014ம்

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்கள்.
 2014ம் ஆண்டில் உதயமாகும் “ஜய” புதுவருடமானது அனைத்து தமிழ் மக்களின் வாழ்விலும் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு இந்த இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

தர்மராஜா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து இன்று.12.04.2014.


சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் தர்மராஜா தம்பதிகளின் முப்பத்தி ஆறாவது  திருமண நாள் இன்று. 12.04.14.இத் தம்பதிஜினரை சகோதர்கள், பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடன் இறைவன் ஆசியுடன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இனைந்து நாங்களும்  நவற்கிரி இணையயங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது,{ காணொளி,}
 

 
 பாலமுரளி தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து,10.04.14

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி தம்பதிகளின் பதின் ஆறாவது திருமண நாள் இன்று இத் தம்பதிஜினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது .தம்பதியர் இருவரும் இறைஅருள் பெற்று இனைபிரியாது சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டு காலம்வாழ்கவென எமது மனமுகர்ந்த நல்வாழ்த்துக்கள்...

 

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா ..

                       
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளை யார் ஆலய திருவிழா உற்சவங்கள்.பத்தர்கள் படை சூழ ,மிகவும் சிறப்பபாக நடை பெற்றது 03mr.04ap.2014.அதன், {,புகைப்படங்கள், இணைப்பு},,,

                                       


 
  
Powered by Blogger.