ஸ்ரீ சிவசுப்பிரமணியர் வாலஸ்தானம் 29.06.18

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலய வாலஸ்தானம்.29.06.2918.   இன்று  சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி   அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர்  ஆலய வாலஸ்தானம் திருவிழா 
 எம்பெருமான் திருவருள் கூடிய வேளையில் 
நடைபெற்றது 
இத்திரு விழாவில் பெருந்திரலான சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில்  இருந்தும்    முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று
 சிறப்பித்து கொண்டனர்.என்பது 
குறிப்பிடத்தக்கது.</ 




மா இலை எடுத்து வீட்டு வாசலில் கட்டினால் என்ன நடக்கும்

இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால், நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை, இந்தப் பக்கத்தை இ
டிக்க வேண்டும் என்கிறார்கள்.பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் கட்டுகிறார்கள். ஆனால் பணம் 
இல்லாதவர்கள் கடனை வாங்கி கட்டிய வீட்டை எவ்வாறு இடித்துக் கட்ட முடியும். அவ்வாறு வீடு இடித்துக் கட்டாமல் இருப்பதற்கு
 வழி உண்டா?ஒவ்வொரு வீடுகளுக்கும் அதற்கு கட்டக்கூடிய அமைப்பின்படி வயது உண்டு. நாம் ஒரு கல்லைச் சிலையாக செய்ய வேண்டும் என்றால் கூட அந்த கல்லை ஆண் கல்லா இ பெண் கல்லா என்று 
பார்க்க வேண்டும்.
ஆண் கல் என்றால் கல் மதம் வரும்.பெண் கல் என்றால் கல் பிசின் வரும். அலித்தன்மை உள்ள கல்லுக்கு கல் மதமும், கல் பிசினும் வரும். இவ்வாறு கல்லில் மூன்று வகைகள் உண்டு. பெண் கல் என்றால் பெண் சிலையாக வடிக்க வேண்டும். ஆண் கல் என்றால் ஆண் சிலையாக வடிக்க வேண்டும். சிற்பி கல் சிலையை செதுக்கும் பொழுது அவருடைய கால்கள் சிலையின் எந்த பாகத்திலும் படலாம்.

சிற்பி உருவத்தை முழுமையாக செதுக்கிவிட்டு கை விரல்களில் நான்கை மட்டும் செதுக்கி பின் கண்களை திறந்து விட்டால் சிலைக்கு உயிர் உண்டாகிவிடும். அதற்குப் பின் சிற்பியின் கால்கள் சிலையின் மேல் படக்கூடாது. ஏன் என்றால், கண்ணை திறந்து விட்டால் அந்தச் சிலைக்கு உயிர் வந்துவிடும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விமலேஸ்வரன் அலெக்ஸ்.28.06.18

 சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்  கொண்ட திரு திருமதி  (விமலேஸ்வரன்  ) பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்களின் பிறந்தநாள்  (28 06 2018) இன்று  இவரை அன்பு  அப்பா,அம்மா,அக்கா)அப்பம்மா குடும்பத்தினர்கள்அம்மப்பா அம்மம்மா   
மற்றும் அவரது உற்றார்  உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் .இணைந்து இவரை இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   
 சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா 27.06.18

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.27.06.2018 அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேரேறி வந்த நயினை நாகபூஷணி அம்மன்உலகெங்கிலுமுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின்
 வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்திலே அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேர் ஏறி 
அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணமாக அம்பாள் வெளி வீதியுலா எழுந்தருளிய கோலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, வடம் பிடித்து
 தேரிழுத்தனர்.
இம்மாதம் 14ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமான நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவத்தில் தொடர்ந்தும், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர்.  
14ஆம் நாளான இன்று காலை 5 மணிக்கு அம்பாளுக்கு விசாட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடிக்கம்பத்திற்கு தீப 
பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு நயினை அம்மன் பிள்ளையார் முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா கோசத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.
உலகின் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகவும் வரலாற்றுச் நீட்சி கொண்ட தலமாகவும் விளங்கும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் ஈழத் தமிழர்களின் தொல்பொருள் பெருமையாகும்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்ட நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் பல்வேறு காப்பிய ஆதாரங்களையும் சரித்திரப் பதிவுகளையும் கர்ணபரம்பரைக் கதைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>








பிறந்தநாள் வாழ்த்து திரு சபாரத்தினம் செல்வகுமாரன் 26.06.18

யாழ்  சங்கானையை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன்   அவர்களின்  பிறந்தநாள். (26:06:2018) இன்று இவரை அன்பு,அம்மா  அன்பு மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்ப ர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா நாளை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா நாளை காலை நடைபெறவுள்ளது.கடந்த 14ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமானது.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் அம்பாளின் தரிசனம் காண வருகைதருகின்றைமை குறிப்பிடத்தக்கது.
13ஆம் திருவிழாவான இன்று பகல் கைலைக்காட்சியும்,  இரவு சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது.ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்துக்களுக்கான வசதிகளை யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலாளர்கள், கடற்படையினர், பொலிஸார்,  தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர். படகு உரிமையாளர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு.நாகலிங்கம் வசந்தன் 25.06.18.

யாழ் காங்கேசந்துறை மாம்பிராய்  வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட
திரு.நாகலிங்கம் வசந்தன் அவர்களின்  பிறந்த நாள் . 25.06.2018.இன்று  .இவரை  அன்பு மனைவி அன்புமகன்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
சுவிஸ் சூரிச்சிவன்  மாவை க்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கருங்­கற்­க­ளால் நாவற்­கு­ழி­யில்அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை

யாழ் நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை 24.06.2018.அன்று திறந்து வைக்­கப்­பட்­டது.விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை
 கொண்ட, 11 மொழி­க­ளில் மொழி பெயர்க்­கப்­பட்ட திரு­வா­ச­கப் பாடல்­களை உள்­ள­டக்­கிய அரண்­மனை விருந்­தி­னர்­க­ளால்
 திறந்து வைக்­கப்­பட்­டது
.வாச­கம் பொறிக்­கப்­பட்ட அர­ணின் ஒவ்­வொரு தூண்­க­ளின் இடை வெளி­யி­லும் நான்கு சிவ­லிங்­கம் மற்­றும் நான்கு மணி­கள்
 வீதம் 108 சிவ­லிங்­க­மும் 108 மணி­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தட்­சணா மூர்த்­திக்கு அமைக்­கப்­பட்ட ஆல­யத்­தின் வழி­பாட்டை தொடர்ந்து 21 அடி­யில் தங்க முலாம் பூசப்­பட்ட பாம்­புச் சிவ­லிங்­கம் இருக்­கும், கருங்­கல்­லில் அமைக்­கப்­பட்ட தேர் திறந்து
 வைக்­கப்­பட்­டது.
அரண்­மனை உரு­வாக்­கு­வ­தற்கு பல­வ­ழி­க­ளும் பாடு­பட்ட சிற்­பக்­க­லை­ஞர், கட்­ட­டக் கலை­ஞர், செப்பு வேலை கலை­ஞர், கருங்­கல் வேலைப்­பா­டுக் கலை­ஞர்­கள் பொன்­னாடை போர்த்தி பதக்­கம் வழங்கி 
மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.கருங்­கற்­க­ளால் பொறிக்­கப்­கப்­பட்ட எழுத்து 
வேலை­களை 
செய்­த­வர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் பெயர்­களை கருங்­கல்­லில் பெயர் பொறிக்­கும் இளை­ஞன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. திரு­வா­சக அரண்­மனை நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நூலை சிவ­பூமி அறக்­கட்­ட­ளை­யின் பொரு­ளா­ளர் குக­தா­சன் வழங்கி வைக்க நல்லை ஆதீன முதல்­வர் 
பெற்­றுக்­கொண்­டார்.
நிகழ்­வில் விருந்­தி­னர்­க­ளாக ஆஸ்­தி­ரே­லியா மருத்­துவ நிபு­ணர் கலா­நிதி மன­மோ­கன் மருத்­துவ கலா­நிதி சிவ­கௌரி தம்­ப­தி­யி­னர், கொழும்பு மனித நேய அறக்­கட்­டளை தலை­வர் அபி­ராமி கயி­லா­ச­பிள்ளை, கம்­ப­வா­ரிதி இ.ஜெய­ராஜ், சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக் கழக பேரா­சி­யர் தி.பால­சந்­தர் தேசி­கர் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர்த்திருவிழா 23-06.18

சுவிஸ்  சூரிச்சில் அமைந்திருக்கும் அருள்மிகு சிவன்  ஆலய தேர்த்திரு விழா 
  23.06. 2018 இன்று  மிக சிறப்புடன் நடைபெற்றது.
காவடிகள் தீ்ச்சட்டிகள் பால்குடங்கள்  என அடியவர்கள் புடை சூழ நேத்திக்கடன்களை நிறைவேற்றியும்
இருக்க, சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிருந்தும்  பெருந்திரலான எம் பெருமான் சிவன் அடியவர்கள் கலந்து சிறப்பித்து பெருமானின்
 அருளை பெற்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை பிரபாகரன் 21.06.18

யாழ்.இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகமும் கொண்டிருக்கும்.திரு இராசதுரை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 21.06.2018.இன்று . இவரை  அன்பு மனைவி, பிள்ளைகள், ஊர்  உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   இவரை  வாழ்த்துகின்றனர்.இணைந்து இவரை
இணுவில் கந்தன்  இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிள்ளையார் ஆலயத் திருவிழாவில் பூ மாரி மழை பொழிந்த ஹெலிஹொப்ரர்

இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா
 வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.சோழ இளவரசி சீர்பாத தேவியினால் உருவாக்கப்பட்ட வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான
 பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை நேற்று பிற்பகல் விசேட பூஜைகள் நடைபெற்று, யானைகள் புடைசூழ ஊர்வலமாக வந்த பஞ்சமுக கணபதி தேரில் ஆரோகணம் செய்த காட்சி 
அனைவரையும் மெய்சிலிக்க வைத்துள்ளது.  அத்துடன் உலங்கு வானூர்தியின் மூலமாக பூ மழை பொழிய இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.18

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். இன்று (16:06:2018) . இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் சிறுப்பிட்டி.நெட்.நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


:பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி15.06.18

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  செல்வி தேவராசா  தேவதி. அவர்களின் பிறந்தநாள்  15.06.2018-இன்று  தனது 13.வது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  
 இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  மச்சான்    மச்சாள்மார்  . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
  நிலாவரை.கொம் 
 நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்
  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இவர் தலை சிறந்த பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவதி மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற 
கலைஞர் ஆவார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.18

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2018. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்   
மச்சாள்  சுவிஸ்    அமெரிக்கா   சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன்     லண்டன் ,  , கனடா, உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு நோய் நொடி இன்றி  எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி .13.06.18

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறண்ரோவை   வதிவிடமாகவு​ம் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13.06..2018..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்  
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்    இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சாயின் விக்கிரகத்திலிருந்து ஒளிக்கீற்று பக்தர்களை நோக்கி வீசியது

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா
 ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.அங்குள்ள பெருமளவு புலம்பெயர் தமிழ் சாய் அருள் வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.யாரும் எதிர்பாராத வேளையில் சாயின்
 விக்கிரகத்திலிருந்து ஒளிக்கீற்று
 பக்தர்களை நோக்கி வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி, திருவிழாவினை பதிவு செய்த கமராவில், ஒளிக்கீற்று வெளியானமை தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.சாயி தமக்கு நேரடியாக அருள் கொடுத்ததாக அங்கிருந்த பக்தர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா  -09.06.2018- சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 
காலை விசேட அபிஷேக 
பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.
விசேட அம்சமாக இன்று மாலை 4.45 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்றது.
பேரழகுக்கோலத்தில் ஆறுமுகப்பெருமான் 
மாப்பிள்ளைக் கோலத்தில் நடுநாயகமாக வீற்றிருக்க அருட்சக்திகளான வள்ளியும் தெய்வானையும் இருபக்கமும் அருட்சக்திகளாக காட்சி தர அந்தண சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்த திருக்கல்யாண காட்சியை என்னவென்று
 வர்ணிப்பது?
திருக்கல்யாண கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா

 ஈழத்திருநாட்டில்  யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும்
 - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா  (08.06.2018) வெள்ளிக்கிழமை அன்று  மாலை
    சப்பரத் திருவிழா   மெய் அடியார்கள்  கூட்டத்துடன்  வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




நமக்கு பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு

பிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் 
சிவபெருமான் ஆவார்.
சிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள
 காலமாகும்.
பிரதோசம் என்பதை பிர + தோசம் எனப் பிரித்து பாவங்களை போக்க வல்லது என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவதாக மக்கள் கருதுகின்றனர்.
பிரதோச வழிபாடு தோன்றிய முறை
முன்னொரு சமயம் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மந்தாகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் வைத்து பாம்பின் தலைப் பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் பிடித்து பாற்கடலை கடைந்தனர்.
அப்போது வலி தாங்காமல் வாசுகி பாம்பானது ஆலம் என்னும் விஷத்தைக் கக்கியது. அதே சமயம் பாற்கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் தோன்றியது. இவ்விரண்டும் சேர்ந்து ஆலாலம் விஷமாக மாறியது.
அது கண்டு தேவர்கள் அசுரர்கள் மற்றும் ஏனைய உயிரினங்கள் தங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி சிவபெருமானை சரண் அடைந்தனர். சிவனும் உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு தனது அம்சமான சுந்தரரை அனுப்பி ஆலால விஷத்தை எடுத்து 
வரும்படி பணித்தார்.
சுந்தரரும் விஷத்தின் அருகில் சென்று அதனை உருட்டி சிவனிடத்தில் சேர்த்தார். சிவனும் அதனை விழுங்க முற்பட்டார். விசம் சிவத்தினுள் இறங்கினால் உலக உயிர்கள் அழிந்துவிடும் எனும் எண்ணத்தில் உமையம்மை சிவனின் கண்டத்தைப் பிடித்து விசத்தை உள்ளே இறங்க விடாமல் தடுத்தார்.
சிவனின் கண்டத்தில் இருந்த விசம் அதனை நீல நிறமாக மாற்றியது. இதனால் சிவன் திருநீலகண்டன் ஆனார். பின்னர் உலக உயிர்களுக்காக நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சுந்தரர் ஆலால விசத்தை எடுத்து வந்து சிவனிடம் தந்து அவர் தனது கண்டத்தில் விசத்தை இருத்திய காலமே பிரதோச காலம் ஆனது.
பிரதோச வழிபாட்டு முறை
பிரதோச வழிபாட்டு முறையில் விரதமிருப்பது முக்கியமானது. முதன் முறையாக விரதமிருக்க ஆரம்பிப்பவர் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் வளர்பிறை சனிப் பிரதோசத்திலிருந்து 
தொடங்கலாம்.
பிரதோசத்தன்று அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளிர்ந்த நீரில் குளித்து சிவன் கோவிலிலோ அல்லது வீட்டிலோ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பகலில் இறைவன் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.
பகல் முழுவதும் உணவு உண்ணாமலும், சிலர் நீர் அருந்தாமலும் விரதத்தினை மேற்கொள்கின்றனர். பகலில் தூங்குவது தவிர்க்கப்படுகிறது. பின் மாலை பிரதோச வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு பின் இரவு வீடு திரும்பி குடும்பத்தினரோடு உணவருந்தி விரதத்தினை முடிக்கின்றனர்.
பிரதோச ஆலய வழிபாட்டு முறை:
பிரதோச நேரத்தில் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டின் போது சிவன் மற்றும் நந்திக்கு எண்ணெய், பால், நெய், தயிர், தேன், கரும்புச் சாறு, எலுமிச்சை, அரிசி மாவு, அன்னம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்படுகிறது.
பின் தூய ஆடைகளை அணிவித்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சித்து தீப தூபங்கள் காண்பிக்கப்படுகிறது. நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே சிவனைப் பார்த்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே
"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "
திருச்சிற்றம்பலம்'
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.