யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா நாளை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா நாளை காலை நடைபெறவுள்ளது.கடந்த 14ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமானது.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் அம்பாளின் தரிசனம் காண வருகைதருகின்றைமை குறிப்பிடத்தக்கது.
13ஆம் திருவிழாவான இன்று பகல் கைலைக்காட்சியும்,  இரவு சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது.ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்துக்களுக்கான வசதிகளை யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலாளர்கள், கடற்படையினர், பொலிஸார்,  தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர். படகு உரிமையாளர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.