கந்தசஷ்டி விழா கொண்டாடுவது ஏன்?

முருகப்பெருமான், சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்த நாள்தான் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்று தரிசனம் செய்ய கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பழனிக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். பழனி கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வரும் 24–ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
சாமிக்கு காப்பு கட்டுதலுடன் ஏராளமான பக்தர்களும் காப்புகட்டி விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது சுப்பிரமணியர் வள்ளி, தெய் வானையுடன் யாகசாலையில் எழுந்தருள்வார். மாலையில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிகச் சொற் பொழிவுகள் நடைபெறுகின்றன. இந்த விழா நாட்களில், பக்தர்கள் தொடர்ந்து ஏழு நாள் விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்வர். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து , நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார். திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் கண்ணாடிக்கு அபிஷேகம் ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். " சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

7–ம் நாளான வரும் 29–ந்தேதி வாழைத்தண்டு விரதத்துடன் பக்தர்கள் கந்தசஷ்டி விரதத்தை முடிப்பார்கள். விரதத்தை முடிப்பதற்காக பக்தர்கள் குழுவாக மண்டபங்களில் அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து, நைவேத்திய பிரசாதம் தயாரிப்பர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, கருவறையில் சாமிக்கு நைவேத்தியம் செய்து வாழைத்தண்டுடன் தயிர் கலந்து பிரசாதத்தை வழங்குவர்.
அன்று மாலை, அடிவாரம் நான்குரதவீதிகளிலும், சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் பத்மாசூரன், கதமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானு கோபன் ஆகிய சூரன்களை சுப்பிரமணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

மறுநாள் 30–ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி–தெய்வானைக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி, பழனி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தங்கும்விடுதிகள், பூஜை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மலைக்கோவிலில் பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பால முரளி சஞ்சைய்28.10.14

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்

சஞ்சைய் பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக

 இன்று(28 -10 -2014- கொண்டாடுகிறார்.

இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா  சித்தி பெறமகள் மாமா மாமி மார்

மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று

பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch /  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{பெரியப்பா   லோவிஅண்ணா   குடும்பத்தினர்   சுவிஸ்}

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>


                          

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா 24.10.14

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}. வின்
  பதின்ஓராவது பிறந்த நாள் 24.10.14 .இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் லோவிதன் அண்ணா.தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா.. 24.10.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
                                  அருளானந்தம் தம்பதிகளின். புதல்வி செல்வி அபிதா தனது
பன்னிரண்டாவது பிறந்த நாளை. 24.10.14.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் லோவிதன் அண்ணா.தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும்:சபரிமலை ஐயப்பன் கோவிலை

சபரிமலை ஐயப்பன் கோவிலை தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். பின்னர் இதுகுறித்து உம்மன்சாண்டி அளித்த பேட்டியில், "சபரிமலை ஐய்யப்பன் கோவில் அடர்ந்த காட்டு பகுதிக்குள் இருப்பதாலும், புலிகள் சரணாலயம் உள்ளதாலும் இங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர
 கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது. இதனால் திருப்பதி மற்றும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகளைப் போல சபரிமலை வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவித்தால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடியும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
  மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
 தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நோய் தீர்க்கும் நீரூற்று

நோய் தீர்க்கும் நீரூற்று
தேனி மாவட்டம், தெப்பம்பட்டியில் வருச நாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவிலுக்கு தெற்கே உள்ள ஒரு மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாய் பொங்கிக் கொண்டிருப்பதால் இதை ‘மாவூத்து’ என்றும்,
இத்தல முருகனை ‘மாவூத்து வேலப்பர்’ என்றும் அழைக்கின்றனர். இவ்வூற்று நீர், தோல் நோய்கள் முதற்கொண்டு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக பயன்படுவதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

சிவனின் இடது பக்கத்தைப் பெற சக்தி மேற்கொண்ட விரதம்

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார்.
பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார்.
ஆனால் தனது பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.
தனது ஆசிரமத்துக்கு வந்த அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கௌத முனிவர் கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார்.
முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாட்களும் கடும் விரதம் இருந்து சிவனைப் பூஜித்தாள். பார்வதி தேவியின் கடும் தவத்தால் மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்தார். இறைவனைக் கண்ட பார்வதி தேவி, ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள். ‘தந்தேன்’ என்றார் ஈஸ்வரன்.
“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க   முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத்தை அளித்தார். சிவனின் உடலில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
அப்போது, அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.  அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார் பரமேஸ்வரன்.
சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வல்லிபுர ஆழ்வார்!


vallipura
  வரலாற்றுப் புகழ்பெற்ற பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. காலை 8 மணியளவில் வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று 9.15 மணிக்கு சுவாமி தேரில் வலம் வந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். விசேட போக்குவரத்து சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டிருந்தது. நாளை புதன்கிழமை சமுத்திர தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. சந்திர கிரகணம் இடம்பெறுவதை முன்னிட்டு இம்முறை வழக்கத்துக்கு மாறாக பிற்பகல் 2.30 மணிக்கு சுவாமி தீர்த்தமாட சமுத்திரத்துக்குப் புறப்பட்டுச் சென்று அங்கு 3.30 மணியளிவல் தீர்த்தமாடிவிட்டு மாலை 5 மணிக்கு ஆலயம் திரும்புவார். நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை கேணித்தீர்த்தம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

  இங்கு அழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு
vallipura2

அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை நவராத்திரி விரதம் பிறந்த கதை!

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.மகிஷம் என்றால் எருமை. இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண் டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.
இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம். ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது. பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர்.
இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு...
சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர்.காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.
பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை , கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மïர வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.
அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே.
பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள் பவள் அவளே. முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.
அதில் முக்குணங் களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன் பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையுëம், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேëண்டும். வணங்குவதால் எதையும் பெறலாம்.
கல்வி,இசை,புகழ்செல்வம்தானியம்,வெற்றி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.ஆதிபராசக்தியை துர்க் கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித் தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.
இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடëக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.
நவராத்திரி விரதம்
பெண் கடவுள்களின் நவராத்திரி விரதம்பெண் தெய்வங்கள் 9 இரவுகள் கடுமையான விரதம் இருந்து அசுரர்களை வதம் செய்தனர்.அனைத்து பெண் தெய்வங்களும் இனைந்து வதம் செய்வதற்காக உருவாக்கபட்டவரே பரலக்ஷ்மி. இந்த பரலக்ஷ்மியைதான் ராதா என்று அழைக்கிறார்கள். பரலக்ஷ்மி என்பதில் பரா என்றால் சுப்பீரிம் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் நமது தேவியர்களின் வம்சாவளியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாடபட்டு வருகிறது.இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர்.
இந்த வழிபாட்டில் அலைமகள்,மலைமகள்,கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர்.விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு,பொறாமை, அறியாமை,பேராசை,போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.
9ம் நாள் தான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தெய்வங்களின் ஜோதிட முறைப்படி ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.நவராத்திரி பூஜை மாங்கல்யம் ஆனவர்களாள் கொண்டாடபடுகிறது.அதன் பின்பு நிலா வளம் வருகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து சாந்தகுமார் சபிரா 01.10.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் இரண்டாவது பிறந்தநாள்.01.10. 2014.இன்று வெகுவிமர்சாயாக தனது இல்லத்தில்உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார்  தம்பிமார்  அக்காமார்
 மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று  எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைத்து, பெயருக்கேற்றார் போல பிரகாசமாய். பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன்

 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும்  வாழ்த்துகின்றோம்..
 
இங்குஅழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு

Powered by Blogger.