ஜேர்மனியில் வைரஸ் தாக்கியதில் 6500 குழந்தைகள் பாதிப்பு

30.09.2012.By.Lovi.ஜேர்மனியில் வைரஸ் தாக்கியதில் 6500க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் பெர்லின், பிராண்டன்பெர்க், சேக்சனி, துரிங்கியா பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு இருப்பதாக ராபர்ட் கோச் பொது சுகாதார மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் பாதிப்புக்கு குழந்தைகள் சாப்பிட்ட உணவு தான் காரணம் என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெர்லினில் 2200 பேரும், சேக்சனியில் 2000 பேரும், பிராண்டன்பெர்கில் 1500 பேரும் வாந்தி, வயிற்றுப் போக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் நடவடிக்கை துறையின் அமைச்சரான இல்சே ஐங்னர், நோயின் காரணத்தை அறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Sodexo என்ற உணவு சேவை நிறுவனம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியிருப்பதால் அந்த நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீபன் டுர்ஹோல்ட், நாங்கள் உணவு வழங்கும் பள்ளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே நோய்ப்பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே இந்த வைரஸ் தாக்குதலுக்கும், நாங்கள் வழங்கிய உணவுப் பொருளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
குழந்தைகளை தாக்கியதாக கருதப்படும் “நோரோ வைரஸ்” வாந்தி, வயிற்றுப்போக்கை உருவாக்கும். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு எதிதாகத் தொற்றிக் கொள்ளும். உணவு, நீர், பாதிக்கப்பட்டோர் அல்லது தொற்றுக்குள்ளான ஏதேனும் ஒரு பொருள் மூலமாக விரைவில் பரவும் தன்மை கொண்டது.

ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர்


Sunday30September2012By.Rajah.வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவில்பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ வல்லிபுர ஆழ்வாரின் தீர்த்த உற்சவம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 15 நாளான
நேற்று தீர்த்த உற்சவம் வழமை போல பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் கடலில் நடைபெற்றது.

தீர்த்த உற்சவத்தைக் காண்பதற்காக பலபாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர்.ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள்


 
யூஸ் அண்ட் த்ரோ பைக்
            29.09.2012.By.Rajah.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ( யூஸ் அண்ட் த்ரோ ) பேனா, டம்ளர், ஏன் செல் போனைக் கூட பார்த்திருப்போம். ஆனால் யூஸ் அண்ட் த்ரோ “பைக்”கை பார்த்ததுண்டா ? பார்க்கவேண்டுமென்றால் அதற்கு நாம் இரண்டாம் உலகப்போருக்கு தான் செல்ல வேண்டும். ஆம் இரண்டாம் உலகப்போரில் தான் இந்த யூஸ் அண்ட் த்ரோ பைக்”கள் பயன்படுத்தப்பட்டன.
உலகப்போரில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் விமானத்திலிருந்து பராசூட் மூலம் கீழே இறக்கிவிடப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு சைக்கிள் வழங்கப்படும். அதன் மூலம்தான் அவர்கள் போர்முனையை அடைவார்கள். ஆனால் சாலைகள் சரியாக இல்லாத அந்த காலத்தில் சைக்கிளில் போர்முனையை அடைவது மிகவும் சவாலாகவே இருந்தது. இதனால் போருக்கு முன்னரே வீரர்கள் களைத்துப் போயினர். இதனால் சைக்கிளுக்கு பதிலாக சிறியரக பைக்’குகளை வழங்க ஆங்கில அரசு முடிவெடுத்தது
எக்ஸ்செல்சியர் என்ற பைக் நிறுவனத்திடம் சிறியரக பைக்’குகளுக்கு ஆர்டர் கொடுத்தது. அந்நிறுவனம் சிறியரக பைக்’குகளை தயாரித்து அதற்கு “வெல்பைக் ” என பெயரிட்டது. சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளின் அளவே இருக்கும் இந்த பைக்’கின் நீளம் 778 மி.மீ. 98 சி.சி. திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் என்ஜின் கொண்டது. எடையோ வெறும் 22 கிலோதான். தயாரிக்கும்போதே இதன் எடையை முடிந்த அளவு குறைத்துள்ளனர் இதன் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது சிரமம் இருக்ககூடாது என்பதற்காக. இதனால் தான் சாதாரண பைக்’குகளில் இருக்கக்கூடிய லைட், ஸ்டாண்டு, மட்காட், ஹாரன், எர்பில்டர், செயின்கவர், ஆகியவை இந்த பைக்கில் பொருதப்படவே இல்லை. மேலும் பெடலும் இல்லை இதனால் தள்ளிக்கொண்டே சென்று தான். ஸ்டார்ட் செய்யவேண்டும்.
யூஸ் அண்ட் த்ரோ
இந்த பைக் தயாரிக்கபட்டபோதே கழற்ற இயலாதவாறு சீல் செய்யப்பட்ட இரண்டு பெட்ரோல் டேங்குகளுடன் தயாரிக்கப்பட்டது. ஒருமுறை ஓட்டி பெட்ரோல் தீர்ந்துவிட்டால் அவ்வளவுதான் மீண்டும் பெட்ரோல் நிரப்பமுடியாது. பைக்கை தூக்கி எறியவேண்டியது தான். இரண்டு பெட்ரோல் டேங்குகள் எதற்கு என்று தெரியுமா ? ஒன்று வண்டியை ஓட்டுவதற்கு. மற்றொன்று வண்டியை எரிப்பதற்கு. ஆம் வீரர்கள் போர் முனையை அடைந்தவுடன் எதிரிகளுக்கு எவ்வித தடையமும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பைக்கை எரித்துவிட வேண்டுமென்று ஆங்கில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த மாடலில் மொத்தமாக 4,000 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் அதில் பெரும்பானவை அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது நூற்றுக்கணக்கான பைக்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவை சர்வதேச சந்தையில் மூவாயிரம் முதல் நான்காயிரம் டாலர்கள் வரை விலைபோகின்றன.
மேலும் பல வியப்பூட்டும் தகவல்கள் அடுத்த பதிவில் உங்களுக்காக காத்திருகிறது .அடுத்த பதிவில் சந்திப்போம்

இந்தியாவில் குழந்தைFriday28September2012  By.Rajah. தொழிலாளர்களால் செய்யப்பட்ட புட்பால் ஆர்டரை கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா நிறுவனம்.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது ஷெரின் புட்பால் கம்பெனி. இந்த கம்பெனி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள புட்பால் தயாரிப்பு கான்ட்ராக்டரிடம் புட்பால் தைத்து கொடுக்க ஆர்டர் கொடுத்தது. அதன்படி, புட்பால்கள் தைத்து அனுப்பப்பட்டன.
அவை ஆஸ்திரலியாவின் பல பகுதிகளில் விற்பனையாயின. மெல்பர்ன் நகரில் வசிக்கும் 6 வயது சிறுவனின் தந்தையும் ஒரு புட்பால் வாங்கி உள்ளார். அதில், தையல் ஊசி ஒன்று வெளியில் நீட்டிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷெரின் நிறுவனத்தில் புகார் தெரிவித்தார்.
இதே போல் வாடிக்கையாளர்கள் சிலரும் புகார் கூறியதால், உடனடியாக ஷெரின் நிறுவனம் தீவிர விசாரணை நடத்தியது. அப்போது, ஜலந்தரில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி புட்பால் தயாரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஷெரின் நிறுவன நிர்வாக இயக்குனர் கிறிஸ் லம்பெர்ட் கூறுகையில், இந்த ஆண்டு மட்டும் 9,000 புட்பால்களை தைத்து கொடுக்க இந்திய கான்ட்ராக்டருக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அவை குழந்தை தொழிலாளர்களால் தைத்து வழங்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, அவற்றை நிராகரித்து விட்டோம். மேலும், 4.5 லட்சம் புட்பால் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டோம் என்றார்

செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்ததுFriday28September2012செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அது கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெற்றிகரமாக அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை போட்டோ எடுத்து அனுப்பியது. மேலும், அங்குள்ள மலையின் பாறையை படம் எடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது எற்கனவே நடந்த ஆய்வில் தெரிய வந்தது.
தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இவை காலே கிராடர் எரிமலையின் வட பகுதியில் உள்ளது. அதன் மூலம் இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதை 'கேத்தாக்' என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோடை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வுக் கூடத்தின் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது இன்னும் 2 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்ளும். எனவே, செவ்வாய் கிரகத்தில் இருந்து இன்னும் பல அதிசய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கு

27.09.2012.By.Rajah.நிறைய பேர் சாப்பிட்ட பின் வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் வீட்டிலேயே நறுமணம் தரக்கூடிய, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் சில பொருட்கள் உள்ளன.
ஏலக்காய்: உணவு உண்ட பின் பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.
கொய்யாப்பழம்: பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மாதுளை: அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்

Google Street சேவையை விரிவுபடுத்​தியது கூகுள்

வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012.By.Rajah.பல்வேறு பட்ட இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தினால் Google Street என்னும் புதிய வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதாவது, உலகளாவிய தரைத் தோற்ற அம்சங்களை இணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடிய சேவையினை தற்போது கடல்கள், சமுத்திரங்கள் போன்ற நீர்நிலைகளுக்கும் விஸ்தரித்துள்ளது.
இச்சேவையினை கூகுளுடன் இணைந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும் The Catlin Seaview Survey நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.
இதன் மூலம் கடலடி உயிரினங்களையும், ஏனைய அம்சங்களையும் இலகுவாக பார்வையிட முடிவதுடன், பாறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நீரின் அடியில் பயன்படுத்தக்கூடியவாறு விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்

வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012,By.Rajah.கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள், எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
எலி ஒன்றின் உடலில் அடிபட்ட இடத்தில் ஊசி மூலம் உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால் வீக்கம் குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன.
இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம்.
கை, கால், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால் வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது.
உப்பு நீரை ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால் பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல் போன்ற எல்லா முறைகளும் வலி வீக்கத்தைக் குறைக்கின்றன.
கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர் இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று குளித்து நிவாரணம் பெறுகின்றனர்.
உண்மையில் வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது என்பதுவும் தெரியவந்துள்ளது.

14வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றதுகூகுள்[26.09.2012]

27.09.2012.By.Rajah.சர்வதேச அளவில் தேடல் தளங்களில் தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கும் கூகுள் தளம் தனது 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இன்று கூகுள் தளத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப செய்தியாக கூகுள் பிறந்தநாள் இருக்குமென்றால் அது மிகையாகாது.
கூகுள் பக்கத்திற்கு சென்றதும் கேக், மெழுகுவர்த்தியுடன் 14 ஆம் ஆண்டை குறிக்கும் Doodle ஆனது திரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கூகுள் தளமானது சட்டப்படி பதிவு செய்யப்பட்டு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியது.
கடந்த 2005ஆம் ஆண்டு வரை செப்டம்பர் 7 திகதியை பிறந்தநாளாக கொண்டாடிய கூகுள் நிறுவனமானது, சில ஆதாரபூர்வ தகவலின் படி தனது பிறந்தநாளை செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியாக மாற்றி கொண்டாடுகின்றது.
சரியான பிறந்தநான் திகதியினை கண்டுபிடிப்பதற்கு கூகுளிற்கு IBN உறுதுணையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அப்துல் கலாம் கூறியது போல கனவு கண்ட யாழ். இந்து மாணவன்

26.09.2012.By.Rajah.யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் 193 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ள நிலையில் அவனது எதிர்கால இலட்சியம் குறித்து தெரிவித்தவை ஒளி வடிவில்[காணொளி]
 


 


 

சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்

26.09.2012.By.Rajah.உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும்.
ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.
கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது.
அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.
இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும்.
மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள்.
இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.
இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.
ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்

தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி

26.09.l2012.By.Rajah.இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களிலும் சர்வசாதாரணமாக காணப்படும் மரங்களில் ஒன்று பப்பாளி. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உண்டு. இப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது.
கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
குறிப்பாக பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் சாப்பிடுவதே சிறந்தது

பட்டு போன்ற சருமத்திற்கு

26.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திற்கு பால் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பால் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது.
இத்தகைய சத்துக்கள் இருப்பதால் அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.
1. சருமத்தில் உள்ள பழுதடைந்த செல்களை மீண்டும் புதுப்பிக்க, 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.
2. பாலில் லாக்டிக் அமிலம் இருக்கிறது. இதனால் பாலை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
ஆகவே 1/8 கப் ரோஸ்மேரி மற்றும 1 தாட்பூட் பழத்தை எடுத்து அரைத்து, ஒரு கப் பாலுடன் கலந்து, அடுப்பில் தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் வைத்துக் கிளறி, பின் ஆற வைத்து காட்டன் வைத்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும்.
3. பாலின் நன்மைகள் உடனே தெரிய, பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனுடன் கலந்து, முகம் மற்றும கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பிறகு ஐஸ் கட்டிகளால் 2-3 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள தூசிகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
4. ஈஸியான முறையில் பாலை வைத்து ஒரு ஃபேசியல் போன்று செய்ய வேண்டுமென்றால், அதற்கு கொதிக்க வைத்துள்ள பாலை ஓரளவு ஆற வைத்து, காட்டனால் முகத்திற்கு 3-5 நிமிடம் தேய்க்க வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மட்டும் போவதோடு, சருமம் நன்கு அழகாகக் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சருமம் நன்கு பளிச்சென்று சுத்தமாக காணப்படும்.
5. சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து முகத்திற்கு தடவி காய வைக்க வேண்டும்.
காய்ந்ததும் சிறிது பாலை தொட்டு அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து பிறகு கழுவ வேண்டும்.
சரும சுருக்கத்தை நீக்குவதற்கு பால் மற்றும் தேனை கலந்து, முகத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமம் நன்கு இறுக்கமடைந்து அழகாக காட்சியளிக்கும்

தனது புதிய இணையத்தள வடிவமைப்பை அறிமுகப்படு​த்துகின்றது MySpace

26.09.2012.By.Rajah.பிரபல சமூக வலையத்தளங்களுள் ஒன்றாக விளங்கும் MySpace ஆனது தனது பயனர்களைக் கவரும் விதமாகவும், பல புதிய அம்சங்கள் உள்ளடங்கலாகவும் நவீன வடிவமைப்பில் உருவான இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகின்றது. இதன் மூலம் இலகுவான முறையில் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படுவதுடன், தெளிவானதுமான பின்னணியைக் கொண்டதுமாகக் காணப்படுகின்றது.
2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சமூக வலையமைப்பானது 2005-2008 வரையான காலப்பகுதியில் இணையப் பாவனையாளர்கள் மத்தியில் மிகுந்த பிரபல்யம் அடைந்திருந்ததுடன் பேஸ்புக்கின் வருகையுடன் பின்தள்ளப்பட்டிருந்தது.
தற்போது Specific Media LLC மற்றும் பிரபல பொப் பாடகர் ஜஸ்ரின் ரிம்பர்லேக் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இத்தளம் 25 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[காணொளி]


யாழ்ப்பாண மாம்பழ உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை

25.09.2012.By.Lovi.யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சுமார் ஐந்தாயிரம் மாங்கண்றுகள் நடுகை செய்யப்படவுள்ளதுடன் இவற்றின் ஆரம்ப வளர்ச்சிக்குத் தேவையான உரம் மற்றும் இதர ஊட்டங்களிற்கென எட்டுப் புள்ளி நான்கு மில்லியன் ரூபாவினை உலக விவசாய ஸ்தாபனம் (WAO) ஒதுக்கியுள்ளது. மேலும், அறுவடையாகும் மாம்பழங்களை உடனுக்குடன் சந்தைப்படுத்தவென சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் விசேட விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது 72 ஆயிரம் மாமரங்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அத்துடன் யாழ்ப்பாண மாம் பழத்திற்கு உள்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் நல்ல கேள்வி நிலவுகின்றது. ஆயினும் கூட யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடரும் சந்தைப்படுத்தல் குறைபாடுகளினால் மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வமின்றி காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

பிறந்த நாள் வாழ்த்து….உதயன்[காணொளி]

24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு  இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல  வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று  நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது  

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை !

         
24.09.2012.ByLovi.தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்
 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கருவறையில் செந்தமிழ்!

         
24.09.2012.By.Lovi. அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது! சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.
சுவர்ண பூமி என்றழைக்கப்படுகின்ற சுவிட்சர்லாந்தில் பேர்ண் நகரில் 16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சைவத்தமிழ் மாநாடும் அதனைத் தொடர்ந்து மாநாட்டில் செந்தமிழ் வழிபாட்டுப் பிரகடனம் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் சைவ உலகத் தமிழ் அறிஞர்களிடையே செய்யப்பட்டது.
நால்வரும் திருமுறைகளும்
அன்று முதலாவது நிகழ்வாக சமயக்குரவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான் என நால்வரையும் ஞானலிங்கேச்சுரர் ஆலயக்குருமார்கள் முரளி ஐயா, விக்னேஸ் ஐயா, கிரி ஐயா, சுரேஸ் ஐயா ஆகிய நான்கு குருமார்களும் நாயன்மார்களை காவிவர ஞானலிங்கேச்சுரர் அடியவர்களும், உலக சைவப்பேரவைத் தொண்டர்களும் பூமாரி பொழிய சசிஐயா, கிளிஐயா வெள்ளித்தாம்பாளத்தில் அருட்பெரும் செல்வர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்த செந்தமிழ்த் திருமறைத் திருமுறைகளைத் தாங்கிவர ஆரம்பமானது.
சைவ அறிஞர்களுக்கு வரவேற்பு
நால்வரும் திருமுறைகளும் மேடையில் எழுந்தருள, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தேவாரம் பாடி மாநாட்டினை ஆரம்பித்து நிகழ்ச்சித் தொகுப்பினை திருநிறை. சாமிக்கண்ணு தினேஸ்குமார் அவர்களிடம் கையளித்தார். மாநாட்டு வரவேற்புரையினை அருட்திரு. யோகன் ஐயா, ஞானலிங்கேஸ்வரர் திருத்தொண்டர் ஆலோசகர் ஆற்றினார். அவர் தனது உரையில் இந்நிகழ்வானது இறைவன் ஏற்பாடாகும் எனும் பொருட்பட ஆற்றி கூடியிருக்கும் திருக்கூட்டத்தையும் சைவத்தமிழ் அறிஞர் பெருமக்களையும் சைவநெறிக்கூடத்தின் பெயராலும் உலக சைவப் பேரவையின் பெயராலும் வரவேற்றார்.
சைவத்தமிழ்த்திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டின் தேவை தொடர்பாக யோகிராம் சுந்தர், யோகாசன ஆசிரியர் (யோகி), இலண்டன், வினாசித்தம்பி தில்லையம்லம், ஆலோசகர் ஞானலிங்கேச்சுரர் ஆலயத் திருத்தொண்டர்சபை, இளங்கோ ஏரம்பமூர்த்தி, தமிழாசிரியர், சித்தவைத்தியர், சைவநெறிக்கூடம் சிவபணிநிலையம், காட்முற் ஹஸ், சர்வமதபீடத்தின் தலைவர், சுவிஸ், சுப்பிரமணியம் உதயபாரதிலிங்கம், சுவிஸ் தமிழ் ஆசிரியர்சங்கத் தலைவர், சசிகலா இராஜமனோகரன், வைத்தியகலாநிதி, இலண்டன், கனகசாபாபதி சக்திதாசன், கவிஞர், டென்மார்க், சின்னத்துரை சிறீறஞ்சன், உச்சி முருகன்கோவில் நிறுவனர், இலண்டன், செல்லத்துரை மனோகரன், உலக சைவப்பேரவை செயலாளர், இலண்டன், செல்லத்துரை தேவராஜா உபதலைவர், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில், சுவிஸ், பொன்னம்பலம் முருகவேள், உலகத்தமிழர்பண்பாட்டு இயக்க தலைவர் சுவிஸ், குமரிநாடு இணையம், வள்ளுவன்பாடசாலை நிறுவனர், கந்தையா இராஜமனோகரன், பொறியியலாளர், கவிஞர், இலண்டன், இரா. சசிதரசர்மா, அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம், லுட்சேர்ன், வசந்தாதேவி பிரேமச்சந்திரன், உலக சைவப்பேரவை, இலண்டன், சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் (தொண்டர்), அறங்காவலர் நாகபூசணி அம்மன் ஆலயம், இலண்டன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.
திருமுறை வழிபாட்டுத் தீர்மானம்
செந்தமிழ்த் திருமறை வாழிபாட்டுத் தீர்மானம் 'சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்", ஞானலிங்கேச்சுரர் ஆலயக் குருவால் முன்மொழியப்பட்டது. 'உலகெங்கும் உள்ள சைவத் திருக்கோயில்களின் கருவறையில் சென்றது போக இனி செந்தமிழ்த் திருமறை வழிபாடே நடைபெறவேண்டும்" இதற்கு உலகத் தமிழ் அறிஞர்கள் யாவரும் கூடி நின்று உறுதி மேற்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இம்மாநாட்டிற்கும் தீர்மானப்பிரகடனத்திற்கும் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார் தலமைதாங்கியிருந்தார். மாநாட்டு நிறைவுத் தீர்மானத்தினை சைவமாநாட்டின் பெயரால் சைவநெறிக்கூடத்தின் திருநெறிய தமிழ்நாயகம் "சிவருசி" த. சசிக்குமார் அவர்கள் வாசித்தளித்தார்.
மேலும் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் இன்றுமுதல் தீர்மானத்திற்கமைவாக தமிழ்படுத்தப்பட்டு "அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்" என வழங்கப்படும் எனும் அறிவிப்பினையும் தெரிவித்தார்.
வழிமொழிவினை திருநிறை. சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத் தமிழ்ச் சங்கம் சுவிஸ், கூடியிருந்த அடியவர்களின் பெயரால் வழிமொழிந்தார். குமரி இணைய நிறுவனர் பொ. முருகவேளும் வழிமொழிவில் இணைந்துகொண்டார் தமிழார்வலர் அனைவரின் பெயராலும். வழிபாட்டு தீர்மானத்தினைப் போற்றி சிறிதரன் திருநாவுக்கரசு, சைவ தமிழ் பண்பாட்டுப்பேரவை, டென்மார்க், வைரமுத்து சண்முகராஜா, ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை, சிவஈஸ்வரன் சிவனுஜன், உயர்கல்வி மாணவர், ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை தொண்டர் ஆகியோர் பேசினர்.
அரியபுத்திரன் நிமலன் நன்றி உரையுடன் வாழ்த்து அனுப்பியிருந்த அனைவரையும் நிரலிட்டு வாசித்தளித்தார். நிறைவில் தலைமை உரை ஏற்று நடாத்திய திரு. மு. பெ. சத்தியவேல் முருகனார் பல பேச்சாளர்களும் சுட்டிக்காட்டிய அனைத்து தகவல்களுக்கும் பதில் அளிக்கும் முகமாக உரை ஆற்றியதுடன் பேச்சாளரில் ஒருவர் தாய்மொழியில் வழிபாடு அவசியம் ஆனால் 'தமிழ்" தெய்வத் தமிழ் என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது என தன் கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கும் பதிலளிக்கும் வகையில் இறைவனிற்கு மொழி மதம் பேதம் கிடையாது ஆனால் இறைவன் கழகம் கண்ட ஒரே மொழி தமிழ். ஆகவே தமிழ் தெய்வத் தமிழாகும். அத்துடன் எப்போதும் தமிழில் வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இருண்ட வரலாற்றுக்காலத்தில் தான் தமிழ் மருவி வடமொழி வழிபாடு புகுந்தது. ஆகவே இத்தீர்மானமும் தமிழ் வழிபாட்டின் மீள் எழுச்சியும் செம் பொன்னப்பலத்து விருப்பாகும் எனும் பொருள்படும்படி நிறைவுரையினை ஆற்றினார்.
அடியார்களின் ஆனந்த கண்ணீர்
காலை 07.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவுடன் விழா ஆரம்பித்து, நண்பகல் 12.00 மணிக்கு மாநாடு கூடியது இரவு 21.00 மணிக்கு மாநாடு நிறைவுற திருக்கோவில் வழிபாடு இரவு 22.30 மணிக்கு நிறைவடைந்தது. மாநாட்டின் ஆரம்பம் முதல் நிறைவு வரை அடியவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பல அடியர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சி மெய் உறையச் செய்தது. தினேஸ் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பின் திறன் அடிவயர்களை மிகவும் கவர்ந்தது.
 

சீதன நடைமுறைகள் தேவைதானா?

23.09.2012.By.Rajah.நிலா முற்றம் எனும் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் "தேசிய வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சீதனம் அனுகூலமானதா?" என்ற தலைப்பிலான பகிரங்கப் பொது மன்றம் ஒன்று நேற்று நிராவியடியில் இடம்பெற்றது. இதில், யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளரான எஸ்.சந்திரசேகரம் தனது ஆய்வினை முன் வைத்துப் பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். எனினும், இது கடும் வாதப் பிரதி வாதங்களிற்கு உட்பட்டதோடு, பல சமூகக் கேள்விகளிற்கும் பதில் அளிப்பதாக அமைந்தது. இவ்வாறு பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

சேமிப்பின் முக்கியத்துவம்

மக்களின் வாழ்கைத் தரமானது பொருளாதார அபிவிருத்தி மட்டத்தினால் தீர்மாணிக்கப்படுகின்றது. இந்த அபிவிருத்தியானது பொருளாதார வளர்ச்சியிலேயே அதிகம் தங்கியுள்ளது. வளர்ச்சி என்பது உற்பத்தியிலான தொடர் அதிகரிப்பு என்பதுடன் உற்பத்தி அதிகரிக்க முதலீடு அவசியம். இந்த முதலீடானது சேமிப்பினால் உருவாக்கப்படுகின்றது என்ற வகையில் "மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் என்பது அவர்களின் சேமிப்பிலேயே அதிகம் தங்கியுள்ளது!" இந்த சேமிப்பினைத் தூண்டவென ஒவ்வொரு அரசாங்களும் பல்வேறு கொள்கையினை பின்பற்றுவதுடன், ஒவ்வொரு சமூகங்களும் தாமக்கேயான சில தனித்துவப் பண்புளையும் கொண்டு திகழ்கின்றன.

சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் அனுபவம்

தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளியல் உறுதிப்பாட்டினை கொண்டுள்ள சீனா மற்றும் சிங்கப்பூர் அரசுகள், கடின உழைப்பு மற்றும் வலிந்த சேமிப்பு பழக்கத்தினை மக்களிடம் தூண்ட பல்வேறு நடவடிக்கைகளினை எடுத்து வருகின்றன. உதாரணமாக, சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர் ஒவ்வொருவரும் தமது சம்பளத்தில் 40% ஐ ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு திரட்டப்படும் சேமிப்பினை அரசு பாரிய முதலீட்டு திட்டங்களில் ஈடுபடுத்துகின்றது. இதனால் இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் 8% - 10% என்ற உயர் பொருளாதார வளர்ச்சியினை சாதிக்க முடிந்துள்ளது.

இலங்கையின் அனுபவம்

அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டினை தொடர்ந்து பேண முடியாத இலங்கையில், தொழிலாளர்கள் ஊக்கமிழக்கவும், நுகர்வுச் செலவுகளை அதிகம் தூண்டுவதற்குமான திட்டங்களே முன் வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத் தொழிலாளி ஒருவர் தனது சம்பளத்தில் 12% ஐ ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வழங்கி வருவதுடன் இதனைக் கூட முறையாக எல்லோரும் செலுத்துவதில்லை. இவ்வாறாக அரசு பெற்றுக் கொள்ளும் நிதியினை முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தவறி வருகின்றது. இந்த நிலையில், பிரதேச வளர்ச்சி என்பது அந்த அந்த சமூகங்கள் கொண்டுள்ள சேமிப்பு மற்றும் முதலீட்டு கலாச்சாரங்களையே நம்பி உள்ளது.

பொருத்தமான பேரினப் பொருளாதாரக் கொள்கையினை வடகிழக்கில் அரசு முன்வைக்காத நிலையில், தற்செயலாக, வடகிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் பண்டு தொட்டு இன்று வரை கடைப்பிடித்து வரும் சீதனம் என்ற கலாச்சார நடைமுறையானது, அவர்களின் பொருளாதார வளங்கள் தொடர்பான வாய்ப்பினை ஓரளவேனும் பாதுகாத்து வந்துள்ளது.

யாழ்ப்பாண சீதன நடைமுறைகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சீதன நடைமுறைகள் தொடர்பாக விரிவுரையாளரான எஸ்.சந்திரசேகரம் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இதன்படி, ஒரு திருமணத்தின் போது சராசரியாக 52 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சீதனமாக கை மாற்றப்படுகின்றது. இதில், வீடு முதலிடம் பெறுவதுடன் இதையடுத்து தங்க நகைகள், பண வைப்பு, மேட்டு நிலம், தாழ் நிலம் என முறைய முக்கியத்துவம் பெறுகின்றன.

மேற்படி சொத்துச் சேகரிப்பில், பண வைப்பினைத் தவிர ஏனைய எல்லா வகையான சேமிப்புத் திட்டங்களாலும் யாழ்.மக்கள் அதிக நன்மையினை ஈட்டி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் மிக நீண்ட காலமாக மெய்யான வட்டி வீதம் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருப்பதனால் பண வைப்புச் செய்தவர்கள் மட்டும் முதல் இழப்பினை சந்தித்துள்ளனர்.

எது எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் அல்லது வடகிழக்கு மக்களின் சீதன நடைமுறைகள் வலிந்த சேமிப்பினைத் தூண்டுவதுடன், இது பிரதேச வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டினை ஈட்டித்தரக் கூடிய ஓர் கலாச்சாரச் செயற்பாடு என்ற வகையில் சீதன நடைமுறையின் அவசியத்தினை வலியுறுத்தி தனது கருத்துக்களை முன்வைத்தார் விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம்.

வாதப் பிரதி வாதங்கள்

இந்த பொது மன்றத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மற்றொரு பொருளியல் விரிவுரையாளரான எஸ்.உதயகுமார் பங்கு பற்றியதோடு, முன்னால் கல்விப் பணிப்பாளர் ஜோஜ், ஆசியரியர் தணிகாசலம் மற்றும் பல ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் "சீதன நடைமுறைகள் தவறானது என்பதோடு இது இல்லாது ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என ஆதங்கப்பட்டதனை காண முடிந்தது.

சீதனம் கொடுக்கத் தான் வேண்டுமா?

என்னதான் பொருளாதாரம் வளர்ந்தாலும் அதன் நன்மைகள் அடித்தட்டு மக்கள் எல்லோருக்குமே சென்று சேர்கின்றதா?, யாரை வருத்தி யார் சந்தோஷப்படுவது? யாருக்காக இந்த பொருளாதார வளர்ச்சி? எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்த ஆசிரியர் தணிகாசலம், சாதிக் கொடுமைகளிற்கும், பெண் அடிமைக்கும் காரணமான இந்த சீதன நடைமுறைகள் இல்லாது ஒழிய வேண்டும் என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய விரிவுரையாளர்களான எஸ்.சந்திரசேகரம் மற்றும் எஸ்.உதயகுமார், எந்த வீட்டிலும் ஆண்கள் சீதனம் கேட்பதில்லை. தாய் அல்லது மாமி என்ற பாத்திரம் ஏற்கும் ஒரு பெண்னே இன்ன இன்ன சீதனம் தர வேண்டும் என்கிறார்கள். எனவே, பெண்ணுக்கு பெண்தான் பொண் விலங்கு போடுகிறாள் என்பதுடன் மக்களின் வாழ்கைத் தரம் உயர பொருளாதார வளர்ச்சி அவசியம் என வலியுறுத்தினார்கள்.

பெண்தான் சீதனம் கொடுக்க வேண்டுமா?

ஒரு மாற்றத்திற்காகவேனும் ஆண் சீதனம் கொடுத்தால் என்ன? என முன்னால் கல்விப் பணிப்பாளரான ஜோஜ் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த விரிவுரையாளர்கள், முஸ்லீம் சமூகத்தில் ஆண்கள்தான் சீதனம் கொடுக்கின்றார்கள். தவிரவும், எந்த சமூகத்திலும் ஆண்கள்தான் சீதனம் கொடுக்கின்றார்கள்.

காரணம், ஒரு பெண்னின் சார்பாக சீதனம் கொடுக்கப்பட்டாலும் அந்த சொத்துக்களை வியர்வை சிந்தி அதிகம் கஷ்ரப்பட்டு உழைப்பது ஓர் ஆண்தான். எனவே, ஆண்களின் கடின உழைப்பினை தூண்டவும், பெண்களின் கட்டாய சேமிப்பினைத் தூண்டவும் இந்த சீதன நடைமுறைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்தனர்.

சீதனம் சமூக ஏற்றத் தாழ்வினை தூண்டவில்லையா?

வருமானம் அல்லது சாதி நிலைகளில் உயர்ந்தவர்களாலேயே சீதன நடைமுறைகள் அதிகம் ஆதரிக்கப்பட்டு முன்னெடுத்தும் செல்லப்படுகின்றன. மாறாக, வருமானம் அல்லது சாதி நிலைகளில் குறைந்த குடும்பங்களில் அதிக காதல் திருமணங்கள் இடம்பெறுவதுடன் சீதன நடைமுறைகள் தவிர்க்கப்படும் ஒன்றாக அல்லது குறைந்த முக்கியத்துவம் வழங்கும் ஒன்றாகவும் உள்ளது.

இதனால், வருமானம் படைத்தவர்களிடையே மட்டும் பெருமளவு சொத்துக்கள் தொடர்ந்தும் குவிவதுடன், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக்கப்படுகின்றனர். இதனால், சமூகத்தில் வருமான ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கும், வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கீழ் வர்க்கம் - மேல் வர்க்கம் என்ற வேறுபாடுகள் தொடர்ந்தும் இரண்டு சமாந்தரக் கோடுகளாகவே இருப்பதற்கு சீதன நடைமுறைகள் ஒரு காரணமாக நீங்கள் பார்க்கவில்லையா? என்றதொரு நீண்ட கேள்வியினை ஒன்லைன்உதயன் செய்தியாளர் கேட்ட போது இதற்குப் பதில் அளித்த எஸ்.உதயகுமார்,

சீதன நடைமுறைகள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் எதிர் கணியத் தாக்கத்தினை செலுத்துகின்றது என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆணால் மறுபுறத்தில், சீதனமே சேமிப்பினைத் தூண்டி முதலீடாக மாறுவதனால் பொருளாதார வளர்ச்சி என்ற நேர் நிலைத் தாக்கத்தினையும் கருத்தில் கொள்கின்ற போது சீதன நடைமுறைகளை ஏற்க முடியும் என தெரிவித்தார்.

சீதனத்தினை முதலீடு செய்வதாக யார் சொன்னது?

யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் இங்கே சீதனாமாக வீடு மற்றும் தங்க நகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆணால், தங்கத்தின் விலை கூடிவிட்டது, வீட்டின் விலை கூடிவிட்டது என்பதற்காக இந்த சொத்துக்களை விற்று காசாக்க யாரும் முன் வருவதில்லை. இதனால், இவை பல வருடங்களாக தேசிய உற்பத்திக் கணக்கிற்கே வரமட்டாது. இவற்றை சேமிக்க மேற்கொண்ட சிறு சிறு வீட்டுச் சேமிப்புக்கள் கூட தேசிய உற்பத்திக் கணக்கீட்டில் வருவதில்லை. இவ்வாறு, இருக்கையில் உற்பத்தி அதிகரிக்கிறது என்று நீங்கள் எவ்வாறு சொல்லப் போகின்றீர்கள்? உண்மையில், சீதனம் முதலீடு செய்யப்படுவது என்பது ஓர் பொய்யான பிரச்சாரம் என தன் கருத்தை மீண்டும் முன்வைத்தார் ஜோர் அவர்கள்.

இதற்கு பதில் தந்த விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம், தற்போது சீதனமாக திரட்டிய சேமிப்பினை யாரும் முதலீடு செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கான சூழல் யாழ்ப்பாணத்தில் இன்னும் கனியவில்லை. ஒருவேளை, யாழ்ப்பாணத்தில் உறுதியான நல்ல சூழல் நிலவுகின்ற போது மக்கள் சீதனமாக திரட்டிய சொத்துக்களை முதலீடு செய்து அதிக இலாபம் பெற முடிவதோடு இதனால் பிரதேச உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு தூண்டப்பட வாய்ப்புள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தில் இன்று அதிகம் இலாபம் சம்பாதிக்கும் தொழில் துறையாக வங்கித் துறையே காணப்படுகின்றது. இதற்கு காரணம் பெண்களைக் கொண்ட குடும்பங்கள் சீதனச் சேமிப்பாக பல கோடி ரூபாய்களை யாழ்ப்பாண வங்கிக் கிளைகளிலேயே முதலீடு அல்லது வைப்புச் செய்கின்றனர் எனத் தெரிவித்தார்.

சீதனக் கொடுமையால் எத்தனை பெண்கள் தூக்கம் இழந்துள்ளனர் தெரியுமா?

இங்கு பெண்கள் தரப்பில் பேசிய ஒரு பெண்னைப் பெற்ற தாய், நீங்கள் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்று ஏதேதோ எல்லாம் பேசுகின்றீர்கள். ஆனால், ஒரு பெண்னை பெற்றவர் வீட்டில் எத்தனை பெண்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? என கேள்வியினை தொடுத்தார்.

இதற்காக தமது வருத்தத்தினையும் தெரிவித்த விரிவுரையாளர்கள், சீதனக் கொடுமையினால் பலர் முதிர் கண்ணியாகவே வாழ்வதும், பல பெண்கள் தூக்கம் தொலைத்தும், பல ஆண்கள் குறிப்பாக கணவன்மார்கள் குடிப் பழக்கத்தில் ஆர்வம் காட்டவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சீதன நடைமுறைகளும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆணால், இதுவே ஆண்களின் கடின உழைப்பிற்கும் பெண்களின் வலிந்த சேமிப்புக்கும் அதன் வழியே ஏற்படக் கூடிய வாழ்கைத் தர முன்னேற்றத்திற்கும் சீதனம் அவசியமாக உள்ளதென மீண்டும் வலியுறுத்தினார்கள்.

முடிவுரை

இவ்வாறாக கடும் வாதப் பிரதி வாதங்களிற்கு உட்பட்ட மேற்படி கருத்தானது, மேலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுடன் "சீதன நடை முறைகள் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அனுகூலமானது" என்ற கத்தினை மேலும் உறுதியாக நிறுவ முடியும் என்ற விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரத்தின் முடிவுரையுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவு கண்டன

ஜேர்மனியில் புதுவித வழியை பின்பற்றும் திருடர்கள்

23.09.2'012.By.Rajah.ஜேர்மனியில் ஏடிஎம் இயந்திரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதால், திருடர்கள் பொதுமக்களின் வங்கி கணக்குகளை பெற மாற்று வழி ஒன்றை கண்டறிந்துள்ளனர். இவர்கள் ரயில் பயணச்சீட்டு பெறும் இயந்திரங்களின் மூலமாக பொதுமக்களின் ரகசிய எண்களையும், பிற வங்கி விபரங்களையும் கள்ளத்தனமாக பெறுவதாக மத்திய குற்றவியல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதிரி 25 குற்றச்சாட்டுகள் கடந்தாண்டு மட்டும் பதிவாகி உள்ளதாக பிரபல பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் மக்களின் கடனட்டை மூலமாக தகவல்களை திருடுகின்றனர், மற்றும் ஒரு சிறிய ஒளிப்படக் கருவியை பொருத்தியும் ரகசிய எண்களை அறிந்து கொள்கின்றனர் அல்லது புதிதாக ஒரு போலி தட்டச்சு பலகையை ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தியும் ரகசிய எண்களை திருடுகின்றனர்.
இது குறித்து மத்திய குற்றவியல் காவல் தலைவர் ஜோக் சியர்கெ கூறுகையில், தகவல் திருட்டை தடுக்கும் தொழில்நுட்பத்தை 64,000 ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தியுள்ளோம். இதனால் கடந்த 2010ஆம் ஆண்டில் 3180ஆக இருந்த திருட்டு கடந்த 2011ஆம் ஆண்டில் 1300 ஆகக் குறைந்து விட்டது என்றார்.

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக சுங்கவரி உயர்வு

23.09.2012.Bசுவிட்சர்லாந்தில் முதன் முறையாக 17 வருடங்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் வாகனஓட்டிகளின் வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரின் விலையை உயர்த்த நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. கண்டிப்பான முறையில் அரசாங்க குறியீடு உள்ளடக்கிய ஸ்டிக்கரினை ஒட்ட வேண்டும். இல்லையெனில் கடுமையான அபராத விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சாலை வரி மற்றும் சுங்க வரியினை உயர்த்த போவதாக சுவிட்லர்லாந்தின் போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லெதார்ட்(Doris Leuthard) தெரிவித்துள்ளார்.
சுங்க வரியினை குறைந்தபட்சமாக 40பிராங்கிலிருந்து(டொலர் 43) 100 பிராங்க்(107 டொலர்) வரை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சாலை போக்குவரத்தினை விரிவுபடுத்தவும் நவீனமாயமாக்கவும் 275 மில்லியன் பிராங்க் அதாவது 294 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்

சுவிஸ் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை

22.09.2012.By.Lovi.சுவிஸ் அரசின் பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றிக் கூறுகையில், உலகளவில் பொருளாதாரச் சரிவு அதிகமாகி வருகின்றது, ஆனால் சுவிட்சர்லாந்து அந்த அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாது என்றனர். அரசு பொருளாதாரத் துறையில் (சிகோ) நிபுணர்கள், 2012ம் ஆண்டின் பொருளாதார மேம்பாடு 1 சதவீதமாக இருக்கும் என்றனர். யூன் மாதம் இவர்கள் இப் பொருளாதார மேம்பாடு 1.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தனர். இந்த ஆண்டு பணவீக்கம் -0.5 சதவீதமாக உள்ளது. முன்பு -0.4சதவீதமாக இருந்தது.
சர்வதேச அளவிலான பொருளாதாரத் தொய்வு நிலை சுவிட்சர்லாந்துக்கும் வந்துவிட்டதாக சீகோவின் பொருளாதார நிபுணர்கள் கூறினர். ஆனால் இந்தத் தொய்வு நிலை அதி சீக்கிரமாக சுவிட்சர்லாந்துக்கு வந்துவிடாது.
ஏனெனில் சுவிட்சர்லாந்தின் உள்ளூர் பொருளாதாரத்தின் அசுரத் தனமான வளர்ச்சியும், யூரோவுக்கு எதிரான செலாவணி மதிப்பும் வலுவாக இருக்கின்றன.
ஒரு வருடத்துக்கு முன்பு 1 யூரோவுக்கு 1.20 சுவிஸ் ஃபிராங்க் என்று நாணய மதிப்பை சுவிஸ் தேசிய வங்கி நிர்ணயித்துவிட்டதால், சுவிஸ் பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பித்துவிட்டது.
ஆனால் தனது சுவிஸ் பிராங்க் நாணயமதிப்பை அமெரிக்காவின் டொலருக்கு எதிராகவோ வேறு எந்த ஆசிய நாட்டுச் செலாவணிக்கு எதிராகவோ நிர்ணயிக்க முடியவில்லை என்றும் "சீகோ" நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே தனது அருகிலிருந்த ஐரொப்பிய நாடுகளோடு சுவிட்சர்லாந்து தனது பொருளாதார நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் ஏற்றுமதித் துறையை விடச் சிறப்பாக உள்ளது. ஏற்றுமதித் துறை பல்வேறு நாடுகளின் பொருளாதாரச் சிக்கலால் வளர்ச்சியின்றி தேக்கநிலையில் காணப்படுகின்றது. உள்ளூர் பொருளாதாரச் சிறப்புக்கு, குறைந்த வட்டி விகிதம், நுகர்வோரின் வாங்கும் விலை குறைவு மற்றும் அதிகமானோர் புலம்பெயர்ந்து வந்த நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
சர்வதேசப் பொருளாதாரச் சூழ்நிலை ஆரோக்கியமாக இல்லாததாலும் ஜேர்மனி, சீனா போன்ற இராட்சத சந்தைகள் பலவீனப்பட்டதாலும் சுவிஸ்ஸின் ஏற்றுமதித் தொழில் பாதிப்படைந்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி, யூரோ மண்டல அரசின் பத்திரங்களை வாங்கத் திட்டமிட்டதால் இந்த நெருக்கடி பெரிதாகவில்லை என்று "சீகோ" நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
கடந்த வாரம் சுவிஸ் தேசிய வங்கி இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை ஒரு சதவீதமாகக் குறைத்து முன்னறிவிப்புச் செய்தது. "சீகோ" யூரோமண்டலம் பொருளாதாரச் சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் அமெரிக்காவில் பொருளாதாரத் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வர்த்தகநாம விருதை மஞ்சி இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது

21.09.2012.By.Lovi.இலங்கையின் பிரதான உணவு மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முதல்தர வர்த்தக நாமமான மஞ்சி, அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் சிறந்த தொழில்வழங்குநர் வர்த்தகநாமத்துக்கான (Asia's Best Employer Brand) விருதினை இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் இவ்விருதை மஞ்சி பெற்றுக்கொண்டிருந்ததுடன், இவ்விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக பெற்றுள்ளதன் மூலம் மஞ்சி மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறந்த மனிதவள மேம்படுத்தல், நவீன மயமாக்கலின் மூலம் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் மஞ்சி காட்டும் அக்கறை காரணமாக இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவின் முன்னணி வர்த்தகநாமமான மஞ்சி, பிஸ்கட் சந்தையில் 60மூ வீதமான பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சி பிஸ்கட்டின் வெற்றிக்கு உயர்ந்த தரம், தொடர்ந்தும் உற்பத்திகளில் மேற்கொள்ளும் மேம்படுத்தல்கள் மற்றும் தந்திரோபாயமான விற்பனை நுணுக்கங்கள் போன்றன காரணமாக அநை;துள்ளன. இதன் காரணமாக கடந்த பல வருடங்களாக விசேட விருதுகள் பலவற்றை மஞ்சி பெற்றுக்கொண்டதுடன், தேசிய தரத்திற்கான விருது, தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக வருடத்தின் சிறந்த உற்பத்திக்கான விருது, தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வருடத்தின் சிறந்த வர்த்தக நாமத்திற்கான விருது, தேசிய ஏற்றுமதி விருது மற்றும் வர்த்தக நாம தலைமைத்துவம் போன்ற பல பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

தற்போது மஞ்சி வர்த்தக நாமமானது 40 நாடுகளில் விநியோகம் செய்யப்படுவதுடன், சிறந்த சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள்(CSR)ஊடாக இந்நாட்டின் கல்வி, கிராமிய அடிப்படை வசதிகள் விளையாட்டு மற்றும் கலை ஆகியவற்றை மேம்படுத்த ஆதரவை வழங்கிவருகிறது.

ஆசியாவின் சிறந்த வாடிக்கையாளர் வர்த்தகநாம விருதினை பெற்றுக்கொண்டமை குறித்து மஞ்சி வர்த்தக நாமத்தின் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் .எமது நிறுவனத்தின் சிறந்த வளம் பணியாளர்கள் ஆவர்" என்றார். வாடிக்கையாளர் குறித்த மகிழ்ச்சியுடன் பீரிஸ் தேஜா சுட்டிக்காட்டியது மக்களுக்கு உயர்ந்த தரம் மற்றும் சுவை அடங்கிய பிஸ்கட்களை வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்திய மஞ்சி மென்மேலும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார். 

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் வியாபாரத்தில் காட்டிய விசேட திறமை காரணமாக தேஜா பீரீஸ் அவர்களுக்கு "2012 Woman Super Achiever" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொழிற்துறையில் பெண்கள் காட்டும் பொறுப்புணர்வு, புதியன புகுத்தல், தொழில் உறுதித்தன்மை போன்றவற்றுக்கு இவ் விருது வழங்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு முகாமை பயிலுனராக சிலோன் பிஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து கொண்ட தேஜா பீரீஸ், பல பொறுப்புகளை ஏற்று வர்த்தக நாம முகாமையாளர், சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர், உதவி விற்பனை முகாமையாளர் என பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது விற்பனை பொது முகாமையாளராக செயற்படுகின்றார்.

3 ஆவது தடவையாக நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் 25 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட விநியோக நிர்வாகிகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
Powered by Blogger.