வர்த்தகநாம விருதை மஞ்சி இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது

21.09.2012.By.Lovi.இலங்கையின் பிரதான உணவு மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முதல்தர வர்த்தக நாமமான மஞ்சி, அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் சிறந்த தொழில்வழங்குநர் வர்த்தகநாமத்துக்கான (Asia's Best Employer Brand) விருதினை இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் இவ்விருதை மஞ்சி பெற்றுக்கொண்டிருந்ததுடன், இவ்விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக பெற்றுள்ளதன் மூலம் மஞ்சி மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறந்த மனிதவள மேம்படுத்தல், நவீன மயமாக்கலின் மூலம் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் மஞ்சி காட்டும் அக்கறை காரணமாக இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவின் முன்னணி வர்த்தகநாமமான மஞ்சி, பிஸ்கட் சந்தையில் 60மூ வீதமான பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சி பிஸ்கட்டின் வெற்றிக்கு உயர்ந்த தரம், தொடர்ந்தும் உற்பத்திகளில் மேற்கொள்ளும் மேம்படுத்தல்கள் மற்றும் தந்திரோபாயமான விற்பனை நுணுக்கங்கள் போன்றன காரணமாக அநை;துள்ளன. இதன் காரணமாக கடந்த பல வருடங்களாக விசேட விருதுகள் பலவற்றை மஞ்சி பெற்றுக்கொண்டதுடன், தேசிய தரத்திற்கான விருது, தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக வருடத்தின் சிறந்த உற்பத்திக்கான விருது, தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வருடத்தின் சிறந்த வர்த்தக நாமத்திற்கான விருது, தேசிய ஏற்றுமதி விருது மற்றும் வர்த்தக நாம தலைமைத்துவம் போன்ற பல பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

தற்போது மஞ்சி வர்த்தக நாமமானது 40 நாடுகளில் விநியோகம் செய்யப்படுவதுடன், சிறந்த சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள்(CSR)ஊடாக இந்நாட்டின் கல்வி, கிராமிய அடிப்படை வசதிகள் விளையாட்டு மற்றும் கலை ஆகியவற்றை மேம்படுத்த ஆதரவை வழங்கிவருகிறது.

ஆசியாவின் சிறந்த வாடிக்கையாளர் வர்த்தகநாம விருதினை பெற்றுக்கொண்டமை குறித்து மஞ்சி வர்த்தக நாமத்தின் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் .எமது நிறுவனத்தின் சிறந்த வளம் பணியாளர்கள் ஆவர்" என்றார். வாடிக்கையாளர் குறித்த மகிழ்ச்சியுடன் பீரிஸ் தேஜா சுட்டிக்காட்டியது மக்களுக்கு உயர்ந்த தரம் மற்றும் சுவை அடங்கிய பிஸ்கட்களை வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்திய மஞ்சி மென்மேலும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார். 

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் வியாபாரத்தில் காட்டிய விசேட திறமை காரணமாக தேஜா பீரீஸ் அவர்களுக்கு "2012 Woman Super Achiever" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொழிற்துறையில் பெண்கள் காட்டும் பொறுப்புணர்வு, புதியன புகுத்தல், தொழில் உறுதித்தன்மை போன்றவற்றுக்கு இவ் விருது வழங்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு முகாமை பயிலுனராக சிலோன் பிஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து கொண்ட தேஜா பீரீஸ், பல பொறுப்புகளை ஏற்று வர்த்தக நாம முகாமையாளர், சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர், உதவி விற்பனை முகாமையாளர் என பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது விற்பனை பொது முகாமையாளராக செயற்படுகின்றார்.

3 ஆவது தடவையாக நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் 25 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட விநியோக நிர்வாகிகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.