அழகான சருமத்திற்கு சில டிப்ஸ்

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
இந்த உலகில் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் ஆசைப்படுவார்கள். அதிலும் பெண்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அவ்வாறு ஆசைப்படும் பெண்களுள் பலர் கெமிக்கல் கலந்த அழகுச் சாதனப் பொருட்களை பயன்படுத்த விரும்புவுதை விட, வீட்லேயே எளிமையாக எவ்வாறு நடந்தால் அழகாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடக்கவே பெரிதும் விரும்புவர்.
ஆகவே இப்போது அவர்களுக்காக வீட்டில் எதை செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சில ஈஸியான டிப்ஸ்களை அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
1. இரவில் தூங்கும் போது சருமத்தில் ஒரு சில செயல்களான புது சரும செல்கள் உருவாதல், செல்கள் புதுபித்தல் போன்றவை நடைபெறும்.
ஆகவே அப்போது சருமத்திற்கு மேலும் அழகை கூட்ட வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு சில கிரீம்களை இரவில் தடவி படுக்க வேண்டும். இதனால் அந்த அழகுப் பொருளில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள், இரவில் அந்த செயல்களின் போது, சருமத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் புதிய செல்கள் உருவாதற்கு உதவியாக இருக்கும்.
இதனால் முகத்தில் சுருக்கங்கள் வருவதை தவிர்ப்பதோடு முகமும் பொலிவோடு அழகாக இருக்கும்.
2. சிட்ரிக் ஆசிட் மற்றும் கிளைகோலிக் ஆசிட் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த சருமத்தை அழகுப்படுத்த உதவும் பொருட்கள்.
எப்படினெனில் இவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, புது செல்களின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது.
அதிலும் வீட்டில் வைட்டமின் சி நிறைந்திருக்கும் அழகுப் பொருட்களை பயன்படுத்தினால், சருமம் மென்மை மற்றும் புத்துணர்ச்சி அடைவதோடு, கொலாஜென் உற்பத்தியையும் அதிகரிக்கும். ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினாலேயே சருமம் அழகாக மின்னும்.
3. ரெட்னாலும் ஒரு சிறந்த ஆன்டி-ஏஜிங் பொருள் தான். அதனால் ரேடிக்கல்களின் பாதிப்பு குறைகிறது. அதுமட்டுமல்லாமல், கொலாஜெனை ஊக்குவித்து ஒரு இளமையான தோற்றத்தை தருகிறது.
மேலும் கெராட்டீன் கூட சருமடத்திற்கு மிகவும் சிறந்தது. இது சருமத்தில் சுருக்கத்தை வராமல் தடுப்பதோடு, சருமத்தில் புண்கள் மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது.
4. இரவு நேரத்தில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். இதனால் விரைவில் முதுமை தோற்றம் வருவதை தடுக்கலாம்.
அதிலும் பெர்ரிஸ், மாதுளை, கிரீன் டீ, நட்ஸ், பீன்ஸ், தானிய வகைகள் மற்றும் மற்ற பயறு வகைகள் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் மிகவும் அழகாக சிக்கென்று இருப்பதோடு, நீண்ட நாட்கள் இளமையோடு இருக்கலாம்.
5. வீட்டில் செய்யப்படும் ஃபேஷியலுக்கு, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, வெதுவெதுப்பான பாலைப் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத் துளைகளில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்குவதோடு சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதமிக்கதாகவும் வைக்கிறது

வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!

 
வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன் என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில், என்று குறிப்பிடப்படுகிறது.
வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது.
அப்படியான ஓர் அரிய நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக புதுடில்கியில் உள்ள அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பு அறிவித்துள்ளது..
இன்று இரவு தோன்றும் நிலவு நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது.
இது இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களால் அவதானிக்க கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி முதல் முறையும், இன்று இரண்டாம் முறையும் தோன்றுகிறது.
இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலவு நீலமாகத் தோற்றமளிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் கரகம் எடுத்து வந்தவர்களை அவமதித்த பொலிஸ் அதிகாரி பிரியதர்ஸன

 
 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
வரலாற்று புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்று முன்நாள் இரவு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.
பாரம்பரிய கரகாட்ட கலைஞர்களை பக்தர்கள் முன்னிலையில் பொலிஸார் நிர்வாணமர்க்கி அவமதித்ததாக கூறப்படுகின்றது.
நேற்று முன்நாள் இரவு வழமை போன்று சப்பறத்திருவிழா அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. அங்கு தமது நேர்த்திக்கடன்களை அனுஸ்டிக்கவென பலரும் காவடிகளை எடுத்த வண்ணமிருந்தனர்.
அதேபோன்று நேற்று தேர்த்திருவிழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் படையெடுத்து வந்தவண்ணமிருந்தன.
இவ்வாறு நேற்றிரவு ஆலயத்திற்கு கரகாட்டமாடி வந்தவர்களே தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கரகாட்ட கலைஞர்கள் பெண் யுவதிகளை போன்று வேடமணிந்து கரகாட்டமாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்று சேர்ந்த வல்வெட்டித்துறை பொலிஸ நிலைய அதிகாரியான பிரியதர்சன மற்றுமொரு அதிகாரி சகிதம் கரகாட்டம் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறி கலைஞர்களை தாக்கியுள்ளார்.
அத்துடன் திரண்டிருந்த பக்தர்களிடையே குறித்த கரகாட்ட கலைஞர்களது ஆடைகளை கழைந்து அவமதித்துள்ளனர்.
ஆண்டு தோறும் இவ்வாறு தாங்கள் கரகாட்டமாடி நேர்த்தி கடனை நிறைவேற்றுவதாக அக்கலைஞர்கள் கூறிய போதும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
இச்செயல் பல தரப்பினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி மீது பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றசசாட்டுக்கள் ஏற்கனவே எழுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தககது

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்! [ புகை படங்கள் இணைப்பு ]

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லை; உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பேராசிரியர் ஜயலத் கவலை

30.08.2012.BY-rajah.
இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் 15-70 வயதுக்குட்பட்டவர்களில் 15 சத வீதமானோரில் சுமார் 20 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் தினமும் உயிரிழப்பு இடம் பெறுகின்றது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கும் மேற்பட்டோரே இந்த நோயின் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகியுள்ளனமை தெரியவருகின்றது.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நோயின் தொற்றின் வேகத்தையும், நிலையையும் அறிந்துகொண்ட களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீட பேராசிரியர் கள், முன்னணி மருத்துவ குழுக்களினால் இந்த நோயின் தாக்கம், தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் பலர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சிறுநீரக நோய் குறித்து சர்வதேச அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியராக கடமைபுரிந்து, தற்போது சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் உள்ளக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக செயற்படும் இலங்கை விசேட வைத்தியர் பேராசிரியர் சாந்தி மென்டிஸ் வேண்டுகோளுக் கிணங்க, உலக சுகாதார அமைப்பினால் இந்த சிறுநீரக நோய் தொடர்பிலான 3 அறிக்கைகளை ஆராய்ச்சியின் பின்னர் முன்வைத்திருந்தது.
இதன் முதலாவது அறிக்கை 2011 ஜுன் மாதத்திலும், இரண்டாவது அறிக்கை 2011 ஒக்டோபர் மாதத்திலும், மூன்றாவது அறிக்கை 2012 பெப்ரவரி மாதத்திலும் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. மருத்துவச் சபை ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன் பிரகாரம் குறித்த அறிக்கைகளில் உலக சுகாதார அமைப்பானது இந்நோயை எவ்வாறு இனங்காண்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய குறிப்புகளை குறிப்பிட்டிருந்தது.
இந்த நோய் மேலும் பரவுவததை தவிர்க்க தாமதமின்றி இந்த அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவதைப் பார்க்கிலும் அந்த நோயை இல்லாதொழிப்பதே மேல் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உலக சுகாதார அமைப்பின் குறித்த 3 அறிக்கைகளிலும் நோய்த்தடுப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நோயானது வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவில் பரவிவருகின்றது என்பதை தற்போதுள்ள அரசு தெரிவிக்கவில்லை.
இப்போதாவது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட 3 அறிக்கைகளி லுமுள்ள பரிந்துரைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையில் உள்ள வற்றை தாமதமாகியும் நடைமுறைப்படுத்தாவிட்டால் அப்பாவி மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு வழி கிடையாது. மக்களைக் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு.
விருத்தியாகும் சிறுநீரக நோயை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சிகிச்சை நிலையங்களை திறந்துவைப்பதில் என்ன பயன்? எதிர்காலத்தில் இந்நோய் விருத்தியாகாமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

பெனாங் நியூ ஹிந்து கோவில் [ காணொளி இணைப்பு ]

30.08.2012.BY.rajah
. இந்திய வில் பெனாங் நகரில் புதிதாக மிக பிரமாண்டமான ராஜா கோபுர த்துடன் அமைந்து கொண்டிருக்கும் முருகன் ஆலயம் இதுவாகும்


கிளிநொச்சி கந்தன் தேரேறி அருளாட்சி [காணொளி புகை படங்கள் இணப்பு ]

 
வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah,
கிளிநொச்சி நகரின் அணிகலனாக விளங்கும் கிளிநொச்சி கந்தசாமி கோவிலின் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்று பக்தர்கள் புடைசூழ வீதியில் கந்தப் பெருமானின் முத்தேர் பவனி இடம் பெற்றது.
முதன் முறையாக இந்த ஆலயத்தில் இம்முறைதான் மூன்று தேர்களில் முருகப்பெருமான் பரிவாரங்கள் புடைசூழ தேரேறி பக்தர்களுக்கு அருளாட்சி புரியும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இருப்பினும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு கிளிநொச்சியில் நீண்ட பாரம் பரியம் உள்ளபோதும் நிரந்தரமாக ஒரு சித்திரத்தேர் இன்னமும் இல்லாதது என்பது பக்தர்களின் பெருங்குறையாகவுள்ளது.
தேர் செய்வதற்கு மூன்று தடவைகள் முயற்சித்த போதும் அதற்கான ஆயத்தங்கள் செய்வதற்கு மரங்கள் வாங்கியிருந்த போதும் அவை போர் காரணமாக எரியூட்டப்பட்டதால் தேர்த்திருப்பணியில் தடங்கல் ஏற்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இராஜகோபுர திருப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நகரின் மையத்தில் இருப்பதாலும் இராணுவ முகாம்கள் இன்னல்கள் இன்றுவரை இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு தடங்கலாக இருந்து வருகிறது.
கோவிலின் இடது புறத்தில் முன்பு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிய கட்டிடத்தில் மிக நெருக்கமாக இராணுவமுகாம் இப்போதும் காணப்படுகிறது.
கிளிநொச்சியை இலக்கு வைத்து இலங்கைப் படைகளால் நடாத்தப்பட்ட எல்லாப் போர்களாலும் கிளிநொச்சி கந்தப்பெருமான் கோவிலும் மக்களோடு மக்களாக பல இழப்புக்களையும் பாதிப்புக்களையும் சந்தித்துள்ளதும் இங்கு நோக்கத்தக்கது.

 

முன்னைநாதரின் இரதோற்சவம் [ புகை படங்கள் இணைப்பு ]

30.08.2012.BY.rajah. சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரர் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகனாக சோடச அலங்காரங்களுடன் தேரில் ஆரோகணித்த உற்சவ மூர்த்தியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர்

kovil
kovil
kovil
kovil
kovil


இன்று அதிகாலை மூல மூர்த்திக்கு விசேட பூஜை,அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகளும் இரதோற்சவமும் இடம்பெற்றன

இரண்டாம் உலகப் போருக்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

30.08.2012.by.rajah.
ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போருக்காக தயாரிக்கப்பட்ட 250 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டாம் உலக போருக்கு காரணமான ஜேர்மனியில் அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை செயலிழக்க செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.
இதற்கிடையே ஸ்க்வாபிங் மாவட்டத்தில் 250 கிலோ எடை கொண்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை செயலிழக்க செய்யும் முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து இந்த குண்டு முனிச் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று முன்தினம் வெடிக்கச் செய்யப்பட்டது.
இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்வதற்கு முன்னதாக அந்த பகுதியில் இருந்த 3,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். குண்டு வெடித்ததால் எழுந்த நெருப்பு கடந்த மூன்று நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது.

எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி

30-08.201.BY.rajah.
.
எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி kingkhan 14 மணி முன்பு (http://arumbavur.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார் அனைவரும் விரும்பும் மற்றும் மின்சாரம் சேமிக்க பயன்படுத்தும் விளக்கு கிராமபுறங்களில் மக்கள் செல்லாமாக அழைக்கும் குச்சி பல்புகள் அதாங்க (சி எப் எல் விளக்குகள்) இந்த சி எப் எல் விளக்குகள் விளக்குகள் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம் எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி
       மின்சார கட்டணம் பலமடங்கு உயந்து விட்ட இந்த நிலையில் அனைவரும் விரும்பும் மற்றும் மின்சாரம் சேமிக்க பயன்படுத்தும் விளக்கு கிராமபுறங்களில் மக்கள் செல்லாமாக அழைக்கும் குச்சி பல்புகள் அதாங்க (சி எப் எல் விளக்குகள்)
இந்த சி எப் எல் விளக்குகள் விளக்குகள் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்
(Compact fluorescent lamp )சும்மா இயந்திர கைகள் அசுர வேகத்தில் தயாரிக்கும் அழகே தனி 


காணொளி,


விரைவில் புதிய தோற்றத்தில் யூடியூப்

 30.08.2012.BYtajah. 


வீடியோக்களை பகிரும் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் யூடியூப் இணைய சேவையானது தனது இணையப்பக்கத்தில் வீடியோக்களை காட்சிப்படுத்தும் விதத்தினை அதன் பயனர்களுக்காக மாற்றியமைக்கவுள்ளது. தற்போது பரீட்சார்த்த நிலையில் காணப்படும் இப்புதிய அம்சமானது Moodwall எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தமக்கு தேவையான வீடியோ வகைகளைக் கொண்டு இலகுவாக தேட முடிவதுடன் அவை தொடர்பான மேலதிக வீடியோக்களையும் பார்வையிட முடியும். அதாவது லேபிள்களை அடிப்படையாகக் கொண்ட இப்புதிய தோற்றத்தினைக் கொண்ட யூடியூப் இணையப் பக்கத்தினை விரைவில் அனைத்துப் பயனரர்களும் விரைவில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கணனிக்கு கெடுதல் விளைவிக்கும் புதிய வைரஸ்

கணனிக்கு கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோகிராம்கள் இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதை பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ், பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கணனியில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றிற்கு இடையே புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஷமூன்(Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது.

செக்யூலர்ட்(Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கணனி ஒன்றினை இணையம் வழியே கைப்பற்றுகிறது.

பிறகு அங்கிருந்து கொண்டு நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கணனியில் உள்ள கோப்புகளை திருத்தி எழுதுகிறது.

அதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும்(MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கணனியை இயக்கவே முடியாது.

செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை.

2010ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.

இவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கணனி பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன.

எவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.

தாங்கள் கைப்பற்றிய கணனியிலிருந்து பயனர் பெயர், கடவுச் சொல், வங்கிக் கணக்குகள் அவை குறித்த தகவல்களை கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன.

மேலும் கைப்பற்றிய கணனியை தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.

ஆனால் இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது

செவ்வாயில் முதல் மனித குரல் பதிவு

29.08.2012.BY.rajah.
செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்க்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
கியூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கெமராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.
“கியூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், விண்வெளி வீரர்களுக்கும் இது உந்துதலாக இருக்கும். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு விடயமாக இது பார்க்கப்படுகிறது” என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்தார்.
இந்தக் குரல் பதிவு மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னும் ஓரடி முன்னோக்கி சென்றுள்ளது கியூரியாசிட்டி.
கியூரியாசிட்டி எடுத்து அனுப்பியுள்ள இந்தப் படத்தில் செவ்வாயின் மிகப் பெரிய மலை தெரிகிறது. படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து அதன் உச்சி 16.2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.
அடுத்த சில தினங்களில் கியூரியாசிட்டி செவ்வாயில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க உள்ளது. அப்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ தெல்லிப்பழை துர்க்கை தேர்த் திருவிழா [ புகை பட இனணப்பு}

28.08.2012.BY.rajah.
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து உள் வீதியுலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஏறி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர். பக்கதர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
 

யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் கொள்ளையடித்த இரு பெண்கள் கைதானார்கள் !

28.08.2012.BY.rajah.நேற்றைய தினம், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி வந்த பஸ்ஸில் பணத்தை களவாடிய குற்றத்துக்காக இரு பெண்கள் கைதானார்கள் என்று அறியப்படுகிறது. குறித்த இரு பெண்களும் சேர்ந்து ரூபாவை , இளைஞர் ஒருவரிடம் இருந்து களவாடியுள்ளனர்.

குறிப்பிட்ட இரு பெண்களையும் நிதிமன்ற காவலில் வைக்குமாறு, யழ் நீதவான் உத்தரவிட்டார்.
  

கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு

செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.
உங்களது கணனியில் உள்ள கோப்பறைகளுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது. உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.
அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பறைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள கோப்பறையை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.

Powered by Blogger.