எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012,By.Lovi.
எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.
இளைய தலைமுறையினர் பாதிப்பு
சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது.
கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் வைட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர்.
பால் மற்றும் பால் பொருட்கள்
குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டால், எலும்புகள் பலமடையும்.
கொட்டைகள்
பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.
சத்தான காய்கறிகள், பழங்கள்
புருக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், ஓக்ரா போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பில் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ராகி சாப்பிடுங்களேன்
100 கிராம் ராகியில் 330 முதல் 350 கிராம் கால்சியம் உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிச்சை நல்லது
பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
வைட்டமின் டி சத்து
எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.
பருப்பில் இருக்கும் சத்து
கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன.
அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

பக்கவாதத்தை தடுக்கும் உணவுகள்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Lovi.
மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதாலோ அல்லது இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்படுவதாலோ மூளையின் செயல்பாடு குறைகிறது. இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போகிறது. உதாரணமாக சரியாக பேச, புரிந்து கொள்ள முடியாதது, சில உறுப்புகள் இயங்காமல் போவது என்பன.
இது உடலில் அதிக உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாயிருத்தல் போன்றவற்றாலும் ஏற்படும்.
ஆகவே அத்தகையவற்றை சரிசெய்ய நாம் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும். எந்த ஒரு உணவையும் கட்டுப்பாடின்றி சாப்பிடக்கூடாது.
பீன்ஸ் மற்றும் மற்ற ஃபோலேட் நிறைந்த உணவுகள்
பீன்ஸ் இதயத்திற்கு மட்டுமின்றி மூளைக்கும் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் வைட்டமின் பி ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது.
மேலும் பக்கவாதத்தை தடுக்கும் சிறந்த உணவுகளில் பீன்ஸ் மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டால், பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஒரு ஆய்வின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயா
ஓட்ஸ், பாதாம் மற்றும் சோயா உணவுப் பொருட்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த உணவுப் பொருட்களை டயட்டில் சேர்த்துக் கொண்டால், இது இரத்ததில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை 28% குறைக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்டி- ஆக்ஸிடன்ட் உணவுகள்
காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் புண் மற்றும் பிளேக் போன்றவை ஏற்படாமல் தடுகின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டமானது சீராக ஓடுகிறது.
பொட்டாசியம் உணவுகள்
பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்தால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் டயட்டில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், முளைப்பயிர்கள் மற்றும் உலர்ந்த திராட்சை போன்றவற்றை சேர்த்தால், உடலுக்கு தேவையான பொட்டாசியச் சத்து கிடைக்கும்.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உணவுகள்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
அதிலும் சாலமன் மீன் மிகவும் சிறந்தது. இந்த மீனை சாப்பிட்டால், பக்கவாதம் ஏற்படாமலும் தடுக்கலாம்.
எப்படியெனில் அதில் உள்ள ஒமேகா-3, உடலில் இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும்

மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு ???

          
Monday 29 October 2012  By.Lovi.
சோற்றுக்கற்றாழைமருத்துவ குணங்களுக்கென்றுபயன்படுத்தப்பட்டு வருகிறது.இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்,ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பலவேதிப்பொருட்கள்உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்.இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்

தேன் ஒரு மாமருந்து !!! ?


Monday29 October 2012.By.Lovi..தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.

மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.
ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.
மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

உடற்பயிற்சிகளும் உடல் வலிகளும்!?


Sunday  28  October  2012 .By.Lovi.
உலகளவில் இன்று பத்தில் 4 பேர் தீராத வலியினால் அவதிப்படுகின்றனர். இதன் பின்னணியில் உடல்ரீதியான காரணங்கள், மன அழுத்தம், வேறு நோய்களின்  பாதிப்பு என எத்தனையோ இருக்கலாம். சில வகை வலிகளை சாதாரண மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பட்சத்தில், பல்நோக்கு
அணுகுமுறையில், சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படலாம். எது எப்படியோ, வலிக்கான சிகிச்சை முடிந்ததும், அதை நிரந்தரமென நினைத்து நிம்மதியடைய வேண்டாம். மறுபடி அதே வலி வராமலிருக்க, சீரமைப்பு சிகிச்சை முறை அவசியம்’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை
மருத்துவர் குமார்.
பிசியோதெரபி எனப்படுகிற அந்த சீரமைப்பு சிகிச்சை முறையின் அவசியம் பற்றியும், அதை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் அவர்.‘‘வலிக்கான சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை முறையிலும், உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது எத்தனை அவசியமோ, அதே அளவு சீரமைப்பு சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம்.
அதைக் கடைப்பிடிக்காவிட்டால், அனேக வலிகள் மறுபடி வரலாம். சீரமைப்பு சிகிச்சை முறை என்பது வலி நிவாரண சிகிச்சையின் கடைசிக் கட்டம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதை மேற்கொள்ள வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி அளிப்பதுடன், தினசரி வேலைகளை சரியாகச் செய்யவும் அந்த சிகிச்சை வழி காட்டும்.
உதாரணத்துக்கு முதுகு வலி வந்து, சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், வலி மறைந்ததும் அதை மறக்கக் கூடாது. எப்படி உட்கார்வது, எழுந்திருப்பது, கீழே விழுந்த பொருளை எப்படி எடுப்பது, கம்ப்யூட்டர் வேலையை எப்படிப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் பயிற்சி எடுக்க வேண்டும். அதாவது முதுகைத் தவறாகப் பயன்படுத்தாமல், சரியாகப் பயன்படுத்துவதற்கான அந்தப் பயிற்சி, மறுபடி வலி வருவதைத் தவிர்க்கும்.
அதி தீவிர வலிகளுக்கு, உடற்பயிற்சியுடன், ஐ.எஃப்.டி., லேசர், அல்ட்ராசானிக், மசாஜ் எனக் கூடுதலாக சில விஷயங்களையும் மருத்துவர் பரிந்துரைப்பார். எல்லா பயிற்சி களையும் மருத்துவரின் லோசனையின் பேரில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வலி இருந்தாலும் பரவாயில்லை, உடற்பயிற்சியை நிறுத்தக் கூடாது என்கிற தவறான அபிப்ராயம் பலருக்கும் இருக்கிறது. அது மிகவும் தவறு. உடம்பை வருத்தி எந்தப் பயிற்சியை செய்வதும் ஆபத்தானது.
உங்கள் நண்பருக்கு கையோ, காலோ வலிக்கிறது.... மருத்துவர் அவருக்கு சில பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறார். அதே இடத்தில் உங்களுக்கும் வலி வருகிறது என்பதால், உங்கள் நண்பர் செய்கிற அதே பயிற்சிகளை நீங்களும் செய்யக் கூடாது. வலிக்கான காரணம், அதன் தீவிரம் போன்றவற்றைப் பார்த்துவிட்டு, உங்களுக்கான சரியான பயிற்சியை மருத்துவர்தான் பரிந்துரைக்க வேண்டும்.செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறுகிற உடற்பயிற்சிகளும் சரி, செய்யக்கூடாத நேரத்தில் செய்கிற உடற்பயிற்சிகளும் சரி... இரண்டுமே ஆபத்தானவை!’’

பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல்


 Sunday 28 October 2012.By.Lovi.சம்பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது!
உலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள். அந்தப் பற்களைப் பதம் பார்க்கும் பிரச்னைகளும் அக்கு பிரஷர் தருகிறபோது பல்லிளித்து ஒதுங்கிவிடுகின்றன. பொதுவாக பற்கள் முக அழகைக் கூட்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே பற்கள் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காட்டும் இண்டிகேட்டர் என்பது தெரியுமா?
ஆம், மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அதே போல, அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன. அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது. மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம் பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.
பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள ‘கிட்னி சக்தி புள்ளி’களை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமான பற்கள் முளைக்கத் துவங்கும்.
எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்னை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த ‘விரல்நுனி அழுத்தம்’ கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும். அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.
பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்து தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.
அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்கு சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி:பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது. சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.
இனி சற்று கீழிறங்கி கழுத்து பிரச்னைகளைப் பார்க்கலாம். ‘எலும்பு தேய்வதாலேயே கழுத்து வலிக்கிறது’ என்பதுதான் தற்போதைய பரவலான கருத்து. அந்த எண்ணத்துடனேயே ‘நெக் காலர்’, ‘டிராக்ஷன்’ என சிகிச்சை எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள். கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்புவதற்கு வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளது. அதை மேல்நோக்கி இழுக்கும் ‘டிராக்ஷன்’ சிகிச்சையால் ‘ரைநெக்’ (wry neck)   என்ற பிரச்னை ஏற்படலாம். அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமையாகத் திருப்புவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்.
கட்டைவிரலைத் தொடர்ந்து சுழற்றியும், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியை மெதுவாக அழுத்தி விட்டும் கழுத்து வலியைக் குணப்படுத்தலாம் என்கிறது அக்கு பிரஷர். ‘சூஜோக்’ வளையமும் கழுத்துவலி தீர்ப்பதில் பயன்படுகிறது.
பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன்கழுத்துக் கழலை’. தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காததாலோ ஏற்படுகிறது.
அக்கு பிரஷரில் ‘தைராய்டு பாதிப்பு’ இருக்கிறதா அல்லது ஏற்படலாமா என்பதைக்கூட முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங்கையில் அழுத்தும்போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு சிகிச்சையும் அதே ‘கட்டைவிரல் - உள்ளங்கை’ அழுத்தமே.
காதில் உள்ள தைராய்டுக்கான அக்கு புள்ளியைத் தூண்டியும் இந்தக் கழலை நோயைக் குணப்படுத்தலாம். இதற்கு காதணி/ தோடு போன்ற அணிகலன்களே போதுமானது. இந்த இடத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய். காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!
ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
*  பல் துலக்கும்போது பிரஷ்ஷை நீள்வட்டமாக சுழற்றி துலக்குவது நல்லது.
*   அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் கொப்பளித்தால், பற்கள் ஆரோக்கியம் பெறும்.
*   பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்க, குணமாகும்.
*  கீரை வகைகள், சுண்டக்காய், பால் பொருட்கள் பற்களுக்கு வலிமை சேர்ப்பவை.
*   படிக்கிறபோது எழுத்துகள் இரு புருவங்களுக்கு மையத்தில் இருக்குமாறு படித்தால், கழுத்து வலியிலிருந்து தப்பிக்கலாம்.
*   தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது

முதுகுவலிக்கு வேக்யூம் சிகிச்சை!

         
Friday 26 October 2012  By.Lovi.
நான்கு கால் விலங்கு நிலையிலிருந்த மனிதனை நிமிர்த்தி நேராக்கியது பரிணாம வளர்ச்சி. அந்தப் போராட்டத்தில் ‘பெண்டு நிமிர’ உழைத்த உறுப்பு, முதுகெலும்பு. உறுதியற்ற மனிதர்களை ‘முதுகெலும்பில்லாதவனே’ என்பார்கள். வலிமைக்கு அடையாளமாகக் கருதப்படும் முதுகெலும்பை காலமாற்றம் திரும்பவும் வளைக்கப் பார்க்கிறது. ஆம், ‘முதுகுவலி’ இப்போதைய வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாத துயரம். ‘உட்கார்ந்தபடியே நீண்டநேர வேலை’, ‘தொடர்ச்சியான டூ-வீலர் டிரைவிங்’, ‘போதிய உடற்பயிற்சியின்மை’ போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்கள். இப்படிப்பட்ட முதுகுப் பிரச்னைகள் மட்டுமல்லாமல் வயிற்றுப் பிரச்னைகளுக்கும் அக்குபிரஷரில் இருக்கிறது ஆச்சரியப்படத்தக்க தீர்வு!

முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு நடக்கவே முடியாமல் போன நடிகர், நடிகைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அவர்கள் பிரபலங்கள் என்பதால் செய்தி வெளியே தெரிகிறது. இதே பாதிப்பால் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் சாதாரண மக்கள் எத்தனையோ பேர்! சென்சிடிவ்வான நரம்புகளின் சங்கமமான முதுகெலும்பை கண்டபடி அறுத்து விளையாடுவதும், மூளையோடு தொடர்புடைய முதுகெலும்பு திரவத்தை நினைத்த நேரத்தில் ஏதோ சிறுநீர் எடுத்துப் பரிசோதிப்பது போல உறிஞ்சுவதும் இன்று சர்வசாதாரணமாக நடக்கிறது. முதுகுவலி என சிகிச்சைக்குப் போனால் கிடைக்கும் முதல் அட்வைஸ், ‘கொஞ்ச நாளைக்கு வண்டி ஓட்டாதீர்கள்!’ என்பதாகத்தான் இருக்கும். வேலையை சுலபமாக்குவதற்கும், சௌகரியத்துக்காகவும்தான் கண்டுபிடிப்புகள். டூவீலர்களைப் பொறுத்தவரை ஷாக் அப்சார்பர் சரியான பராமரிப்பில் இருந்தால் தாராளமாகப் பயன்படுத்தலாம். வாகனத்தை ஓட்டும்போது நம் உடல் அதிக நேரம் ஒரே பொசிஷனில் இல்லாதபடி பார்த்துக்கொண்டால் மட்டும் போதும்.

‘முதுகுவலி ஏற்பட முதுகெலும்பு மட்டுமே காரணமல்ல’ என்பதுதான் அக்கு சிகிச்சை சொல்வது! நம் வயிற்றின் இடப்புறமாக அமைந்துள்ளது பெருங்குடலின் கீழிறக்கக் குடல். அந்தப் பெருங்குடலின் சக்தி குறையத் தொடங்கும்போது, அந்த பாதிப்பு இடது முதுகில்... முதுகெலும்பின் 4வது லம்பாரை ஒட்டிய சவ்வுகளில் வலி மூலம் உணரப்படும். ஆக, பெருங்குடலின் சக்தியைத் தூண்டிவிட்டாலே அந்த முதுகுவலியை விரட்டிவிடலாம்.

நோய்க்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்துச் சரி செய்யும் அக்கு சிகிச்சை கோட்பாட்டின்படி, முதுகுவலியைக் கண்டறிவது மிகவும் எளிமையான விஷயம். கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கொஞ்சம் கீழ்ப்புறமாக சற்று அழுத்திப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். மெட்டாகார்பல் எலும்புப் பகுதியான அந்தப் பகுதியை அழுத்தும்போது வலி இருப்பின், முதுகுவலி பிரச்னை இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும்போது மெல்ல மெல்ல முதுகுவலி மாயமாகும் அதிசயத்தை உணர்வீர்கள்.

இதற்கு இன்னொரு சிகிச்சை, கப்பிங் தெரபி. அக்கு நிபுணரை ஆலோசித்து ஒரு சிட்டிங் பயிற்சி பெற்றால் போதும், வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ள முடிகிற எளிமையான பயிற்சிதான் இதுவும் (அடுத்தவர் உதவி தேவைப்படலாம்). வேக்யூம் முறையில் செயல்படும் கண்ணாடி அல்லது ரப்பரால் ஆன உபகரணங்களே இதற்கான கருவிகள். கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை இந்த ‘வெற்றிட’ உபகரணங்களை கவிழ்த்து வைத்து சில நிமிடங்கள் படுத்திருந்தாலே போதும். இதைத் தொடர்ந்து செய்கிறபோது பெருங்குடலின் சக்தி நன்கு தூண்டப்பட்டு, பிரச்னை குணமாகிறது. முதுகைப் பொறுத்தவரை முக்கியமான ஒரே பிரச்னை இந்த முதுகுவலிதான். சுலபமான இந்த முறைகளை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்று சிக்கிவிடாதீர்கள். ஒருமுறை இந்த ஸ்கேன்களை எடுத்தால் நான்கரை ஆண்டுகள் அணு உலையில் வேலை பார்த்ததற்குச் சமம். அவ்வளவு கதிர்வீச்சு அதில் உண்டு. கதிர்வீச்சின் அபாயங்களை அறிவீர்கள்தானே?

அடுத்ததாக, வயிறு சார்ந்த பிரச்னைகளைப் பார்ப்போம். நமது உடலில் மார்புக்குக் கீழே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் ‘சோலார் பிளக்சஸ்’ எனப்படும் நாபிச்சக்கரம்தான். இது வேறொன்றும் இல்லை, சினிமாக்காரர்கள் பம்பரம் விளையாட, ஆம்லெட் போட பயன்படுத்தினார்களே... அதே தொப்புள்தான். எந்த நேரமும் சக்தி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அக்குபங்சர் நிபுணர்கள்கூட உடலின் மற்ற பகுதிகள் போல் இந்த இடத்தில் ஊசி குத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், அதே நாபிச்சக்கரத்தின் மூலம் வயிற்றுவலி உட்பட வயிறு சம்பந்தப்பட்ட 13 வகை நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதுதான் விசேஷம்.


‘மாக்சுபூசன்’ எனப்படும் அந்தச் சிகிச்சைக்குத் தேவையானவை, சிறு இஞ்சித் துண்டும் கொஞ்சம் உப்பும். தங்களுக்குத் தாங்களே செய்துகொள்வது சிரமம் என்பதால் உதவிக்கு யாரையாவது அழைத்துக் கொள்வது சிறந்தது. மல்லாந்து படுத்தபடி, தொப்புளின் மீது உப்பைப் பரப்ப வேண்டும். இஞ்சித் துண்டை பட்டையாகத் தட்டி அந்த உப்பின்மீது வைக்க வேண்டும். காய்ந்த மருக்கொழுந்து இலையைச் சுருட்டி அதன் நுனியில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு அதை இஞ்சியின் மீது காட்டி வந்தால், தொப்புளோடு தொடர்புடைய சகல நாடிகளும் புத்துணர்ச்சி பெறுவதோடு, வயிறு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையும் வராது.

அதிகம் பளு தூக்குவதினாலோ, எசகுபிசகான உடற்பயிற்சியின்போதோ, குழந்தைகளைத் தவறுதலாக கையாளுகிறபோதோ நம் குடலில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். குடலேற்றம் மலச்சிக்கலுக்கும், குடலிறக்கம் வயிற்றுப்போக்குக்கும் வழிவகுத்து விடலாம். இதை ஆஃப் செய்யும் ஸ்விட்சும் தொப்புள்தான். தொப்புளைச் சுற்றிலும் சிறு அழுத்தம் கொடுத்து, இறுதியாக தொப்புள் பகுதியை சற்று அதிக அழுத்தம் கொடுத்து அசைத்தால் குடலின் ஏற்ற இறக்கம் மாறி, தான் இருக்க வேண்டிய இடத்தில் வந்து சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும்.

ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

* மெட்டாகார்பல் எலும்புப் பகுதியில் வலியுள்ள இடங்களில் சில மிளகுகளை வைத்து பிளாஸ்டர் ஒட்டி மூடிவிடலாம். பிறகு அவ்வப்போது அந்த இடத்தை அழுத்துவதன் மூலமும் முதுகுவலியை விரட்டலாம்.

* தொடர்ந்து உட்கார்ந்திருப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. கிடைக்கிற இடைவேளைகளில் உடலுக்குத் தேவையான பயிற்சிகளைச் செய்யலாம். அக்குபிரஷர் பயிற்சிகளுக்குத்தான் தனியான இடம் தேவையில்லையே.

* முதுகுவலி பிரச்னை உள்ளவர்கள் முன்னோக்கிக் குனிவதைத் தவிர்க்க வேண்டும்.

* எளிமையான சர்வாங்காசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்து வருவதும் முதுகுவலிக்கு நல்ல மருந்து

நடைப்பயிற்சி செய்தால் மூளைக்கு நல்லது: ஆய்வில் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Lovi.
வயதானவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக அவர்களின் மூளை சுருங்கி நினைவுத்திறன் படிப்படியாக குறைந்துவிடும். டிமெண்டியா எனப்படும் இந்த ஞாபகத்திறன் குறைபாட்டினை உடற்பயிற்சி செய்வதன் மூலம் தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர், அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
மனிதர்களுக்கு வயதாகும் போது அவர்களின் மூளை சுருங்குவது இயல்பு. இப்படி மூளை சுருங்கும் போது, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.
மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது. இதில் வயதாக ஆக, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும்.
60- 70 வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதை தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயோதிகத்துடன் தொடர்புடைய டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோயை தடுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வயதானவர்கள் தினந்தோரும் நல்ல நடைபயிற்சி செய்தாலே அதுவும் உரிய பலன் தரும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். அதேசமயம் மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை என்றும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சியினால் ரத்த சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே வயதான காலத்தில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி அதாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரையாகும்

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Lovi.
தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும். எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
இச்செயன்முறைக்கு PDF to Text Converter எனும் மென்பொருளானது பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருள் மூலம் தனிப்பட்ட ஒரு கோப்பினையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களினையோ மிகவும் இலகுவான முறையில் ஒரே நேரத்தில் Text கோப்பாக மாற்றியமைக்க முடியும்.
அத்துடன் ஒரு கோப்பின் குறிப்பிட்ட சில பக்கங்களையோ அல்லது அனைத்து பக்கங்களையுமோ Text மாற்றியமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருளின் செயற்பாட்டிற்கு Adobe Acrobat Reader மென்பொருளோ அல்லது எந்தவிதமான Print Driver மென்பொருட்களோ கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை

Skype-ன் புதிய பதிப்பு வெளியீடு

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Lovi.
இணைய பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வரும் Skypeஆனது மைக்ரோசொப்டின் Windows மற்றும் அப்பிளின் Mac ஆகியவற்றிற்கு என தனது புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. முன்னைய பதிப்பில் Skype-இல் இருந்து பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்து நண்பர்களுடன் சட்டில் ஈடுபடும் வசதி தரப்பட்டிருந்தது.
ஆனால் புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பின் மூலம் மைக்ரோசொப்ட் கணக்குகளில் உள்நுழையும் வசதியும், அவ்வாறே நண்பர்களின் Windows Live Messenge கணக்கிற்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய வசதியினையும் இணைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிகமாக ஆறு மொழிகளையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இப்பதிப்பினை விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்

25.10.2012.By.Lovi.பங்குனியில் 18 நாள் பிரம்மோற்ஸவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம்இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளதுகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை- 600 079 சென்னை.இங்குள்ள விநாயகர் வன்னிமரவிநாயகர். திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளதுதிருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருக்கவும், சனி தோஷம் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர்.சனிதோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்சனை இருந்தால், கனிகள் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், பிரச்சனைகள் தீருவதாக நம்பிக்கை.கோயிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு லிங்கம் தனி சன்னதியில் உள்ளது. இவரது கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்கு, சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இதே சிலையின் பின்புறத்தில் மயில்வாகனத்துடன் நின்றகோலத்தில் முருகன் இருக்கிறார். அண்ணனும், தம்பியும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் இக்கோலத்தில் இருப்பது அபூர்வம்.

அம்மன் சன்னதி முன்புறம் நவக்கிரக மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர் அம்பாளின் நேரடிப்பார்வையில் உள்ளதால், உக்கிரம் குறைந்து காட்சியளிக்கிறார். தோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.

கனவு பலன்:
சிவன் சன்னதிக்கு முன்வலப்புறத்தில் தூணில் சிவ ஆஞ்சநேயர் இருக்கிறார். இவருக்கு வெள்ளி நிறத்திலான ஜரிகை பூசி, துளசி மாலை சாத்தி வணங்கினால் நாம் கண்ட நற்கனவுகள் பலிக்கும், தீய கனவுகளாக இருந்தால் அவை நம்மை அண்டாமல் விலகிஓடும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, இவரை "கனவு ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். பிரகாரத்திலும் ஒரு ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடி உள்ளார்பல்லாண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக இருந்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் கோயிலுக்கு செல்ல எண்ணியபோது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறி கோயிலுக்கு சென்றார். வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, "இனி தன்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன், என்னை இங்கேயே வழிபடு,'' என்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென வரலாறு கூறுகிறது.

அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்

25.10.2012.By.Lovi..இத்தல விநாயகர் தலையை ஆட்டும் விதமாக இடதுபக்கம் தலைசாய்த்தபடி உள்ளார்காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில், ஆத்தூர் -636102, சேலம் மாவட்டம்முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் "ஆற்றூர்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் "ஆத்தூர்' என்று மருவியுள்ளது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேஸ்வரராக அருளுகிறார்திருமண, புத்திர, கிரக தோஷம் நீங்க இங்கு வழிபடலாம்.
.விநாயகருக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கைசிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன்.
காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன் படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப் போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான்.
இவ்வாறு மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியை துவங்கினான். இவரே கோயில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டான். அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்

பேய் விரட்டும் வினோத திருவிழா: பக்தர்கள் பரவசம்!

 
அக்டோபர் 25,2012.By.Rajah.நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திருவிழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத நிகழ்ச்சி நடந்து. நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர்.விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டுதல், சேர்வை நடனம் உள்ளிட்டவை நடக்கும். இதில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பர்.அவர்கள், தரையில் மண்டியிட்டபடி, கைகளை மேலே தூக்கியிருப்பர். கை தூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையை சுழற்றி, நடனமாடியபடி அடிப்பது வழக்கம்.

அதன் மூலம், தங்களை பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் நம்பிக்கை. இந்தாண்டுக்கான, அச்சப்பன் கோவில் திருவிழா, விஜயதசமியான, நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள், கோவிலில் குவிந்தனர். மாலை, 3 மணியளவில், பிரசித்தி பெற்ற பேய் விரட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் ஈர ஆடையுடன் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர்.

கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் மேள தாளம் முழங்க சாட்டையை சுழற்றியபடி வந்தனர். பின், கைகளை மேலே உயர்த்தி மண்டியிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர்.அச்சன் கோவில் திருவிழாவையொட்டி, 40க்கும் மேற்பட்டோர் நேர்த்திக் கடனாக, தங்களது தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர். மேலும், விழாவின் ஒரு பகுதியாக, குரும்பா இன மக்கள், தங்களது பாரம்பரிய உடையணிந்து, சேர்வை நடனம் ஆடினர்

மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்!!

          
Thursday 25 October 2012.By.Rajah.
மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும்இழுத்துக்கொண்டோடும் மழைநீரில்கண்ணுக்குத்தெரியாத கிருமிகளும்உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும்.தன்வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும்.இப்படிப்பரவும் நோய்களிலிருந்துதப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான்பெஸ்ட்என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் குணசேகரன்.

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க்கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தைகளையும் தாக்கும். அதேபோல ஏற்கனவே நோயுற்றிருப்பவர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.

இன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.

மழைக்காலத்தில் விலைவாசி போல விறுவிறுவென உயர்ந்துவிடும் கொசுக்களின் எண்ணிக்கையும். கொசுக்கள் மூலமாக எளிதில் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். இதற்கும் உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான். இந்த நோய் வந்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு மூட்டு வலி இருக்கும். அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்

மழைக்கால சளி பிரச்னைகளுக்கு

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Lovi.
மழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும். சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
விரவி மஞ்சள்
மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும்.
அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.
மஞ்சள்தூள் ஆவி பிடிங்க
ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
துளசி இலை
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
பனங்கிழங்கு
மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
மழைக்கால கசாயம்
மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.
மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.
தலைப்பாரம் நீங்க
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
சாம்பிராணி புகை போடுங்க
ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
தும்மல் தீர்க்கும் தூதுவளை
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்

LG Optimus G கைப்பேசிகள் பற்றிய ஒரு பார்வை

 
வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Lovi.
பல்வேறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் போட்டி நிலைமை காரணமாக இன்று நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றுடன் தொடர்ந்தும் தரமான கைப்பேசிகள் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. இவற்றின் அடிப்படையில் LG நிறுவனமானது Optimus G எனும் Android 4..0.4 Icecream Sandwich இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்ட கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை 4.7 அங்குலமானதும், 768 x 1280 Pixels-களைக் கொண்டதுமான Gorilla Class தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரைகளைக் கொண்டுள்ளதுடன் 13 Mexapixels உடைய அதிநவீன கமெராவினையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர பின்வரும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.
Quad-band GSM/GPRS/EDGE support.
3G with HSPA- LTE.
Android OS v4.0.4 Ice Cream Sandwich, planned upgrade to 4.1 Jelly Bean, LG Optimus UI 3.0.
Quad-core 1.5 GHz Krait CPU, 2 GB RAM, Adreno 320 GPU, Qualcomm Snapdragon S4 Pro chipset.
13 MP autofocus camera with LED flash and geotagging, image stabilization, Time catch shot, smart shutter.
1080p video recording @ 30fps with continuous autofocus and stereo sound.
1.3 MP front-facing camera, 720p video recording.
Wi-Fi a/b/g/n, Wi-Fi Direct and DLNA.
GPS with A-GPS, GLONASS.
32GB of built-in storage.
MHL-enabled microUSB port, USB host support.
Bluetooth v4.0.
Standard 3.5 mm audio jack.
Stereo FM radio with RDS.
Voice dialing.
Two app overlay mode for multi-tasking (Q Slide).
Independent content output through MHL (Dual Screen Dual Play).
Accelerometer and proximity sensor.
Active noise cancellation with dedicated mic.


 

HTML ​5 Slideshow Maker: இணையத்தளங்​களுக்கான Slideshow-​களை உருவாக்குவ​தற்கு

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By,Lovi.
இன்று பல லட்சக்கணக்கான இணையத்தளங்கள் உலாவருகின்ற போதிலும் அவற்றுள் மக்களை கவரும் விதமாக அமைக்கப்பட்ட இணையத்தளங்களே முன்னணியில் திகழ்கின்றன. இவ்வாறு மக்களைக் கவரும் அம்சங்களில் Animations மற்றும் Slideshow போன்ற பல விடயங்கள் அமைகின்றன.
எனவே இணையத்தள வடிவமைப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HTML 5-இற்குரிய Slideshow-களை இலகுவாக உருவாக்கிக் கொள்வதற்கு HTML 5 Slideshow Maker எனும் மென்பொருள் உதவியாக அமைகின்றது.
Windows மற்றும் Mac OS இயங்குதளங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருள் மூலம் மூன்றே மூன்று படிமுறைகளில் அழகிய Slideshow-களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதற்காக முதலில் Slideshow -னுள் உள்ளடக்க வேண்டிய படங்களை தேர்வு செய்து தொடர்ந்து அதற்கு பொருத்தமான அழகிய theme ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் பின்னணி வர்ணங்களை விரும்பியவாறு மாற்றியமைத்து இணைப்புக்களையும்(Hyperlinks) கொடுத்து Publish செய்தால் போதும் உங்களுக்குரிய Slideshow தயாராகிவிடும்

மயக்க நிலையில் ஒருவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி!!!

    
Wednesday24October2012 By.Lovi.ஒரு நபர் மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
2. சோர்வு
3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.


முதலுதவி

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது அவரை முன்புறமாக சாய்க்க வேண்டும்

தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவைப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது

பாம்பு கடிச்சா என்ன செய்வீங்க!!

       
Wednesday24October2012 By.Lovi.பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.
விஷப்பரீச்சை
விசத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை உயிர்ப்பரீட்சை செய்து பார்ப்பது எப்படி.
கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்துவிட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.
தலைமயிரைப் பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். முருங்கை இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். உள்ளி - 10 கிராம். மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.
வெற்றிலை - 10 கிராம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். மிளகு - 10 கிராம். இவற்றுடன் சிறு குழந்தை சிறுநீர் விட்டு தட்டிப்பிழிந்து சாறு எடுத்து காதிலும் மூக்கிலும் நசியம் செய்ய விஷம் நீங்கும்.
தலை ரோமத்தைக் கருக்கி பசு வெண்ணெயில் குழப்பி கடித்த இடத்தில் நன்றாகத் தடவவேண்டும்.
மேலும் அம்மாம் பச்சரிசி - 10 கிராம்
தக்காளி வேர் - 10 கிராம்
நாயுருவி வேர் - 10 கிராம்
இவைகளைச் சிறுநீர் விட்டரைத்துக் கடிவாயில் பூசி வர விஷம் அறவே நீங்கும். அவதி அகலும்.
ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்
கவுதும்பை வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.
வசம்பு, வெள்ளைப்பூண்டு, நல்லதாளி, நிலப்பனங்கிழங்கு,திப்பிலி, வெள்ளைக் காக்கண வேர்ப்பட்டை இவை சம அளவு எடுத்து, குப்பைமேனி சாற்றில் அரைத்துக் கொள்ளவும். கழற்சிக்காயளவு உள்ளுக்குக் கொடுக்கவும். அதனையே மேலே தடவவும்.
நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்
சிறியா நங்கை வேர் - 20 கிராம்
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும். குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம் (மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.

பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, ByLovi.
பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஹெச்ஐவி புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலஸ்ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள கிரீமில் எய்ட்ஸ் வைரசை தாக்கி அழிக்கும் பக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும், இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது. எய்ட்ஸ் நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பால் கிரீம் கட்டுப்படுத்துகிறது, எவ்வளவு கிரீம் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர்

நவீன தொழில்நுட்​பங்களுடன் LG அறிமுகப்படு​த்தும் Sliding Tablet

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Lovi.
உலகளாவிய ரீதியில் தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட LG H160 எனும் Sliding Tablet - இனை அறிமுகப்படுத்துகின்றது. இதில் 11.6 அங்குல அளவுகொண்ட LCD IPS தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 178 டிகிரி வரையான பார்வைக் கோணத்தைக் கொண்டதுமான தொடுதிரையினை காணப்படுகின்றது.
மேலும் 1.05kg எடைகொண்ட இந்த tablet 15.9mm தடிப்புடையதாகக் காணப்படுவதுடன் 1 x USB, 1 x HDMI port, microSD card slot மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
LG H160 Tablet விலையானது இதுவரையில் நிர்ணயிக்கப்படாத போதும் விண்டோஸ் 8 இயங்குதளம் எதிர்வரும் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொருள் விபரப்பட்டி​யலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் ​கொள்வதற்கு

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Lovi.
வியாபார நடவடிக்கைகளின் போது இடம் பெறும் கொடுக்கல்- வாங்கல்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்வதற்கு பல கணனி மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவை தவிர ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்பட்ட போதிலும், அவற்றுள் தரம் குறைவான சேவைகள், நம்பகத்தன்மையற்ற தன்மை போன்றவற்றுடன் பணம் செலுத்த வேண்டிய நிலையும் காணப்படும்.
எனினும் 100 வீதம் இலவசமானதும், சிறந்த சேவையினை வழங்கக்கூடியதுமாக Robo invoice எனும் தளம் காணப்படுகின்றது.
இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பதிவுகளை தரவிறக்கம் செய்யக் கூடியதாகக் காணப்படுவதோடு, பிரிண்ட் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.
அத்துடன் குறித்த வியாபார நிறுவனத்தின் லோகேவை தரவேற்றம் செய்து இணைக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான முற்பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசிம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையதள முகவரி

உடம்பு அதிக களைப்பா இருக்கா?

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi.
அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன், எளிதில் களைப்பு அடையாமல் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் களைப்பைத் தான் எளிதில் அடைய முடிகிறது. மேலும் எவ்வளவு தான் முக்கிய வேலையாக இருந்தாலும், அந்த வேலை செய்ய எண்ணம் இல்லாமல் தூங்க வேண்டும் என்றே எப்போதும் தோன்றும். இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை தான்.
உடலில் அதிக களைப்பு இருந்தால் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அதாவது வாந்தி, தலைவலி போன்றவை. மேலும் அதே சமயம் அந்த களைப்பு பலவித நோய்களுக்கும் அறிகுறியாக உள்ளது. உதாரணமாக உடலில் தைராய்டு, எய்ட்ஸ், அனீமியா போன்ற நோய்களுக்கு உடல் களைப்பு ஒரு அறிகுறி.
மேலும் அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வடைந்துவிடும். சரியான உணவு பழக்கம் இல்லாதது, நாள்பட்ட வலி போன்றவையும் உடல் சோர்வுக்கு காரணங்களாகும்.
ஆகவே இவற்றை சரிசெய்ய வேண்டுமென்றால் நாம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும்.
தூக்கம்: சரியாக தூங்காமல் இருந்ததால் உடலில் சோர்வு ஏற்படும். அதிலும் உடலுக்கு குறைந்தது 6-8 மணிநேர ஓய்வானது தேவைப்படுகிறது. அவ்வாறு சரியான ஓய்வு உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு ஏற்படும்.
நோய்கள்: எப்போது பார்த்தாலும் உடல் களைப்புடன் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று இருந்தால், அது உடலில் ஏற்படும் நோயான அனீமியா, தைராய்டு போன்றவற்றிற்கு அறிகுறியாகும்.
வாழ்க்கை முறை: இன்றைய மார்டன் உலகில் வேலைக்கு சென்றால், குறைந்தது 8-9 மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. மேலும் அலுவலகம் நீண்ட தூரத்தில் இருப்பதாலோ அல்லது வேறு ஏதாவது வேலைக்காவோ, பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆகவே உடல் பலமிழந்து சோர்வடைகிறது.
மனநிலை: ஒருவர் அதிக மன அழுத்ததுடனோ அல்லது மன இறுக்கத்துடனோ இருந்தால், அவையும் உடலை அதிக அளவில் களைப்படையச் செய்கின்றன.
உணவு: உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான உணவானது உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் நிறைய பேர் உடல் எடையை குறைக்க, உடலை பிட்டாக வைப்பதற்கு என்று நிறைய ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சேர்க்கின்றனர். இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.
உடல் பருமன்: ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்களின் உடல் விரைவில் களைப்படைந்துவிடும். ஆகவே அதிக உடல் எடையும் களைப்படைவதற்கு ஒரு காரணம்.
எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்

iOS மற்றும் Android சாதனங்களுக்​காக அறிமுகமாகு​ம்

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi.{காணொளி, புகைப்படங்கள்},
Carmageddo​n வீடியோ கேம்வீடியோ கேம் பிரியர்களுக்காக நாளாந்தம் பல்வேறு வகையான கேம்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. இவற்றின் அடிப்படையில் 1997ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற Carmageddon கேம் ஆனது தற்போது Stainless Games நிறுவனத்தினால் மெருகூட்டப்பட்டு அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
102MB கோப்பு அளவு கொண்ட இக்கேம் ஆனது உயர் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதனால், துல்லியமான ஒலிநயத்தைக் கொண்டிருப்பதுடன் அதியுயர் Graphics Resolution-னையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
இக்கேம் அறிமுகமாகிய 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வன்முறைகளை அதிகப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமையினால் பல நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Aegisub Subtitle Editor மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi.
வீடியோ கோப்புக்களை பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இவற்றினை உருவாக்குவதற்கு தற்போது Aegisub Subtitle Editor எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் இலகுவான முறையில் Subtitle களை உருவாக்க முடிவதுடன் எளிமையான முறையில் அனைவராலும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 21MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளில் subtitle styles manager, subtitle spell checkers, resolution resamplers, video பற்றிய தகவல்கள் மற்றும் timer போன்ற வசதிகளும் காணப்படுகின்றன

மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகை செடிகள்

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012.By.Lovi.
மன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங்களில் பிரச்சனை மற்றும் உடலில் கூட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை குறைக்க சில மூலிகை செடிகள் இருக்கின்றன. இவை மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸ் செய்கின்றன.
ரோஸ்மேரி: மூலிகை செடிகளில் ஒன்றான ரோஸ்மேரி சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை மற்ற பயன்களுக்கும் பயன்படுகின்றன. அதிலும் மன அழுத்தத்தை குறைக்கப் பெரிதும் பயன்படுகிறது.
மேலும் இவை உடல் தசைகளில் ஏற்படும் வலிகளுக்கும் சிறந்தது. மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால், மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆகிவிடும்.
லாவண்டர்: நிறைய இடங்களில் லாவண்டர் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். ஏனெனில் இந்த செடியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இவற்றால் ஹார்மோன்களில் ஏற்படும் பாதிப்பு சரியாகும். மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை வைத்து உடலுக்கு மசாஜ் செய்தால், உடல் நன்றாக இருக்கும். மேலும் இதன் சுவையில் தயாரிக்கப்பட்டிருக்கும் டீயை குடித்தால், நிச்சயம் மன அழுத்தம் குறையும்.
கிரீன் டீ: கிரீன் டீயின் நன்மைகள் நன்கு தெரியும். ஆனால் அந்த கிரீன் டீயை குடித்தால், மன அழுத்தம் குறையும் என்பது தெரியாது.
உண்மையில் தினமும் 3-4 கப் கிரீன் டீ குடித்தால், மன அழுத்தம் குறையும். இது ஒரு சிறந்த நிவாரணி. மேலும் இவற்றில் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையும் குறையும்.
சீமை சாமந்தி: இந்த பூ ஒரு சிறந்த மூலிகைச்செடிகளில் ஒன்று. இது காய்ச்சலால் ஏற்படும் ஒருசில வலிகளை சரிசெய்யும் சிறந்த மருந்துவ குணமுள்ள பூ.
உடல் வலி இருப்பவர்கள் இந்த பூக்களை அரைத்து, உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால், உடல் வலி நீங்குவதோடு அதன் மணத்தால் மன அழுத்தம் குறைந்தது உடலும் அழகாகும்.
மணற்பூண்டு: மணற்பூண்டு என்பது ஒருவித மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகைச் செடி. இதன் இலையை அரைத்து உடலுக்கு தடவினால் தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு, மூளையும் நன்கு ரிலாக்ஸ் ஆகும்.
முக்கியமாக இது மனதில் ஏற்படும் தேவையில்லாத வலிகளை சரிசெய்துவிடும் அற்புதமான செடியும் கூட. ஏனெனில் அதன் நறுமணம் அத்தகைய மந்திரத் தன்மையுடையது

Advanced System Care மென்பொருளி​ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Lovi.
கணனியில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி அவற்றினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Advanced System Care எனும் மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System Care 6 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நம்பர் ஒன் மென்பொருளாக காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் Registryகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குதல், Malwareகளை நீக்குதல் மற்றும் இணைய வேகத்தினை துரிதப்படுத்துதல் போன்ற பல வசதிகளை பெறமுடியும்.
மேலும் விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடியதாகக் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது.
தவிர தற்போது உலகெங்கிலும் 150 மில்லியன் வரையான கணனிப் பாவனையாளர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய பதிப்பாக வெளிவருகின்​றது Angry Birds Star Wars

ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Lovi.
பேஸ்புக் தளம் மூலம் அறிமுகமாகி Android சாதனங்கள் வரை பிரபலமான கணனி விளையாட்டான Angry Birds ஆனது தற்போது Angry Birds Star Wars எனும் புதிய பதிப்பாக வெளிவர இருக்கின்றது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை குறித்த கணனி விளையாட்டினை உருவாக்கிய Rovio Mobile நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி வெளியிடப்படவிருக்கும் Angry Birds Star Wars என்ற விளையாட்டு Android சாதனங்களில் மட்டுமல்லாது அப்பிளின் iOS சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் இக்கணனி விளையாட்டிற்கான முன்னோட்டக் காட்சி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.


பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, By.Lovi.
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
பொதுவாக பற்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.
ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.
சீஸ்
உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால் அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும்.
அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.
சொக்லேட்
அனைவருக்குமே சொக்லேட் மிகவும் பிடிக்கும். சொக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை தங்க வைக்கும்.
ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.
பாப்கார்ன்
பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.
பிரட்
அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பக்டீரியாவை அதிகரிக்கும்.
இறைச்சி
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.
அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.

சில நொடிகளில் Dropbox கணக்கினை நீக்குவதற்​கு

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Lovi.கோப்புக்களை வேண்டிய இடங்களிலும், வேண்டிய தருணங்களிலும் பயன்படுத்துவதற்கு ஒன்லைன் சேமிப்பகமான Cloud Storage பெரிதும் .பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. இச்சேவையினை பல்வேறு நிறுவனங்கள் தருகின்றன.
இவ்வாறான சேவையை வழங்கும் பிரபலமான நிறுவனங்களில் Dropbox உம் ஒன்றாகும். இச்சேவையினைப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட கணக்கு ஒன்றினை குறித்த இணையத்தளத்தில் வைத்திருக்க வேண்டும்.

எனினும் தேவை கருதி குறித்தி கணக்கினை அத்தளத்திலிருந்து நீக்குவதற்கான வசதியும் இத்தளம் வழங்குகின்றது. இருந்தபோதிலும் நீக்கப்பட்ட ஒரு கணக்கின் பெயரில் மீண்டும் புதிய கணக்கினை உருவாக்கிக் கொள்ள முடியாது.

Dropbox கணக்கினை நீக்குவதற்கு உங்கள் பயனர் சொல் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

அதனைத் தொடர்ந்து Account Settings பக்கத்திற்கு செல்லவும். அப்போது தென்படும் பக்கத்தில் கடவுச்சொல், கணக்கை நீக்குவதற்கான காரணம் என்பனவற்றினை உட்புகுத்தி இறுதியில் Delete my account என்பதை தெரிவு செய்யவும்

கூகுளின் தயாரிப்பில் வெளியாகும் Samsung Chrome book

 சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Lovi.{காணொளி, புகைப்படங்கள்,}
தொழில்நுட்ப உலகில் தன்னை ஆழமாக நிலைநிறுத்தியுள்ள கூகுள் நிறுவனமானது Samsung Chrome book எனும் புதிய மடிக்கணனி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இது ஏனைய கணனிகளினைக் காட்டிலும் விரைவானதாக இயங்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வகையில் பாதுகாப்பு மிகுந்ததும், கூகுளின் cloud storage மற்றும் ஏனைய கூகுள் தயாரிப்புக்களை உள்ளடக்கிய Chrome OS எனும் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் 3G தொழில்நுட்பத்தினையும் தன்னகத்தே கொண்டு காணப்படும் இந்த மடிக்கணனிகளின் பெறுமதியானது 249 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறைந்த விலையில் அறிமுகமாகு​ம் Cube U9GT4 Tablet

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Lovi.
தற்போது அதிகரித்துவரும் Tablet பாவனைகளின் விளைவாக பல்வேறு நிறுவனங்களும் Tablet உற்பத்தியில் தமது கவனத்தை செலுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் பல Tablet அன்றாடம் அறிமுகமாகிய போதிலும், அவை அனைத்து தரப்பினராலும் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு அதிக பெறுமதி உடையவையாகக் காணப்பட்டன.
இதற்கான தீர்வாக 150 அமெரிக்க டொலர்களே பெறுமதியான Cube U9GT4 Tablet தற்போது அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இவை Android 4.1 Gelly Bean இயங்குளத்தில் செயற்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் 1.6GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dualcore Processor, 1GB RAM மற்றும் 8GB உள்ளக Memory ஆகியவற்றையும் கொண்டுள்ளன. எனினும் தேவைக்கு ஏற்றாற் போல் microSD கார்ட் மூலம் Memory-யின் அளவினை அதிகரிக்க முடியும்.
மேலும் இவை 1024 x 600 Pixels Resolution உடையதும் 7 அங்குல அளவுடையதுமான தொடுதிரையினையும் கொண்டுள்ளன.

Powered by Blogger.