உங்க குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறை எந்த திசையில் இருக்கவேண்டும்

 

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க, தெற்கு திசையில் தலையை வைத்து தூங்குவதற்கு தினசரி பயிற்சி செய்ய வேண்டும். வாதா மற்றும் கபா உடல் அமைப்பு உள்ளவர்கள் இடது பக்கத்தில் தூங்க வேண்டும் மற்றும் பித்த உடலமைப்பு கொண்டவர்கள் தங்கள் வலது பக்கத்தில் தூங்க வேண்டும். மாடிப்படி வீட்டின் மையப்பகுதியில் ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே மூலையில் மட்டும் வைக்கவும்.
பிரம்மஸ்தான்

வீட்டின் மையப் பகுதி காலியாக வைக்கப்பட வேண்டிய பிரம்மஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருபோதும் கனமான பொருட்களை மையத்தில் வைக்காதீர்கள் மற்றும் இந்த பகுதியை காலியாக விட்டு வையுங்கள். வீடுகளின் மையப்பகுதி வழியாக செல்லும் மாடிப்படிகள் மனதைக் கஷ்டப்படுத்தி மனதைத் தொந்தரவு செய்யும்.
பிரமிட்

வீட்டின் மையத்தில் உள்ள கட்டமைப்புகளில் கட்டப்பட்ட கான்கிரீட்டை ஒருபோதும் திட்டமிடாதீர்கள். பிரம்மஸ்தானம் தூண்கள், விட்டங்கள் மற்றும் பிற கனமான விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். முடிந்தவரை, இந்த நிலையை காலியாக வைக்கவும். வீட்டின் பிரம்மஸ்தானத்தில் பிரமிட்டை வைப்பது எப்போதும் நல்லது.
அக்னி ஸ்தானம்

வீட்டில் உள்ள அக்னி ஸ்தானத்தில் சமநிலையின்றி இருப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு நோயை ஏற்படுத்தும். எனவே இந்த இடத்தில் அதற்கு பொருத்தமானவற்றை அமைக்கவும். நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, இந்த இடத்தில் விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யுங்கள்.
சமையலறையின் நிலை


வீடுகளில் சமையலறை வைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சமையலறை நெருப்பு மண்டலத்தில் வீட்டின் தென்மேற்கில் அமைந்திருக்கவில்லை என்றால், வீட்டில் வசிப்பவர்கள் பல உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாக நேரிடும். எனவே வீட்டை கட்டும் போது, வீட்டிற்கு தென்கிழக்கில் சமையலறையை திட்டமிடுவது மிக அவசியமான விஷயம்.


பிறந்தநாள் வாழ்த்து செல்வி பால முரளி சாருகா 25. 03.2022

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா தனது 14வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக  25.03.2022 .இன்று கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்மி மார் அம்மம்மா  அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் உடன் பிறந்தோர் உறவுகளுடன் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்அப்பா வயிரவர்அப்பாச்சி அம்மன் ஒஸ்லோ முருகன்  இறை அருள் பெற்று பல் கலைகளும் பயின்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடுளி காலம்  வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
   இவர்களுடன் இணைந்து எமது இணையங்களும் இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவள்  நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவள் -நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவள்  நீ
நேசத்தால் மனதைத்தொட்டவள் -நீ
பாசம் கொண்ட மகளே   வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
வளம் பொங்கி நலமுடன் வாழ்க வாழ்க 
பல்லாண்டு பல்லாண்டுகாலம்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடி ஏற்றம் .23.03.22

இலங்கைத்திரு நாட்டில் நீர்வளமும், நிலவளமும் ஒருங்கே சிறப்புற அமைந்த இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி  கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்,
நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்  ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
கொடி ஏற்றந்திருவிழா 23-03-2022. இன்று புதன்கிழமை ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள்,
கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது 
இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும், அடுத்தமாதம்-02 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்கு மாங்கனி உற்சவமும், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05 மணிக்குத் திருவேட்டை உற்சவமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலங்களில் தினமும் பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
தினமும் எம்பெருமானை வழிபட்டு  பேரருளைப் பெற்று, உலகம்வாழ் அடியவர்கள் அனைவரும் பெருவாழ்வு வாழ எம்பெருமான்  கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்துணைபுரிவர் 
>>>ஒம்காம் கணபதி நாம தேய நமக >>>
நிகழ்வின் நிழல்  படங்கள் இணைப்பு ..
 

திருமணநாள் திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின் 20.03.2022

யாழ் கோப்பையில்வசிக்கும்  திரு திருமதி சண்முகலிங்கம் தம்பதியினரின்  திருமணநாள் 
20-03-2022 இன்று 44 வது திருமணநாள்   
 .இவர்களை அன்புப் பிள்ளைகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  கோப்பாய்  பிள்ளையார் சன்னதி  முருகன் நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>><<<<
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக.
இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக தம்பதியினர் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க
வாழ்க நலமுடனும் வளமுடனும் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.22

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2022..இன்று முப்பாதாவது வருடத்  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகன் மார் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>><<<<
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக.
இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக தம்பதியினர் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க
வாழ்க நலமுடனும் வளமுடனும் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலமுரளி ஹரிசன் 19.03.22

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்
ஹரிசன் தனது பதின்ஏழாவது  .பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  இன்று. 9.03.2022.கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள்  
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்மற்றும் ஒஸ்லோ முருகன்  இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பல் கலைகளும் பயின்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றன .

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து .திருமதி தனபாலன் தவம் .17.03.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது பிரான்ஸ் நாட்டில்வசிக்கும் திருமதி தவம் தனபாலன்  அவர்களின் பிறந்தநாள் .17.013.20122.இன்று  இவரை  அன்பு கணவர் பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும்
 இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட ​துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்ற​னர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன  
 வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி )16.03.22

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  அறுபத்தியொராவது  பிறந்தநாளை 16.013.2022. இன்று சுவில் செங்காளன் மாநிலத்தில்  கொண்டாடுகி​றார். இவரை  அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் தோப்பு போதிப்பமாணிக்கப் பிள்ளையார்  சன்னதிமுருகன்
 நல்லூர்முருகன் 

இறை அருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட ​குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்ற​னர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன.. 
வாழ்க நலமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வருடாந்த கொடி ஏற்றம் .23.03.22

யாழ் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்  பிள்ளையார் ஆலைய பிலவ வருஷ  வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவப் பெருந்திருவிழா விஞ்ஞாபன கொடி ஏற்றத்திருவிழா மற்றும் திருவிழா  உபயங்களும் கொடி ஏற்றஉற்சவம்.23.03.2022.புதன்கிழமை அன்று காலை பத்துமணிக்கு  ஆரம்பம் ஆகி காலையும் -மாமலையும் 15 தினங்கள் திரு விழாக்கள்
 நடைபெறத் திருவருள்
கூடி உள்ளது தொடர்ந்து,, வேட்டை திருவிழா சப்பறத்திருவிழாவும்   05,03,21.தேர்உற்சவம் 06.04,21,தீர்த்ததிருவிழாவும் .07-04-2022. பூங்காவனம்  வையிரவர் மடை என்பன நடை பெறவுள்ளது அடியார்களின் கவனத்திற்கு!!!! தீர்த்தத்  திருவிழாவின் அன்னதானம்  பொது
உபயம் என்பதால் பூக்கள்  பால் பழம் இளநீர் அன்னதானத்திற்கு தேவையானபொருள்கள்   காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,
ஓம் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை,
திருவிழா உபயகளின் விபரங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.03.22

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ் (() தனது  பிறந்தநாளை 11.03-2022.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் . இவரை அன்பு அப்பா அம்மா மனைவி தங்கை, மச்சான் மச்சாள் மார்  மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,.  பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில்
 இவர்களுடன் இணைத்து 
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் இவரை    அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல செல்வங்களும்  பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்க கூடாத பொருட்கள்

உங்கள் வீடுகளில் வழிபாடு நடத்துவதற்கும் சில முறைகள் உள்ளன. அவற்றை பற்றி வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் பூஜை செய்யும் இடம் சரியான திசையில் அமைந்தால் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாறாக, தவறான திசையில் 
வீட்டின் வழிபாட்டு அறை இருந்தால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது தவிர, மகிழ்ச்சியும் அமைதியும் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றுவிடும்.அதனால் வீட்டில் வழிபாடு அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வழிபாட்டு அறையில் விநாயகர் சிலை வைப்பது மங்களகரமானதாக கருதப்பட்டாலும், 3 விநாயகர் சிலைகள் இருக்கக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இருந்து, அவற்றை வழிபட்டு வந்தால் வீட்டில் அமைதியின்மை
 ஏற்படும். அதனால் 2 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுங்கள். மேலும் வீட்டில் வைக்கப்படும் சிலைகள் மிகப்பெரிய அளவில் இருத்தல் கூடாது. குறிப்பாக சிவலிங்கம் இருந்தால், கை கட்டைவிரல் அளவை விட பெரியதாக இருக்கக்கூடாது.
கோவில்களில் சங்கு வழிபாடுகள் நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். 108 அல்லது 1008 சங்குகள் வைத்து பிரம்மாண்டமாக வழிபாடு நடத்தப்படும். ஆனால், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்குகளை வைத்து வழிபடக்கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட சங்குகள் இருந்தால், அருகில் இருக்கும் புனித நதிகளில் அவற்றை விட்டுவிட வேண்டும்.
வழிபாடு நடைபெறும் போது ஆரத்தி விளக்கில் போதுமான நெய் அல்லது எண்ணெய் இருப்பதை உறுதி செய்யுங்கள். இடையில் அவை அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வழிபாடு நடைபெறும்போது விளக்கு அணைந்தால், அதற்கு பலன் கிட்டாது. தெய்வங்களுக்கு சுத்தமான பூக்களை பயன்டுத்துங்கள். சாஸ்திரங்களின்படி, 11 நாட்களுக்கு மேலான துளசி மாலையை சாமிக்கு இடக்கூடாது. எப்போது துளசி மாலை போட்டாலும் தண்ணீர் தெளித்து அதன்பின்னர் கடவுளுக்கு 
இட வேண்டும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

இந்துப் பெண்கள் கட்டாயம் தாலி இந்த காரணங்களால் தான் அணிய வேண்டுமாம்

பெண்கள் திருமண பந்தத்தின் போது அணியும் தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல இல்லாமல் இதனை புனிதமானதாக கருதுகின்றனர்.இந்துக்களை  பொறுத்தவரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும், எது எப்படி இருப்பினும் இதன் பொருளும் இதன் முக்கியத்துவமும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக 
தான் இருக்கிறது.
தாலி என்பது மரியாதை, காதல், அன்பு மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும், பெண்ணும் இணையும் திருமண வாழ்வில் பிரதிபலிக்கும் அடையாளமாக காணப்படுகிறது. இது முக்கியமாக இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் அடையாளமாகவும் உள்ளது.
இதன்படிதான் தாலி என்பது இன்றுவரை 
பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொதுவாக தாலி வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கபடுகிறது. இந்த தாலியில் கடவுள் சிவபெருமானின் திருவுருவம் வைத்தால் மூன்று கிடைமட்ட கோடுகளையும், கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் மூன்று செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது.
மேலும் இந்த தாலியை அறிவியலின் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று கூறுகின்றனர்.வடஇந்தியாவில் இந்த தாலி என்பது கறுப்பு மற்றும் தங்கமணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ்
 போன்று காணப்படும்.
இதில் உள்ள தங்கமணிகள் கடவுள் பார்வதி தேவியையும், கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்கமணிகள் செல்வத்தையும், சந்தோஷத்தையும், வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும், வளத்தையும் காக்கின்றனர்.
கருப்பு மணிகள் என்பவை கணவன், மனைவிக்கு இடையேயுள்ள உணர்வு பூர்வமான பந்தத்தில் முக்கியத்துவம் வகுக்கிறது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி, திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது.
மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் காக்கிறது. இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்த பெண்கள் மிகவும் பயப்படுவர். பின் கடவுளை வேண்டி தன் கணவனை காக்கவேண்டுமென்றும், நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றும் வழிபாடு மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போதைய மாடல் வாழ்க்கையில் தாலி என்கின்ற புனிதநூல் சடங்குகள் மறைந்து கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் எப்போதாவது தாலியை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அணிதல் என்கின்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமணப்பந்தத்தில் மாறிவருகிறது.இருப்பினும் இந்த தாலி என்கின்ற புனிதநூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக 
பின்பற்றப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி திருவிழா இறுக்கமாகும் சுகாதார நடைமுறைகள்

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்.01-03-2022. இன்று காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டு 
இருக்கிறார்கள்.
இராணுவம், காவல்துறை, சுகாதாரத் துறையினர் இணைந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துதலிலும், மன்னார் மாவட்டச் செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரின் மேற்பார்வையில் வெளிநிர்வாக ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பக்திபூர்வமாக பூஜைகள் நடைபெற்று வருவதுடன், பக்தர்களும் மிக அமைதியாக தீர்த்தம் எடுத்து வந்து மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி
 வருகிறார்கள்.
இதனிடையே திருக்கேதீஸ்வரத்தில் வலுவூட்டல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதாக  .எண்பது 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

Powered by Blogger.