நாம் இந்த தானம் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்குமாம்

இந்து மதத்தில் எந்தெந்த செய்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், மற்றும் பாவம் சேரும் என்பது பற்றி பல விஷயங்கள்
 கூறப்பட்டுள்ளன.
மேலும், முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட புண்ணியம் சேர்ப்பது தான் அவசியம் என கருதினர்.
அரசர் காலங்களில் எழுதப்பட்ட புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் நாம் இவற்றை பற்றிய தகவல்களை தெளிவாக காணலாம்.
அந்த வகையில் எந்தெந்த தானம் ஒருவர் செய்தால், அவரது எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ள 
தகவல்கள் இதோ,
அன்னதானம் – 3 தலைமுறைக்கு புண்ணியம்.பித்ருக்களுக்கு உதவி – 6 தலைமுறைக்கு புண்ணியம்.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிம கிரியை – 9 தலைமுறைக்கு புண்ணியம்.
திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் – 5 தலைமுறைக்கு புண்ணியம்.
முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் – 21 தலைமுறைக்கு புண்ணியம்.
பசுவின் உயிரை காப்பது – 14 தலைமுறைக்கு புண்ணியம்.
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் – 5 தலைமுறை புண்ணியம்.
ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் – 5 தலைமுறைக்கு புண்ணியம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
யாழ் நல்லூர் கந்தனின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு. 24.07.2022.இன்று காலை
 இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து 
கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு
 கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி தர்மசாந்தினி (சாந்தி ) 23-07.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட . திருமதி பாலமுரளி தர்மசாந்தினி (சாந்தி ) அவர்களின் பிறந்தநாள்.23.07.2022, இன்று  இவரை  அன்புக்கனவர்.
அன்புப் பிள்ளைகள் 
அத்தான் அக்கா  அன்பு மாமி பெறாமக்கள் பெரியப்பா பெரியம்மா    
சித்தப்பா சித்தி மார் 
சகோதர சகோதரிகள்  மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்ஒஸ்லோமுருகன் ஒஸ்லோஅம்மன்  இறை அருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்என்றும் இன்பமாய்
நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி பிரியதர்சினி அருள்நாயகம்(தர்சினி ) 12-07.22

கொழும்பு  ஙுகேகொடயைப்  பிறப்பிடமாகவும்  வவுனியாவை வசிப்பிடமாகவும்  தற்போது நோர்வே ஒஸ்லோவை  வசிப்பிடமாகக்கொண்ட   திருமதி பிரியதர்சினி அருள்நாயகம் 
  அவர்களின்  பிறந்தநாள் இன்று 12..07.2022.இன்று இவர் தனது பிறந்தநாளை புதன்கிழமை அன்று  ஒஸ்லோவிலுள்ள அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாட்டுடன் (ஆலயத்தில் அன்னதானம் வழங்கி சிறப்பாகக்  கொண்டாடினார்)  இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள்,அன்பு அப்பாஅன்பு அம்மா அன்பு அண்ணா தம்பி சகோதரிகள்  பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் 
 சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் வவுனியா ஒஸ்லோ  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்
.இவர்களுடன் இணைந்து 
ஒஸ்லோஅம்மன் வவுனியா பிள்ளையார்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற.
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் ​ன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று நோய்நொடி இன்றி வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன  
 வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா 30.06.22. ஆரம்பம்

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள்  30.06.2022. அன்று  வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில்
 இடம்பெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள், தர்மபுர ஆதீனத்தினைச் சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்கப்பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது.கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள், தர்மபுர ஆதீன முதல்வர் மீனாட்சி சுந்தரம் தம்பரான், வேத சிவகாம பாடசாலை முதல்வர் சிவசிறி ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
தொடர்ந்து எதிர்வரும் 5 நாட்கள் இக்கிரிகைககள் இடம் பெறும். எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் எண்ணைக் காப்பு சாத்தும்
 நிகழ்வு இடம்பெறும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


Powered by Blogger.