திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஷ் லக்சிகா 29.08.21

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதிகயினரின்  ஐந்தாவது  திருமணநாள் 29-08.2021.இன்று 
தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோசமாக சிறப்புடன் அலைமகள் கலைமகள் மலைமகள் அருளோடு
கலைபேசும் கண்ணாளை காதலாய்க் கைப்பிடித்து
விலை பேச முடியாத செல்வங்களும் பெற்று
நிலையாக இவ்வுலகில் நெடுங்காலம் பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை
 இல்லறம் என்பது நல்லறமே ..அந்த நல்லறம் என்பது இரு மனமே..அந்த இருமனம் இணைவது.. திருமணமே அந்த திருமணம்..மலர்வது மணவறையில்..
அந்த மணவறைவாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.
எங்கள்  உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
தம்பதியினர் .,,
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

உங்கள் வீட்டில் தீராத பண கஷ்டமா பூசை அறையில் இதை வைத்து வழிபடுக

  உங்கள் வீட்டில் தீராத பண கஷ்டம் இருந்து வருகிறது. வறுமை வாட்டி வதைக்கின்றது என்றால், வீட்டில் மகாலட்சுமி ஸ்வரூபமாக வசிக்கும் பெண்கள், வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், மகாலட்சுமியை நினைத்து மனநிறைவோடு பூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து வெள்ளிக்கிழமையில் மனநிறைவோடு, 
சந்தோஷத்தோடு எந்த வீட்டில், பெண்கள் பூஜை செய்கிறார்களோ அந்த வீட்டில் வறுமை நெருங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. சரி, நாளை அப்படி என்ன அதி அற்புதமான நாள் என்று 
பலரும் சிந்திக்கலாம்
வழக்கம்போல வரக்கூடிய வெள்ளிக்கிழமையாக இருந்தாலும், தை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கொஞ்சம் சிறப்பானது. கடந்த வாரம் ஒரு வெள்ளிக்கிழமை முடிந்தது. அடுத்து வரக்கூடிய மூன்று வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்தால், வீட்டில் இருக்கும் வறுமை 
நிச்சயம் நீங்கும்.
வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு வருமானம் அதிகரிக்க தொடங்கும். சொந்தத் தொழில் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை, வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரக்கூடிய வருமானத்தில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால், முழு மனதோடு உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்து
 பாருங்கள்.
வெள்ளிக்கிழமை என்றாலே நம்முடைய வீடு சுத்தபத்தமாக இருக்கும். நம் வீட்டு பூஜை அறையும் சுத்தமாக இருக்கும். பூஜை அறையில் உள்ள படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். இந்த பரிகாரத்திற்க்கு ஒரு செம்பு பாத்திரம் கட்டாயம் தேவை. உங்களுடைய வீட்டில் பஞ்ச பாத்திரத்தை தவிர, வேறு செம்பு பாத்திரம் இல்லை என்றால், சுவாமிக்கு, வேறு ஒரு எச்சில் படாத பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிட்டு, செம்பு பஞ்சபாத்திரத்தை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது.
செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு கைப்பிடி உப்பு போட வேண்டும். இரண்டாவதாக ஒரு கைப்பிடி அளவு நாட்டுச்சர்க்கரை போட்டுவிடுங்கள். மூன்றாவதாக ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு விடுங்கள். பூஜை அறையிலேயே செம்பு பாத்திரத்தை 
வைத்து போட வேண்டும். இப்போது பச்சரிசிக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, ஒரு ரூபாய் நாணயத்திற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு புஷ்பத்தையும் வைத்து இந்த கலசத்தை அப்படியே மகாலட்சுமி முன்பு 
வைத்து விடுங்கள்
இந்த சொம்பு நிறைவாக தான் இருக்க வேண்டும், உள்ளே உள்ள பொருட்களை நிறைய கொட்ட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. பஞ்ச பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, 1 ஸ்பூன் அளவு, 3 பொருட்களை சேர்த்தால் கூட தவறு இல்லை. இந்த செம்பு பாத்திரம், இந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை வரை அப்படியே பூஜை 
அறையில் இருக்கட்டும்.
வியாழக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிட்டு, அந்த பாத்திரத்தை சுத்தம் செய்து, மீண்டும் வெள்ளிக்கிழமை, இந்த பொருட்களை நிரப்பி வைத்து, 
மகாலட்சுமி முன்பு சமர்ப்பணம் செய்து விடுங்கள். உப்பு, இனிப்பு பொருள், பச்சரிசி மூன்றும் ஒன்றாக சேரும் போது, வீட்டில் சாப்பாட்டிற்கு, 
பணத்திற்கு, சந்தோஷத்திற்கு பஞ்சம் வராது. மனதார மகாலட்சுமியிடம் வேண்டுதலை வைத்தால், அந்த வேண்டுதல் உடனே பலிக்க இந்த வழிபாடு உங்களுக்கு துணையாக நிற்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.-

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>லட்சுமியின் அருள் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் இப்படி விரதம் இருங்கவாம்

எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். எட்டுவகை லட்சுமியின் அருள் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் வெள்ளிக்கிழமை விரதம் எனப்படும்.

அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும், முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் 
வழக்கம் ஏற்பட்டது.
எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, 
கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
 வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் 
செழிப்புடன் வாழலாம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வரலட்சுமி விரதம் இன்று ஆரம்பம் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய நோன்பு

செல்வத்தை தரும் வரலட்சுமி விரதம் இன்று ஆரம்பம் பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய மிக முக்கியமான நோன்பு ஆகும்இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை வரலக்ஷ்மி விரதமாகும். இது பெண்கள் தங்களின் கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்க லக்ஷ்மி தேவியை வழிபடும் சிறப்பான பூஜை. இது வரலக்ஷ்மி நோன்பு என்றும் 
அழைக்கப்படுகிறது.
வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம்.
மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
வரலட்சுமி விரதம்  
வரலட்சுமி விரதம் ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 – 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல 
நேரமாக உள்ளது.
இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற்கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும்.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வாசலுக்கு அருகில் அம்மனை வியாழக்கிழமையான இன்று இரவே வைத்து விட வேண்டும்.
அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன்பின்னர் பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு சித்தமான ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை
 வைக்க வேண்டும்.
கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும்.
அதன்பின்னர் அதன் மீது தேங்காயை வைக்க வேண்டும். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் பிள்ளையாருக்கு பூஜை
 செய்ய வேண்டும்.
அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், என்பவற்றினை படிக்க மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி ஜெகதாசன் செந்துஜா 18-08-21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .மற்றும்,தோப்பு  அச்சுவேலியை வதிவிடமாகவு​ம் லண்டனை வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா (செந்தன் ) அவர்களின்  பிறந்த நாள் .18.08..2021 .இன்று
  இவரை அன்புக் கணவர் அன்பு மகன் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் லண்டன் முருகன் தோப்பு வயிரவர் 
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று    அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,நோய் நொடிகளின்றி  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து பாடகி செல்வி தேவராசா தேவிதா14.08.21

யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் பிரபல பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவிதா அவர்களின் பிறந்தநாள் 14.08.2021 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவர் பல மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடிகொண்டிருக்கின்ற
 கலைஞர் ஆவார்  
இவரை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா. அன்புத் தங்கைமார் மாமா அத்தை   மச்சாள் .அத்தான்மார்  . பெரியப்பா  அக்காமார்.. அண்ணாமார்  தம்பி. பெரியசித்தப்பா ர் சித்தி  அக்கா ,அண்ணன் . தங்கை.
  சித்தப்பா சித்தி 
அத்தை.,மச்சான்மார்  அண்ணன்மார்  தம்பி  லண்டன் வாழ் உறவுகள் .பெரியப்பா குடும்பத்தினர், அத்தைகுடும்பத்தினர், சித்தப்பா குடும்பத்தினர், அப்பம்மா குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி  அப்பம்மா ,அப்பப்பா  குடும்பத்தினர் நீர்வேலிவாழ்  உறவுகள்  அத்ததை குடும்பத்தினர்.  குடும்பத்தினர்  
அமெரிக்கா வாழ் உறவுகள் உறவுகள் சித்தப்பாகுடும் பத்தினர் சுவிஸ் வாழ் உறவுகள் , மாமா மாமி குடும்பத்தினர், கனடா, வாழ்  இவரை  புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் 
கண்மலரே காலம் எல்லாம் வாழ்க பல்லாண் டுபல்லாண்டு காலம் வாழ  அனைவரும் வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சோழர் காலத்தில் ஆங்கிலேயர்களை அலறவிட்ட அம்மன் கோவில் பற்றி தெரியுமா

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில், வல்லநாடு பகுதியை ஆண்டு வந்தவன் வல்லப்பராயன். தனது குலதெய்வமான ஸ்ரீதம்பிராட்டி அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது இந்த மன்னனின் நீண்டநாள் விருப்பம். அதை நிறைவேற்ற, அம்பாளின் உத்தரவுக்காகக்
 காத்திருந்தான்
ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவில், மன்னனின் கனவில் தோன்றிய அம்மன், ”பாண்டியனே… தாமிரபரணிக் கரையில், ஈசான மூலையில் கருத்த மேனியும், விரித்த சடையும், முக்கண்களும், ஆயுதங்கள், அபய- ஹஸ்த முத்திரைகளுடன் எட்டுக் கரங்களும் கொண்டவளாக, செவ்வாடை உடுத்திய அமைப்பில்… வடக்கு நோக்கி எனக்கு விக்கிரகம் அமைத்து கோயில் கட்டு!” என்று உத்தரவு தந்து மறைந்தாள்.
மறுநாளே, அரசவை ஜோதிடரை அழைத்து நல்ல நாள் குறித்து, கோயில் வேலைகளைத் துவங்கினான் மன்னன். கனவில் அம்பாள் சொன்ன இடத்தில், சுயம்புவாக முளைத்த வேம்பு இருந்ததாம். அதையே 
கோயிலின் ஸ்தல விருட்சமாக ஏற்றனர். அந்த மரத்தில் தம்பிராட்டியம்மனே 
குடியிருப்பதாகக் கருதிய குடிமக்களும் மன்னனும், கோயில் 
வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, மரத்தை அம்மனாக பாவித்து 
வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் அந்த ஊர் வழியாகப் பயணித்த ஆங்கிலேயே துரை ஒருவன், இவர்களது வழிபாட்டை கேலி செய்தான். ‘துரை அவர்களே, தெய்வக் குற்றத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். எங்கள் தம்பிராட்டி அம்மன் சக்தி வாய்ந்தவள்’ என்று ஊர்மக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன்
 கேட்கவில்லை. ‘நான்
தினமும் இந்த வழியாகத்தான் குதிரையில் செல்வேன். எங்கே… உங்கள் அம்மனுக்குச் சக்தி இருந்தால் என்னைத் தடுத்து நிறுத்தட்டும், பார்க்கலாம்!’ என்று சவால் விட்டுச் சென்றான். மறுநாள், ஆங்கிலேய துரையின் குதிரை மிகச் சரியாக  தம்பிராட்டி அம்மன்கோயில் வாசலுக்கு 
வந்ததும் நின்றுவிட்டது. அவன் எவ்வளவோ முயன்றும், அடுத்து ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை குதிரை. அப்போதும் ஆணவம் அடங்கவில்லை அவனுக்கு. குதிரையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றவன், மறுநாள் வேறொரு குதிரையில் வந்தான். அதுவும் அம்மன் கோயிலை 
நெருங்கியதும், அதற்குமேல் நகராமல் அங்கேயே படுத்துவிட்டது. அப்போதுதான் அம்பாளின் சக்தியை உணர்ந்தான்
 ஆங்கிலேயே துரை.
கோயிலின் முன், அம்மனிடம் மன்னிப்புக் கேட்டுத் தோப்புக்கரணம் போட்டு வணங்கியவன், தனது கையில் இருந்த காசுகளைத் கோயில் திருப்பணிக்காகக் கொடுத்துவிட்டு, குதிரைக்கு அருகில் வந்தான். அவ்வளவுதான்; உடலை சிலுப்பியபடி எழுந்து நின்ற குதிரை, சவாரிக்கு உற்சாகமாகத் தயாரானது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது வல்லநாடு. இங்குதான் அழகுறக் கோயில்கொண்டிருக்கிறாள் 
ஸ்ரீதம்பிராட்டியம்மன்.
ஆதிகாலத்தில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களும் இந்த அம்மனை வழிபட்டுச் சிறந்துள்ளார்கள். இதற்குச் சான்றாக, இவ்வூரின் அருகிலேயே சேரன் குளம், சோழன் குளம், பாண்டியன் குளம் ஆகிய குளங்கள் உள்ளதாகக் கூறுகிறது தலபுராணம். இதையும் படிக்கலாமே: பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை மன்னனின் கனவில் கூறியதுபோன்றே, காளியின் அம்சத் துடன்… 
அதேநேரம் சாந்தமுகத்துடன் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதம்பிராட்டி அம்மன். இப்பகுதி மக்களுக்குக் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த அம்பாளை வழிபட, வேண்டிய காரியங்கள் யாவும் விரைவில் 
நிறைவேறும் என்கிறார்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2021.இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் நவற்கிரி  வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நல்லூர் முருகன் கம்காமாச் அம்மன் 
  இறை ஆசியுடன்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக  நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .
வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அஸ்வின 06.08.21

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ்சில்  வசிக்கும்.திரு. திருமதி  காண்டீபன்(காண்டி&அனுஜா)  தம்பதிகளின் செல்வப்புதல்வி  
அஸ்வினவின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2021. இவரை அன்பு  அப்பா  அம்மா ,அன்பு அக்கா  அபுத்தம்பி அம்மப்பா அம்மம்மா, பெரியப்பா பெரியம்மா சித்தப்பா 
சித்தி , மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நல்லை கந்தன் சுவிஸ்சிவசுப்பிரமணியர்  இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஏன் பெண்கள் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை தெரியுமா

நாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு ? பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம்
பொதுவாக பெண்களுக்கு மந்திரம் ஜெபிக்கும் உரிமையே தரப்படவில்லையா என்றால் நிச்சயம் அதற்கான உரிமை அவர்களுக்கு தரப்பட்டிருந்தது. கௌரீ விரதம், வரலக்ஷ்மி விரதம் இப்படி பல வேஷசங்களுக்கு இன்று வரை பெண்களே முன்னின்று மந்திரங்களை ஜெபிக்கின்றனர். ஆனால் சில மந்திரங்கள் ஆண்கள் மட்டுமே கூற வேண்டும் என்று 
ஒரு விதியும் இருக்கிறது
ஸ்தோத்ரங்கள், புராணோக்த வாக்கியங்கள், அஷ்டகங்கள், ஸ்லோகங்கள், வேதமந்திரங்கள் என மந்திரத்தில் பல வகை உண்டு. இதில் வேத மந்திரங்களை தவிர மற்ற அனைத்தையும் பெண்கள் தாராளமாக
 உச்சரிக்கலாம்
வேத மந்திரத்தை அனைத்து ஆண்களும் உச்சரிக்கலாமா என்றால் அதுவும் தவறு. பாடசாலைக்கு சென்று முறையாக பயிற்சி பெற்று சரியான ஸ்வரத்தோடே இதை உச்சரிக்க கற்றுக்கொள்வதே
 ஆண்களுக்கும் நல்லது. இதற்கு எந்த சாதி பாகுபாடும்
 கிடையாது. முறையாக கற்ற யாரும் இதை உச்சரிக்கலாம். இதை உட்சதரிப்பதால் அடிவயிற்றில்  ஒரு விதமான சூடு கிளம்பும். இதனாலேயே மந்திரங்களை ஓதுவோர் அந்த சூட்டை தணிக்க உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வர்.
இந்த மந்திரத்தை பெண்கள் உச்சரித்தால் அவர்களுக்கும் அடி வயிற்றில் சூடு கிளம்பும். இதனால் அவர்களின் கர்பப்பை பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அதோடு இயற்கையாகவே அவர்களுக்கு இதுபோன்ற சூட்டை தாங்கும் சக்தி கிடையாது. இதனாலேயே பெண்களை வேத மந்திரங்கள் உச்சரிப்பதை தவிர்க்குமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். நம் முன்னோர்களின் தொலைநோக்கு அறிவியலை 
என்னவென்று வியப்பது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழ். நல்லூர் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது பக்தர்களுக்கு அறிவித்தல்

சுகாதார விதிகள், அறிவுறுத்தல்கள்,வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி பக்தி பூர்வமாக நல்லூர் கந்தன் பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்,04-08-2012...இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந்திருவிழாவானது இம்மாதம் 13-08-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன்
 ஆரம்பமாகவுள்ளது.
இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்ட நடைமுறைகள், விதிகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை முழுமையாகவும், இறுக்கமாகவும் பின்பற்றி அமைதியாக ஆடம்பரமின்றி பக்தி பூர்வமாக இப்பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க 
வேண்டும் என்றும்,
இக்காலச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது விடுக்கப்படும் சுகாதார அறிவுறுத்தல்களை சிரமங்கள் பாராது, பொறுப்புணர்வுடன் கடைப்பிடித்து வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்க பெருமனத்துடன் உதவ வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து.திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி) 04.08.21

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் 
திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2021 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து    இவரை நல்லைககந்தன்  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.ஒஸ்லோமுருகன் 
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Powered by Blogger.