ஏன் பெண்கள் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை தெரியுமா

நாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு ? பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம்
பொதுவாக பெண்களுக்கு மந்திரம் ஜெபிக்கும் உரிமையே தரப்படவில்லையா என்றால் நிச்சயம் அதற்கான உரிமை அவர்களுக்கு தரப்பட்டிருந்தது. கௌரீ விரதம், வரலக்ஷ்மி விரதம் இப்படி பல வேஷசங்களுக்கு இன்று வரை பெண்களே முன்னின்று மந்திரங்களை ஜெபிக்கின்றனர். ஆனால் சில மந்திரங்கள் ஆண்கள் மட்டுமே கூற வேண்டும் என்று 
ஒரு விதியும் இருக்கிறது
ஸ்தோத்ரங்கள், புராணோக்த வாக்கியங்கள், அஷ்டகங்கள், ஸ்லோகங்கள், வேதமந்திரங்கள் என மந்திரத்தில் பல வகை உண்டு. இதில் வேத மந்திரங்களை தவிர மற்ற அனைத்தையும் பெண்கள் தாராளமாக
 உச்சரிக்கலாம்
வேத மந்திரத்தை அனைத்து ஆண்களும் உச்சரிக்கலாமா என்றால் அதுவும் தவறு. பாடசாலைக்கு சென்று முறையாக பயிற்சி பெற்று சரியான ஸ்வரத்தோடே இதை உச்சரிக்க கற்றுக்கொள்வதே
 ஆண்களுக்கும் நல்லது. இதற்கு எந்த சாதி பாகுபாடும்
 கிடையாது. முறையாக கற்ற யாரும் இதை உச்சரிக்கலாம். இதை உட்சதரிப்பதால் அடிவயிற்றில்  ஒரு விதமான சூடு கிளம்பும். இதனாலேயே மந்திரங்களை ஓதுவோர் அந்த சூட்டை தணிக்க உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வர்.
இந்த மந்திரத்தை பெண்கள் உச்சரித்தால் அவர்களுக்கும் அடி வயிற்றில் சூடு கிளம்பும். இதனால் அவர்களின் கர்பப்பை பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அதோடு இயற்கையாகவே அவர்களுக்கு இதுபோன்ற சூட்டை தாங்கும் சக்தி கிடையாது. இதனாலேயே பெண்களை வேத மந்திரங்கள் உச்சரிப்பதை தவிர்க்குமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். நம் முன்னோர்களின் தொலைநோக்கு அறிவியலை 
என்னவென்று வியப்பது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.