திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்

.
அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர் உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார்.ஞானசம்பந்தர் கோடி சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும்,

 உறவினர்களும் சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெருமனைக்குள் எழுந்தருளினார்.பந்தலிலே போடப்பட்டிருந்த முத்துக்குடை நிழலின் கீழ் பொற்பலகையில் அமர்ந்தார்.சங்கநாதங்களும், சுந்தர கீதங்களும், மங்கல இசைக் கருவிகளும்

 ஒலித்த வண்ணமாகவே இருந்தன. வாழ்த்தொலிகளும், வேத முழக்கங்களும் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருந்தன.இதே சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டிச் சங்கற்பம் முதலிய வேதச் சடங்குகளைச் செய்தனர்.அப்பவளக் கொடி

பெண்ணுக்கு வைரத்தாலும், நவமணிகளினாலும் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களை வரிசையாகச் சூட்டி அலங்காரப் பொன் விளக்கு போல் பொலிவு பெறச் செய்தனர்.

அந்தணர் குலக் குழந்தைகள், ஓங்கி எழுந்த ஓமப்புகையில், வாசனைத் தூளை வீசினர். வேதியர்கள், பொற் கலசத்திலிருந்து நன்னீரையும், அரசிலையும், தருப்பையும் கொண்டு தெளித்தார்கள்.அழகு மகளிர் நறுமலர்களைத் தூவி

னர். குறித்த நேரத்தில் சிவக்கொழுந்தும், அக்கொழுந்தின் கரம்பற்றப் போகும் பொற்கொடி போன்ற நற்குண நங்கையும் ஆதிபூமி என்னும் மணவறையின் உள்ளே அமர்ந்தருளினார்.நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தருடைய கரத்தில் மங்கள நீரினை மும்முறை வார்த்துத் தமது மகளைத் தாரை

வார்த்துக் கொடுத்தார்.ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம் பற்றி ஓமத்தைச் சுற்றி வலம் வந்தார்.அபபொழுது அவரது திருவுள்ளத்திலே, எனக்கு ஏன் இந்த இல்லற வாழ்க்கை வந்தமைந்தது? சிற்றின்பத்தில் உழலு<வதைவிட, இவளுடன் எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தே தீருவது என்று பேரின்ப ஆசை அமிர்தம் போல் சுரந்தது. அத்தகைய மெய்ஞ்ஞான எண்ணத்தோடு, ஞான சம்பந்தர் மனைவியோடும்,

மற்றவரோடும், உற்றார் உறவினர்களோடும் திருமணப் பெருங்கோயிலை வந்தடைந்தார். சிவனடியார் மலரடியை மனதிலே நிறுத்தி, தன்னை அவரது சேவடியில் சேர்த்துக் கொண்டருள வேண்டும் என்ற கருத்துடன், நல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அருளினார். அப்பொழுது விண்வழியே அசரீரியாக எம்பெருமான், நீயும், உன் மனைவியும், உன் புண்ணிய திருமணத்தைக் காண வந்தவர்களும், எம்மிடம் சோதியினுள்ளாகக் கலந்தடையுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருள் செய்தார்.

எம்பெருமான் மூன்று உலகங்களும் தம் ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சி அளித்தார். அப்பேரொளி திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டு மேலோங்கி ஒளிமயமாக ஓங்கி நின்றது.

அச்சோதியிலே ஓர் வாயிலையும் காட்டியருளினார்.அன்பும், அறமும், அருளும், திருவும் உருவாகக் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் திரு அவதாரமாகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையார் - சைவத்தை வளர்த்து, செந்தமிழ்ப் பதிகம் பல பாடிய தென்னகத்துத் தெய்வப் புதல்வன் சிவபரஞ் சுடராகிய மனநல்லூர்ப் பெருமானைத் தொழுது

போற்றினார்.தண் தமிழால் பாடிப் பரவசமுற்றார். தேன் தமிழால் அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளத்தில் மூழ்கினார்.உலகம் உய்ய, சிவஞான நெறியினை எல்லார்க்கும் அளிக்க வல்லது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்துப் பெருமந்திரமாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினை, விண்ண வரும், மண்ணவரும் கேட்கும் வண்ணம் பாடினார் சம்பந்தர்.திருஞான சம்பந்தர் அனைவரையும் நோக்கி, பிறவித் துயரம் தீர யாவரும்

இப்பேரொளியிலே புகுவீர்களாக என்று கேட்டுக் கொண்டார். சிவாய நம; சிவாய நம என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணம் பெருமழை போல் கோஷித்து வாழ்த்தினர். எல்லையில்லாத பிறவி என்னும் வெள்ளத்திலே மூழ்கித் தத்தளித்துக்கொண்டு, காற்றடைத்த பையாகிய காயத்திலே அடைபட்டு, உய்ய உணர்வின்றி மயங்கும் மக்களுக்கு பேரின்ப வழிகாட்டிய திருஞான சம்பந்தரின் திருவடியைத் தொழுது, நமச்சிவாய மந்திரத்தை மனதிலே தியானித்த வண்ணம் மக்கள் யாவரும் சோதியினுள்ளே புகுந்தனர்.

திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர். ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தணைந்தவர்களும், திருமணத்திற்கு பணிகள் செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில்

 புகுந்தார்கள்.அருந்தவசிகளும், மறைமுனிகளும், ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் சோதியினுள் கலந்தனர். பேரின்ப வீட்டிற்குப் பெருவழிகாட்டிய ஞான சம்பந்தப் பெருமான் தம் மனைவியாரின் கையைப் பிடித்தவாறே அச்சோதியினை வலம் வந்தார். நமச்சிவாய என்ற நாமத்தை முழக்கியவாறு, சோதியினுள் புகுந்தார்.அதன் பின்பு அப்பேரொளியில் காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது.தேவர்களும், முனிவர்களும்,

சிவகணத்தவர்களும் சிந்தை மகிழ்ந்து போற்றித் துதித்தனர்.கொன்றை மாலையை அணிந்த செஞ்சடை வண்ணர், உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி அருளினார்.பேரொளி புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நீழலை அடைந்து திருப்பணி புரியும் திருப்பேற்றை

அளித்தார்.வேதங்களையும், ஏழுலகங்களையும் ஈன்று கருணை வடிவமாக நின்ற உமாதேவியாரின் திருமுலைப் பாலினைச் சிவஞான அமுதத்தோடு உண்டு, அருள்பெற்று, சைவத்தை உயர்வித்த அருந்தவச் செல்வன் திருஞான சம்பந்தப் பெருமானையும் அவர் தம் மனைவியாரையும் எம்பெருமான் தமது அருகிலேயே அணைந்து வாழும் நிகரில்லாப் பெருவாழ்வை அளித்தருளினார்.

குருபூஜை: திருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்.

ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் 13ம் இரவு திருவிழாஸ்ரீ செல்வச்சந்நிதி முருகப்பெருமானின் 13ம் இரவுதிருவிழாவின்காணொளி
 

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?


காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும். காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும். விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது

நல்லூர் கந்தசுவாமி ஆலய 5 ஆம் நாள் திருவிழா


நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 5 ஆம் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது,
 (அழகான படங்கள் இணைப்பு)
மெய்யான மெய்யை உணர்தல் """


 
   பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு,மெய்பொருள் இல்லாதவற்றை மெய்பொருள் என்று எண்ணி மயங்கினால் இந்த பிறவி மாயையிலிருந்து விடுதலையே இல்லை” என்று சற்று சுழற்சியாக விளக்கும் குறள் இது.

உலகில் உள்ள மதங்கள் எல்லாமே பரம்பொருளை விளக்கும் முயற்சிகளே.  “ஏன் வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு இலக்கையும், “எப்படி வாழ வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலையும் தருவன.  துறவறம் மேற்கொள்வது முதல் கேள்விக்கு பதிலான மெய்பொருளை உணர்வதற்க்குத்தான்.  அந்த மெய்பொருளை அடையாளம் காட்டும் அதிகாரம் இது. 

இந்து மத கோட்பாடுகளின்படி இறையை உணர்தலே வாழ்கையின் இலக்கு.  அந்த முயற்சியில் தவறான முடிவை நோக்கி பிரயாணித்தால்  வாழ்கையே வீணாகிவிடும்.  மேலும் இந்த பிறவியை வீணடித்தால் இந்த பிறவியில் செய்த பாவத்தால் அடுத்த பிறவியில் பின்னடைவு ஏற்படும்.  எனவே, சரியான இலக்கை நோக்கி செல்லவது மிகவும் முக்கியமானது. 

இந்த தத்துவத்தில் எந்த குறையும் இல்லை.  ஆனால், உண்மையான மெய்பொருளை அடையாளம் காண்பதெப்படி என்று இந்தக் குறளிலோ அதிகாரதிலோ விளக்கப் படவில்லை.  உணர்ந்தால் தான் தெரியும் என்றால், அது மெய்பொருள் அல்ல என்று எப்படி உணரமுடியும்?  தர்க்கரீதியாக என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை.

பி.கு: புதிதாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதால் “தினமொரு குறள்” இரண்டு வாரங்களாக தடைப் பட்டு விட்டது.  அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.  தினப்படி செயல்பாடு ஒழுங்காகும் வரை இந்த முயற்சி சற்று சீராக வராமலிருக்கலாம்.  அதற்கு முன்கூட்டியே மன்னிக்க வேண்டுகிறேன்.

அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்...


விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை

நயினை நாகபூஷணி அம்மன் ஆடிப்பூரம்


நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நேற்று நடைபெற்ற ஆடிப்பூர உட்சவத்திட்கு பல்லாயிரம் அடியவர்கள் வந்து வணங்கிச் சென்றனர்.
{காணொளி,}

நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் இன்று

nk2

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் பல எண்ணிக்கையான முருக பக்தர்கள் கொடி ஏற்ற நிகழ்வையடுத்து அங்கப்பிரதட்சணையில் ஈடுபட்டனர். நல்லூர்க் கந்­தனின் உற்­ச­வத்தில் செப்­டெம்பர் மாதம் 3ஆம் திகதி சப்­ப­றத்­தி­ரு­வி­ழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.nk1nk0nk

அருள் பொழியும் கடவுள்மனதிற்குச் சாந்தி தரும் ஆன்மிக சிந்தனைகள்...
இந்துக்களுக்கான இறை வணக்கங்கள்... தகவல்கள்...
இன்னும் பல மனதிற்கினிய ஆக்கங்களுடன்
 காலைக் கழுவிப் புனிதமாக ஒரு தடவை
 விஜயம் செய்து பாருங்கள்...
                      நிறையிருந்தால் பறை சாற்றுங்கள் நண்பர்கட்கும்...
                குறையிருந்தால் மறைக்காமல் என்னிடம் கூறுங்கள்.
                                                                       நன்றி,,,.,

""அபிராமி அந்தாதி ""


மோனநிலை எய்த
 மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாலி விளங்குகின்ற
 அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
 முன்னாய் நடு வெங்குமாய் முடிவாய முதல்விதன்னை
 உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவதொன்றில்லையே
 விளக்கம்:

அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிநயா. 05 .08 .2013 .

.                   
 
 நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட   திரு திருமதி அருளானந்தம்தம்பதிகளின் புதல்வி அபிநயாதனது ஐந்தாவது பிறந்த நாளை இன்று  05 .08 .2013  தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரைஅன்பு  அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் சித்திமார் பெரியப்பா பெரியம்மா குடும்பம்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்   இணைந்து  நவற்கிரி  இணையங்களும்   தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்
Powered by Blogger.