பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சஞ்சைய்


நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன் 
சஞ்சைய் பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக
 இன்று(28 -10 -2013) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா  சித்தி மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch /  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{பெரியப்பா குடும்பம் சுவிஸ்}

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுருதிகா 24.10.13

 
 யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.
  புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}. வின் பத்தாவது பிறந்த நாள் 24.10.13.இன்று இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் லோவிதன் அண்ணா.தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.


 

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிதா.. 24.10.13


நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
 அருளானந்தம் தம்பதிகளின். புதல்வி செல்வி அபிதா தனது பதின்ஒராவது பிறந்த நாளை. 24.10.13.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையமும் லோவிதன் அண்ணா.தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்
 

பிறந்தநாள் வாழ்த்து 18வது :செல்வி. றமோனா(18.10.13)

 
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் விமல் பற்றீசியா தம்பதிகளின் செல்வப்புதல்வி றமோனா இன்று தனது பெதினெட்டாவது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா அம்மா தம்பி அலெக்ஸ அப்‌பம்மா   அம்மப்‌பா அம்மம்மா பெரியப்‌பாமார் பெரியம்மாமார்  சித்தப்‌பா சித்தி மாமா  மாமி  
மச்சான்  மச்சாள் சகோதர சகோதரியினர்

மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் நவற்கிரி. இணையங்களும்  நிலாவரைஇணையமும் எம்உறவு இணையங்களும் இணைந்து அனைவரும் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்து கிறார்கள்.நவற்கிரி. இணையங்களும்  நிலாவரைஇணையமும் எம்உறவு இணையங்களும் நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம். 

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வரலாறு


இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டுமைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ.

நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும்,யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனானகூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலைகூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.

“ இலகிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே ”

ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி புவனேகவாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, சண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும்

கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
“ சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா  திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின்திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த

செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.

வதிரி உல்லியனொல்லைகண்ணகை அம்மன்


வதிரி உல்லியனொல்லைகண்ணகை அம்மன் இன் புகைப்படம் ஒன்றை
கேதாரகௌரி விரதம் அனுட்டிக்கும் முறை
கேதாரகௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதாரகௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகை சமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசை வழிபாட்டிற்குரிய வலதுகையில் ஞானவிரலாகிய மோதிரவிரலில் தர்ப்பைப் பவித்திரம் அணிந்து சிவாச்சாரியர் மூலம் உங்கள் பிறந்த

நட்சத்திரம் பெயர் ஆகியவற்றைக் கூறி குடும்பத்தவர் அனைவரது நன்மைகளுக்காகவும் விரத பூஜைகளை நடாத்துவதாகச் சங்கற்பம் செய்து ஸ்ரீ வரசித்தி விநாகர் வழிபாட்டுடன் ஆரம்பித்தல் அவசியமாகும்.
விரத தினங்களிலே பகலில் உணவு தூக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து, பழச்சாறு பால், நீர்மோர் ஆகியவற்றைமடடுமே அருந்தி

தெய்வசிநதனையுடன் கழித்து, மாலையில் ஆலயத்தில் கௌரி மீனாட்சி சமேதரான கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகளிலும், அர்த்தநாரீஸ்வரராக இறைவனுக்கு நடைபெறும் அர்சனை வழிபாடுகளிலும் கலந்துகொள்வதுடன், கும்பத்தில் 21 தினங்களாக பூஜையில் வைக்கப்பட்டுள்ள, இருபத்தொரு இழைகளினால் உருவாக்கப்பெற்றுள்ள நோன்புக்கயிற்றில் இருக்கும் 21

முடிச்சுக்களுக்குமுரிய (கிரந்தி பூஜை) சிறப்பு மந்திரங்களை குரு மூலம் உபதேசமாகக் காதினால் கேட்டு அதனை திரும்ப உங்கள் வாயினால் பக்தியுடன் உச்சரித்து அதன்பின்னர் சிவலிங்கப்பெருமானை சிவலிங்காஷ்டக ஸ்தோத்திரத்துடன் கையில் பூவும் நீரும் ஏந்தி பிரதட்சிணம்செய்து கும்பத்துக்கு மலர்சொரிந்து வழிபடுவது அவசியமாகும்.
இன்றியமையாத காரணங்களினால் தினமும் வரமுடியாவிடின் இயன்ற தினங்களில் வந்து தவறவிட்ட பிரதட்சிண நமஸ்காரங்களையும் குறைவின்றி நிறைவேற்றிப் பூர்த்தி செய்வது அவசியமாகும். இறுதி நாளன்று பழைய நோன்புக்கயிற்றினை நீக்கிப் புதிய நோன்புக்கயிற்றினை

கேதாரிகௌரி ரட்சைக் காப்பாக ஆண்கள் குருமூலம் வலது கையிலும், பெண்கள் குருமூலம் அல்லது கணவர் மூலம் அல்லது சுமங்கலிகள் மூலம் இடது கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அன்றையதினம் பூரணமான உபவாசமாக இருந்து மறுநாள் பாரணம் செய்வது மிகவும் உத்தமம்.

ஒருசிலர் ஆரம்பதினத்தில் வந்து சங்கல்பம் செய்து விரதத்தைத் தொடங்கிப் பின் இறுதி மூன்று தினங்களில் அனைத்து பிரதட்சிண நமஸ்காரங்களையும் செய்து முடித்து குருவழிபாட்டுடன் நோன்புக் கயிறு வாங்கி அணிவர். பழைய காப்புக் கயிறை நீர் நிலைகளில் போடவும். பெண்களுக்கு இறுதி நாளில் ஆலயத்திற்கு வந்து பூர்த்தி செய்ய இயலாது, மாத விலக்கினால் தடங்கல்

ஏற்பட்டால் அசுத்தமான மூன்று தினங்களும் ஒருவேளை உணவுடன் விரதமாக இருந்து நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து ஆலயத்தில் வந்து பிரதட்சண நமஸ்காரங்களை நிறைவு செய்து காப்பு அணியலாம். இதற்காக இன்னொரு அமாவாசை வரும் வரை காத்திருப்பது அவசியமில்லை.

இவ்விரதத்தை ஏனைய ஒருசில விரதங்களைப்போல இத்தனைவருடகாலம் மட்டுமே அனுஷ்டிக்கவேண்டுமென்ற நியதி கிடையாது. தொடர்ந்து அனுஷ்டிக்கும்போது வயோதிபத்தினால் தளர்ச்சியடைந்தவர்களும் நோயுற்று உடல் நலிவடைந்வர்களும் காலையிலேயே பக்தியுடன் பூஜைவழிபாடுகளை நிறைவேற்றி உச்சிப்பொழுதில் பால் பழம் அதிரசம் பலகாரங்களை உட்கொள்வதும் தவறல்ல.
ஆலயத்திற்குசெல்ல இயலாது இருப்பவர்கள்; அல்லது ஆலயம் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்:

புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள், வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை

செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்கள் வைத்து, தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.

தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். இவ்வாறு கௌதம முனிவர் விரதமஹிமையை உலக மாதாவாகிய கௌரிதேவிக்கு உபதேசம் செய்ய, அதைக்கேட்டு அன்னை

கேதாரேஸ்வரப்பெருமானை நினைந்து தவமிருந்து வழிபட, இறைவன் காட்சிகொடுத்து தேவிக்குத் தனது இடப்பாகத்தைக் கொடுத்து தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரனாகி “உமையொருபாகன்” என்னும் சிறப்புத் திருநாமத்தைப் பெற்றார் என்பது வரலாறு.

தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும்; தம்பதிகள் சேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும், கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்........
Gowthamy Siva பகிர்ந்துள்ளார்.

எந்நேரமும் சிவனை போற்றுங்கள்


விட்டுவிட போவது உயிர் விட்ட உடனே சுட்டு விட போவார் சுற்றத்தார் பட்டதெல்லாம் போதும் இனி எந்நேரமும் சிவனை போற்றுங்கள் ஏற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். வீடு, வாசல் மாடு மனை இவைகளையெல்லாம் மறந்து சித்தத்தை சிவனிடம் செலுத்துங்கள், பாவம் செய்யாமல் இருக்க பக்தி கொள்வதே ஒரே வழி !!

தெய்வ பக்தி கொண்டாடுவோம், பணிவோடு நின்று திருநீர் அணிந்து மறவாத சிந்தை கொண்டு தெய்வ பக்தி கொண்டாடுவோம் !!
பரிவு கொண்டு புகழ் துதி புரிந்து எதிர் தலை வணங்கி உள்ளம் உருகி நின்று பக்தி கொண்டாடுவோம்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சபிரா


 
நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி.சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் முதலாவது பிறந்தநாள்.01.10. 2013 இன்று வெகுவிமர்சாயாககொண்டாடுகின்றார்இவரைஅன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா ஐய்யாமார் அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா மாமி மார் §
மச்சான் மச்சாள் மார் மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்அருள்புரிய. பல் கலைகளும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவற்கிரி இணையங்களும் உறவு இணைய ங்களும்{ஐய்யா குடும்பம் சுவிஸ்}
 வாழ்த்துகின்றோம்..
 


 
Powered by Blogger.