பிறந்தநாள் வாழ்த்து பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் சஞ்சைய்-28-10-23

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி
 (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின்  இருபத்தி நான்காவது  பிறந்தநாள் 28 -10 -2023 இன்று   
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் நல்லூர்க்கந்தன்  மற்றும்  ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக ன்
பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 




ஆன்மிகம் என்பதின் உண்மையான விளக்கங்கள் பற்றி நாம் அறிவோம்

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி 
கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது  ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித 
சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு
 யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் 
கிடையாது 
அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே 
ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல்
  திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது  ஒரு வகை 
ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் 
அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த 
உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, 
அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெரு  ங்கி கொண்டிருக்கிறீர்கள் 
என்று அர்த்தம்  என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பதின் மூண்று உயிர் வளர்க்கும் திருமந்திரம் தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே


செல்வம் உலகியல் தேவைகளுக்கானது. தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ இந்த உலகில் வாழ வந்தவர்கள் அனைவரும் தேடியே ஆக வேண்டியது 
செல்வம். அறிவும் அப்படித்தான். அறிவையும் எல்லோரும் தேடித்தான் ஆக வேண்டும். செல்வத்தைப் போலவே, தாங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியலுக்கு ஏற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ 
எல்லோரும் அறிவைச் சேகரிக்கத்தான் செய்கிறார்கள். 
என்றபோதிலும், செல்வச் சேகரமும் அறிவுச் சேகரமும் 
ஒரு மாதிரியானவை அல்ல. ஏன்? செல்வச் சேகரிப்பில் தன்முயற்சி மட்டும் 
போதுமானதில்லை. அதில் ‘ஊழ்வினை’ என்ற 
கண்ணுக்குத் தெரியாத அமைப்பும் உதவ வேண்டும். ஆனால், 
அறிவுச் சேகரிப்பில்
 தன்முயற்சி மட்டுமே போதுமானது; அதில் கண்ணுக்குத் தெரியாத எந்த அமைப்பும் உதவிக்கு வருவதுமில்லை; அறிவைத் தருவதுமில்லை.
முயற்சியின்றி அறிவு இல்லை
மகாபாரதக் கிளைக் கதை ஒன்றில் யவக்கிரீதன் என்ற ஒரு முட்டாள் கதாபாத்திரமுண்டு. தன்னை இகழ்கிறவர்கள் எல்லோரும் பாராட்டும்வகையில் தான் ஒரு அறிவாளியாகிவிட வேண்டும் என்று அவனுக்கு
 ஆசை. அறிவை வேண்டித் தவம் செய்தான். தவத்தை மெச்சி
 இந்திரன் வந்தான். ‘என்ன வேண்டும்?’ என்றான்.
 யவக்கிரீதன் ‘அறிவு வேண்டும்’ என்றான். ‘அறிவு என்பது நீயாக முயன்று பெறுவது; என் வரத்தினால் அது வருவதில்லை’ என்று 
சொல்லி இந்திரன் போய்விட்டான். ‘அறிவு வரம் 
பெறுவதற்கு இன்னும் கடுமையாகத் தவம் செய்ய வேண்டும் போலிருக்கிறது’ 
என்று எண்ணியவாறே ஆற்றங்கரையில் நடந்துகொண்டிருந்தான் யவக்கிரீதன். ஆற்றங்கரையில் உட்கார்ந்திருந்த
 பெரியவர் ஒருவர் கரையிலிருந்த மணலைக் கையால் அள்ளி ஆற்றுக்குள் வீசிக்கொண்டிருந்தார். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்றான் யவக்கிரீதன். ‘ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டுகிறேன்’ என்றார் பெரியவர். யவக்கிரீதன் சிரித்தான்: ‘ஆற்றுக்குள் இறங்காமல் அணை 
கட்ட முடியுமா? அதுவும் மணலைக் கொண்டு? அதுவும் கையால் அள்ளி?’ என்று கேலி செய்தான். ‘அறிவைப் பெறுவதற்கு எந்த
 முயற்சியும் செய்யாமல், அதை வரத்தால் பெற்றுவிடலாம் என்று நீ நினைக்கும்போது, ஆற்றுக்குள் இறங்காமலே அணை 
கட்டிவிடலாம் என்று நான் நினைப்பது மட்டும் 
தவறாகுமா?’ என்று கேட்டுவிட்டுப் போனார் பெரியவர்.
 அறிவு கண்ணுக்குத் தெரியாத அமைப்புகளால் அருளப்படுவதில்லை. தன்முயற்சியால் தெளியப்படுவது.
பேய் அறிவு எது?
செல்வத்தைச் சிறு செல்வம், பெருஞ் செல்வம் என்று வகைப்படுத்தலாம். அவ்வாறே அறிவையும் சிற்றறிவு, பேரறிவு என்று வகைப்படுத்தலாம். என்றபோதிலும், செல்வப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் ஒரே மாதிரியானவை அல்ல. ஏன்? செல்வப் பெருக்கம் 
அளவைப் பொறுத்தது. குறைய வைத்திருந்தால் சிறுசெல்வம்; நிறைய வைத்திருந்தால் பெருஞ்செல்வம். ஆனால், அறிவுப் 
பெருக்கத்தை அப்படிச் சொல்ல முடியாது. 
செய்திகளை அறிந்து வைத்திருக்கிறவன்தான் அறிவாளி என்றால் விநாடி
 வினா நிகழ்ச்சிகளில் நிறைய விடை சொல்கிறவர்களே பேரறிவாளிகள் என்று ஆகிவிடும். அறிவு என்பது அளவைப் பொறுத்ததில்லை; 
தன்மையைப் பொறுத்தது. அறிந்து வைத்திருக்கும் 
செய்திகளின் எண்ணிக்கை கணக்கில்லை; அறிந்து வைத்திருப்பது எதை என்பதுதான் கணக்கு.
நல்லது. எதை அறிந்து வைத்திருந்தால் அறிவு எனலாம்?
...தன்னை அறிவது அறிவாம் அஃதுஅன்றிப்
பின்னை அறிவது பேய்அறிவு ஆகுமே
(திருமந்திரம் 2318)
- என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர். தன்னையே தான் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் அறிவு; தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு. அதென்ன பேய் அறிவு? பேய்கள் நிலைகொள்ளாமல் உழலும்; அலையும்;
 தவிக்கும்.
 அவற்றுக்கு ஏதேனும் ஒரு பிடிமானத்தில் தங்களை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்ளத் தெரியாது. அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக்கொள்ள நினைத்து 
அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அவற்றை 
அடைய நினைத்துப் 
பின்னால் ஓடி நடந்து, கிடைத்துவிட்டால் நுகர்ந்து சலித்து, கிடைக்காவிட்டால் வருந்தி இளைத்து, அறிய வேண்டியது எதை, மேலும் அலைபாயாமல் தன்னை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்வது எதில் என்று புரியாமல் தடுமாறி 
நிற்பது பேய் அறிவு.
தன்னை அறியவேணும் அகப்பேய்!
சாராமல் சார வேணும்!
பின்னை அறிவதுஎலாம் அகப்பேய்,
பேய்அறிவு ஆகுமடி!
(அகப்பேய்ச் சித்தர், 78)
என்று கருத்து மாறாமல், சொல் மாறாமல் திருமந்திரத்தை வழிமொழிகிறார் அகப்பேய்ச் சித்தர்.
தன்னை அறிந்து இன்பம்
உற வெண்ணிலாவே – ஒரு
தந்திரம்நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே
(திருவருட்பா, 2ஆம் திருமுறை)
என்று ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் ஒருவரான’ வள்ளலாரும் உடன்படுகிறார்.
தன்னை அறிதலை இன்னும் நியாயப்படுத்தி அழுத்துகிறார் திருமூலர்:
தன்னை அறியத் தனக்கு
ஒரு கேடு இல்லை;
தன்னை அறியாமல் தானே
கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்,
தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே.
(திருமந்திரம் 2355)
ஒருவர் தனக்கு வெளியில் உள்ள பொருட்களையெல்லாம் அறிவதைப் போலவே தன்னையும் அறிந்திருக்க வேண்டாமா? 
அறிதல் என்ற செயல்பாட்டைப் புறத்தில் உள்ள பொருட்களிலிருந்து
 தொடங்கினாலும், அறியும் பொருளாகிய 
தன்னையும் அதில் உட்படுத்திக்கொள்ள வேண்டாமா? ‘என்னைப் பத்தி நீ என்ன
 நினைக்கிற?’ என்று அடுத்தவரிடம் கேட்பவர் அடி முட்டாள் இல்லையா? தன்னையே தன்னுடைய குறைநிறைகளோடு தனக்குத் 
தெரியாதென்றால் பிறரையும் பிறவற்றையும் 
நான் அறிவதிலும் அறிக்கையிடுவதிலும் என்ன முழுமை
 இருக்க முடியும்? என் நிறையை நான் அறியாததால் அல்லவா மற்றவரைப் பெரியவராக எண்ணி அவர் காலில் விழுந்து வணங்குகிறேன்? என் குறையை நான் அறியாததால் அல்லவா மற்றவரைச் சிறியவராக எண்ணி அவரை என் காலில் விழச் செய்கிறேன்?
கருத்தை மேலும் கெட்டிப்படுத்துகிறார் திருமூலர்:
தானே தனக்குப் பகைவனும்
நட்டானும்;
தானே தனக்கு மறுமையும்
இம்மையும்;
தானே தான்செய்த
வினைப்பயன் துய்ப்பானும்;
தானே தனக்குத்
தலைவனும் ஆமே.
(திருமந்திரம், 2228)
அறிந்தவர்கள் சிலரைப் பகைவர்கள் என்றும் சிலரை நண்பர்கள் என்றும் குறித்து வைத்திருக்கிறவர்களே, நீங்கள் அறிக: 
உங்களுக்கு 
நீங்களே பகைவர்; உங்களுக்கு நீங்களே நண்பர். இப்பிறப்பில் நான் இவ்வாறு 
இருக்கக் காரணம் இது, மறுபிறப்பில் நான் வேறொன்றாய்ப் பிறக்க வழிசெய்வது இது என்று கணக்குப் பார்க்கிறவர்களே, 
நீங்கள் அறிக: இப்பிறப்பில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, மறுபிறப்பில் என்னவாக ஆகப் போகிறீர்களோ, அனைத்துக்கும் காரணம் நீங்களே. அதற்கான வினையைச் 
செய்தவரும் நீங்களே; அந்த வினையின் பயனை நுகர்பவரும் நீங்களே. ஆகவே, மரியாதைக்குரியவர்களே! உங்களுக்கு ஆணையிடுகிற,
 உங்களைச் செயல்படுத்துகிற தலைவர் நீங்களே. அதை 
அறியாமல் பிறரைத் திட்டாதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
எனவே, கேடு என்பது தன்னை அறியாதிருப்பது. நன்மை
 என்பது தன்னை அறிவது. தன்னை அறிக. தன்னை அறியும் 
அறிவை அறிக. 
அறிந்துவிட்டால், போற்றுவதும் போற்றப்படுவதும் தூற்றுவதும் தூற்றப்படுவதும் என்று எல்லாமும் தனக்குள்ளே இருப்பது 
விளங்கும். தன்மதிப்பென்னும் சுயமரியாதை, தன்னை அறிவதிலிருந்தே முளைக்கிறது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.2023

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப்புதல்வி  குமாரசாமி றமோனா அவர்களின்பிறந்தநாள்.18.10.2023..இன்று இவரை அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவரை இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன,




 

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.18.10.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகளின்    
திருமணநாள்  இன்று 18.10.2023 .இவரை அன்பு  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மா
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  கனடா முருகன் ஆசியுடன் திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக பல்லாண்டு பல்லாண்டுகாலம்
வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


கெட்டதை மட்டும் சனீஸ்வரன் செய்பவர் அல்ல. நல்லதையும் செய்வார்

 

சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல்
 கெடுப்பாரும் இல்லை'
 சனி பகவானின் திருவிளையாடல்கள் பற்றி சில கதைகளில் இதுவும் ஒன்று. இக்கதையைப் படிப்பதாலேயே வாசகர் களு க்கு சில நன்மைகள் கிடைக்கலாம்; தீமைகள் விலகலாம். சனி பகவான் நலம் பல நல்க அவரை 
வேண்டுங்கள்.
 மன்னன் ஒருவன் தன் நாட்டில் வாழும் பொற் கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களை கொடுத் து, "இதற்கு
 என்ன விலை கொடுக்கலாம்? மதிப்பு போட்டுச் 
சொல்லுங்கள்'' என்றான்.
 அதைப் பெற்றுக்கொண்ட பொற்கொல்லர், "மன்னா! இவற்றை எடுத்து சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை வந்து சொல்கிறேன்'' என்று கூறி, ரத்தின ங்களுடன் வீட்டுக்கு வந்தார். 
 அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கை யில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்.
 விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கி ன் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிரு ந்த ரத்தினங் களைக் கொத்தி விழுங்கி விட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது. 
இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற் கொல்லர் உடனே தன் ஜாதகத்தையும் பஞ்சா ங்கத்தையும் எடுத்துப் பார்த்தார். அன்று அவருக்கு ஏழரை ஆண்டு சனி ஆரம்பம் என்று தெரிந்தது. 
நாளை மன்னர் முகத்தில் எப்படி விழிப்ப து? நடந்ததைச் சொன்னால் நம்புவாரா என்று யோசித்து, மிகவும் வருந்தி அன்று இரவே காட்டுக்குச் 
சென்றுவிட்டார்.
 மறுநாள்... பொற்கொல்லர் மன்னர் கொடுத்த ரத்தினங்களுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டனர். இச்செய்தி
 மன்னனுக்கும் எட்டியது. அந்தப் பொற்கொல்லரின் மனைவி, மகளைக் கைது செய்து சிறையி ல் அடைத்தான் மன்னன்.
 பொற்கொல்ல ரைப் பிடிக்க அரச காவலாளிகள் காட்டுக் குள் சென்றனர். ஆனாலும் ஏழரை ஆண்டு களாக அவரை.பிடிக்க முடியவில்லை. 
ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது. அவ்வளவு 
காலமும் பசி- பட்டினியுடனும் தாடி- மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடை யாளம் தெரியாமல் மாறியிருந்த அந்த பொற் கொல்லர்
 தன் வீட்டுக்கு வந்தார். 
குளித்து முடித்து சனி பகவானைத் தியானித்துவிட்டு சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கு சித்திரத் தைப் பார்த்துக் கைநீட்டியபடி, "சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு'' என்றார். என்ன ஆச்சரியம்! அந்த சித்திரக் கொக்கு க்கு உயிர் வந்து, ரத்தினங்களை அவரது கையில் கக்கிவிட்டு மீண்டும் சுவர் சித்திர மாக மாறியது. 
அப்போது இரவு சோதனைக்காக மாறு வேடத் தில் அங்கு வந்த மன்னன், மறைவி ல் நின்று நடந்தவற்றைப் பார்த்தான். உடனே
 பொற்கொ ல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு 
கேட்டதுடன் அவருக்கு தன் நாட்டின் முதலமை ச்சர் பதவியும்
 கொடுத்தான்.
 அவரது மகளையு ம் மணந்து கொண்டான். ஏழரைச் சனி ஒருவரை எப்படி யெல்லாம் ஆட்டு விக்கும் என்பதை இக்கதை மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். 
ஏழரை ஆண்டு சனி முடிகின்ற வேளை யில்- உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருவத ற்கு மூன்று மாதங்க ளுக்கு முன்பாகவே
 நற்ப லன்களை வாரி வழங்க ஆரம்பித்து விடுவார் 
சனி பகவான்.
 இதைத்தான் "சனியைப்போல் கொடுப்பா ரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பா ரும் இல்லை'' என்று சொல்லுவார்கள். இதுதான் 
சனி பகவானின் மகத்துவம்..ஆகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 12.10.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (நவற்கிரி.லிங்கம்&சுதுமலை.வசந்தி) தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாக கொண்ட செல்வன் .கனகலிங்கம் அஜிவன்    
அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2023..இன்று
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  சுதுமலை அம்மன் சுவிஸ் முருகன்   நல்லூர்க்கந்தன்  இறை அருள்  பெற்று
..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


 



உங்கள் வீட்டில் நவராத்திரி விழாவை நீங்கள் கொண்டாடிட தயாரா

அம்பிகையின் பல்வேறு ரூபங்களை வழிபடும் ஒன்பது நாள் இரவிற்கு நவராத்திரி என்று பெயர். 
மகிஷாசுரன் அசுரன், பெண்ணை தவிர தனக்கு உலகில் வேறு சக்தியால் மரணம் நிகழக் கூடாது என வரம் பெற்றவன். இந்த வரத்தின் 
காரணத்தால் பல தீமைகள் செய்த மகிஷனுடன் மகாசக்தியான அம்பிகை போரிட்டு, வெற்றி பெற்ற நாட்களையே நவராத்திரி என்றும், 
அதன் இறுதி நாளை விஜயதசமி என்றும் நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
 நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்க்கையின் வடிவமாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் ரூபமாகவும் 
வழிபடுகிறோம். 
அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியின் வடிவமாக அம்பிகையை வழிபடும் நாளாகும்.
 வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே சாரதா நவராத்திரியாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
 புரட்டாசி மாத அமாவாசை நாளில் கொலு படிகள் அமைத்து, கொலு பொம்மைகள் அடுக்கி, பலவிதங்களில் வீடுகளை அலங்கரித்து, அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடுவது நவராத்திரியின் 
சிறப்பம்சமாகும்.
 நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து, தினம் ஒரு நைவேத்தியம் படைத்து
 வழிபடுவது வழக்கம்.
 நவராத்திரி 2023 தேதி : இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 15 ம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 23 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. 
.என்பது குறிப்பிடத்தக்கது 


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.தங்கவேலு கண்ணன், 05.10.2023

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2023. இன்று தனது இல்லத்தில் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் 
 வெகு சிறப்பாக
 கொண்டாடினார்  இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  சகோதரி மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் 
 செல்வச்சந்நிதி முருகன் நல்லுர்க்கந்தன் 
இறை ஆசியுடன் 
   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





Powered by Blogger.