இந்தியா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஏழுமலையான் கோவில்

இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் 
தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிரமாணிக்கப்பட்டு வருகின்றன. 
இதற்கிடையில், இலங்கையிலும் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இலங்கை பக்தர்கள் விடுத்த கோரிக்கையின்படி இந்திய அரசு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல்
கட்டுமான பணிகள் 
இதனையடுத்து, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமான 
இடங்கள் மற்றும் தேவையான நிதி குறித்து ஆய்வு 
மேற்கொள்ளவிருந்தார். 
ருப்பினும், சில நிர்வாக காரணங்களினால் அவர் இலங்கை செல்வது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 
எனவே, மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி தேவஸ்தான செயல் அலுவலர் இலங்கைக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது







 

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பாலமுரளி சாருகா 25. 03.2024

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா அவர்களின்  22வது பிறந்தநாள். 25.03.2024 .இன்று 
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா  அன்புத் தம்பி  அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  
அப்பம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் நண்பிகள்
 ஊர் உறவுகளுடன் இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்மன் ஒஸ்லோ முருகன் 
சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடுளி காலம்  வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
   இவர்களுடன் இணைந்து 
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும்
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட 
எமது இணையங்களும் இணைய நண்பர்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையம் நவற்கிரி .கொம்
 இணைய ங்களும் வாழ்த்துகின்றன.




நாம் குரு பாகவானை இப்படி வழிபட்டால் அவரது அருள் நிச்சயம் கிடைக்கும்

நவகிரகங்களில் மங்கல கிரகம் என புகழப்படுபவர் குரு பகவான். ஜோதிட ரீதியாக குரு பகவானை மங்களகாரகன் என 
அழைப்பதுண்டு.
 ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற முக்கியமான மங்கல நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கக் கூடியவர் 
குரு பகவான்.
 இவரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமையும், இவருக்குரிய நிறமாக மஞ்சள் நிறமும் சொல்லப்படுகிறது. 
குரு பார்க்க 
கோடி நன்மை என்பார்கள். இவர் பார்த்தாலே கோடி நன்மை கிடைக்கும் என்றால், இவரின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் எத்தனை நன்மைகள் வந்து சேரும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
 குரு பகவானின் அருளை பெற வேண்டும் என்பவர்கள் வியாழக்கிழமையில், முழு பக்தியுடன் வழிபட்டால் குருவருள் மட்டுமல்ல,
 திருவருளும் கிடைக்கும். குருவின் அருளை பெறுவதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானை மட்டுமின்றி, மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும். 
வீட்டில் மகாவிஷ்ணுவின் படம் அல்லது சிலை எது உள்ளதோ அதை எடுத்து சுத்தம் செய்து வைத்து, விளக்கேற்றி, பிரகஸ்பதி என அழைக்கப்படும் குருவின் கதைகளை படித்தும், அவருக்குரிய மந்திரங்களை சொல்லியும், நைவேத்தியம் படைத்தும் வழிபட வேண்டும்.
 வாழை மரத்தடியில் சுத்தமான பசு நெய்யால் விளக்கேற்றி, குரு பகவானுக்குரிய தானியமான கொண்டைக்கடலை, வெல்லம், வாழைப்பழம் ஆகியவை படைத்து வழிபடலாம். பிறகு அந்த மரத்தை சுற்றி மஞ்சள் நிற கயிறு கட்டி, 7 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
 குரு பகவானுக்கு எப்போதும் மஞ்சள் நிற இனிப்பு 
வகைகள், மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற வஸ்திரங்கள் மட்டுமே படைத்து 
வழிபட வேண்டும். வியாழக்கிழமைகளில் மகாவிஷ்ணுவிற்கும் மஞ்சள் நிறத்தால் ஆன மலர்கள், நைவேத்தியங்களை படைத்து 
வழிபடுவது சிறப்பு. பூஜையை முடித்த பிறகு, 
குரு பகவானுக்குரிய மந்திரங்களை 108 முறை சொல்லி 
வழிபட வேண்டும்.
 குரு மந்திரம் : கிராம் க்ரீம் க்ரோம் சஹ குருவே நமஹ
 வியாழக்கிழமையில் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்து வழிபட வேண்டும். மாலையில் விளக்கேற்றி வழிபட்டு, பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 
விரதத்தை நிறைவு செய்யும் போது வீட்டில் சமைத்த சைவ உணவுகளை சாப்பிட்டே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 
விரதம் இருக்கும் நாளில் ஏதாவது உணவு பொருட்களை பிராணமர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். குறிப்பாக வயதான அந்தணர்களுக்கு வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
 இவ்வாறு வியாழக்கிழமையில் குரு பகவான் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடும் பக்தர்களுக்கு அதிர்ஷ்டம், ஞானம், அறிவு, வெற்றி, ஆன்மிக வளர்ச்சி, தகுந்த வாழ்க்கை துணை, நல்ல வேலை போன்றவை கிடைக்க அருள் செய்வார்கள்.    என்பதும் குறிப்பிடத்தக்கது  



திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.2024

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2024..இன்று முப்பதிதி இரண்டாவது    திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகன் மார் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று  பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன.
 திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
 இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்




 

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலமுரளி ஹரிசன் 19.03.2024

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்
ஹரிசன் தனது  பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  இன்று. 19.03.2024கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அன்பு அப்பாம்மா  மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும்
 உறவினர்கள்  இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்மற்றும் ஒஸ்லோ முருகன் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று வாழ வாழ்துகின்றனர் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்







 

பிறந்தநாள் வாழ்த்து .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  அவர்களின்  பிறந்தநாள் 16.013.2024..இன்று .இவரை அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி  பேரப்பிள்ளைகள்  தங்கை,
மச்சான் மார் மச்சாள் மார்  ம​ற்றும் 
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார்.நவற்கிரி அப்பா வயிரவர் மருகன்புலத்து வயிரவர் தோப்பு வயிரவர்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  எல்லாநலமும்  பெற்று தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 


செல்வச் செழிப்பையடைய லட்சுமி, குபேரர் மந்திரங்கள நாள் தோறும் கூற வேண்டும்

நாம் செல்வச் செழிப்பை அடைய அஷ்ட லட்சுமிகளை வணங்குதல் வேண்டும்.
 லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் உச்சரித்தல் அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும்.
 இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.
 மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
 மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். 
இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
 ஓம் அகத்தீசாய நம!
 ஓம் கரூவூர்தேவாய நம!
 ஓம் போகதேவாய நம!
 ஓம் கோரக்கதேவாய நம!
 அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று
 கூறுவர். இந்த
 சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். 
இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,
 ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாகவும்  நன்மைகள்
 கிடைக்குமாம் என்பதாகும்  



 

பிறந்த நாள் வாழ்த்து..திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 09.03.2024

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 
அவர்களின்  பிறந்தநாள் .09.03.2024..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் 
 இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றனர் 
உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 






 

வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் வந்து சேர மகாலட்சுமியை இப்படி வணங்கிப்பாருங்கள்

உங்கள் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும். உயர்வான நிலையை அடைந்து, உயர்வான வாழ்க்கை வாழ 
வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவது உண்டு. இவை எல்லாம் கிடைப்பதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பது 
அனைவருக்கும் தெரியும்.
 ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டும் பெயர், புகழ், பணம், பதவி, செல்வம் கிடைத்து விடுமா? என்றால் கிடையாது என்று தான்
 சொல்ல வேண்டும். அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அனைவருக்கும் பணம், பெயர், புகழ் கிடைப்பது கிடையாது. பணம், பெயர்,
 புகழ் ஆகியவை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அனுகிரக வேண்டும்.
 அப்படி லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக இருக்க வேண்டும். சுக்கிரனின் நிலை நன்றாக, பலத்துடன் இருந்தால் பணம் சேரும், சேமிப்பு உயரும், அனைத்தும் தேடி வரும், பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.
அதுவே சுக்கிரனின் நிலை சரியில்லை, அவர் பலம் இழந்த காணப்படுகிறார் என்றால் அதை சரி செய்ய சில எளிமையான, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யலாம்.
 ஏலக்காய் வாங்கி வந்து, ஒரு நூலில் மஞ்சள் தடவி, அதற்கு பிறகு 27, 51, 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை எடுத்து, தெய்வ மந்திரங்களை அல்லது நாமங்களை சொல்லி வணங்கிய படியே மாலையாக 
கோர்க்க வேண்டும்.
 இதை அப்படியே வைத்திருந்து, அடுத்த நாள் காலை, அருகில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாத்தலாம். அப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மர் படம் இருந்தால் அதில் சாத்தி வழிபடலாம். 
இந்த ஏலக்காய் மாலையை அடுத்த நாள் எடுத்து அதிலுள்ள ஏலக்காயை பிரசாதமாக சமையலில் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த 
ஏலக்காய் மாலையை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
 உங்களின் செல்வ நிலை செல்வாக்கு உயரும். தினமும் ஒரு ஏலக்காய் வீதம் எடுத்து, வெற்றிலை, பச்சை கற்பூரம், ஒரு நாணயம் வைத்து, அதை சுவாமி படத்திற்கு முன் வைத்து விட்டு, பச்சை கற்பூரம் கரைந்த பிறகு அந்த வெற்றிலை, ஏலக்காயை சேர்த்து சாப்பிடலாம். 
இதை தினமும் செய்து வந்தால் நரசிம்மரின் அருள் முழவதுமாக கிடைக்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் 
ஏற்படும். ஏதாவது 
முக்கியமான காரியமாக வெளியில் செல்வதற்கு முன் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று விட்டு போய், அந்த காரியத்திற்காக பேசினால் அது வெற்றி அடையும்.என்பதாகும் 



புதிய டிஜிட்டல் உலகிற்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டுள்ள சைவசமய நடைமுறைகள்

நாடு முழுவதிலும் இருந்து 70 சாஸ்திர சம்பிராதாயங்களில் கற்றறிந்த பண்டிதர்களைக் கொண்ட குழு, காசி வித்வாத் பரிஷித் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது. 
இந்த குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக பல ஆய்வுகள் செய்து, கலந்து ஆலோசித்த பிறகு புதிய நடைத்தை விதிகளை உருவாக்கி 
உள்ளனர். ஸ்ரீமத் பகவத் கீதா, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் 
அடிப்படையில் இந்த புதிய இந்து நடத்தை விதிகள்
 உருவாக்கப்பட்டுள்ளன.
 அனைத்து இந்துக் கோவில்களிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வழிபாட்டின் போது ஒற்றுமையும், ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சில புதிய உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மாதவிலக்கு போன்ற சுத்தம் இல்லாத நாட்கள் தவிர்த்து,
 மற்ற காலங்களில் சில சடங்குகளையும் செய்வதுடன் வேதங்கள் படிக்கும் உரிமையும் புதிதாக வழங்கப்படுகிறது. இதனால் யாகங்கள் போன்ற சடங்குகளை இனி பெண்களும் செய்ய முடியும்.
 இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இரவில் திருமணம் செய்யாமல், பகலில் மட்டுமே திருமண சடங்குகளை
 நடத்தும் புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்கத்திய 
பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்களை சார்ந்த விஷயங்களை
 குறைத்து இந்திய மரபுகள், நம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஒருவரின் பிறந்தநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டு 
நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
 விதவை மறுமணங்கள் ஊக்குவிக்கும் முறையும் இந்த புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தை கருத்தில் கொண்டு 16 வகையான சடங்குகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு இறுதிச் சடங்கில் கலந்த கொள்ள வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 16 ஆக
 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இந்த புதிய இந்து நடத்தை விதிகள் அச்சிடப்பட்டு, அந்த பிரதிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் மகாகும்பமேளாவில் புதிய இந்து நடத்தை விதிகளின் நகல்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

Powered by Blogger.