நவகிரகங்களில் மங்கல கிரகம் என புகழப்படுபவர் குரு பகவான். ஜோதிட ரீதியாக குரு பகவானை மங்களகாரகன் என
அழைப்பதுண்டு.
ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற முக்கியமான மங்கல நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கக் கூடியவர்
குரு பகவான்.
இவரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமையும், இவருக்குரிய நிறமாக மஞ்சள் நிறமும் சொல்லப்படுகிறது.
குரு பார்க்க
கோடி நன்மை என்பார்கள். இவர் பார்த்தாலே கோடி நன்மை கிடைக்கும் என்றால், இவரின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் எத்தனை நன்மைகள் வந்து சேரும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
குரு பகவானின் அருளை பெற வேண்டும் என்பவர்கள் வியாழக்கிழமையில், முழு பக்தியுடன் வழிபட்டால் குருவருள் மட்டுமல்ல,
திருவருளும் கிடைக்கும். குருவின் அருளை பெறுவதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானை மட்டுமின்றி, மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும்.
வீட்டில் மகாவிஷ்ணுவின் படம் அல்லது சிலை எது உள்ளதோ அதை எடுத்து சுத்தம் செய்து வைத்து, விளக்கேற்றி, பிரகஸ்பதி என அழைக்கப்படும் குருவின் கதைகளை படித்தும், அவருக்குரிய மந்திரங்களை சொல்லியும், நைவேத்தியம் படைத்தும் வழிபட வேண்டும்.
வாழை மரத்தடியில் சுத்தமான பசு நெய்யால் விளக்கேற்றி, குரு பகவானுக்குரிய தானியமான கொண்டைக்கடலை, வெல்லம், வாழைப்பழம் ஆகியவை படைத்து வழிபடலாம். பிறகு அந்த மரத்தை சுற்றி மஞ்சள் நிற கயிறு கட்டி, 7 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
குரு பகவானுக்கு எப்போதும் மஞ்சள் நிற இனிப்பு
வகைகள், மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற வஸ்திரங்கள் மட்டுமே படைத்து
வழிபட வேண்டும். வியாழக்கிழமைகளில் மகாவிஷ்ணுவிற்கும் மஞ்சள் நிறத்தால் ஆன மலர்கள், நைவேத்தியங்களை படைத்து
வழிபடுவது சிறப்பு. பூஜையை முடித்த பிறகு,
குரு பகவானுக்குரிய மந்திரங்களை 108 முறை சொல்லி
வழிபட வேண்டும்.
குரு மந்திரம் : கிராம் க்ரீம் க்ரோம் சஹ குருவே நமஹ
வியாழக்கிழமையில் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்து வழிபட வேண்டும். மாலையில் விளக்கேற்றி வழிபட்டு, பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
விரதத்தை நிறைவு செய்யும் போது வீட்டில் சமைத்த சைவ உணவுகளை சாப்பிட்டே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் நாளில் ஏதாவது உணவு பொருட்களை பிராணமர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். குறிப்பாக வயதான அந்தணர்களுக்கு வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
இவ்வாறு வியாழக்கிழமையில் குரு பகவான் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடும் பக்தர்களுக்கு அதிர்ஷ்டம், ஞானம், அறிவு, வெற்றி, ஆன்மிக வளர்ச்சி, தகுந்த வாழ்க்கை துணை, நல்ல வேலை போன்றவை கிடைக்க அருள் செய்வார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen