அனைவருக்கும் கார்த்திகை தீபம்த் திருவிழா வாழ்த்துக்கள் 28-11-20

கார்த்திகை என்றாலே அனைவருக்கும் கார்த்திகை விளக்கீடு திருவிழா’ தான் நினைவுக்கு வந்து செல்லும். தமிழரின் தொன்மையான 
பண்டிகைதான் இந்த விழா.
கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். விளக்குகளால் இல்லங்களை அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் மிதக்கவைத்து வழிபடுவர்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. 
மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். இருளை நீக்கும் தீப ஒளியானது மன இருளையும் போக்கும்”
பெண்கள் திருமண வாழ்வு வேண்டியும், தாய்மார் தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் கார்த்திகை திருநாளன்று விரதமிருக்கின்றனர்.
வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து 
அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவது வழமை.
திருக்கார்த்திகையின்போது 
குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, குப்பைக் குழி, ஆடு மற்றும் மாட்டுப் பட்டி, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு மிக்கது.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
குமராலய தீபம்: முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று 
வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே 
முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி 
காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு என்பதாகும்
அனைவருக்கும்என் இணையங்களின் திருக் கார்த்திகை விளக்கீடு நல் வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>




பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்லத்துரை சிவகாமி அம்மா 27.11.20

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி ) பிறந்த நாள் 27-11-2020 .இன்று இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள் 
  பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன்  நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வீட்டில் கார்த்திகை தீப திருநாளில் நல்லெண்ணெய் தீபம்ஏற்றி வழிபடுங்கள்

கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு 
வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, 
தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 
தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, 
தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி
 விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக 
ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்அகல் விளக்கு தீபம் திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி
 எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது,
 அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.தீபம் ஏற்றும் மாதம் கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, 
அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. 
தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில்
 மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நன்மை தரும் நேரம் தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு 
மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து 
செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். தடைகள் நீங்கும் மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை 
சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை,
 கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு 
கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம். நன்மை தரும் விளக்கு மண்ணால் செய்யப்பட்ட விளக்கு
 ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற 
திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற 
ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும். எண்ணெயின் மகிமை நெய் கொண்டு 
தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது 
கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி 
கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் அதிகரிக்கும். பாவம் அதிகரிக்கும் கடலை எண்ணை, கடுகு எண்ணை, 
பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே
 அதிகரிக்கும். விளக்கு தானாக அணையக்கூடாது 
சிலர் விளக்கு
 ஏற்றியதுடன் நமது கடமை முடிந்தது என்று நினைக்கின்றனர். விளக்கு ஏற்றி மறந்து விட்டால் அது தானாக கருகி அணைந்து 
விடும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக 
அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க 
வேண்டும் அப்போதுதான் விளக்கு ஏற்றியதன் 
பலன் கிடைக்கும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>






பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி கனகரத்தினம்-25.11.20


யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட
 திரு,திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் ( ரத்தினம்) அவர்கள்
தனது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பஉறவுகளுடன்  .25.11.2020.இன்று  தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு கணவர்  அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள் மாமி உற்றார் இவரை  உறவினர்கள்  புத்தூர் சிவன் ஆசியுடன் நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய்
 எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்து கின்றோம்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!  
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று  வாழ  வாழ்த்து கின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீ டுழி வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மோகனதாஸன் பிரசாத் 21-11-20

 யாழ்  அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,சுவிஸ் பெர்ன் குட்வீலை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி மோகனதாஸன் ஜெயந்த்தி  தம்பதியினரின் செல்வப்புதல்வனின் பிறந்தநாள்.21.11-2020  இன்று இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரர்கள்  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் தோப்பு போதிப்பிள்ளையார்  சன்னதி முருகன் இறை ஆசியுடன்
 சகல கலைகளும் கற்று நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

 

பலருக்கும் தெரியாத கந்தசஷ்டி பெருவிழாவில் சூரபத்மனின் மறுமுகம்.

முருகப்பெருமான் அசுரரான சூரபத்மனை வதம் செய்ததே, நாம் கந்த சஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மன் ஒருபாதி ‘நான்’ என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி ‘எனது’ என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். சூரபத்மனின் வரலாறு: 
பிரமதேவனுக்கு தக்கன் காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை 
நோக்கித் கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட ‘மாயை’ என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை 
எல்லாவற்றையும் இழந்தான்.இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற 74அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 
108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ் வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை 
உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை 
மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம்பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகிய புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர்.
சூரபத்மன் தான் பெற்ற 
வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான 7
தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான். அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று 
முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற 
திருவுளம் கொண்டு சூரபத்மனை அழிக்க, சக்தி படைத்த ஆறுமுகனை அவதரிக்க செய்தார்.


  நிலாவரை.கொம் செய்திகள் >>>










பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி 19-11-20

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட
(சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற நடத்துனர்) திருமதி  சுப்பிரமணியம்.கமலாதேவி  அவர்களின்
எழுபத்தி இரண்டாவது உதயதிருநாளை 19-11-2020..இன்று. தனது  இல்லத்தில் மிக எளிமையாகக்  கொண்டாடினார்  இவரை அன்புக்கனவர்  அன்புப்பிள்ளைகள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  சகோதரர்கள்   மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் ளைகள் சகோதர்கள் மாமா மாமி , பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் 
நண்பர்கள் உறவினர்கள் 
  இவரை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் 
 இறை அருள் பெற்று  நோய்நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம்
 வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன..வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி தர்மா.தீபா 19.11.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண் திரு :திருமதி தர்மா ரதிதீபா (தீபா)
 அவர்களின்   பிறந்த நாள் 19.11.2020. இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்  என்றும் 
சீரும் சிறப்பும் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>





அனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய 
உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேசங்களில் வாழும் அனை வரும்
 கொண்டாடி மகிழ்வார் 
 ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். 
மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>




சிவலிங்கம் தஞ்சாவூரில் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறும் அதிசயம்

இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார், உலகிலே பரவலாக அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு 
கோயில்கள் உள்ளது.அவற்றில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம், இக்கோயில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது.இக்கோயில் 
சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகின்ற கோயில்களில் ஒன்றுதான் நிறம் மாறும் கோயில் ஆகும்.
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. மதிவேல் சோழன், உத்தமச் சோழன் ஆகியோர் கட்டியதாக
 குறிப்புகளில் உள்ளது.ஒரு நாளைக்கு ஐந்து 
முறை நிறம் மாறுவதால் தான் இந்த கோயிலுக்கு பஞ்சவர்ண சிவலிங்க கோயில் என்று பெயர்வந்தது.
தினமும் இந்த கோயிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை, தவிர, குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக 
காட்சியளிக்கிறார்.
இங்குள்ள நிறம் மாறும் லிங்கத்தை அகத்தியமுனிவர் வடிவமைத்து வழிபட்டார் என்று குறிப்புகளில் கூறப்படுகின்றது.காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49 க்கு உருகிய தங்க நிறம், 15.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம்மாறுகிறது. மாலை ஆறு மணி வரை மரகத பச்சை நிறத்தில்
 காட்சியளிக்கிறது.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து செயல்களை குறிக்கும் விதமாக இந்த ஐந்து நிறங்களில் லிங்கம் மாறுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.கோயிலுக்கு வெளியே 
அமைந்துள்ள தெப்பக்குளம் மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த குளத்தில் வாராவாரம் குளித்து வந்தால் குழந்தை பேறு அடைவர் என்பது
 மக்களின் நம்பிக்கை.
இது அறிவியலின்படி, சூரிய ஒளியை அந்த சிவலிங்கம் பிரதி பலிக்கிறது. அதனால் சூரிய ஒளிக்கு ஏற்ப அந்த சிலை நிறமாறுகிறது 
என்று கூறுகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா) 12-11-20

ஓம் சக்தி!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா)  அவர்களின்
 பிறந்த நாள் 12-11-2020. இன்று (பளை மயூரா மணியண்ணையின் கடைக்குட்டி தீபா )எங்கள்  மகள் கடைக்குட்டி தீபா தனது அகவைநளை கணவர் அப்பா அம்மா பிள்ளைகளுடன் தனது இல்லத்தில் அமைதியாக 
கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அப்பா.அம்மா,அன்புக்கணவர் மகன்மார் ,மருமகக்கள்  பெறாமக்கள் 
மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் 
சித்தப்பா சித்தி மார்  சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் திருஅருளாலும் குரு அருளாலும் நோய்நொடு இன்றிபல்லாண்டு  பல்லாண்டுகாலம் வாழ  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும்
 வாழ்த்துகின்றன..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.20

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 9.11.2020. இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்நவற்கிரி அப்பா வயிரவர் 
சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர்
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்  இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி
ஆல் போல் செழிப்பாய் நீ வரவே
நலம் மட்டும் நீயுடுத்து  எங்கள் மகனே .
வாழ்த்து சொல்லும் வயதில்லை எமக்கு
முன்னோர் சொன்னது பலிக்கட்டும் உமக்கு.
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
ஒற்றுமைக் காத்து
வாழ்க நலமுடன் வளமுடன்
நீ வாழிய வாழியவே பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்..
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.20

ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  செல்வன்  சந்திரன்- அதிஸ்னன் (நிலா) அவர்களின்
இருபத்திஓராவது  பிறந்தநாளை .08.11..2020, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணாமார்  அக்கா அத்தான் அம்மம்மா மருமகள் மருமகன் போறமகள் அண்ணா  அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள்
 பெரியப்பா பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவிஅண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்
உன் கல்வி சிறக்க அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ உடல் உள நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி நவரத்தினராசா நிர்மலா 06.11-20

லண்டனில் வசிக்கும் திரு திருமதி திருமதி நவரத்தினராசா நிர்மலாதேவி (நிர்மலா)அவர்களின் பிறந்தநாள்   06.11-2020  அன்று  தனது  இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்  இவரை அன்புக்கனவர்  அன்புப்புள்ளைகள்  பேரப்பிள்ளைகள்  சகோதரர்கள்   மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன்  இணைத்து  இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்  சன்னதி முருகன்
 இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் முரளீதரன் அகன் 06.11-20

 ஓம் சக்தி!! கனடாவில்வசிக்கும் திரு திருமதி  முரளீதரன்&துஸ்யந்தி தம்பதியினரின் புதல்வனின் 13வது அகவை நிகழ்வை.06.11-2020  இன்று தனது  இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்  இவரை அன்புத்தாத்தா    அம்மா சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா  அன்பு  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும்  இறை ஆசியுடன்
 சகல கலைகளும் கற்று நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சிவபெருமானுக்கு நாம் படைக்க கூடாத பொருட்கள் இவை தானாம்

சிவன் என்பவன் எளிமை. யோகி, ஞானி, முற்றும் துறந்தவன். அதனால்தான் அவன் கோவிலுக்கு சென்றுவிட்டு எதனையும் கொண்டு செல்லக் கூடாது. சிவன் சொத்து குலம் நாசம் என்பார்கள்.அது போலவே 
சிவனுக்கு இதையெல்லாம் செய்யலாம்.எந்த ஒரு 
சூழ்நிலையிலும் இதையெல்லாம் செய்யக் கூடாது என சிவ புராணம் விளக்குகிறது. 
அதன் அடிப்படையில் நீங்கள் இந்த ஐந்து பொருட்களை சிவனுக்கு 
படைத்தல் கூடாது
தாழம்பூ: ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றி தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான 
காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார்.அதன்படி விஷ்ணு காலை நோக்கியும் பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் விஷ்ணு தனது தோல்
வியை ஒத்துக் கொள்கிறார். ஆனால் பிரம்மா தான் தலையை பார்த்ததாக சாட்சிக்கு தாழம்பூவை கொண்டு 
வருகிறார். அதனால் கோபத்தில் சிவன் பிரம்மாவின் நான்காவது தலையை துண்டித்துவிட்டு தாழம்பூவை தனக்கு எப்போதும் படைக்கக் கூடது என தாழம்பூவிற்கும் சாபம் விடுத்ததாக 
சிவபுராணம் கூறுகிறது. அதிலிருந்து தாழம்பூவினால் சிவனுக்கு பூஜை செய்வதில்லை.
துளசி: எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடமிருந்து ஜலந்தர் என்னு
 அசுரன் பெற்றான். அவனுடைய அட்டூழியத்தை தாங்க முடியாமல் சிவன் அவனை
 கொன்று சாம்பலாக்கினார். இதனால் கோபமடைந்த அசுரனின் மனைவி துளசி தன்னுடைய தெய்வீக மலர்களின் மூலம் சிவனை 
மறையச் செய்தாள். இதன் காரணமாக
 துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.தேங்காய் நீர்: சிவனுக்கு 
படைக்கும் எந்த பிரசாதத்தையும் நாம் சாப்பிடக் கூடாது.
 பொதுவாக தேங்காயை கடவுளுக்கு நம படைப்போம். அதனை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காயிலிருக்கும் நீரை பிரசாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதேப்போல் மஞ்சள், குங்குமம் இவற்றையும் படைக்க கூடாது என்றும் கூறப்படுகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>





Powered by Blogger.