அனைவருக்கும் கார்த்திகை தீபம்த் திருவிழா வாழ்த்துக்கள் 28-11-20

கார்த்திகை என்றாலே அனைவருக்கும் கார்த்திகை விளக்கீடு திருவிழா’ தான் நினைவுக்கு வந்து செல்லும். தமிழரின் தொன்மையான 
பண்டிகைதான் இந்த விழா.
கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். விளக்குகளால் இல்லங்களை அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் மிதக்கவைத்து வழிபடுவர்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. 
மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். இருளை நீக்கும் தீப ஒளியானது மன இருளையும் போக்கும்”
பெண்கள் திருமண வாழ்வு வேண்டியும், தாய்மார் தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் கார்த்திகை திருநாளன்று விரதமிருக்கின்றனர்.
வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து 
அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவது வழமை.
திருக்கார்த்திகையின்போது 
குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, குப்பைக் குழி, ஆடு மற்றும் மாட்டுப் பட்டி, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு மிக்கது.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
குமராலய தீபம்: முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று 
வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே 
முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி 
காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு என்பதாகும்
அனைவருக்கும்என் இணையங்களின் திருக் கார்த்திகை விளக்கீடு நல் வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.