வல்லிபுர மாயவனின் சமுத்திர தீர்த்தோற்சவம் ( காணொளி இணைப்பு )

தீர்த்தோற்சவப் பெருவிழா நேற்று 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.

சமுத்திர தீர்த்தத்திற்காய் ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வங்களா விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கற்கோவளம் கடற்பரப்பைச் சென்றடைந்து மாலை 5 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.

நேற்று மதியம் 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று கூடியதுடன், நீண்ட தூரமுடைய கற்கோவளம் கடலுக்கும் நடந்து சென்றனர். பக்தர்கள் சென்ற பாதையின் இரு மருங்கிலும் ஏராளமான உழவு இயந்திரங்களிலும் அடியவர்கள் கடற்கரையை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் பல இடங்களிலும் தாக சாந்தி நிலையங்கள் அமைத்து அதில் சக்கரைத் தண்ணீர், சர்பத், மோர், கோப்பி என பல்வேறு பானங்களையும் வழங்கி பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.

வங்கக் கடற்கரையோரம் திரண்ட ஏராளமான பக்தர்களினால் கடற் கரையில் மணலே தெரியாமல் எங்கும் அடியவர்களின் தலைகளையே காணக் கூடியதாக இருந்தது

இங்குஅழுத்தவும் புகைபடங்கள் இணைப்பு >>>

vat1 vat2 vat3 vat4 vat5 vat6 vat7 vat8 vat9 vat10 vat11 vat12

வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா:அலையென திரண்ட பக்தர்கள்

வரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக 26.09.15 நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று 
வல்லிபுர ஆழ்வார் காலை 10.30 மணிக்கு
 தேரில் ஏறி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கு கொண்டிருந்தனர்.
ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
 வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவம் கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் மாலை சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக புகைப்படங்கள் இணைப்பு >>>
















பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன்.(26.09.15)

நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2015 தனது இல்லத்தில் வெகு சிறப்பாக
 கொண்டாடுகின்றர் .இவரை அன்பு  மனைவி பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன் 
 சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ்கவென  வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





இந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள் :


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். 
வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, 
மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். 
சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை 
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் 
கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, 
விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என 
வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி 
புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 
2. குலதெய்வம்,
  
 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய்,
 உதிரி புஷ்பம், வஸ்திரம், 
மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய 
அனுமதி கிடைக்கும்.
-- 
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். 
காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்..

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இலட்சுமி தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்

இவ்விரதத்தை மணமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான
 விரதமாகும்.
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சகல சௌபாக்கியங்க ளையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது.
 மிகவும் பக்தி சிரத்தையோடு(ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட
 மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
இவ் வரலட்சுமி விரதம், பெரும்பாலும் எல்லா அம்பிகை ஆலயங்களிலும், இலக்குமி தேவியை பரிவார தெய்வங்களாக கொண்ட மற்றைய ஆலயங்களிலும் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அனேகமானோர் ஆலயங்களிலேயே இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். அங்கே குத்துவிளக்கேற்றி
 இலக்குமியை ஆவகணம் செய்து பூஜித்து வழிபட்ட பின்னர் அதனை அணையாது வீட்டிற்கு எடுத்துச் சென்று சுவாமி அறையில் வைத்து வழிபடடுகின்றனர். (இலக்குமி தேவியை ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதாக அமைகின்றது.)
உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால்
 மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குவதோடு என்றும் பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால்
 அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். 
சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.
தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அயலில் 
உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்ட்டிக்கலாம். பெரும்பாலான இந்திய நாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர்
 அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷச பூசைகளில் 
பங்குபற்றி தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.15)

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2015)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவிஅன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,  இணைந்து

, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணையுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செல்வச்சந்நிதிமுருகன் கட்டுத்தேர்

யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கட்டுத்தேர்.இது 2003 இல் இரத பவனியின் போது இதன் அச்சு உடைந்து தேர் குடை சாய்ந்தது. இதன் போது பக்தர்களுக்கும் உடமைகளுக்கும் முருகனின் அலங்காரத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி யோகராஜா-19.09.15

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  இன்று.19.09.2015. .இவரை  அன்பு கணவன் அன்பு பிள்ளைகள் மருமகள் 
பேரப்பிள்ளைகள் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்றுவாழ்வில் எல்லா சுகங்களோடும், நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் என்றும் இன்பமாய் எல்லாநலமும்பெற்று
 சகல செல்வங்களும் பெற்று
 சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் 18.09.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் [நற்குணம் ] அவர்களின் ஐம்பதவது பிறந்த நாள் இன்று 18.09.2015 .இவரை அன்பு மனைவி அன்பு மகன் மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புறவாழ்வாய் 
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் வாழ்த்துகின்றனர்..




Powered by Blogger.