தீர்த்தோற்சவப் பெருவிழா நேற்று 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
சமுத்திர தீர்த்தத்திற்காய் ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வங்களா விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கற்கோவளம் கடற்பரப்பைச் சென்றடைந்து மாலை 5 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.
நேற்று மதியம் 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று கூடியதுடன், நீண்ட தூரமுடைய கற்கோவளம் கடலுக்கும் நடந்து சென்றனர். பக்தர்கள் சென்ற பாதையின் இரு மருங்கிலும் ஏராளமான உழவு இயந்திரங்களிலும் அடியவர்கள் கடற்கரையை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் பல இடங்களிலும் தாக சாந்தி நிலையங்கள் அமைத்து அதில் சக்கரைத் தண்ணீர், சர்பத், மோர், கோப்பி என பல்வேறு பானங்களையும் வழங்கி பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.
வங்கக் கடற்கரையோரம் திரண்ட ஏராளமான பக்தர்களினால் கடற் கரையில் மணலே தெரியாமல் எங்கும் அடியவர்களின் தலைகளையே காணக் கூடியதாக இருந்தது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen