பிறந்தநாள் வாழ்த்து திரு .சுப்பிரமணியம் தர்மதேவன்(தேவன்) 30.05.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில்  வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் (தேவன்)
  அவர்களின் பிறந்தநாள் .30.05.2023 இன்று.இவரை அன்பு  மனைவி 
 அன்புபபிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி   மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மார் மச்சான் மச்சாள் மார்   மருமகள் பேத்தி மார்  பேரன் மார்  மற்றும் உறவினர்கள்
  இவரை   நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் கனடா முருகன் ஆசியுடன்சகல வளங்களும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற. ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் கடல் நீரில் விளக்கெரியும் அற்புத திருத்தலமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு.29.05.2023.  அன்றைய  தினம்  
நடைபெற்றுள்ளது.
29.05.2023.  அன்றைய  தினம்   ஆரம்பமான இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 05.06.2023.ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
29.05.2023.  அன்றைய  தினம் மாலை சம்பிரதாய முறைப்படி கடல் தீர்த்தம் எடுப்பதற்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கடல் தீர்த்தம் 
எடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை - காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு கடற்தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஏழு நாட்கள் முள்ளியவர் காட்டா விநாயகர் ஆலத்தில் அம்மன் சந்நிதானத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெற்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காட்டா விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தொடர்ந்து ஏழாவது நாளான எதிர்வரும் 05.06.2023.திங்கட்கிழமைதீர்த்தம் வற்றாப்பளை - கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, தொடர்ந்து வைகாசி பொங்கல் விழா நடைபெறும்.தீர்த்தம் எடுக்கும் நிகழ்வினை காண பெருமளவான பக்த்தர்கள் கடற்கரையில் கூடி பார்வையிட்டுள்ளனர்.
முள்ளியவளை - காட்டா விநாயகர் ஆலயத்தில் தொடர்ச்சியாக ஏழு நாட்களும் கடல் நீரில் விளக்கு எரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
உங்கள் திருமண தடை நீங்கும். ஏழுமலையான் திருக்கல்யாணம் தரிசனம் செய்தால் .

திருப்பதி: திருமண தடையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவத்தை காண வேண்டும். சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு தினமும் மதியம் 
கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் 
மூலமும் தரிசனம் செய்கின்றனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சீனிவாச பெருமாள் கல்யாண உற்சவம் 
நடைபெறுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் திருக்கல்யாணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்கள்
 திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திருக்கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா (தேவன் தர்மா)23.05.2023

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)தம்பதியினரின்.
திருமண நாள் 23-05-2023.இன்று நாற்பத்தி இரண்டாவது  வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர் 
இன்று திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர்
உறவுகள் சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு.
இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை.
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்
அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக செல்வங்கள் பதினாறும் பெற்று..
இன்பங்கள் அளவின்றி தொட்டு..
இன்னல்கள் இல்லா
வாழ்க்கையை நகர்த்தி 
வானம் பாடி பறவையாய் பறந்து..
சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து..
ஆயுள் முழுவதும் இணைந்து 
இத் திருமண நாள் ஆனது
ஆனந்த நினைவுகளுடன்
நம் இரு மனதையும்
ஒரு மனதாய் இணைத்து
ஈடில்லா துணையை பெற்ற
நான் உன் அளவில்லா அன்பில
இணைத்த நாள் 
இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றோம்
மணமக்களுக்கு எங்கள் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் மறுவன்புலவீரபத்திரர் .புத்தூர் அம்பாள் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

பிறந்தநாள் வாழ்த்து திரு ராஜலிங்கம் ஸ்ரீரஞ்சன் ( ஸ்ரீ ) 23.05.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது பிரான்ஸ்நாட்டில்   
வசித்துவரும் திருராஜலிங்கம் ஸ்ரீரஞ்சன் (ஸ்ரீ ) அவர்களின் 
பிறந்தநாள்.23-05-2023.இன்று 
இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் அன்பு அப்பா  மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் பிரான்ஸ் அம்பாள் இறைஅருள்  பெற்று
..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,2023

கனடா மொன்றியலில் வசிக்கும் செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,       
  பிறந்தநாள் , 19.,05,2023,இன்று,  இவரை  அன்பு அப்பா அம்மா  தங்கை அம்மப்பா அம்மம்மா 
 மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் கனடா முருகன் ஆசியுடன் இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திருகோணமலையில் மிக பிரமாண்டமான நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறதுஆசியாவிலேயே திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க 
வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த
 அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் 
அமைந்து இருந்தது.
 நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார். ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார் . அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் 
செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட 
நேரம் காத்து 
இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.
 அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் 
கூறினார். ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். அப்படி என்றால்
 நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார். உடனே அந்த பக்தர் சரி புதிய 
அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார். அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.
 உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார். ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து 
போய் மிகுந்த
 அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார். அவரும் ஆடிப்போனார். பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர 
வைத்து கேட்டார். அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த
 ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் . அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் . திருமலைக்கு ஒவ்வொரு முறையும் 
நடந்தே வருவேன்.
 தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச 
சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன். பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.
 நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.
 இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .
 நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி 
ஒரே பண்டிலாக போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் . அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .
 ஆனால் அதை நான் விரும்ப வில்லை . எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை
 மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு
 வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே
 செல்கிறேன் . என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .
 இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள். அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே
 வருவேன் . இன்று தரிசனம் முடிந்து அன்னதான 
கூடத்தில் வரிசையில் நிற்கும் போது நிறைய பேர் வரிசையில் 
காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள்
 அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா? இந்த 
எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் . அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் 
பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் .
 அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது. 
பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய 
அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர். வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் 
என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது. தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள். ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது . இது ஆசியாவிலேயே பெரிய 
அன்னதான கூடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திரு திருமதி ஜெகநாதன் தம்பதியினரின் திருமணவாழ்த்து நிகழ்வு 19.05.23

யாழ் தொண்டமானாரை  பிறப்பிடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி ஜெகநாதன் தம்பதியினரின்  தம்பதியினரின் திருமணநாள் 19-05-.2023..இன்று நாற்பத்தி ஐந்தாவது  வருடத்  திருமண நாளை தங்களது இல்லத்தில் உற்றார்  உறவினர் குடும்ப உறவினர்களுடன்  மிகச்சிறப்பாககொண்டாடினார்கள்   
 .இவர்களை அன்பு ப் பிள்ளைகள் அன்பு மருமகள் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா அத்தான்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை   தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன்  கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  வாழ்த்துகின்றன.
 திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
அனைவரின் வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வே திருமணம். இல்லற வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது
அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் நல்லபடியாக முற்று பெற பெரியோர் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசீர்வாதங்கள் அவசியமாகிறது.
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
 இணை பிரியா
தம்பதியினராய்
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சித்ரகுப்தரை முறையாக வழிபடுவது எப்படி அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன

ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி வந்து போய்க் கொண்டிருந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. நாம் பூலோகத்தில் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் தான் ‘சித்திரகுப்தர்’ என்பது நம் அனைவருக்கும்
 தெரிந்தது தான். 
எமலோகத்தில் இருந்து கொண்டு நம்மை வேவு பார்க்கும் சித்திர குப்தரின் அருள் பெற அன்றய நாளை தவறவிட்டு விடக்கூடாது!
சித்ரா பௌர்ணமி வழிபாடு முறையாக செய்வது எப்படி? அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன.?
பார்வதி தேவி தன்னுடைய பொற்பலகையில் சித்திரங்களை வரைந்து கொண்டிருந்தாராம். அப்பொழுது அதில் இருக்கும் சித்திரம் மிகவும் அழகான தோற்றம் உள்ளதை பார்த்த சிலர், இந்தச் சித்திரம் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? என்று பேசிக் கொண்டனர். 
இதனை கேட்ட பார்வதி தேவி சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அதில் இருந்து தோன்றியவர் தான் இந்த சித்திர புத்திரன். ஆனால் நாளடைவில் மருவி சித்திரகுப்தன் என்கிற பெயர் ஏற்பட்டுவிட்டது.
கேது பகவான் உடைய அதி தேவதையாக இருக்கும் சித்திரகுப்தர் கேது தோஷங்களையும் நீக்கக் கூடியவர். ஒருவருடைய சுய ஜாதகத்தில் கேது நீசம் பெற்று இருந்தாலும், கேது தோஷம் இருந்தாலும் அவர்கள் இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை செய்தால் 
அனைத்தும் விலகும்
 என்பது ஐதீகம். கேது தோஷம் இருப்பவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகி விடுவார்கள். தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பவர்கள் சித்ரகுப்தரை வழிபட்டு நன்மைகளை பெறலாம்
சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தரை நினைத்து புதிதாக நோட்டு புத்தகம் மற்றும் பேனா ஒன்றை வாங்க வேண்டும். அதில் ‘சித்திரகுப்தர் படி அளக்க’ என்கிற வார்த்தையை முதலில் எழுதி மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். 
அவரை வணங்கும் பொழுது ‘நான் கடுகளவு செய்த புண்ணியங்களை மலை அளவாகவும், மலையளவு செய்த பாவங்களை கடுகளவும் செய்க!’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
சித்ரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வழிபடுபவர்களுக்கு சித்திரகுப்தர் நல்வழி காட்டுவார். ஒரு ஊரில் புண்ணியமே செய்யாத ஒருவர் இருந்தாராம். அவர் சித்ரகுப்தனை வழிபட்டு தான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு ஏதாவது ஒரு வழி கூறுங்கள் என்று வேண்டிக் கொண்டாராம்.
 புண்ணியமே செய்யாமல் எப்படி சொர்க்கத்திற்கு செல்ல முடியும்? அதற்கு சித்ரகுப்தர் ஒரு வழியைக் கூறினார்.
உன்னுடைய நிலத்தில் கிணறு ஒன்றைத் தோண்டி அதில் பசு மாடுகளை தண்ணீர் குடிக்க வை! என்று கூறினாராம். அவனும் அதே போல செய்து பசுமாட்டை தண்ணீர் குடிக்க வைத்தானாம் ஆனால் அந்தக் கிணற்றிலிருந்து சிறிதளவே ஊற்று ஏற்பட்டதால் ஒரு மாடு மட்டுமே தண்ணீர் 
குடித்தது. உடனே அவன் உயிர் பிரிந்தது. எமலோகத்தில் யமதர்ம ராஜா புதிதாக எமலோகம் வந்திருக்கும் இவனின் பாவ, புண்ணிய கணக்கை சரிபார் என்று சித்திரகுப்தருக்கு கட்டளையிட்டார்.
அதன்படி அவன் செய்த கடுகளவு புண்ணியத்தை மலை அளவாக எம ராஜாவிடம் கூறிவிட்டார். ஆனால் அவன் தோண்டிய கிணற்றில் இருந்து சிறிதளவே ஊற்று வந்ததால் பெரிதாக புண்ணியம் சேராது என்று கூறி சுமார் ஒன்றரை மணி நேரம் வரை சொர்க்க வாசம் செய்ய 
அனுமதிக்கப்பட்டார். 
ஆனால் சிறிது நேரத்தில் அந்த கிணற்றில் இருந்து ஊற்று அதிகமாக பெருக்கெடுத்து நிறைய மாடுகள் வந்து தண்ணீர் குடித்தது. இதனால் அவனுடைய புண்ணியக் கணக்கும் அதிகரித்து நிரந்தரமாக 
சொர்க்க வாசம் புரிந்தான்.
இப்படி சித்ரகுப்தரை வழிபடுபவர்களுக்கு அவர் நிறையவே நன்மைகளை நமக்கு செய்து விடுவார் என்பதில் ஐயமில்லை. சித்ரா பௌர்ணமி அன்று பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் குடும்பத்துடன் அமைந்து சித்ரான்னம் எனப்படும் கலவை சாதங்களை சாப்பிட வேண்டும். 
ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் இருப்பவர்கள் அதன் அருகாமையில் அமர்ந்து இவ்வாறு செய்வது மிகவும் நல்லது. அப்படி முடியாதவர்கள் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பௌர்ணமியில் நிலவின் கதிர் வீச்சுகளை உள்வாங்கி மனதார சித்ரகுப்தரை வணங்கி 
குடும்பத்துடன் உணவு உண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அன்றைய நாளில் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை வாங்கி தானம் செய்யுங்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா.09.05.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் எட்டாவது  பிறந்த நாள் .09.05.2023..இன்று .தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார்  இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அன்பு ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்,
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர். சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்.சுவிஸ் சூரிச்முருகன்.
சுவிஸ் டூடன் விஸ்ணுதுக்கை அம்மன்.சுவிஸ் சூரிச்சிவன்ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன..
பிறந்த நாள் வாழ்த்து கவிதை.>>>>>>
பிறப்பின் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது… அது ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் போது அது மிகவும் அழகாகிறது
இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க 
வாழ்த்துகிறோம்,
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய வேண்டி இந்த பிறந்த நாளில்,
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ…இன்று பிறந்த எங்கள் வெண்ணிலா வாழிய பல்லாண்டு பல்லாண்டு
காலம் வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>யாழ் பருத்தித்துறை கோட்டுவாசல் சிறி சண்டிகா பரமேஸ்வரி திருமுழுக்கு திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க பருத்தித்துறை கொன்றை மர நிழல் நாயகி கோட்டுவாசல் சிறி சண்டிகா பரமேஸ்வரி ஆலய சுபகிருது வருட மகோற்சவத்தின் ஏழாம் திருவிழாவான திருமுழுக்கு திருவிழா
 03-05-2023.அன்று அதிகாலை 4:00 மணியளவில் உஸக்கால பூசையுடன் ஆரம்பமாகி, தம்ப பூசை வசந்த மண்டப பூசை என்பன இடம் பெற்று சிறி சண்டிகா பரமேஸ்வரி உள்வீதி மற்றும் இரண்டாம் வீதி என்பன 
வலம்வந்தது. 
 இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் பிரம்மசிறி தானு மகாதேவக் குருக்களின் நல்லாசியுடன் மகோற்சவ குரு ஸ்வர்க்கியசிறி பிரம்ம சிறி தானு வாசுதேவ சிவாச்சாரியார், கோட்டுவாசல் அம்மன் ஆலய பரதம குரு ஜெயவர்ஸதாங்க குருக்கள் , ஆலய நித்தியகுரு சிவசிறி உலகாந்த புஸ்பராசா குருக்கள் ஆகியோர் இணைந்து அன்றய  திருவிழா கிரிஜைகளை மிக மிக சிறப்பாக நடாத்தினர்.
 இதில் கோட்டுவாசல் வாசல் கொண்டல் நாயகி அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை நாளை வேட்டைத் திருவிழாவும் ,நாளை மறுதினம் தேரில் எழுந்தருளி தீர்த்த உற்சவமும்
 இடம் பெறவுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
Powered by Blogger.