வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் கடல் நீரில் விளக்கெரியும் அற்புத திருத்தலமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு.29.05.2023.  அன்றைய  தினம்  
நடைபெற்றுள்ளது.
29.05.2023.  அன்றைய  தினம்   ஆரம்பமான இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 05.06.2023.ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
29.05.2023.  அன்றைய  தினம் மாலை சம்பிரதாய முறைப்படி கடல் தீர்த்தம் எடுப்பதற்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கடல் தீர்த்தம் 
எடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை - காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு கடற்தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஏழு நாட்கள் முள்ளியவர் காட்டா விநாயகர் ஆலத்தில் அம்மன் சந்நிதானத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெற்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காட்டா விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தொடர்ந்து ஏழாவது நாளான எதிர்வரும் 05.06.2023.திங்கட்கிழமைதீர்த்தம் வற்றாப்பளை - கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, தொடர்ந்து வைகாசி பொங்கல் விழா நடைபெறும்.தீர்த்தம் எடுக்கும் நிகழ்வினை காண பெருமளவான பக்த்தர்கள் கடற்கரையில் கூடி பார்வையிட்டுள்ளனர்.
முள்ளியவளை - காட்டா விநாயகர் ஆலயத்தில் தொடர்ச்சியாக ஏழு நாட்களும் கடல் நீரில் விளக்கு எரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.