உங்கள் திருமண தடை நீங்கும். ஏழுமலையான் திருக்கல்யாணம் தரிசனம் செய்தால் .

திருப்பதி: திருமண தடையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவத்தை காண வேண்டும். சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு தினமும் மதியம் 
கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் 
மூலமும் தரிசனம் செய்கின்றனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சீனிவாச பெருமாள் கல்யாண உற்சவம் 
நடைபெறுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் திருக்கல்யாணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்கள்
 திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திருக்கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.