மரங்கள்.. மனிதர்கள்.. மகத்தான உறவுகள்.. உலக சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை _

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 5-ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில்வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக UNESCO மற்றும் WHO அமைப்புகள் வருடம் தோறும் இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு பல நாடுகளின் பிரதிநிதிகளை கொண்டு பல திட்டங்களை தீட்டி வருகிறது. 2012 ஆம் ஆண்டின் மையக்கருத்தாக "Green Economy: Does it include YOU'' என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள்...? இன்றைய சூழலில் நகரமயமாதலால் காடுகள் பெருமளவு அழிக்கப்படுகிறது. இன்னும் அழித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இதன் பின்விளைவாக புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பெருமளவு பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பருவநிலை மாற்றமும் ஏற்படுகிறது. சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம் மற்றும் கடல் சீற்றம் போன்ற பேரழிவு சீற்றங்களும் ஏற்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தாலும் புதுப்புது நோய்கள் பரவிய வண்ணம் உள்ளது. 2005 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி சுமாராக 8,90,000 ஏக்கர் அளவு மரங்கள் வெட்டப்படுகிறது என்று United Nations Food and Agriculture Organization (FAO) அமைப்பு தெரிவிக்கிறது. இந்த மதிப்பீட்டானது வெப்பமண்டல பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கீடாகும். நகரங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் நகரங்களில் இன்றைய முக்கிய பிரச்சினையாக மின்கழிவுகள் பூதாகரம் எடுத்து வருகிறது.இது சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்துகொண்டு இருக்கிறது. மின்கழிவுகளை பொறுத்தவரை தற்போது மூன்று அடிப்படை கொள்கைகள் உலக நாடுகளால் பின்பற்றப்படுகிறது. 1. குறைப்பது (Reduce) மின் மற்றும் மின்னியல் சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும். இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும். 2. மறு பயன்பாடு (Recovery) மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரிசெய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும். 3. மீள் சுழற்சி (Recycle) மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிலிருந்து மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வளங்களையும் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க வேண்டும். தீர்வுகள் 15:59 05.06.2012* சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். * குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலிருந்தே சுற்றுசூழல் விழிப்புணர்வு பற்றிய பாட திட்டங்களை வடிவமைக்க வேண்டும். * கல்லூரி மாணவர்களும் சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மரங்கள் அழிக்கப்படாவண்ணம் மாற்று திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும். * நகரமயமாதல் திட்டத்தை சரிவர பயன்படுத்தி நவீன கட்டமைப்புகள் கொண்ட கழிவு நீர் கால்வாய்களும் அமைக்கப்பட வேண்டும். இயற்கை வளங்களான நீர் நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச்சுழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சுழலை மட்டுமின்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. உயிருள்ள மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச்சூழலியலாளர்கள் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன்மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் தவிர்த்து இந்த வனப்புமிகு உலகத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கபட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். இயற்கை வளங்களின் இன்றியமையாமையையும், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். -முனைவர்: ச.வின்சென்ட், இயக்குனர், சுற்று சூழல் மையம், லயோலா கல்லூரி, சென்னை.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.