தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 30.08.23

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், 30.08.2293.அன்று  தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆகஸ்ட் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
செல்வச்சந்நிதி முருகனுக்கு 30.08.2293.அன்று . காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் 31.08.2023அன்று காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெற்றது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தினேஸ் லக்சிகா 29.08.2023

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் 
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா   (தினேஷ் & லச்சி) 
தம்பதிகயினரின்  ஏழாவது  திருமணநாள் 29-08.2023..இன்று குடும்பஉறவுகளுடன் தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார் 
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று என் இனிய மணமக்களே
ன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்.. 
 கையோடு கை சேர்த்து இணைந்த
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று  அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாகபல்லாண்டு பல்லாண்டுகாலம்
வாழ வாழ்த்துகிறோம் வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் அடியவர்கள் அலை மோத ஆலய தேர்த் திருவிழா இன்று

யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா.அலை மோதும் அடியவர்கள்படை திரள தேர்றேறிய  யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன்.28-08-2023.திங்கள்கிழமை இன்று  மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கையம்மன் சித்திரத் தேரில் எழுந்தருளினார்.
இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை.29-08-2023. நாளை துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>






இந்தியா மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கண் திறந்த அற்புதம்

இந்தவருடமும் வெளிநாட்டு பக்தர்களின் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பங்கள் சார்பாக நிறைகுட சுயம்பிற்கானஆடிப்பூரப்பூர பால் அபிசேகத்தில் சுயம்புவடிவான அன்னை கண்பார்த்த சித்தாடல் இடம்பெற்றது! 
கடைசிப்படத்தை உற்றுநோக்கினால் இது தெள்ளத்தெளிவாகத் தெரியும் . நாம் நமக்கு கிடைத்தவாய்ப்பை சரியாகப்பயன்படுத்தி அன்னையின் அருளைப்பெறுவோமாக..! அதை சிறப்பாக செய்துதந்த 
அம்மாவின் இளையகுமாரர் சக்திமிகு கோ.ப.செந்தில்குமார் (மருவூர் சின்னவர் ) அவர்களுக்கும் மற்றும் அதை செயல்முறைப்படுத்திய 
ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தமிழ்நாடு 
பொறுப்பாளர் சக்தி திரு . கபிலன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
 பால் வார்த்த குடும்பங்களுக்கு பராசக்தியின் பேரருள் கிடைத்தது போல் அன்னை கண்திறந்து ஏற்றுள்ளாள் . எங்கேயோ பிறந்து வளர்ந்த யார்யாரோ கருவறையில் அபிடேகம் செய்யும்போது 
பக்தி சிரத்தையோடு 
கும்பிடும் நாம் , அம்மாவின் உதிரத்தில் பிறந்தவர்கள் திருக்குடும்பத்தில் யார் செய்தாலும் ஏற்று அருள் செய்வாள் என்பது பேருண்மை அன்றோ..! அடிகளார் அம்மா ஒன்றே நடமாடும் தெய்வம்
 ஓம் சக்தி ! ஆதிபராசக்தி!தெய்வத்திடம் நம்பிக்கைவை
 அடிகளாரையோ அவர் குடும்பத்தையோ ஆராட்சிசெய்யும் வேலை நமதன்று! அதையே அம்மா குருவை நம்பு, குருவே தெய்வம் ,குருவை ஆராட்சி செய்யாதே என்கிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





பிறந்த நாள் வாழ்த்து.திரு தம்பையா சங்கரப்பிள்ளை 23.08.2023

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிப்பிடமகவும் கொண்ட திரு தம்பையா சங்கரப்பிள்ளை 
அவர்களின் பிறந்தநாள் 23-08-2023.இன்று இவர் தனது பிறந்தநாளை  தற்போது கனடாவில் தனது மகனின் இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் மிகச்சிறப்பாகிக்கொண்டாடினார் இவரை  அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்  அண்ணா அண்ணி அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள் 
  மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி .கனடா நண்பர்களும் இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மாவிடடபுரம் கந்தசுவாமி சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று   இவரை   
சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும் துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர பிறந்த தினமான இன்றும் என்றும் 
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் உதயகுமார் kahrethan 17.08.2023

சுவிசில்  வசிக்கும் திரு திருமதி உதயகுமார் அஜந்தா தம்பதிகளின் 
செல்வப் புதல்வன் உதயகுமார் கயந்தன் ( Katharern பிறப்பிடம் சுவிஸ் ) அவர்களின் பிறந்தநாள். 17-08--2023.இன்று இவர் தனது பிறந்தநாளை 20-08-2023.ஞாயிற்றுக்கிழமை  அன்று 
தனது இல்லத்தி குடுமளறவுகளுடனும் தனது நண்பர்களுடன் மிகச்சிறப்பாக கொண்டாடினர் இவரை  அன்பு அப்பா அன்பு அம்மா அன்புஅண்ணா அன்புத் தங்கை அப்பாப்பா அப்பாம்மா   அம்மம்மா 
 மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள்  மார்
  மற்றும் உறவினர்கள் இவரை நல்லூர்க்கந்தன்  சன்னதி முருகன்  சுவிஸ் முருகன் இறை ஆசியுடன் இனிக்கும் இந்த பிறந்த நாளில்சகலகலைகளும் கற்று  இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
   நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம் நவற்கிரி .கொம் நிலாவரை இணையங்களும்  வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சபரிமலை ஐயப்பன் கோவில் ஆவணி மாத பூஜைக்காக 16-08-2023.அன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். இந்த நேரத்தில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை16-08-2023.அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை துவக்கி வைத்தார். இன்று வேறு விழாக்கள் எதுவும் நடைபெறாது. இருப்பினும், நாளை முதல், கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் போன்ற வழக்கமான சடங்குகள், 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் நடக்கிறது.
அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில்
 முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன. மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது 
என்பதும் குறிப்பிடத்தக்கது  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>





சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் கோவில் கொடிஏற்றத் திருவிழா ஆரம்பம்.11.08.2023

 

சுவிஸ்  சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் வருடாந்த மஹோற்சவம் இன்று 11.08.2023. வெள்ளிக்கிழமை 
கொடியேற்றத்துடன் ஆரம்பம் 

பகல் .இரவுத்திருவிழாக்கள்  நடைபெற உள்ளது தொடர்ந்து வேட்டை திருவிழா சப்பறம் ,தேர் ,தீர்த்தம் பூங்காவனம் வையிரவர் மடை நடை பெறவுள்ளது 
  அன்பார்ந்த மெய் அடியார்களின் கவனத்திற்கு ,,தேர்த்திருவிழா
அன்னதானம்  பொது 
உபயம் என்பதால் பால். பழம்.புஷ்ப்பம்  இளநீர்.
உங்களால் இயன்ற  காணிக்கைகள்.. அன்னதானப்பொருள்கள் . செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில்  செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,
 என்றும்  சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் துனைபுரிவாரகா
 .ஓம் சரவணபவா .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். செல்வன் சந்திரன் தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10-08-2023..இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா  தம்பிமார் சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி மார் 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் .மற்றும் யேர்மன் லண்டன் கனடா சுவிஸ்
 நவற்கிரி  வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.நவற்கிரி அப்பாவாயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர் முருகன் கம்காமாச் அம்மன் இறை ஆசியுடன்
   குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..இன்பம் நிறைந்திட
குறையில்லா பண்போடும் உலகமும் உறவுகளும் போற்ற 
சகல கலைகளும் பயின்று 
 பார்போற்றும் உத்தமனாக  நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையமும் .
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



யாழில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனுக்கு புதிய சப்பரபீடம்

 வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள்.10-08-2023. இன்று காலை இடம்பெற்றன.
பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை 
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை (10) இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது  
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து.திரு பாலசுந்தரம் பாலமுரளி (முரளி) 04.08.2023

 

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் 
திரு பாலசுந்தரம் பால முரளி (முரளி ) அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2023 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் 
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கைமார், மச்சான் மார் மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து    இவரை நல்லைககந்தன்  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.ஒஸ்லோமுருகன் 
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் திருவிழா

கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கரக உற்சவம் நடைபெறும். இந்தாண்டு கரக உற்சவத்தை முன்னிட்டு, 
ஆதி நந்தவனத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரிக்கரை ராஜராஜன் படித்துறை பகுதியில் இருந்து கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதி வரை சக்திவேல் அலங்கரிக்கப்பட்ட நள்ளிரவு வீதி உலா நடைபெற்றது.
பின்னர் சக்திவேல் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேற்று அதிகாலை கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Powered by Blogger.