கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கரக உற்சவம் நடைபெறும். இந்தாண்டு கரக உற்சவத்தை முன்னிட்டு,
ஆதி நந்தவனத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரிக்கரை ராஜராஜன் படித்துறை பகுதியில் இருந்து கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதி வரை சக்திவேல் அலங்கரிக்கப்பட்ட நள்ளிரவு வீதி உலா நடைபெற்றது.
பின்னர் சக்திவேல் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேற்று அதிகாலை கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen