நாம் மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும்

கடலில் அலைகள் எழுகின்றன. அங்கே நீரிலேயே நீர் எழுவதைக் காண்கின்றோம். அவ்வி தமே மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும். சிந்தனை அலைகள் மனத்தில் எழுதல் வேண்டும்.
 தன்னைத்தானே ஊகித் துணர்தல்
 வேண்டும். நமது பிரதிவிம்பத்தை நம்முள்ளே காணல் வேண்டும். உலகிலுள்ள பல்வேறு மாயா சக்திகளைக் கண்டறிந்து வெல்லல் வேண்டும். மனம் மனனம் செய்தல் வேண்டும். அறிந்தவற்றிலிருந்து அறியாதவைகளைச் சிந்தித்து அறிதல் வேண்டும்
. மனத்துடன் ஒன்றி 
ணைந்து புதுப் புதுக் கற்பனைகளை உருவாக்க வேண்டும். தீர்க்க தரிசனத்தால் வாழ்வின் பயனையும், முடிவையும் அறிந்து, அவற்றை அடைதல் வேண்டும். நிலையற்ற உலக மாயையை விடுத்து என்றும் நிலைத்திருக்கும் உண்மைச் சக்தியை உணர்தல் வேண்டும். மனம் மனத்துடன் கலந்து கரைந்திட வேண்டும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.16)

யாழ்   திரு .சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.16)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து 
வாழ்த்துகின்றார்கள்
இவர்   சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து    பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன. .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன்.(26.09.16)

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம். (.சுந்தர்)  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை 26.09.2016. .இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக
 கொண்டாடுகின்றர் .இவரை அன்பு  மனைவி பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை ஆசியுடன் 
 என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மெய் சிலிக்க வைத்த நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!!

வடமராமட்சி கிழக்கு  நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயக் காட்சிகள் மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது.
நாகதம்பிரான் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் தினமும் வழிபடுவது வழமை. வழிபாடு நேரங்களில் நாகத்தினைக் காண்பது
 அரிதிலும் அரிது.
இப்படி இருக்கையில் தீபத் தட்டில் நாகம் அமர்ந்தமை அனைவருக்கும் ஒரு அதிசயமாக அமைந்துள்ளது.
இதனை பார்த்த பக்தர்கள் தமது நம்பிக்கையின் காட்சி 
என கூறியுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் புரட்டாதிச்சனி விசேட பூசைகளும் கலை நிகழ்சசியும்

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில்  24/09/2016  அன்று சனிக்கிழமை புரட்டாதிச்சனி விரதத்தை முன்னிட்டு
காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற பெற்றது 
அன்றைய பூசையை திரு திருமதி Suhirthan Thiruchelvam ( suki ) குடும்பம் ( malmø சுவீடன் ) உபயமேடுத்து சிறபிக்கின்றனர்
நீங்களும் புரட்டாதிச்சனி விரத பூசைகள் உபயமேடுத்து செய்ய விரும்பினால்
எம்மோடு தொடர்பு கொள்ளவும்
இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
நேற்றையதினம் ஆலயத்தில் பண்ணிசைப் போட்டிகள் வேல் முருகன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றன
கீழ் பிரிவில்
முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
இரண்டாம் இடம் / ஸ்ருதிகா சுரேஷ்குமார்
மூன்றாம் இடம் / செல்வி அபர்ணா தமிழ்ச்செல்வன்
மேற் பிரிவில்
முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன்
இரண்டாம் இடம் / ஸ்வேதா சிறிதரன்
மூன்றாம் இடம் / செல்வி ஜோதிசா ஜேயராசா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டார்கள்
முதல் பரிசு பெறுகின்ற இருவரும்
கீழ் பிரிவில்
முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
மேற் பிரிவில்
முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன் ஆகியோர்
வருகின்ற 01/10/2016 சனிக்கிழமை இடம் பெறும் வேல்முருகன் ஆலய கலைவிழாவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொள்வார்கள்
போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பெருகின்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படும்
போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வேல்முருகன் ஆலய சான்றிதழ் வழங்கி மேடையில் கெளரவிக்கப் பட இருக்கிறார்கள்.

பிறந்த நாள் வாழ்த்து:திரு ,சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.16)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு - சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2016) இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில்  பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி அன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,மற்றும் நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன  
 வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர்த்திருவிழா

இலங்கையில் உள்ள தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக 
நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா ஆகும்.
பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர் ஆகியன வடம்பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலய வெளி வீதியில் மற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படும். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம்
கல்நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. 
கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி யோகராஜா-19.09.16

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  இன்று.19.09.2016. .இவரை  அன்பு கணவன் அன்பு பிள்ளைகள் மருமகள் 
பேரப்பிள்ளைகள் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்றுவாழ்வில் எல்லா சுகங்களோடும், நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் என்றும் இன்பமாய் எல்லாநலமும்பெற்று
 சகல செல்வங்களும் பெற்று
 சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் 18.09.16

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் [நற்குணம் ] அவர்களின் ஐம்பதவது பிறந்த நாள் இன்று 18.09.2016 .இவரை அன்பு மனைவி அன்பு மகன் மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் 
வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் மதனபாலன் .17.09.16.

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு பாலசுந்தரம் மதனபாலன் 17.09.2016 இன்று தனது பிறந்தநாளை 
சுவிஸ் வாழ் 
நண்பர்களுடன் கொண்டாடினார் இவரை அன்பு மனைவி  அன்பு மகன் அம்மா, தங்கை,மார்  சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்.இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு பாலசுந்தரம் மதனபாலன் அவர்களை தோப்பு போதி பிள்ளையார் இறை அருள் பெற்று நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன் …
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் ,தர்மசீலன் டிலக்ஷன்(17.09.16)

ஜெர்மனியில் வசிக்கும்   செல்வன் , தர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.16) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா ,அண்ணன் , அப்பம்மா சின்னம்மம்மா,. 
பெரிப்பாமார் ,பெரியம்மாமார்  ,மாமா மார், ,அத்தைமார் சித்தி குடும்பத்தினர்,சித்தப்பா ,, அண்ணனமார் ,மச்சாள் மார்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரைசிறுப்பிட்டி முத்து மாரி  அம்மன்  இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14..09.16,

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு திருமதி சந்திரன் (குட்டி)தம்பதிகளின் இருபத்தி ஒன்பதாவது  திருமணநாள் இன்று.14.09.16. இவர்களை அன்பு ,அம்மா அன்பு பிள்ளைகள் ,அண்ணா அண்ணி பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் 
சகோதர சகோதரிகள்
சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து நவக்கிரி.கொம்    நவற்கிரி இணையங்களும்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும்  தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென   வாழ்த்துகின்றன,
 திருமணநாள்  வாழ்த்துக்கவிதை
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம் 
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும் 
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் 
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய 
வாழ்த்துகிறோம்!
வாழ்கவளமுடன் 
 வாழ்த்து நிகழ்வு நிழல்படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் தேர் திருவிழா .15.09.2016.

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா  வியாழக்கிழமை.15.09.2016.அன்று காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி மிக  சிறப்பாக   நடைபெற்றது.
காலை- 8 மணிக்கு வேற் பெருமான், விநாயகப் பெருமான், ஆறுமுகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை- 08.45 மணியளவில் விநாயகப் பெருமான், அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான், வேற் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச தீபாராதனை இடம்பெற்று வேற்பெருமானின் சித்திரத் தேரிற்கு முன்பாக மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய் அடியவர்களால் உடைக்கப்பட்டது.
பின்னர் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, ஆலயத்தின் காண்டாமணி ஓசை ஓம்...ஓம்... என ஒலிக்க முற்பகல்-09.45 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகியது. அடியவர்கள் எம்பெருமானின் வடத்தைப் பிடித்து எல்லாம் வல்ல சந்நிதி வேற்பெருமானின் திருவருளைப் பெறுவதற்கு முண்டியடித்ததைக் காண 
முடிந்தது.
தேர் பவனி இடம்பெற்ற போது பல அடியவர்கள் தம்மை மறந்த நிலையில் ஆடியும், பாடியும் எம்பெருமானை மெய்யுருக வழிப்பட்டனர். நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் பறவைக் காவடி, செதில் காவடிகள் முதலான காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியளித்தும் எம்பெருமானைப் பக்திப் பெருக்குடன் 
வழிபட்டனர்.
முத் தேர்களும் முற்பகல்-10.30 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து எம்பெருமானை அர்ச்சித்து வழிபாடாற்றினர்.
ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் , பக்தர்களின் பாதுகாப்புக் கருதி 50 இற்கும் மேற்பட்ட பொலிஸாரும், சாரணர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் ஆலயச் சுற்றாடலிலுள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட 14 அன்னதான மண்டபங்களிலும் அன்னதானமும், ஆலய சுற்றாடலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் தோறும் தாக்க சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் கைங்கரியமும் இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த- 01 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் இடம்பெற்று வருவதுடன் நாளை-16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தோற்சவத்துடன்
 நிறைவு பெற உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>நவக்கிரி ஶ்ரீமாணிக்கப் பிள்ளையாரில் தொண்டமானாறு ஶ்ரீ செல்வ சந்நிதிக்கு சென்ற காவடிகள்

யாழ் நவக்கிரி ஶ்ரீமாணிக்கப் பிள்ளையாத்தில் இருந்து  யாழ் ஸ்ரீ செல்வச்சந்நிதிமுருகன்  ஆலயத்தேர்   திருவிளவை முன்னிட்டு .(2016).அடியார்கள் கூட்டம்  அலைமோத .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரில் இருந்து அடியார்கள் தங்கள் நேர்த்தி வேண்டி பால்குடங்கள்  ஆட்டகாவடிகள்   நடை பவனியகவும்   தூக்கு காவடிகள் உளவு இயந்திரத்திலும்   புறப்பட்டு  எம்பெருமான் கந்தன் காலடி நோக்கிய   பவனியின்
 நிழல்படங்கள்  இணைப்பு .....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Powered by Blogger.