கடலில் அலைகள் எழுகின்றன. அங்கே நீரிலேயே நீர் எழுவதைக் காண்கின்றோம். அவ்வி தமே மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும். சிந்தனை அலைகள் மனத்தில் எழுதல் வேண்டும்.
தன்னைத்தானே ஊகித் துணர்தல்
வேண்டும். நமது பிரதிவிம்பத்தை நம்முள்ளே காணல் வேண்டும். உலகிலுள்ள பல்வேறு மாயா சக்திகளைக் கண்டறிந்து வெல்லல் வேண்டும். மனம் மனனம் செய்தல் வேண்டும். அறிந்தவற்றிலிருந்து அறியாதவைகளைச் சிந்தித்து அறிதல் வேண்டும்
. மனத்துடன் ஒன்றி
ணைந்து புதுப் புதுக் கற்பனைகளை உருவாக்க வேண்டும். தீர்க்க தரிசனத்தால் வாழ்வின் பயனையும், முடிவையும் அறிந்து, அவற்றை அடைதல் வேண்டும். நிலையற்ற உலக மாயையை விடுத்து என்றும் நிலைத்திருக்கும் உண்மைச் சக்தியை உணர்தல் வேண்டும். மனம் மனத்துடன் கலந்து கரைந்திட வேண்டும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen