பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா { 28.02.2015}

இன்று 28-02.2015 -50.வது வருட பிறந்தநாள்காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் மண்டபத்தில்   குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர்  நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு கணவன்  அன்பு பிள்ளைகள்,மருமக்கள்அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா  மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்  நவற்கிரி
 உறவு  இணையங்களும்,  http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும்  சிறப்புடன் பல்லாண்டு காலம்    நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

 பிறந்த நாள் வாழ்த்து
கவிதை
பூக்களின் வித்து நீ...!

புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!

குடும்பத்தினருக்கெல்லாம்கெத்து நீ..!

உறவுகளுக்கெல்லாம் முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

***கலைமகளே! கருணைபுரிவாய்***

சரஸ்வதி ஆன்மிக சிந்தனைகள்
* தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைமகளே! பளிங்கு போன்ற வெள்ளை நிறம் கொண்டவளே! உன்னையே அடைக்கலம் என சரணடைந்து விட்டேன். கருணை செய்வாயம்மா! 
* ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் உலகிற்கு அளிப்பவளே! என் மனதில் எப்போதும் வீற்றிருந்து அருள்புரிவாயாக.
* வேதம் நான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவளே! குளிர்ச்சி பொருந்திய முத்துமாலையை அணிந்திருப்பவளே! கையில் சுவடி ஏந்தி இருப்பவளே! மயில் போன்ற சாயல் கொண்டவளே! அன்ன வாகனத்தில் அமர்ந்தவளே! எமக்கு அருளை வாரி வழங்குவாயாக.
* மெல்லிய பூங்கொடியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே! கலைவாணியே! சந்திரன் போல பிரகாசம் கொண்டவளே! ஒப்பற்றவளே! உன் அருளால் உலகுயிர்கள் நல்வழியில் வாழட்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்...

 பொலிகண்டி கரையினிலே அமைந்துள்ள அருள்மிகு  சல்லியம்பதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 23.02.2015 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். வில்வம் மூன்று ஜென்ம பாவம் போக்கும்

குடும்பத்தில் வளர்ச்சியை தருவதால் சிலவற்றை தெய்வ விருட்சங்களாக வளர்க்கிறோம். அவ்வரிசையில் சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வமரத்தின் சிறப்பை சிவராத்திரி காலத்தில் அறிந்து வணங்குதல் வேண்டும்.

வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தை சேர்ந்த பஞ்சதருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம்) வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. 

வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும். சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும் ஒரு வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது. 

இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்தது அகண்ட வில்வமாகும். இதன் காய் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவ அர்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யக்ஞத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்த பழத்தால் யக்ஞம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும் யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத் தருவார். 

மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஹோமப் பொருட்களில் வில்வப் பழமும் ஒன்றாகிறது. வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது வளரும் செடியாக இருக்கும் போதே பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத் தொடங்கும். படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும். இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர். 

வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே அகலாத செல்வம் தரும். மகாலட்சுமி நிரந்தரமான வசிப்பாள் என்பதை மறந்து விடக்கூடாது. வீட்டில் தாராளமாக வில்வமரம் வளர்க்கலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு அருளானந்தம் நிதுர்சன் 19.02.2015

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2015..இன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்  உறவினர்கள் ,மேலும் இறைஆசியுடன் சகல வளமுடன் பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .தேவன் மாமா லோவிதன் அண்ணா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.
அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...
தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...
நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...
நினைவூட்டும் இந்நாளில் 
மகிழ்ச்சியான பிறந்த நாள் 
வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


                           

விரதங்களில் மங்கலம் தரும் மகாசிவராத்திரி விரதம்

ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருட்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம். சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம். இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத வழிபாட்டு நாளாகும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள். சிவன், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. 
பிரம்மனும் நாராயணனும், சிவனது அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளும் இதுவே. தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது, அதில் இருந்து 
ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். 
சதுர்த்தசியன்று தேவர்கள் சிவனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி. ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. 
அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். 
அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 
சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என 5 வகைப்படும். மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு சிவபூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று 
சிவனை தரிசனம் செய்ய வேண்டும். 
முடியாதவர்கள் சிவலாயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும்
 சிவபூஜையே தலை சிறந்தது. 
இது லிங்கோற்பவ காலம். விசுவ ரூப தரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது.
 சிவ தரிசனம் கிடைக்கிறது. 
மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கிறது. சிவராத்திரிதினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 
வீட்டில் பூஜை செய்வது எப்படி? 
மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். 
இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் ஆவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும். அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர் களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாய நம நமச்சிவாய என மந்திரம் சொல்லலாம். 
சிவன் தொடர்பான பாடல்கள் கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்க கூடாது. முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், 
காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளை பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். 
நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தன்னால் முடிந்த அளவு 
தானங்கள் செய்ய வேண்டும். 
விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவராத்திரி விரதமகிமை 
ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு தூங்காமல் கேட்டுக் கொண்டு இருந்தது. தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து சிவன் மேலும், பார்வதி மேலும் வீசிய படியே இருந்தது. சிவராத்திரியில் 4 காலங்களிலும் தூங்காமல் குரங்கு வீசிய வில்வ இலைகளை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். 
அந்த குரங்கிற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார். உடனே அந்த குரங்கு தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு முசுகுந்த மன்னனாக தான் வாழும் காலத்தில் குரங்கு முகத்துடன் பிறக்க வேண்டும் என வரம் கேட்டது. 
சிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளித்தார். அப்படியே சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தியாக குரங்கு முகத்துடன் பிறந்து மூவுலகிலும் ஆட்சி செய்தார். 
விரதம் இருந்து முக்தி பெற்ற வேடன் 
தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஆலயத்தில் தவநிதி என்ற முனிவர் தங்கி இருந்து வழிபட்டு வந்தார். அப்போது மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பி ஓடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. 
முனிவர் அதற்கு அபயம் அளித்தார். இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான். அடியாரின் துயரை நீக்க இறைவன் புலிவேடம் கொண்டு வேடனை துரத்தினான். உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த மரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டான். அவனை துரத்திய புலி மரத்தின் கீழே இருந்தது. 
வேடன் இரவு முழுவதும் மரத்தில் தங்கி இருந்தான். பசியும், பயத்தாலும் அவனுக்கு தூக்கம் வந்தது. கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து ஒவ்வொரு இலைகளாக பிரித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான். அன்று சிவராத்திரி ஆனதால் அவன் பறித்து போட்ட இலைகள் கீழே புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து அர்ச்சனைகளாக விழுந்து கொண்டு இருந்தது. 
இதனால் தூக்கமின்றி சிவனை வழிபட்ட புண்ணியம் அவனுக்கு கிடைத்தது. இறைவன் வேடனுக்கு மோட்சம் அளித்து அருளினார். விடிந்தால் அவனது ஆயுள் முடியும் நிலை இருந்தது. பொழுது விடிந்ததும் அவனது உயிரை பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். உடனே தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன் கையில் கோலேந்தி எமனை விரட்டினார். எமனும் விடவில்லை. 
இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார். இதைநினைவுப்படுத்தும் வகையில் நந்தி வாயிலை நோக்கியவாறும், தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர். 
நன்மை தரும் ராத்திரி பூஜை  
சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து காரியங்களிலும் நன்மை பயக்கும். 
முதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம். மகாவிஷ்ணு 2–வது கால பூஜையை செய்கிறார். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும். 
மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மா அன்ன பறவை வடிவில் மேலேயும், மகா விஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும். 
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. அப்போது விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

லட்சுமிதேவி வழிபட்ட பெருமாள்!

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து தென் மேற்கில் 5 கிலோமீட்டர் தொலைவிலும், பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ள பட்டீசுவரம் என்னும் தலத்தில் இருந்து தென் கிழக்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் நாதன் கோவில் உள்ளது. முன் காலத்தில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்து, இன்று சிற்றூராக இருக்கும் பழையாறையின் ஒரு பகுதியாகவும் விளங்கும் சிறு கிராமம் தான் இந்த ஊர்.
திவ்யதேசம்
பசுமையான வயல்வெளிகள் நிறைந்த இந்தச் சிற்றூரில் தான் ஜகந்நாதப் பெருமாள் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எனவேதான் இந்த ஊர் நாதன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. 

இந்தியாவின் வடபகுதியில் பூரி ஜகந்நாதர் ஆலயம் உள்ளது. அதே போல் தென்திசையான தமிழகத்தில் சென்னை அடுத்த திருமழிசையில் ஒரு ஜகந்நாதர் கோவில் உள்ளது. எனவே நாதன்கோவில் பகுதியில் கோவில் கொண்டிருக்கும் ஜகந்நாத பெருமாள் கோவிலை, தமிழகத்தின் ‘தட்சிண ஜகந்நாதர்’ என்று அழைக்கிறார்கள்.  

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால், பத்து பாடல்கள் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற சிறப்பும் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். 
‘நாதன் உறைகின்ற நகர் 
நந்திபுற விண்ணகரம் நண்ணு மனமே!’
–என்று ஒவ்வொரு பாடலிலும் நந்திபுர விண்ணகர நாதனை மனம் நாட வேண்டும் என்று பாடிப் பரவுகிறார் திருமங்கை ஆழ்வார். வைகுண்டத்துக்கு இணையான திருத்தலம் என்பதால், ‘விண்ணகரம்’ என்று திருமங்கை ஆழ்வார் தனித்தமிழில் இந்த ஆலயத்தைப் போற்றுகிறார்.
தட்சிண ஜகந்நாதர் 
மேற்கு திசை பார்த்து நிற்கும் வண்ண ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஓங்கி உயர்ந்த கொடிமரத்தைக் காணலாம். அதை ஒட்டி ஒரு சிறிய மண்டபம், அதைத் கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் வடபுறத்திலே பன்னிரு ஆழ்வார்கள் வரிசையாக நிற்க, தென்புறத்தில் ஆண்டாள் சன்னிதி அழகுற அமைந்திருக்கிறது.
அதையடுத்து இறைவனின் சன்னிதி இருக்கிறது. ஜெய, விஜயர்களை வணங்கி உள்ளே நுழைந்தால், அங்கே மந்தார விமானத்தின் கீழ் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவராய், மேற்குதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் 
அருள்பாலிக்கும் இறைவனைக் காண கண் கோடி வேண்டும். சுவாமியின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருந்து அருள்புரிகிறார்கள். ஆலயத்தின் உற்சவரின் திருநாமம் தான் ஜகந்நாதர் என்பதாகும். கருவறையின் உள்ளே வடபுறச் சுவற்றில் பிரம்மதேவர் வீற்றிருக்கிறார். தென்புறச் சுவற்றில் நந்திதேவர், மனித உருவில் பெருமாளை பணிந்து வணங்கியபடி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.  
செண்பகவல்லி தாயார் 
இறைவன் சன்னிதியின் தென்புறம் செண்பகவல்லி தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய சன்னிதியில் தவக் கோலத்தில், அமர்ந்த நிலையில் தாயார் காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் பின்புறம் தல விருட்சமான
 செண்பக மரம் உள்ளது.
திருப்பாற்கடலில் அவதாரம் செய்த லட்சுமிதேவி, திருமாலை கணவனாக அடைய எண்ணி செண்பக மரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். லட்சுமி தேவி தவமிருக்க தொடங்கிய தினம் ஒரு அமாவாசை ஆகும். அன்றிலிருந்து எட்டாவது நாளில், அதாவது சுக்லபட்ச அஷ்டமி அன்று தவம் செய்யும் தாயாருக்கு, எதிர்திசையில் தோன்றி காட்சி கொடுத்தார். மேலும் தாயாரை தனது மார்பில் செண்பக லட்சுமியாக ஏற்றுத் தாங்கிக் கொண்டார். 
பிரார்த்தனைத் தவம் 
தாயாரின் தவம் நிறைவேறி, பெருமாள் ஏற்றுக் கொண்ட சுக்லபட்ச அஷ்டமி அன்று, இந்த ஆலயத்தில் ‘ஸ்ரீ சூக்த ஹோமம்’ செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தால், பிரிந்துள்ள தம்பதிகள் சேருவார்கள். கணவன்– மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். 
பல்லவ மன்னர் நந்திவர்மன் தனக்கு குழந்தைப் பேறு இல்லாததால், இத்தலத்திற்கு வந்து பெருமாளையும், 
தாயாரையும் வழிபட்டு பிள்ளைப் பேறு பெற்றான். பிறந்த குழந்தைக்கு ‘நந்திபுர விண்ணகரப்பன்’ என்று பெயர் சூட்டினார். மேலும் திருக்கோவிலில் மண்டபம் கட்டிக் கொடுத்தார் என்பது போன்றவை குறிப்பாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று, இத்தலத்து தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து, பாயசம் நிவேதனம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
விஜயரங்க சொக்கலிங்க சேதுபதி என்பவர், தனது தாயாரின் வயிற்றுவலி நீங்க இத்தல இறைவனையும், இறைவியையும் பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அந்நோய் நீங்கியவுடன் இக்கோவிலுக்கு ஒரு மண்டபம் கட்டி  கொடுத்துள்ளார். இதை மெய்ப்பிக்கும் வகையில், சேதுபதி மற்றும் அவரது மனைவி சிலைகள், பெருமாளைத் தொழுதவண்ணம் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 
தன்னிடம் அடைக்கலம் வந்த புறாவிற்காகத் தன் தசையை அரிந்து வைத்து, கடைசியில் தானே தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த சிபிச் சக்கரவர்த்திக்கும், மார்க்கண்டேய மகரிஷிக்கும் அருள்புரிந்த தலம் இது. 
சிலேடைப் பாடல்களால் தமிழை ஆண்ட காளமேகப் புலவர் பிறந்த ஊர் என்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்ப்பதாகும். மேலும் சோழர் குல அரசி குந்தவை நாச்சியார், தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்ட தலம் என்பதும் சரித்திரச் சான்றுகளுடன் உள்ளன. 
இதுமட்டுமல்ல திருஷ்டி தோஷம் அகலவும், சந்திர தோஷம் நீங்கவும், கடன் தொல்லை, வியாபார நஷ்டம் விலகவும், மகாலட்சுமி தேவியின் திருவருள் கிடைக்கவும் இது சர்வதோஷ பரிகாரத்துக்குரிய பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கின்றது. 
–டாக்டர்.ச.தமிழரசன், தஞ்சாவூர்.
நந்தி  தவம்  செய்த  தலம்
இந்த ஆலயத்தில் நந்திதேவர் மனித உருவில், பெருமாளை வணங்கியபடி உருவம் வடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிவன் ஆலயங்களில் தான் நந்தி பகவான் வீற்றிருப்பார். அதுசரி விஷ்ணு ஆலயத்தில், சிவனின் வாகனமான நந்திதேவருக்கு என்ன வேலை? என்கிறீர்களா! வாருங்கள் அந்த வரலாற்றைப் பார்க்கலாம்.
ஒருமுறை விஷ்ணு பக்தரான, வேதவியாசரை கயிலாயத்தின் காவல் தெய்வமான நந்திதேவர் தங்கப்பிரம்பால் அடித்தார். விஷ்ணு துவேஷம் இல்லாத, சிவ பக்தி தான் சிறந்தது. ‘அரனும், அரியும் ஒன்றே’ என்று உணர்த்தும் வகையில், சிவபெருமான் நந்தி மேல் கோபம் கொண்டு, அவரது எல்லா அதிகாரங்களையும் பறித்து விட்டார். 
தனது தலைவனான சிவபெருமானிடம், நந்திதேவர் சாப விமோசனம் தரும்படி பணிவுடன் வேண்டினார்.
‘பூலோகத்தில் காவிரி நதி தீரத்தில் அமைந்திருக்கும் செண்பகாரண்யத்தில் உள்ள ஜகந்நாதப் பெருமாளை, தவம் செய்து வழிபட்டால் உனது சாபம் நீங்கும். பழையபடியே உனது அதிகாரங்களைப் பெறுவாய்’ என்று சிவபெருமான் சாப விமோசனம் கூறினார். 
அதன்படியே நந்தி இத்தலத்தில் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். எனவே தான் இவ்வூர் ‘நந்திபுரம்’ என்றும் ‘திருகோவில் நந்திபுர விண்ணகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தவம் செய்த இடம் ‘நந்திவனம்’ என்றும், அதற்கு எதிரே உள்ள தீர்த்தம் ‘நந்தி புஷ்கரணி’ என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>நீண்ட ஆயுள் தரும் திருமீயச்சூர் மேகநாதசுவாமி..

சிவாலயங்களில் தேவாரத் திருப்பதிகங்களால் பாடப்பெற்ற தலங்கள் மிகச்சிறப்புடையவனாக கருதப்படுகின்றன. அத்தகைய சிவாலயங்கள் மொத்தம் இருநூற்று எழுபத்து நான்கு. இவை இந்தியா முழுவதும் பரவி விளங்குகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக சோழவள நாட்டில் உள்ள நூற்று தொண்ணூறு கோவில் கள் இதில் அடங்கும். 
சோழவளநாட்டு காவிரி தென்கரைத்தலங்களில் தேவாரப் பாடல்பெற்ற 56-வது தலமாக திருமீயச்சூர் லலிதாம்பிகா சமேத மேகநாத சுவாமி கோவில் விளங்குகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீமேகநாதசுவாமி, ஸ்ரீசகலபுவனேஸ்வரர் ஆகிய இரண்டு சிவன் சன்னிதிகள் ஒருங்கே கொண்ட தலம் இது.
சூரியனும், பைரவனும் தனிச்சன்னிதியுடன் காட்சி தரும் தலம். நான்கு முகங்களுடன் கூடிய சண்டிகேஸ்வரர் அமைந்த தலம். சங்கநிதி, பதுமநிதியுடன் மகாலட்சுமிதேவி அருள்புரியும் தலம். அகத்தியர் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை அருளிய தலம் என பல சிறப்புகளை பெற்றது இந்த ஆலயம்.
சிவபெருமானின் சாபம் பெற்ற சூரியன், உடல் முழுவதும் செந்நிறம் நீங்கி கருமை நிறம் பெற்றான். சாப விமோசனம் அடைவதற்காக இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டான். சிவன் சாபவிமோசனம் அளித்தார். சூரியன் தனது கருமை நிறத்தில் இருந்து மீண்டு வந்ததன் அடிப்படையில் இவ்வூர் மீயச்சூர் எனப்பெயர் பெற்றது. 
இக்கோவிலின் மூலவர் மேகநாதசுவாமி. அம்மன் நாமம் லலிதாம்பிகை சவுந்தரநாயகி. தீர்த்தம் சூரியபுஷ்கரணி. தலவிருட்சம் வில்வமரம். 
திருமீயச்சூர் ஆலயம், கஜப்பிரதிஷ்ட விமான அமைப்பு உடையது. பார்வதி பரமேஸ்வரனை கஜவாகனரூபராய் வைத்து சூரியன் பூஜை செய்ததால், சுவாமி கோவிலில் விமானம் யானையின் பின்பாகம்
 போன்று கஜப்பிரதிஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களைக் கொண்டு திகழ்கிறது. 
கோவில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் காணப்படுகிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோவிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னிதி உள்ளது. மகா மண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் 
பாடல் பெற்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில், தெற்கு நோக்கி அழகுடனும் உலகில் வேறெங்கும் காணமுடியாத அமைப்புடனும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அம்பாள் சன்னிதி ஒரு ராஜ தர்பார் நடக்குமிடம் போன்று பொலிவுற காட்சியளிக்கிறது. 
குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். ஒருவர் கோபப்   படும்போதும் எந்நேரத்திலும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டும். உலகில் எல்லா உயிர்களும் சமம்தான் என்ற அகந்தையின்றி வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழலாம் என்பது இத்தலத்தில் உள்ள விக்கிரகங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும். 
பொன்னேர் கொன்றை 
மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையாள்
மீயாச் சூரானை தன்னேர்
பிறரில் லானைத் தலையால்
வணங்குவோர் அன்னேர் இமையோர் உலகம்
எய்தல் அரிதன்றே
- என்று இத்தல இறைவனை திருஞானசம்பந்தர் பாடி உள்ளார். 
சுயம்பு லிங்கமாக வீற்றிருந்து அருள்புரியும் மேகநாத சுவாமியை, அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட்டு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள். இங்குள்ள கல்யாண சுந்தரரை திருமணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கை கூடும் என்பது அனுபவப்பட்ட பக்தர்களின் கூற்று.  
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில்தான் அருணன் (சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்தனர். இதனால் இங்கு ஹோமம் செய்வது சிறப்பு. 
வியாதிகளை போக்கும் சங்காபிஷேகம்
100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால், அதற்கு ஆயுளை அதிகரிக்கும் தெய்வசக்தி உண்டு. உயிர்களை பறிக்கும் அதிகாரம் கொண்டவர் எமதர்மன். இவர் இந்த ஆலயத்தில் நீண்ட ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்தார் என்றும், மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் தல விருட்சங் களில் ஒன்றான பிரண்டை கலந்த அன்னத்தை நிவேதனம் செய்தும் சிவபெருமானை வழிபட்டார் எனவும் தலபுராணம் கூறுகிறது. 
எனவே தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமரை இலைகளில் பிரண்டை சாதத்தையும், சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட்சத்திரத்தில் சிவபெருமானை பூஜிக்க வேண்டும். பின்னர் அந்த தாமரை இலையிலேயே அன்னத்தை வைத்து ஏழைகளுக்கு தானம் அளித்து, தாமும் உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் கடுமையான
 நோய் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம்.
கருடனின் மூத்த சகோதரன் அருணன். இவர் கால்கள் இல்லாமல் ஊனமாக பிறந்தவர். சூரியனின் தேரோட்டியாக இருப்பவர். சூரியோதயத்தை அவரது பெயரால் அருணோதயம் என்றும் சிலர் அழைப்பார்கள். சிறந்த சிவபக்தனான அருணன், கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க சூரியனிடம் அனுமதி கேட்டான்.
அதற்கு சூரியன், 'நீ! உடல் ஊனமுற்றவன். உன்னால் ஈஸ்வரனை தரிசனம் செய்ய முடியாது' என்று கூறி கிண்டலும், கேலியும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பத்தை தாங்கிக்கொண்ட அருணன், விடாமுயற்சியுடன் கடும் தவம் இருந்து சிவனின் தரிசனத்தைப் பெற்றான். 
சிவதரிசனம் செய்ய முயன்ற அருணனை கேலி செய்த சூரியனின் மீது சிவனின் கோபம் திரும்பியது. அவர் சூரியனிடம், 'என்னை தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய நீ ஒளி இழந்து போவாய்' என்று சாபமிட்டார். இதனால் உலகமே இருண்டு போனது. சூரியனின் உருவம் கருமை நிறத்தை அடைந்தது. 
சூரியன் மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டு கொண்டதன் பேரில், 'திருமீயச்சூரில் தீர்த்தம் அமைத்து பதினொரு மாத காலம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்' என்று சாப விமோசனத்திற்கான வழியை சிவபெருமான் கூறினார். சூரிய பகவான் திருமீயச்சூரில் தவமும், வழிபாடும் நடத்தி மீண்டும் இழந்த தன் ஒளியைப் பெற்றார்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ந் தேதி வரை, இந்த ஆலய கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பு மிகுந்ததாக உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தால் தேக ஆரோக்கியம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
சுவாமி சன்னிதியின் வடபுறத்தில் அமைந்துள்ள துர்க்கை சிலையில் கிளி உள்ளது. எட்டுக்கரங்களுடன் வீற்றிருக்கும் இந்த தேவியை, 'சுகப்பிரம்ம துர்க்காதேவி' என்று அழைக்கின்றனர்.
 துர்க்கையிடம் பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை, இந்தக் கிளி அம்பாளிடம் கூறி நிறைவேற்றுவதாக ஐதீகம் கூறப்படுகிறது. காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 
இக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் ரெயில்நிலையத்திற்கு மேற்கே 1 கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் ஆலயம் உள்ளது. 
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையிலும், கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வழியாக சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
-திருமாலன், திருச்செந்தூர்.
லலிதா  சகஸ்ரநாமம்
உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் பக்திமணம் கமழ ஒலித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் திருமீயச்சூர். 
பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் தங்களை காத்தருளும்படி அன்னை பராசக்தியை வேண்டினர். அசுரனை அழிப்பதற்காக தேவியானவள், ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ரத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அரக்கனுடன் கடுமையாக போர்புரிந்து அவனை அழித்தாள். அரக்கனை அழித்த பிறகும் அன்னையின் உக்கிரம் தணியவில்லை. 
சிவபெருமான் அன்னையின் கோபத்தை தணிக்க 'மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யும்படி கூறினார். அன்னையும் திருமீயச்சூருக்கு வந்து தவம் செய்து சாந்தமானாள்.
அப்போது அங்கு சாப விமோசனத்திற்காக தவம் இருந்த சூரியன், சிவபெருமான் வர காலதாமதமானதால்
 'வகுரா' என கத்துகிறான். 'வகுரா' என்பது திருமீயச்சூர் இறைவனின் பெயர். இது பார்வதிக்கு சினத்தை மூட்டியது. 'சூரியன் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன்' என்று கூறி பார்வதியை சமாதானப்படுத்தினார் சிவபெருமான். அன்னையின் கோபத்தை தணிக்க, வகினி தேவதைகள் ஆயிரம் திருநாமங்களால் லலிதா சகஸ்ரநாமத்தை பாடினர். இதுவே லலிதா சகஸ்ரநாமம் ஆயிற்று.
கொலுசு  கேட்ட  லலிதாம்பிகை
உலகநாயகி லலிதாம்பிகைக்கு அர்ச்சகர்கள் அனைத்து ஆபரணங்களையும் அணிவித்திருந்தனர். காலுக்கு கொலுசு மட்டும் அணிவிக்கவில்லை. 
ஒருமுறை பக்தர் ஒருவரின் கனவில் அம்பாள் 
தனக்கு கொலுசு வேண்டும் என்று கேட்டதாகவும் அதன்படி அந்த பக்தை அம்பாளுக்கு கொலுசு வாங்கி அணிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறவும் அம்மனுக்கு கொலுசு காணிக்கையாக செலுத்தி வழிபடுகிறார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

Powered by Blogger.