உங்கள் 2017 சனிப் பெயர்ச்சி பரிகாரங்களும் பலன்களும் ?

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
பொதுவாக சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்பன சோதிடத்தில் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.
இதன்படி, நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவரான சனீஸ்வர பகவானின் இடப்பெயர்ச்சியால் ஒவ்வொரு இராசிக்கும் நிலைமை எப்படி சாதகமா – பாதகமா என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்கு இனி நல்ல காலம் தான். அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி உங்களுக்கு சனி பகவான் இராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்ந்து அதிர்ஷ்டத்தை வழங்க போகிறார்.
எனவே, இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் மறைந்துவிடும். உங்கள் ராசி/லக்கினத்திற்கு 10,11-க்குரிய சனி பகவான், 9ஆம் இடத்தில் இருப்பதால் தொழில் சிறப்பாக அமையும்.
பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் மற்றும் கற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த மன உளைச்சல், அலைச்சல் தீரும்.
வழக்கில் வெற்றி தரும். இனி நல்ல முன்னேற்றம் வரும். 09இல் சஞ்சரிக்கும் சனி பகவான்11ஆம் இடத்தை பார்வை செய்வதால், வெளி நாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும், 6ஆம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும்.
ஆனால் கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் செலுத்துவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து கிடைக்க வழி செய்வார்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு இது அஷ்டம சனி. பயப்பட வேண்டாம். ரிஷபம் இராசிக்கு சனி யோககாரகர்.

அஷ்டம சனியாக வந்தாலும் கெடுக்க மாட்டார். ரிஷபம் சனியின் 2ஆம் இடத்து பார்வை குடும்பத்தில் இருந்த குழப்பங்களை தீர்க்க உதவும். திருமணம் நடக்கும்.

குழந்தை பாக்கியம் உண்டு. மேலும் யோக காரகர் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும்.

புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8ஆம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் ஆரம்பிக்கலாம். 7ஆம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நலம் தரும் என நம்பலாம்.

பரிகாரம்:
சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்றுங்கள்.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்த சனி பகவான், இனி உங்கள் ராசி/லக்கினத்திற்கு 7ஆம் இடத்திற்கு வருகிறார்.

உங்கள் இராசிக்கு 8,9-க்குரிய சனி, 7ல் வந்திருப்பது நன்மையே தரும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு.

கடன்கள் தீர்ந்து விடும். புதிய வாகனம் வாங்கலபம். ஆனாலும், ஜென்ம இராசியை சனி பார்ப்பதால் அலைச்சல் அதிகரிக்கும்.

பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாள் தேவைகள் நிறைவேறும்.மனைவியால் நன்மை. பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் விலகும் காலம் இது.

பரிகாரம்:
அன்னதானம் செய்யுங்கள். திங்கள்கிழமை கிழமைகளில் சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.

கடகம்
கடக இராசிக்கு லக்கினத்திற்கு 6ஆம் இடத்திற்கு சனி பகவான் வருகிறார். இனி நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்.

திட்டங்கள் அத்தனையும் வெற்றிபெறும். 6ஆம் இடத்தில் அமர்ந்த சனி 9ஆம் இடத்தையும், 12ஆம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் விலகி விடும்.

வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3ஆம் இடத்தை பார்வை செய்வதால்,புதிய தொழில் பெரிய அளவில் அமையும்.

வெளிநாட்டு பயணம் உண்டு. 6ஆம் இடத்து சனி பகவான் உற்சாகம் தருவார். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி.

வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 7,8-க்குரிய சனி 6ஆம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு யோகம் தான்.

பரிகாரம்:
ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை பிராத்தியுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு அர்தாஷ்டம சனி விலகி விட்டது. உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சம திரிகோண ஸ்தானமான 5ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார்.
இனி பிரச்னைகள் தீர்ந்து விடும். உங்கள் திட்டம் எல்லாமே வெற்றியாக முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் தீர்ந்து விடும்.
இதுவரை சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் இனி இல்லை. நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
பஞ்சம திரிகோண ஸ்தான சனி, வேலை, தொழில், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற எல்லாவிதமான சுப மங்கல விஷேசங்கள் அத்தனையும் தரும். உங்களுக்கு இனி வாழ்க்கை இனிக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.சனிக்கிழமையில் நீல நிற வஸ்திரத்தை தானம் செய்யுங்கள்.
கன்னி
கன்னிக்கு சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 4ஆம் இடத்தில் அமர்ந்து, அர்த்தாஷ்டம சனியாகிவிட்டார்.
ஆனாலும் நீங்கள் அதற்காக பயப்பட வேண்டாம். உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி திரிகோணாதிபதி கேந்திரமான 4ஆம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டார்.
உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் சனி பகவான் பார்வை செய்வதால், நோய்நொடிகள் கடன் பிரச்சினை அத்தனையும் நிவர்த்தி ஆகும். இனி கடனை தீர்க்கும் காலம். புதிய வேலையில் அமர்ந்து விடுவீர்கள்.
தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். இதை சனி பகவான் நிறைவாகவே அருள்வார்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள்.பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் 
வணங்கி வாருங்கள்.
சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று வியாழக்கிழமை  ( 26.01.2017 )  இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
துலாம்
துலா ராசிக்கு இதுவரை பாத சனியில் இருந்த பாதிப்பு நீங்கி இனி நல்லது நடக்கும் காலம். சனிபகவான் உங்கள் ராசி/லக்கினத்திற்கு 3ஆம் இடத்திற்கு வந்துவிட்டார்.
பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். சொந்த வீடுகட்டி புது வீட்டில் குடிபோக வாய்ப்பு. சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது.
குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கியில் கடன் 
உதவி கிடைக்கும்.
பேச்சில் நிதானம் தேவை. உங்கள் மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12ஆம் இடத்தை சனி பார்வை செய்வதால், செலவுகள் வரத்தான் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், இனி யோக வாழ்க்கைதான்
பரிகாரம்:
கணபதியை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு இதுவரை  ஜென்ம ராசி/லக்கினத்தில் இருந்த சனி பகவான் உங்களை விட்டு விலகி விட்டார். இனி வாழ்வில் சுமை இல்லை.
சனி 2ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு பணம் வரும்.  சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு.
பழைய  புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் 
பாக்கியம் கிடைக்கும்.
9ஆம் இடத்திற்கு 12ஆம் இடமான 8ஆம் இடத்திற்கு சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்கள் சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் நிலை வருவதால் நன்மையே நடக்கும்.
பரிகாரம்:
சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு  சென்று வணங்குங்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு சனிபகவான்  ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டார். ஏற்கனவே ஏழரை சனி, தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று 
பயப்பட வேண்டாம்.
சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால், கெடுதல் செய்ய மாட்டார் என நம்பலாம். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு 
யோக காலம்தான்.
திருமணம் நடைபெறும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6ஆம் இடத்தை பார்வை செய்வதால்  அவசரம் வேண்டாம். புது வாகனம் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும்.  உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காலம் உங்கள் வசம்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீ அனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
மகரம்
மகர சாசிக்க  ஏழரை சனி ஆனால் பயப்படவேண்டாம் உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். வழக்கில்
 வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் கவனம் தேவை.பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும்.  மனைவியின் ஆலோசனை 
சரியாக இருக்கும்.
12ஆம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் பிரச்சினையில்லை இந்த ஏழரை உங்களுக்கு வளம் தரும்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள்.  வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்கு லாப சனியாக உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 11ஆம் இடத்திற்கு வந்துவிட்டார் சனிபகவான். இனியெல்லாம் நல்லதுதான்.
ஜென்ம இராசியையும், பஞ்சமதிரிகோணத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள்.
உங்கள் ராசி/லக்கினத்திற்கு ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள் அத்தனையும் நீங்கி. திருமணம் கைக்கூடும்.
உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும் வெற்றி கிடைக்கும்.  கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும்
 தீர்ந்து விடும்.
தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை.  சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். லாப சனி உங்களுக்கு யோகம் தரும்.
பரிகாரம்:
சிவனுக்கு திங்கள்கிழமைகளில் வில்வ இலை சமர்ப்பியுங்கள்.  ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
மீனம்
மீன ராசிக்கு சனி பகவான்  இராசி/லக்கினத்திற்க்கு 10ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகவே   லாபாதிபதி 10இல் இருப்பது நன்மை. விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை 
விட்டு விலகி விடும்.
மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும்.
குழந்தை பாக்கியம் ஏற்படும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். 
வீண் பேச்சை தவிர்க்கவும்.
10ஆம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருக்கும் சனிபகவான், உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயர்  வணங்கி பாடல்களை பாடுங்கள் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வரும் மகா சிவராத்திரி வரலாறு?

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது
அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம்.
ஆனால் சிவராத்திரி என்பது 
அம்பாளின் வேண்டுதலின்
படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து 
நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை ,அர்ச்சனை செய்தாள்.
தான் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் `சிவராத்திரி‘
என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுமாறு 
அன்னை வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன் சிவராத்திரி. வில்வ மரத்தடியில் இருந்த சிவலிங்கம் மீது உறக்கம் வராமல் இருக்க பறித்துப் போட்ட வில்வ இலைகள் அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் - அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது.
எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை
பிறவி எடுத்தாலும் . அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்
பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் 
பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அன்னை பார்வதி தேவி ,
 சிவபெருமானை நோக்கிக்
கடுந்தவமியற்றி இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
அர்ஜுனன் தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற நாள் ...
.கண்ணப்பர் தன் கண்களை சிவபெருமானுக்கு அப்பி
கண்ணப்ப நாயனாராகி 
திருக்காளத்தி என்னும் 
புண்ணிய திருதலத்தில் முத்தி பெற்ற திருநாள் .
பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை
பூமிக்கு வரவழைத்த நாள் சிவராத்திரி ..
தன் பக்தன் மார்க்கண்டேயருக்காக காலதேவனை 
தண்டித்து என்றும் பதினாறாக வரம்
 அளித்த நாள் ..
மனித உடலில் சக்தி இயல்பாகவே சிவராத்திரி
நாளில் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும்
வெறுமையும் இருளுமான சிவனவனை நாடி நாம்
செல்லத் தேவையில்லை,
சிவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை நமக்கு உணர்த்திவிடும்
சீர் மிகுந்த சிறப்புறு நாள் சிவராத்திரி !
மாசிமகா சிவராத்திரி தேரோட்டம், அமாவாசை யொட்டி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, தீர்த்தவாரி
நிகழ்ச்சி நடைபெறும் ..
மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் ,ஸ்ரீ கோகர்ணம் .
மந்திர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை சிவபெருமான் அருந்தி நீலகண்டரான காலமும் சிவராத்திரிதான் ...
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் .நீர்வேலி கந்தசுவாமிகோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

   
அருள்மிகு  நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் திருக்குடமுழுக்குப் பெருவிழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்று பகல் 12.11 முதல் 2.02 வரையுள்ள சுபவேளையில்
 நடைபெறவுள்ளது..
இதனை முன்னிட்டான எண்ணெய்க் காப்பு நிகழ்வு 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை இடம்பெறவுள்ளது. திருக்குட முழுக்குப் பெருவிழாவையொட்டிய கிரியைகள் 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பமாகவுள்ளன.
.
திருக்குடமுழுக்குப் பெருவிழாவை ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக் குருக்கள் நிகழ்த்திவைப்பார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம், .23.01.2017

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்  கிளிநொச்சி. கந்தபுரத்தை
 வாழ்விடமாகவும்தற்போது              
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ) இன்று.  23.01.2017 சூரிச்சில்  பிறந்த  நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .
 இவரை  அன்புக்கணவர்  அன்பு பிள்ளைகள்  அன்புள்ள  அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை  இறைஅருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
              நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
          இணையங்களும்  
            வாழ்த்துகின்றன. 
                   வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு .துரைராஜா . சந்திரன். 23.01.17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் தற்போது   ஜெர்மனியில் வசிக்கும் 
 திரு .துரைராஜா .சந்திரன்(குட்டி) அவர்களின் பிறந்தநாள்.23.01.2017 இன்று 
 இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் ,வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து, நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும்
இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன  
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்த நாள்வாழ்த்து,திரு .கந்தசாமி .22.01.17

யாழ்  மானிப்பாயை பிறப்பிடமாகவும் நவக்கிரிமற்றும்  கொழுப்பு.தற்போது  சுவிஸ்  சூரிச்சில்    வசிக்கும்.திரு கந்தசாமி.(வாடைக்காற்றுப் புகழ் கலைஞர் )அவர்களின் 
பிறந்த நாள் இன்று.22.01.2017. இவரை அன்பு மனைவி பிள்ளைகள்  ,சகோதரர்கள் ,மருமக்கள்  மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும்  பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து எமது.
http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன   
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
தொலைவில் உள்ளதை வெற்றிலையில் மை தடவி தெரிந்துக் கொள்வது எப்படி?


நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.
மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும். அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்
”ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹுபட் ஸ்வாஹா”
என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி
 நாதர் கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி. நற்குணகுலசிங்கம்19.01.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2017இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று
தம்பதியினர்   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்இன்றும்  என்றும் இருமனம் இணைந்து திருமணம் நடந்து காலம் பல கடந்து வாழ்வில் -மனஉறுதியுடன் அனுபவித்து ஞாலம் தங்களை வியந்து பார்க்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் இது திண்ணம்   சிறப்புடன் வாழ்கவென பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திருமணநாள் வாழ்த்துகள் திரு திருமதி சுதாகரன் 19.01.17

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். (சுதா& யசோ) தம்பதியினர் சூரிச்மாநிலத்தில் 19.01.2017.. இன்று பதின்ஐந்தாவது திருமண நாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் ;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று
திருமண வாழ்த்து கவிதை. 
இருமனம் இணைந்து 
திருமணம் நடந்து 
காலம் பல கடந்து 
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 
ஞாலம் தங்களை 
வியந்து பார்க்கும் வண்ணம் 
வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் 
இது திண்ணம் . 

விட்டு கொடுப்பவன் - என்றும் 
கெட்டு போவதில்லை என்பதற்கு 
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி 
நாங்கள் நேரில் கண்ட காட்சி . 
நீங்கள்தான் பாசத்தை 
ஆளுகின்ற ஆட்சி ! 

வாழுங்கள் பல்லாண்டு 
இவையகம் உள்ளவரை ! 
ஆளுங்கள் நூறாண்டு 
நீங்கள்தான் ந(வ)ல்லவரே ! 

மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர 
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை - 
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு . 

நீவிர் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு 
வாழ்க .
 வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  
 சீரும் சிறப்புடன் பல்லாண்டு  பல்லாண்டு காலம்  நீடுழி வாழ்க வாழ்கவென
                       வாழ்த்துகின்றது 
             
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா .19.01.17

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் (சுசி) தம்பதிகளின் செல்வப்புதல்வி  ஜெனிஷா (ஜெனி) .
அவர்களின்  பிறந்தநாள் 19.01.12017 இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவ்உறவை இறை ஆசியுடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கலகலப்பாகவும் சகலகலைகளும்பயின்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி  காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ 
இணையமும். நிலாவரை இணையமும்
 வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம்.19.01.17

யாழ் ,உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி (றதி) அவர்களின் 
 பிறந்த நாள் இன்று ,19.01.2016..இவரை அன்பு க் கணவன் அன்பு ப்பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார் இறை அருள் பெற்று 
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார்  இறை அருள் பெற்று  எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் 
நவக்கிரி .கொம் .
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்து கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.17.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ஐந்தாவது  திருமண நாள் இன்று 19.01.2017. இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
வாழ்த்துகின்றனர்
 இருமனம் கூடி ஒரு மனமாகித் திருமணமாகிய தம்பதிகாள்திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினர்   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்  சிறப்புடன் வாழ்கவென பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திரு திருமதி மன்மதன் தம்பதியினரது (2வது) திருமணவாழ்த்து 18.01.17

கலையுலகில் சிறக்க வழிதேடி நன்னை ஓர் நிலைப்படுத்தி நிற்கின்ற  நடிகர் இயக்குனர் என பல்துறையில் சிறந்து தனது நடிப்பின் மூலம் சிறந்து நின்று வந்த பாகிஸ்கி குடுப்பத்தலைவராக தனது பாத்திரத்தை  சென்ற ஆண்டு ஏற்றிருந்தார்.
அதனால் அவர் இந்த ஆண்டு தன் இல்லற வாழ்வைத்தொடங்கி இரண்டாம் ஆண்டு காலடி எடுத்துவைக்கின்றார் திரு திருமதி மன்மதன் தம்பதியினரது (2வது) திருமணவாழ்த்து இன்று  18.01.2017இவரை  குடும்ப  உறவினர்கள்   உற்றார்  தாம்பதியினரைவாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன,,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள்வாழ்து கலைஞர் தயாநிதி 18.01.17


நடிகர் எழுத்தாளர் என தன் பணியாற்றிவரும் மூத்தகலைஞர் மதிப்புக்குரிய திருவாளர் தயாநி அவர்கள் இன்று பரிசில் தனது குடும்பத்தாருடனும் உற்றார், உறவினர்களுடன் ,நன்பர்கள் 
,கலையுக நண்புர்களுடன்
 கொண்டாடுகிறார்.இவரை   இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


உழவர் திருநாள் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள் 15.01.17

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு" 
என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை, விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள், பண்ணைகள் உள்ளவர்கள் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.
உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் பயன்படும் மாடுகளை கெளரவிக்கும் வகையில் வகையில் மாட்டுப் பொங்கல் என்றழைக்கப்படும் உழவர் திருநாள்
 கொண்டாடப்படுகிறது.
வண்டியிழுக்க செய்வது காளைமாடு; காலை மாலை சுவைதரும் பால்தருவது பசுமாடு; அவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும். கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; (அன்று மட்டும் மாடுகளுக்கு அடி விழாது) எருமை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கூடகொம்புகளில் வண்ணம் பூசுவர். கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். 
கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராகருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம்,குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே போலச் செய்வார்கள்.
தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது " பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்" என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால்நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் "மாட்டுப் பொங்கலாக" கொண்‌டாடுகின்றனர்.
சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள். வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்துஅதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத்தெருவாக விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரமாயிற்றே.
என்வழி நண்பர்கள் இணைய வாசகர்  அனைவருக்கும்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 15.01.2017 இன்றய  
உழவர் திருநாள்  பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 14.01.17

எனது அனைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,
 மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, 
கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள். பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும்.
இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, ‘குபேர திசை’ என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.
சங்கரமணம் என்ற சொல்லுக்கு பிரவேசித்தல் என்று பொருள். மகர ராசியில் சூரியன் நுழையும் நிகழ்வே மகர சங்க்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிப்பது தமிழ் மாதப் பிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பது தை மாதப்பிறப்பு என்றும் பொங்கல் பண்டிகை என்றும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒரு வருட காலத்தை இரண்டு ஆறு மாதங்களாகப் பிரித்து உத்திராயணம் மற்றும் தட்சியாணம் என்று அழைக்கப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் உத்திராயணம் ஆகும்.
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் தட்சியாணம் ஆகும். தட்சியாணம் என்பது தேவர்களுக்கு இரவு பொழுதாகும் உத்திராயணம் என்பது தேவர்களின் பகல் காலமாகும். தேவர்களுக்கு பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் முதல் தேதி அதாவது சூரியன் மகரம் ராசியில் நுழையும் நேரத்தில் பஞ்சங்கத்தின் அடிப்படையில் உள்ள கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை கொண்டு சங்கராந்தி புருஷன் என்று உருவகப்படுத்தி மகர சங்க்ராந்தியின் பலன்கள் கூறப்படுகின்றன. மன்மத வருடத்திற்க்கான சங்கராந்தி பலன்கள்…
மங்களகரமான மன்மத வருடம் மார்கழி மாதம் 29ம் தேதி (14-01-2016) அன்று வியாழக்கிழமை சுக்ல பட்சம் வளர்பிறை சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், பரிகம் நாம யோகம், கௌலவ கரணத்தில் இரவு 01-26 மணிக்கு துலா லக்கினத்தில் சங்கராந்தி (சூரியன்) பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். பெயர் : மந்தாகினி — கல்வியில் சிறந்தவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் உருவாகலாம்.
வாகனம் : பன்றி — விவசாய பயிர்கள் சீர்கெடும் வஸ்திரம் : விசித்திரம் — அனைவரும் நலமாக இருப்பர் ஆபரணம் : சுவர்ணம் — ஆடைகளின் விலை குறையும் ஸ்நானம் : மஞ்சள் — பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகம் ஆயுதம் : கலப்பை — அனைவருக்கும் உணவு கிடைக்கும் கந்தம் (நறுமணம்) : சந்தனம் — அனைவரும் சுகமாக இருப்பர் புஷ்பம் : மகிழம்பூ — ஒரு சிலருக்கு கஷ்டங்கள் உண்டாகலாம் சத்திரம் : ரஜதம் — வெள்ளி விலை குறையும் சாமரம் : ஹேமம் — தங்கம் விலை குறையும் வாத்தியம் : ருத்திர வீணை — தீவிரவாதிகள்
கொல்லப்படுவார்கள் பாத்திரம் : சூர்ப்பம் — தானியங்கள் பற்றாகுறை போஜனம் : மா — உடல் ஆரோக்கியம் சிறக்கும் முக பலன் : லச்சை — தானிய விருத்தி ஜாதி : வைசியர் — வியாபாரிகளுக்கு லாபம் குறையும் திக்கு : மேற்கு திசை — உறவினர்களிடையே பகைமை அதிகரிக்கும் பட்சம் : சுக்ல பட்சம் — அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகும் கிழமை : வியாழன் — மழை அதிகமாக பொழியும் காலம் : இரவு — கால்நடை மேய்ப்பவர்களுக்கு கஷ்டம் லக்கினம் : துலாம் — மழை அதிகமாக பொழியும் சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, ‘சப்தா’ என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன.
மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது. உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது.
இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர். இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல் நல் வாழ்த்து,,,,,,
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்……
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள் சிவபுராணத்தில் கூறப்படுகிறது

பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்.
ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.
ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்

மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.
ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.01.17.

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ்  தனது  பிறந்தநாளை இன்று .11.01.2017.கொண்டாடுகி​றார். இவரை அன்பு அப்பா அம்மா ,தங்கை, மசன் மருமகன் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில்உற்றார்.உறவினர்களுடன்
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும்   மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில்சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Powered by Blogger.