யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். (சுதா& யசோ) தம்பதியினர் சூரிச்மாநிலத்தில் 19.01.2017.. இன்று பதின்ஐந்தாவது திருமண நாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் ;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்
மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று
திருமண வாழ்த்து கவிதை.
இருமனம் இணைந்து
திருமணம் நடந்து
காலம் பல கடந்து
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து
ஞாலம் தங்களை
வியந்து பார்க்கும் வண்ணம்
வாழ்ந்து காட்டினீர் - இன்னும்
வாழ்ந்து காட்டுவீர்
இது திண்ணம் .
விட்டு கொடுப்பவன் - என்றும்
கெட்டு போவதில்லை என்பதற்கு
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி
நாங்கள் நேரில் கண்ட காட்சி .
நீங்கள்தான் பாசத்தை
ஆளுகின்ற ஆட்சி !
வாழுங்கள் பல்லாண்டு
இவையகம் உள்ளவரை !
ஆளுங்கள் நூறாண்டு
நீங்கள்தான் ந(வ)ல்லவரே !
மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை -
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு .
நீவிர் இருவரும்
செந்தமிழ் போல்
பைந்தமிழ் போல்
பல்லாண்டு பல்லாண்டு
வாழ்க .
வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
இணையங்களும்
சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென
வாழ்த்துகின்றது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen