தாசன் செந்து திருமண நல்வாழ்த்து 29.06.14.

thassentan0
திருமண நாள் இன்று  29,06. 2014.♥ ஜெகதாசன் செந்துஜா ♥,இரண்டாவது வருட திருமண நாள் காணும் தம்பதியினருக்கு  நல் வாழ்த்துக்களைகூறும்   அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து.  இந்தஇணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகாலம் நீடுழி   சீரும் சிறப்புடன்  வாழ்க வாழ்க வென  வாழ்த்துகின்றோம் ,

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!naka1
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று. 28.06.14.பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்


மற்றைய செய்திகள்


naka1 naka naka0

சிவபெருமானுக்கு விருப்பமான செயல்கள்.


 1, வீபூதி பூசிக்கொள்ளுதல்.
2, உருத்திராக்ஷம் அணிதல்.
3, பஞ்சாட்சர ஜபம் செய்தல்.
 4, வில்வத்தால் இறைவனை அர்ச்சித்தல்.
5, சிவ அடியார்களை வணங்குதல்.
6, தாய் தந்தையர் பேணுதல்.
7, தர்மம் செய்தல்.
8, உண்மை பேசுதல்.
9, ஒழுக்கம் தவறாமை.
10, தன் கடமையை சரிவர செய்தல்.
11, பசுவை வணங்குதல்.
12, சகல உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல்.

இன்று திறக்கப்பட்டுள்ளது.. கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை

காட்டுப்பாதையால் கதிர்காமம் செல்வதற்கு உகந்தையில் சுமார் 1000 யாத்திரிகர்கள் தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் முதல்தொகுதி பாதயாத்திரீகர்கள் 1000பேர் புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்றும் நேற்றுமுன்தினமும் வனஜீவராசிகள் திணைக்களமும் கடற்படையினரும் 03 வேளையும் அன்னதானம் வழங்கினர்.யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்சாமி தலைமையிலான குழுவில் 92 பேர் உள்ளனர்.அதனைவிட வட,கிழக்கிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்த குழுவினரும் உகந்தையில் தங்கியுள்ளனர்.

 

நம்பினோர் கெடுவதில்லை!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றிப் பரவுகிறார். உயிர்க்கு உயிராய் தழைத்திருந்து, விழித்திருந்து எந்நேரமும் நம்மைக் காக்கும் சிவபெருமானுக்கு நாம் ந
 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றிப் பரவுகிறார். உயிர்க்கு உயிராய் தழைத்திருந்து, விழித்திருந்து எந்நேரமும் நம்மைக் காக்கும் சிவபெருமானுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் நல்ல நாள் தான் சிவராத்திரி.
 மாசி மாதம், தேய்பிறையாகிய கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி நாளே (14ஆம் நாள்) "மகா சிவராத்திரி' விரத நன்னாளாக விளங்குகிறது. இந்நன்னாளில் நாம் மேற்கொள்ளும் விரதம் "வேண்டுவார் வேண்டுவதே ஈவான்' எனப் போற்றப் பெறும் சிவபெருமானை சிந்தை மகிழ வைக்கிறது. நாம் நினைத்தவை இவ்விரதத்தில் கைகூடுகின்றது.
 "இந்நாள் எம்மைக் கண்டவர், நோற்றவர், பூசை பண்ணினர் நற்கதி அடைவர்' என ஈசனே உறுதியளித்துள்ளார் என "வரத பண்டிதம்' நூல் வழிமொழிகின்றது.
 ஆம்! எண் குணத்தானாகிய இறைவனுக்கு எட்டு விரதங்கள் சொல்லப்பட்டாலும் தலைமை தாங்குவது தன்னிகரற்ற சிவராத்திரியே! சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம் இவை சிவ
 பெருமானுக்குரிய சிறந்த நாட்கள் எனினும் பரமசிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தருவது சிவராத்திரியே!
 "நாள் செய்வதை நல்லோர் செய்யார்' என்ற பழமொழியை நாம் நன்கு அறிவோம்.
 இவ்விரதம் ஏற்ற இரவெல்லாம் விழித்து, சிவநாமம் ஜெபித்து இறைவனுக்கே இதயம் அளித்தால் அசுவமேதயாகம் செய்த பலன் அன்பர்களுக்குக் கிட்டும் என ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 "சிவம்' என்றாலே மங்களம் என்று பொருள். மங்களகரமான மகிழ்ச்சியைத் தரும் சிவராத்திரி ஐந்து வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 பன்னிரண்டு மாதங்களிலும் தேய்பிறை, வளர்பிறை இரண்டிலும் வரும் சதுர்த்தசி திதி நித்திய சிவராத்திரி எனச் சொல்லப்பட்டுள்ளது.
 தை மாதம், தேய்பிறையில், பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் விரதம் இருந்து சதுர்த்தசியில் சதாசிவனைப் பூஜிப்பதே பட்ச சிவராத்திரி.
 மூன்றாவதாகச் சொல்லப்பட்டது "மாத சிவராத்திரி'.
 சதுர்த்தசி மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளில் வரும் மாத சிவராத்திரியை நாட்காட்டிகள் மூலம் அறியலாம்.
 "யோக சிவராத்திரி' என்பது திங்கள் கிழமையாகிய சோம வாரத்தில் அறுபது நாழிகையும், அமாவாசையும் இருக்கின்ற நாளில் மேற்கொள்வது.
 சிவபெருமானை "பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே" என்கிறார் அப்பர்.
 "உனைத் தினம் தொழுதிலன்' என்கிறார் அருணகிரி நாதர்.
 எனவே மேற்சொன்ன நான்கு வகையான சிவராத்திரியிலும், நாட்கள் அனைத்திலும் தொழுத நற்பலனை ஒரு சேர அளிக்கின்றது இந்த மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரி.
 திருநந்திதேவர் மூலம் சிவராத்திரியின் கீர்த்தியை அறிந்து சூரியன், மன்மதன், அக்னி, யமன், இந்திரன், குபேரன், முருகப் பெருமான் முதலியோர் பல வரங்கள் பெற்றார்கள்.
 கலைமகளை நான்முகன் நாயகியாகப் பெற்றதும், திருமால் சக்ராயுதம் பெற்றதும் இவ்விரதத்தை அநுஷ்டித்தே என அறிகின்றோம்.
 "எவ்வாறு வந்தது சிவராத்திரி?" என ஏடுகளைப் புரட்டினால் சுவை மிக்க பல கதைகளை நாம் அறியலாம்.
 1. ஒருசமயம் பிரம்மனாகிய நான்முகனுக்கும், விஷ்ணுவாகிய திருமாலுக்கும் "நாம் தான் பெரியவர்' என்ற ஆணவம் தோன்றியது. "இருவரில் யார் பெரியவர்? என அறிய சிவபெருமானின் அடி, முடி கண்டு முதலில் வருபவர் யார் என அறிவோம். அவரே பெரியவர் எனக் கொள்வோம்' என்று வாதம் நிகழ்ந்த காலத்தில் முனிவர்கள் பயந்தனர். எங்கும் இருள் சூழ்ந்தது. அனைவரையும் காக்க சிவபெருமான் அப்போது ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாக, லிங்கோற்பவராக எழுந்தருளினார். தேவர்கள், ரிஷிகள், திருமால், பிரம்மா என அனைவரும் அறிவு விழிக்கப் பெற்று சிவபெருமானை பூஜித்தார்கள். வழிபட்ட அப்பொன்னாளான நன்னாளே சிவராத்திரி.
 2.விளையாட்டாக உமையம்மை ஒரு சமயம் சிவபெருமானின் கண்களைத் தன் கைகளால் பொத்தினாள். அடுத்த வினாடி அகிலமே அந்தகாரத்தில் மூழ்கியது. பேரொளி வேண்டி பிரபஞ்சமே தொழுத சமயத்தில் சிவபிரான் அருள் வெளிப்பட்டது. அந்நாளே சிவராத்திரி.
 3. விடமுண்ட நீல கண்டனாக விளங்கும் சிவபெருமான் நஞ்சை உண்ட காலத்தில் ஆபத்து எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என அஞ்சி அனைவரும் சிவபெருமானை பூஜித்தனர். அப்பொழுதுதான் சிவராத்திரி பொழுது.
 4. யுக முடிவான பிரளயம் உண்டாகி அனைத்தும் அழிந்து போக சிவனும், சக்தியும் மட்டுமே இருந்தனர்.அப்போது உயிர்களைக் காத்தருள் அம்பிகை சிவபிரானை நான்கு காலங்களிலும் பூஜை செய்தார். சிருஷ்டியை மீண்டும் தோற்றுவிக்க சிவனை வேண்டிய பொழுதே சிவராத்திரி.
 5. உலக நலன் வேண்டி ஏகாதச உருத்திரர்கள் திருவிடைமருதூரில் சிவபெருமானை வழிபட்ட காலம் சிவராத்திரி.
 யுகங்களே நிமிடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் காலச் சுழற்சியில் சிவராத்திரியின் காரணத்திற்காக பல வரலாறுகள் லிங்க புராணம், ஸ்காந்தம், சிவ மகாபுராணம் போன்றவற்றில் சொல்லப்பட்டிருந்தாலும், அனைத்தில் இருந்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது சிவபரம்பொருளே மூலம்! சிவபெருமானே காலம்! சிவமயமே இந்த ஞாலம்!
 பால பருவம், இளம் பருவம், நடு வயது, முதுமை என நான்கு காலங்களிலும் மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும். அதற்காகத்தான் சிவபெருமானுக்கு நான்கு காலங்களிலும், சிவராத்திரியில் அபிஷேகம், ஆராதனை, நிவேதனங்கள், வழிபாடுகள்!
 மாலை 6 முதல் 9 மணி வரை முதல் ஜாம பூஜை. பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர்,சாணம் இந்த ஐந்தும் சேர்ந்த பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம். வில்வம், தாமரையால் அர்ச்சனை. இரவு 9 முதல் 12 மணி வரை இரண்டாம் ஜாமம். தேன், சர்க்கரை, பால், நெய், வாழைப்பழம் சேர்ந்த பஞ்சாமிருத அபிஷேகம். சண்பகம், துளசியால் அர்ச்சனை.
 இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் ஜாமம். தேன் அபிஷேகம், செங்கழுநீர், அருகால் அர்ச்சனை.
 அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் ஜாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நீலோத்பலம், விளா இலைகளால் அர்ச்சனை.
 நான்கு கால பூஜை அபிஷேகங்களைக் கண் குளிரக் கண்டு இரவு முழுக்க விழித்திருந்து, சிவபெருமான் திருமுறைகளைப் படித்து, கேட்டு அடுத்த நாள் நீராடி அன்னதானம் செய்து ஆத்ம திருப்தி அடையலாம். இன்றைய இருட்டில் மட்டும் நாம் விழித்திருந்து உபவாசம் மேற்கொண்டால் இனி நம் வாழ்வில் இருட்டே இருக்காது என இந்து மத புராணங்கள் உறுதியுடன் உரைக்கின்றன. "நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்பதுதானே பாரதியின் வாக்கு.

 

பிறந்தநாள்` வாழ்த்து! திரு குமாரசாமி விமல்.16.06.2014`.

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமல் அவர்களுக்கு இன்று(16:06:2014) பிறந்தநாள்.இவர் புலம் பெயர்வாழ்வில் இணையத்தளங்கள் உருவாக்கும் வல்லமை பெற்று தன் பணியை ஊடகத் துறையில் இணைத்து பணி தொடங்கினார் இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள் ,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம்

ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்திருவிழா

சென் மாக்கிறேர்த்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்திருவிழா
குறிஞ்சிக்கோலங்கள் கொலுவிருக்கும் சுவிட்சர்லாந்து ஒஸ்ரியா நாடுகளின் எல்லைப்புறத்தில் அழகு வனப்பு மிகுந்த அல்ப்ஸ் மலைச்சாரலிலே றெயின் நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலய திருவிழாவில் சுவிட்சர்லாந்து ஒஸ்ரியா ஜேர்மனி, இத்தாலி நாடுகளை சேர்ந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

பல பக்தர்கள் அங்கப் பிரதட்சனை போன்ற நேர்த்திக் கடன்களை செய்ததை காணக்கூடியதாக இருந்தது.

இத் தமிழ் இந்து ஆலய தேர்த்திருவிழாவிற்கு வேற்றின மக்களும் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

!மேலும் புகைப்படங்கள் இங்கே அழுத்தவும்

கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிப்பு உற்சவம்:

 வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தீமிப்பு உற்சவம் இடம்பெற்றது. கடந்த திங்கட்கிழமை திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி ஐந்து நாள் உற்சவமாக வியாழக்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று மதியம் நெல் குத்தும் பூசையும் இரவு விநாயகர் பானைப் பூசையும் இடம்பெற்று வெள்ளிக்கிழமை காலை தீமிதிப்பு மற்றும் திருக்குளித்தியாடும் வைபத்துடன் சடங்கு உற்சவம் முடிவடைந்தது.
 
இவ்வாலயத்தில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கண்ணகிபுரம் பேத்தாழை விநாயகபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பக்த அடியார்கள் தீ மிதிப்பில் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். இவ்வாலய சடங்கு உற்சவங்கள் அனைத்தும் ஆலய பிரதமகுருவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. உற்சவம் முடிவுற்றதும் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 1

வணக்கம், நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறோம் அதற்கான தொடர்ந்த முயற்சிகளால்தான் இன்றைய இந்த உலகத்தின் வளர்ச்சி நம் முன் விரிகிறது .
 
எவ்வளவுதான் பொருட்களை, வசதிகளை, கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருந்தாலும் நமக்கு கிடைக்கும் ஆனந்தமானது மிகவும் சிறியதாக குறுகிய கால  அளவு கொண்டதாகவே இருக்கிறது.
 
ஆனால் நாம் விரும்புவதோ நீடித்த நிலையான ஆனந்தத்தையே. தற்போது நமக்கு கிடைத்துவரும் ஆனந்தம் ஆனந்தமே அல்ல, அது வெறும் சந்தோசமே.
 
ஆம்! ஆனந்தம் என்பது ஒருமுறை தோன்றிவிட்டால் என்றுமே நிலைக்கக் கூடியது. அழிவற்றது .
 
அத்தகைய ஆனந்தத்தை நாம் எல்லோருமே மிக மிக மிக நிச்சயமாக அடைய முடியும்,
 
அப்படியா.? அப்படியானால் அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்ன ...?

ஒரே வழி ஆன்மிகமே ....!
 ஓஹோ ...சாமி கும்பிட சொல்றீங்களா ...?
 இல்லை ,இல்லவே இல்லை ,அதுமட்டுமல்ல ஆன்மிகம் . அடுத்த பதிவு மூலம் நாம் பேசுவோம்..அதுவரை
 
அன்பே ஆனந்தம்ஆனந்தமே இறைவன் எனவேமுன்னோர் சொன்னார் அன்பே சிவம்....
 

ஏகாதசி விரத தினங்கள்.2014-ம் ஆண்டு

* ஜுன் மாதம் 9-ந்தேதி (திங்கட்கிழமை) வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி. * ஜுன் மாதம் 23-ந்தேதி (திங்கட்கிழமை) ஆனி மாத தேய்பிறை ஏகாதசி.
 * ஜுலை மாதம் 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆனி மாத வளர்பிறை ஏகாதசி.
 * ஜுலை மாதம் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசி.
 * ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) ஆடி மாத வளர்பிறை ஏகாதசி.
 * ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி (வியாழக்கிழமை) ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி.
 * செப்டம்பர் மாதம் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி.
 * செப்டம்பர் மாதம் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி.
 * அக்டோபர் மாதம் 4-ந்தேதி (சனிக்கிழமை) புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி.
 * அக்டோபர் மாதம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி.
 * நவம்பர் மாதம் 3-ந்தேதி (திங்கட்கிழமை) ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி.
 * நவம்பர் மாதம் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி.
 * டிசம்பர் மாதம் 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி.
 * டிசம்பர் மாதம் 18-ந்தேதி (வியாழக்கிழமை) மாழ்கழி மாத தேய்பிறை ஏகாதசி.
 

Powered by Blogger.