எமக்கு வாழ்வில் சகல நலன்களையும் தரவல்ல புரட்டாதிச் சனி விரத்தின் மகத்துவம்

 புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.
 சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும்
 மகனாகப் பிறந்தார்.
அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான்
 சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட 
சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து
 முடவனார் என்று புராணங்கள் கூறும்.இமய தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி 
மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னி ராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர்.எனவேதான், சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவவிஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன், இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கேநள 
மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்று கூறுவர்.அரிச்சந்திர மகாராஜரின் அரசிழந்து சுடலையில் காவல்காரனாதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் 
செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.இராணுவனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு 
முன் சோதிடர்களை அழைத்து நல்லமுகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய 
சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, 
சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று
 சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு 
நிறைய எள்நெய் விட்டு தீபமாக
 சனீஸ்வரனுக்கு 
முன் வைத்து வழிபட வேண்டும்.துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து சந்திரனாத் பின் சிவன் அல்லது விஷ்ணு சந்நிதானத்தை அடைந்து
 சனிதோஷம் நீங்கப் பிரார்த்திக்க 
வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு 
விரதத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால்
 தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.சனீஸ்வரன் ஒருவருடைய ஜாகத்தில்
 சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5 இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனி என்றும், 12 இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனி
 என்றும் கூறுவர். இக்காலங்களில்
 புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு
 என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் 
வேண்டும்.ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள் விளக்கேற்றிச் சனீஸ்வரனை
 வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிரார்த்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்க வேண்டும். வீடு சென்று உணவருந்தி 
விரதம் முடிக்க வேண்டும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 
 

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் நகுலேந்திரன் வானுஷன்.20-09-20

யாழ்  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் அச்சுவேலி தோப்பை  வதிப்பிடமாகக்கொண்ட 
செல்வன் நகுலேந்திரன் (கண்ணன் )வானுஷன். (வானு ) அவர்களின் 
 பிறந்த நாள் .20-09-2020 .இன்று நண்பர்களுடன் இன்று மாலை கொன்னடினர்
  இவரை அன்பு  அப்பா   அன்பு அம்மா அன்புத்தாத்தா அம்மம்மா  
அன்புச்சகோதரி பூட்டி பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும்  சன்னதி முருகன்
   இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,
நோய் நொடிகளின்றி    
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
நாம் ஏன் அன்னதானம் வழங்க வேண்டும் தெரியுமா.

 


அன்னதானம் என்பது இருக்க பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பது அல்ல .பொருள்  அதையும் அதையும் தாண்டி அதில் பல விஷயம் உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மனம் முழுவதும் இறை பண்பு நோக்க.மனம் ..
முழுவதும் இறை பண்பு நோக்கியே இருக்கும். எப்போதும் இறைவன் குறித்த சிந்தனை அதிக வலுப்பெறும்.  வலுப்பெறும்.  அவருக்கு 
தேவையான உணவு கிடைக்காத 
சமயத்தில், வயிற்று
 பிழைப்பிற்கு வேறு வேலை செய்ய வேண்டிய சூழல் நிலவினால், ஆன்மீகத்தில் ஞான நிலையை, இறையை காண விரும்பும் மனம் மாறும். ஆன்மீகத்தை...காக்க, தர்ம சிந்தனை வளர்க்க ஆன்மீக வாதிகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது...
இறைவன் என்றால் இறை+இரை- அதாவது, உணவு + இரக்கம் கொண்டாரை இறைவன் என்பர்.அனைத்து...
உயிர்கள் மீதும் இரக்கத்துடன் இறையை (உணவை) கொடுத்து வாழ்பவன்...
மனித தன்மையினால் சுமந்து கொண்டுள்ள தம் கர்மாவை நீக்கி இறைவனுக்கு ஒப்பானவன் ஆகிறான்....
. இது தான் அன்னதானம் செய்வதற்கு உண்மையான காரணமாக கூறப்படுகிறது....

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி  தனது ஏழாவது
பிறந்த நாளை 12.09.2020..இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்தங்கச்சி அன்பு ஐய்யா அப்பம்மா மார் பூட்டி -தாத்தாமார் அம்மம்மா மார்
மாமா மார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி
அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன் பல்கலைகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
செல்வி லோவிதன் யஸ்வினிக்குட்டிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று..
 பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம்.!
வாழ்க வளமுடன்;;;;;;;;
பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு நிழல் படங்கள் இணைப்பு 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.20

 

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது ஏழாவது .
பிறந்த நாளை 12.09.2020..இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்தங்கச்சி அன்பு ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன்  பல்கலைகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
செல்வி லோவிதன் யஸ்வினிக்குட்டிக்கு .
...............
சரிந்து விழுகின்ற
சாமானியர் அல்லர்-இவர்
சரித்திரம் படைக்கின்ற
சாதனையாளர் ,
தோல்வியை சந்திக்காத
மனிதரில்லை-எனினும் அதை
வெற்றிகளாக குவிக்கும்
விந்தையாளர் இவர் ,
தோல்வியில் வீழ்ந்தவனும்
கூட-இவருடைய
விவேக பேச்சினால்
வெற்றியாளனாகிறாள் ..!
வெற்றியாளர்களை உருவாக்குகின்ற
சாதனையாளர்,
செல்வி லோவிதன் யஸ்வினி 
குட்டிக்அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
வாழிய நீ பல்லாண்டு பல்லாண்டு
எங்கள் அன்பு யஸ்வினி குட்டிக்குயை 
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


அனைவருக்கும் தெரியுமா.ஆன்மிகம் என்றால் என்ன?

 

.ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் .பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி 
செய்வது மட்டுமல்ல. .
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு...பயந்து வாழ்வது  ஒருவகை ஆன்மீகம்...நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், ..
அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது .வலது கையில் செயல்  திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில்  வெற்றி தானாகவே வந்து சேரும். இது  ஒரு வகை 
ஆன்மீக வாழ்க்கை....
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
 அது தான் உண்மையான பக்தி .
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து,..எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து,...அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் 
அதுவே உச்சகட்ட ஆன்மீகம்....
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. .இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து,...
அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில்...இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்...நல்வாழ்வு வாழ இவை 
அனைத்தும் ஒரு ஐதீகம்..

நிலாவரை.கொம் செய்திகள் >>>>பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் 09,09,20

 

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2020. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள்பெற்று 
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் சுசி ,07.09.20

 

யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள 
திரு .திருமதி .தயாவரன் சுசிகலா (சுசி) அவர்களின் பிறந்த நாள்  07.09.2020..இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்
 கொண்டாடுகின்றார்
  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வகுமாரன் மாலா 06-09,20


யாழ் சங்கானை மற்றும் பளையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி செல்வகுமாரன் ,(செல்வா.சங்கானை. & மாலா.பளை ) தம்பதிகளின்   திருமண நாள் -06-09-2020 -இன்று  
இவர்களை  அன்புஅப்பா அம்மா அன்புப் பிள்ளைகள்   அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள்சிறியவர்கள் மாமா  மாமி மச்சான் 
மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் தம்பதிகள்  சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் மற்றும் முருகன் இறை அருள் பெற்று 
 சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் இணை பிரியாமல் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடம் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>¨
வாமன ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட வேண்டிய நன்னாள்

 

துயர் தீர்க்கும் வாமன ஏகாதசி. விரதம் வாமன ஏகாதசி அன்று மேற்கொள்ளும் உலகளந்த பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மன நலமும் உடல் நலமும் அருளும் இந்த ஏகாதசி திதியின் சிறப்புகளைப் புராணங்கள்
 போற்றுகின்றன.
ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசிக்கு பரிவர்த்தினி ஏகாதசி என்றும் வாமன ஏகாதசி என்றும் பெயர். வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத ஏகாதசி நாளில் என்பதால் இந்த ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்னும் பெயர் வாய்த்தது. பொதுவாகவே ஏகாதசி திதி மிகவு
ம் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது. 
அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் 
புராணங்கள் கூறுகின்றன.
வாமனர் 
தசாவதாரத்தில் தனிச்சிறப்பு மிக்க அவதாரம் வாமன அவதாரம். முழு மனித வடிவில் பகவான் எடுத்த முதல் அவதாரம் இது. குள்ள உருவில் பிரம்மச்சாரியாகத் தோன்றி, தோன்றிய நாளிலேயே வேதங்கள் அனைத்தும் பயின்று மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார் என்கிறது புராணம். மேலும் இந்த அவதாரத்தில் அவர் மகாபலியை 
சம்ஹாரம் செய்யவில்லை. மாறாக பாதாள லோகத்துக்கே அனுப்பினார் என்பது சிறப்பு. பாதாள லோகத்தில் வாழும் காலம் முழுமையும் மகாபலியோடு விக்ர ரூபமாக எழுந்தருளியிருப்பதாகவும் வாக்குத் தந்த வண்ணமே இருந்தார் என்பதும் இந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு. 
அவ்வாறு மகாபலி பகவானின் திருவுருவைப் பாதாள லோகத்தில் பிரதிஷ்டை செய்த நாள்.
திருவடியின் மகிமையைச் சொல்வது இந்த அவதாரம். பகவான் ஓங்கி உலகளந்தபோது அவரின் இடுப்பு ஸ்வர்க்க லோகத்திலும் வயிறு மஹர்லோகத்திலும் மார்பு ஜனலோகத்திலும் கழுத்து தபோலோகத்திலும் தலை சத்ய லோகத்திலும் இருந்தன என்கிறது புராணம். அத்தகைய மாபெரும் உருவெடுத்த அந்தப் பெருமாளின் திருவடிவே உலகளந்த பெருமாளாக ஆலயங்கள் தோறும் வணங்கப்படுகின்றன.
திருப்பாவை 
ஆலயங்களில் நாம் தரிசிக்கும் பெருமாள் திருமேனியின் சிறிய திருவடிதான் அந்நாளில் மூவுலகங்களையும் அளந்தது என்று அறிந்து தெளிந்து பணிவதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை அடையலாம் என்பதை அறிந்துதான் ஆழ்வார்கள் அந்தத் திருவடியைப் போற்றிப் பாடினார்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா 01-09-20

 

யாழ், வடமராட்சி,வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.கொரோனா 
அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று 
வருவதுடன்.01-09-2020. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடைமுறைகளையும் மீறி செல்வச் சந்நிதியில் திரண்ட அடியவர்கள்..!! முத்தேரில் எழுந்தருளி பவனி வந்து திருவருள் புரிந்த
 சந்நிதி முருகன்
இன்றைய தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானைப் பக்தி பூர்வமாகத் தரிசித்தனர். இந்நிலையில், மகோற்சவத்தின் பெருந்திருவிழாவான தீர்த்தோற்சவம் நாளை காலை இடம்பெறவுள்ளது.இதேவேளை,
 கொரோனா நெருக்கடி காரணமாக இம்முறை தாகசாந்தி, அன்னதானம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி 
எடுத்தல் போன்ற 
நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

Powered by Blogger.