குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை
நீங்கள் பெற முடியும்.
குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம்
நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும்.
அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை
மறந்துவிடுகிறார்கள்.
அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து
வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை
தெரிந்து கொள்வோம்.