ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, 4.30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்க வாசலில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா 
கடந்த, 26ம் திகதி இரவு 
திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியது.27ஆம் திகதி முதல் பகல்பத்து
 உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, 06.01.2020.இன்று காலை 4.30 மணிக்கு நடந்தது.இதற்காக அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை 
உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார்.
 அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக, 
சொர்க்க வாசல் பகுதிக்கு வந்து, காலை சரியாக 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை
 நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது 
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே 
திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு, 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.