அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

வாரம் ஒரு கீரை! மணத்தக்காளி!

தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தக்காளியும் ஒன்று. அதிக அளவில் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்துக் குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம். இப்படிப் பயன்படுத்தும்போது, கீரை சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும். மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்துச் சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் சரியாகிவிடும். மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது!

பாறைகளை உண்ணும் விநோத பெண்! (வீடியோ இணைப்பு)

நாம் சிறு பசிக்கு உண்ணும் பக்கோடா, வடை போன்ற ஸ்நாக்ஸ் ஆக கற் பாறைகளை உண்டு தீர்க்கிறார் பெண் ஒருவர்.பிருத்தானியாவின் Bedford நகரை சேர்ந்த Teresa என்ற பெண்ணே இவ்வாறு பாறைகளை உண்டு தீர்க்கிறார்.பாறைகளை தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் இவர் அடிக்கடி அதனை சுவைக்கிறார்.

யாரோ போட்ட பாதை : வழியின் சிறப்பால் வாழ்க்கை சிறக்கும்

அண்மையில் படித்தபின் நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும் வரிகளை, நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! “எப்போது உங்களால் கண்களுக்குத் தெரியாதனவற்றைப் பார்க்க முடிகிறதோ, எப்போது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வருகிறதோ, அப்போது, எதை உங்களால் முடியாது என்று உலகம் சொல்கிறதோ, அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்!” இந்த வரிகளை ஒருமுறைக்கு மூன்று முறை படித்தால் (நான் அப்படித்தான் படித்தேன்) உங்கள் சிந்தனைகள் பல அடுக்குகளில் மலர்ந்து விரியத் தொடங்கும். முதலில், கண்ணுக்குத் தெரியாதனவற்றை உங்களால் பார்க்க முடிகிறதா? ஒரு சிறிய விதையை உங்களால் ஒரு பெரிய மரமாகப் பார்க்க முடிகிறதா? உங்கள் மூன்று வயது மகனை அல்லது மகளை மிகப் பெரும் தொழிலதிபராக, மருத்துவராக, பொறியாளராக, விளையாட்டு வீரனாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பத்து பேரை வைத்துக் கொண்டு இயங்கும் உங்கள் நிறுவனத்தை இன்னும் 10 ஆண்டுகளில் ஆயிரம் பேர் உழைக்கும் நிறுவனமாக உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? உங்கள் நகரில் மட்டுமே விற்றுக் கொண்டிருக்கும் உங்கள் பொருள்களை இன்னும் 10 ஆண்டுகளில், இந்தியா முழுக்க விற்பனை செய்வதாக உங்களால் சிந்தனை செய்து பார்க்க இயலுகிறதா? இன்றைக்கு இல்லாத ஒரு நிலையை, இன்னும் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என்று ஒரு கால எல்லையை வரையறை செய்து கற்பனை செய்து பார்க்க முடிந்தால் சாதனையின் முதல் படிக்கு வந்து வீட்டீர்கள் என்று பொருள். இப்போது இல்லாத ஒன்றை, இப்போது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றைப் பார்ப்பதில் மிகப்பெரிய வெற்றியின் இரகசியம் மறைந்திருக்கிறது. புகையோடும், நெருப்போடும் எரியும் மெழுகுவர்த்தியை பார்த்த போதெல்லாம், எடிசனின் கண்களுக்கு அன்றைக்கு இல்லாத மின்சார விளக்குதான் தெரிந்தது. மறைந்துபோன காதல் மனைவியின் உடலைப் பார்த்ததும் ‘ஷாஜகான் கண்களுக்கு, தாஜ்மஹால்தான் தெரிந்தது. பறவைகள் பறக்கும் போதெல்லாம், ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தைத்தான் கண்டார்கள். இலட்சியவாதிகளின் உடல்கள் நிகழ்காலத்தில் இருந்தாலும் உள்ளங்கள் என்னவோ எதிர்காலத்தில்தான் உலா வந்து கொண்டிருந்தன. அவர்களுடைய செயல்பாடுகள் அந்த எதிர்கால கனவுகளை நோக்கி நடை போட்டுக்கொண்டிருந்தன. இலக்கை நோக்கி நகருங்கள்; உங்கள் வேகத்திற்குத் தகுந்தாற்போல் நீங்கள் விரைவிலோ அல்லது நிதானமாகவோ உங்கள் இலக்கினை இப்போது கண்களால் கண்டிராத ஒன்றை நிச்சயம் அடைவீர்கள். சாதனைகளை குவிக்க இரண்டாவது நிபந்தனை “நம்ப முடியாததை நம்பவேண்டும்”. நம்பமுடியாதது என்று சொல்லிவிட்ட பின்பு அதை எப்படி நம்புவது? இரண்டு செய்திகளை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, ஓன் மாண்டினோ என்ற மிகப்பெரிய எழுத்தாளர் கூறியது போல, மிகப்பெரிய செய்திகளெல்லாம் ஆரம்பத்தில் முடியாதது போலத்தான் தோன்றும். இரண்டு, நம்ப முடியாதது என்றுதான் குறிப்பிட்டோமேயொழிய நடக்க முடியாதது என்று கூறவில்லையே! பின்வரும் கற்பனைகளுக்கு முடியும் அல்லது முடியாது என்று விடையளியுங்கள். 1. இன்னும் 5 வருடத்தில் உங்கள் வருமானம் 10 மடங்காகும் முடியும் / முடியாது 2. இன்னும் 5 வருடத்தில் எகிப்து நாட்டில் பிரமிடைப் பார்ப்பீர்கள் முடியும் / முடியாது 3. இன்னும் 1 ஆண்டில் உங்கள் போட்டியாளருக்கு சென்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய வாடிக்கையாளரை நீங்கள் பறித்துக் கொள்வீர்கள் முடியும் / முடியாது 4. இன்னும் 1 ஆண்டில் இதுவரை தெரியாத வேறு ஒரு மொழியை சரளமாகப் பேசக் கற்றுக் கொள்வீர்கள். முடியும் / முடியாது 5. இன்னும் 1 ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள் முடியும் / முடியாது 6.இன்னும் 5 ஆண்டுகளில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு அல்லது ஏலகிரிமலை ஆகிய இடங்களில் (ஒன்றில்) ஒரு பண்ணை வீடு கட்டுவீர்கள் முடியும் / முடியாது 7. யாரும் உற்பத்தி செய்யாத ஒரு பொருளை இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செய்து சந்தையில் விற்பீர்கள். முடியும் / முடியாது 8.இன்னும் இரண்டு ஆண்டுகளில் பத்து இடங்களில் உங்களுக்கு சொத்து இருக்கும் முடியும் / முடியாது 9. இன்னும் 1 ஆண்டில் ஒரு நூல் எழுதி வெளியிடுவீர்கள் முடியும் / முடியாது 10. இன்னும் ஓர் ஆண்டில் உங்களுக்காக 100 கைகள் வேலை செய்யும் முடியும் / முடியாது இந்த கற்பனைகளைப் படித்தவுடன் எத்தனை கற்பனைகளுக்கு முடியும் என்று விடையளித்தீர்கள்? சில கற்பனைகளைப் படித்தவுடன் “இது நமக்குத் தேவைதானா?” என்ற எண்ணம் தோன்றும். அல்லது “இது நடந்து நான் என்ன சாதிக்கப் போகிறேன்?” என்ற எண்ணம் வரலாம். வேறு சில கற்பனைகளைப் படித்தவுடன் “நிச்சயமாக இது நடக்காது” என்று தோன்றலாம். சில எண்ணங்களின் மீது ஆசையே வராது. எடுத்துக்காட்டாக, எகிப்து பிரமிடை நான் பார்க்க வேண்டும்? தேவையில்லை. (காரணம் – அவ்வளவு பணமில்லை) வருமானம் 10 மடங்காகும் (அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை) போட்டியாளருடைய வாடிக்கையாளரை இழுப்பேன் (நமக்கெதற்கு வம்பு) இரண்டு ஆண்டுகளில் 10 இடங்களில் சொத்து இருக்கும். (அவ்வளவு வசதி வராது) யாரும் உற்பத்தி செய்யாத பொருளை…… (அந்த அறிவு எனக்கில்லை) வேறு மொழி பேசுவேன். (பேசி என்ன இலாபம்?). இப்படி ஒவ்வொரு கற்பனை வரும்போதும் ஏதாவது ஒன்றைநம் உள்மனமே பேசி, அதனை தடுத்து விடுகின்றதே, ஏன்? மேற்கண்ட 10 செய்திகளுமே நடக்க வேண்டுமென்று யார் விரும்ப மாட்டார்கள்? வருமானம் 10 மடங்கு அதிகரித்தால் வருத்தமா படுவோம்? 10 இடங்களில் சொத்து வாங்கினால் கசக்கவா செய்யும்? பின் ஏன் முடியாது என்று எண்ணுகிறோம்? அதற்கு வெவ்வேறு காரணங்களைச் சொல்லுகிறோம்? அந்தக் கற்பனைகளை, இலக்குகளை அடைய நமக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் முடியாது என்று சொல்லிவிடுகிறோம். நாம் விரும்பினாலும், ஏங்கினாலும் இவையெல்லாம் எங்கே நடக்கப் போகிறது? நடப்பதற்கான சாத்தியக்கூறே இல்லையே என்கின்ற அவ நம்பிக்கையால், அவற்றிற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை! முதலில் நம்பவேண்டும்; நம்பவேண்டும்; நிச்சயம் நடந்தேயாக வேண்டும் என்று நம்பவேண்டும்! கண்ணால் காணமுடியாததைக் கண்டாயிற்று! அடுத்து நம்பமுடியாததைப் போன்ற, அந்தக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று நம்பத் தொடங்கி விட்டீர்களா? இனி நடந்துவிடுமா? நிச்சயம் நடக்காது! உங்கள் பயணத்தைத் தொடங்காதவரை! இலக்கு என்ன? அது எங்கே இருக்கிறது? – என்று தெரிந்தபின் அதை நோக்கி எப்படி நகருவது? எங்களுடைய இலக்கை அடைவதற்கு பத்து ஆண்டுகள் என்று வைத்துக் கொள்ளலாம். இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு எத்தனை நாட்கள் என்று கணக்கிடுங்கள் 3650 நாட்கள்! 3650 நாட்களும் என்ன செய்யப்போகிறீர்கள்? அன்றாடம் செய்கின்ற அதே வேலைகளை, செக்குமாடு சுற்றுவது போல, திரும்பத் திரும்ப செய்யப் போகிறீர்களா? அதே நேரத்தில் எழுவது, குளிப்பது, உண்பது, வேலைக்குச் செல்வது, அதே வேலை – அதே வாடிக்கையாளர்கள் – அதே சிக்கல்கள் – அதே வருமானம் – திரும்ப வீடு – இரவு உணவு உறக்கம்….. அடுத்த நாளும் அதே! இப்படியே 3650 நாட்களும்! அதே வேலைகளை திரும்பத் திரும்பச் செய்தால், இதுவரை என்ன கிடைத்ததோ, அதுதான் திரும்பக் கிடைக்கும்! புதியதாக ஒன்றும் நடக்காது! இன்னும் சொல்லப் போனால், முன்பு கிடைத்ததைவிடக் குறைவாகவும் கிடைக்கலாம்! உங்களுடைய போட்டியாளர்கள் உங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டால், உங்களுக்குக் கிடைத்து வந்ததில் ஒரு பகுதியை இழக்கவேண்டியும் வரலாம்! ஆகவே ஒன்றில் உறுதியாக நில்லுங்கள்! இன்று புதியதாக என்ன செய்தீர்கள்? இதுவரை செய்யாத புதிய செயல் என்ன செய்தீர்கள்? வாழ்க்கையில், 10 ஆண்டுகளில் புதியதாக ஒன்றை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டிருந்தால் தினம் புதியதாக ஒன்றை செய்தாகவேண்டும்! அல்லது புதியதாக ஒன்றை, மேலும் மேலும் சிறப்பாகவும், அதிகமாகவும் செய்துகொண்டே இருக்க வேண்டும். இரண்டு கேள்விகள்: 1. எங்கே செல்லப் போகிறீர்கள்? 2. அதற்காக இன்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கோவையிலிருந்து சென்னை செல்வது என்று தீர்மானித்துவிட்டீர்கள். கோவை இரயில் நிலையத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தால் நிச்சயம் சென்னை செல்ல முடியாது. ஏதாவது ஒரு தொடர் வண்டியில் உட்கார வேண்டும். ஏறிய உடனே சென்னை வந்துவிடாது. ஒவ்வொரு கிலோ மீட்டராக, இரயில் நிலையமாகக் கடந்த பின்னரே, சென்னையை அடைய முடியும்! அடுத்து, “எவ்வளவு நேரத்தில் அடையப்போகிறீர்கள்?” என்பது எந்த வண்டியில் ஏறினீர்கள் என்பதைப் பொறுத்தது. பணம் செலவாகிறதே என்று பேருந்திலும், சைக்கிளிலும் சென்றால், விரைவில் சென்னையை அடைய முடியாது? எனவே, வெற்றி இலக்கை அடைவது என்பது, எந்த முறையில், எந்த வழியில், என்ன வேகத்தில் செல்லுகிறீர்கள் என்பதையும் பொறுத்தது. ஆகவே சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து வேகத்தைக் கூட்டுங்கள். ஒரு காலத்தில் உங்களைப் பார்த்து, எதை உங்களால் முடியாது என்று உலகம் சொன்னதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்!,,,, தி.க. சந்திரசேகரன் ,,

அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

பூஜை அறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறுநாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லை எனில் தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இருக்கும் போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தியினால் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கு ஏற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோவில்களில் கூட கர்ப்பகிரகத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிரகத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோவிலுக்கு நல்லதுதானே என்று சொல்லலாமா? ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்க வேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக் கொண்டு பூஜையையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தை கடைப்பிடித்தால் அபசாரம் இருக்காது.

பகவத் கீதையை மொழிபெயர்க்கும் போலாந்து பெண்

ரஷ்யாவில் சர்ச்சைக்கு உள்ளாகி வெற்றி பெற்ற பகவத்கீதையை போலந்து பெண் ஒருவர் போலிஷ் மொழியில் மொழிபெயர்கிறார். போலந்து நாட்டை சேர்ந்த அன்னாரசின்ஸ்கா (வயது 60). இவர் வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளுக்‌கும் ‌மேலாக தங்கியிருந்து சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். நான்கு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது கணவரையும் குழந்தைகளையும் சமஸ்கிருத மொழியில் பேசவும் எழுதவும் ஆர்வத்தை உருவாக்கினார். தற்போது அவர்கள் வீட்டில் சமஸ்கிருத மொழி சரளமாக பேசப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது இவரது சகோதரரும் தன்னுடைய பெயரை யோகானந்த் என்று பெயரை மாற்றி வாரணாசியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்னா ரசின்ஸ்கா, பகவத் கீதையை போலிஷ் மொழியில் மொழிபெயர்க்க உள்ளார். இதுகுறித்து இந்தியா போலந்து கலாசாரத்துறை தலைவர் ஜானுஸ்கிரிஸ்‌ஜோவ்ஸ்‌கி, அன்னாவின் சேவைகளை வெறும் வார்த்தைகளால் புகழமுடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலாந்திற்கான இந்திய தூதர் மோனிகா கபிலா மோஹதா, சுயநலமில்லாத இவரது சேவையால் வளரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த புத்தகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வாழ்க்க‌ை தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்கீதை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சகல தோஷங்கள் விலக - வில்வ பூஜை

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் - என்று அழைக்கப்படும் ஐந்து மரங்களுள் ஓன்று வில்வமரம். மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை. லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. உன் அனுக்ரஹத்தால் உண்டான வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும், என்று மகாலக்ஷ்மியை பிரார்த்திப்பதாக ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் பூரண அருள் கிட்டும். அதோடு சிவனுக்கும் மிகவும் விருப்பமானது வில்வம். வில்வ இலைகளை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும், வேர்கள் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகின்றது. சிவபூஜையின்போது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதால், சகல தோஷங்களும் விலகும். வில்வ இலை தீய சக்திகள் நம்மை நெருங்காதவாறு காக்கும்.

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்தவீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது. பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம். கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

கடவுள் இயேசுவுக்கே வந்த சோதனை ஈரானிய ஊடகம் பெரும் சர்ச்சை

யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது. எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது. 'God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written "La elah ela Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is the only God and Mohammad his prophet. மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது. துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர். இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நட்சத்திரங்கள் அதிஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான் புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி அத்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான் அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர் கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர் பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான் திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்) சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்

பொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு

பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்குரிய சில விடயங்களை அறியமுடிந்தது. இந்தக் கோயில்கள் பாதுகாப்பாக உள்ள பொலன்னறுவைத் தொல்லியல் சின்ன வலயங்களுக்கு மிகத் தூரத்தில், ஹிங்குராங்கொட வீதியில் 2 கி.மீ தொலைவிலுள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீதி மாட்டுவண்டிப் பாதையாக இருந்தது. இம்மூன்று கோயில்களிலும் பெருந்தொகையான தமிழ்ச்சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. மூன்றாம் சிவாலயம்
மூன்றாம் சிவாலயத்தைப் பொறுத்தவரையில் அதனை அகழ்வுசெய்து கண்டறிந்தவர்கள் சாசனங்களை அவதானிக்கவில்லை. இந்தப்பணி ஏறக்குறைய 106 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. கோயிலைப்பற்றிய அகழ்வாய்வு அறிக்கையிலும் அங்குள்ள சாசனங்கள் பற்றி எதுவித குறிப்புகளும் காணப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தொல்பொருளியல் திணைக்களம் இக்கோயில் பற்றி புதிதாக எந்தப் பணியினையும் நிறைவேற்றவில்லை. சில தினங்களுக்கு முன்பு இக்கோயில் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. நேரே பார்த்தபொழுது கட்டிடத்தின் எந்தப் பகுதியாவது சேதமடையவில்லை என்பது உறுதியாகியது. ஆனால் மூலஸ்தானத்திலுள்ள உடையாரைப் பெயர்த்தெடுத்து கீழே நிலத்தை மிக ஆழமாகத் தோண்டியுள்ளனர். இது புதையல் தேடுவோரின் வேலை போலவே தெரிகின்றது. அதிக்ஷ்டானத்தில் குமுதப்படையில்,(வாசல்முகப்பில்) கோயிலின் மூன்று பக்கங்களில் சாசன வாசகங்கள் மிகச் சிறிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளன. இவை மிகத் தெளிவாகத் தெரிகின்றன. மேலும், இக்கோயிலின் வாசற்படியிலும் முகமண்டபத்து நுழைவாயிற் கதவின் மேலமைந்த உத்திரத்திலும் இரண்டு வரியில் எழுதப்பட்ட சாசனம் தெளிவாகத் தெரிகின்றது. கோயிலின் தெற்குப் பக்கத்தில் துண்டங்களாகக் காணப்படும் கருங்கற்கள் பலவற்றில் எழுத்துகள் தெரிகின்றன. இக்கோயில் கட்டட அமைப்பில் வானவன் மாதேவி ஈஸ்வரத்தை முன்மாதிரியாகக் கொண்டது. இது பாதுகாக்கப்படவேண்டிய ஓர் அரும் தொல்பொருட்சின்னம். அங்குள்ள சாசனங்களைப் படித்து வெளியிடுவதற்கான முயற்சிகள் மிகவிரைவில் நடைபெறவேண்டும். ஐந்தாம் சிவாலயம்
மூன்றாம் சிவாலயத்திற்கு எதிர்ப்புறத்தில் தெருவின் மறுபக்கத்தில் அமைந்திருப்பது ஐந்தாம் சிவாலயத்தின் அழிபாடுகள். இதுவே பொலன்னறுவைக்காலத்து இந்துக் கோயில்களில் மிகவும் பெரியது. செங்கற்கட்டுமானம். வழமையாகவுள்ள கட்டடங்களுக்கு மேலாக மூன்று பெரும் மண்டபங்களும் அமைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் முன்னால் அமைந்த மண்டபம் மிகவும் அகலமானது. கோயிலில் மிகவும் உயரமான தூண்கள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மூலஸ்தான, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றின் நுழைவாயிலில் அமைந்த தூண்களிலே சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. மண்டபம் ஒன்றிலே உடைந்த சாசனம் எழுதிய பல கற்கள் காணப்படுகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகளாக மழையினாலும் வேறு இயற்கை சக்திகளினாலும் பாதிக்கப்பட்டதால் அவற்றிலே பெருமளவிற்கு எழுத்துகள் சிதைந்துவிட்டன. ஆயினும் மிக நுட்பமான முறையில் படியெடுப்பதன் மூலமும் படம் எடுப்பதன் மூலமும் அவற்றின் சில பகுதிகளையேனும் மீட்டுக்கொள்ள முடியும். விக்ஷ்ணு கோயில்
அருகிலுள்ள விக்ஷ்ணு கோயிலில் ஏனைய இரண்டு கோயில்களைக் காட்டிலும் கூடுதலான அளவிலே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. நுழைவாசற்படி மூலஸ்தானப்படி ஆகியவற்றிலும் பல தூண்களிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மைக்காலத்திலே சேதமடைந்துள்ள மூலஸ்தானப் படியிற் சதுரவடிவில் அமைந்த மிக நீளமான தூண்களை அடுக்கிவைத்துள்ளனர்.
மேற்புறத்திலுள்ளவற்றிலே சாசனங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்தக் கோயில் வளாகத்தில் பல இடங்களில் சாசனம் எழுதிய, துண்டமான கற்கள் காணப்படுகின்றன. ஓர் அருங்காட்சியகத்திலே, தூண்சாலையிலே நிரைநிரையாக பல வரிசைகளில் நிறுத்தி வைக்கக்கூடிய சாசனம் எழுதிய தூண்கள் ஐந்தாம் சிவாலயத்திலும் அதனை அடுத்து இருக்கும் விக்ஷ்ணு கோயிலிலும் காணப்படுகின்றன. இச்சாசனங்கள் அனைத்தும் 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. சமய வழிபாடுகள், சமூகநிலைகள் என்பன பற்றி இவற்றிலே மிகவும் பயனுடைய விபரங்கள் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொலன்னறுவை நகரத்து மறைந்துபோன வரலாற்றின் ஓர் அத்தியாயத்தை இவற்றின் மூலம் மீட்டுக்கொள்ள முடியும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.” எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.

31வது திருமண நாள் வாழ்த்து திருதிருமதி தியாகராஜா

திரு திருமதி தியாக ராஜா (தேவன்) தம்பதிகளின் முப்பத்தோராவது(23:05:12) திருமண நாள் ♥இத்தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வழ வாழ்த்துகின்றனர் .இவர்களை நவற்கிரி இணையமும் வாழ்த்துகின்றது .

பிறந்தநாள் வாழ்த்து தர்ஷிகன் [19.05.2012]இன்று [19-05-2012 ]கனடா “மொன்றியல்” பிறந்தநாளை கொண்டாடும்
தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 12வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.இவரை அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் நவக்கிரி(www.navatkiri.com)
தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு

தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு.. தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை

Gurupeyarchi 17.05.2012

மருதமலை மாமணியே - இளம் பாடகர் விக்னேஷ் (Super Singer )Junior Vignesh

VigneshFinals

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய 'அம்மா' எனும் உன்னத வார்த்தை

'அம்மா' உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வானது. அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உத்தம உறவின் உன்னதங்களை நினைவு கூர உலக நாடுகள் பலவற்றில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே. அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள். அமெரிக்காவில் வாழ்ந்த அன்னா மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொற்றி அன்னையர் தினம் கொண்டாடப்படுவதாக பொதுவாகக் கூறப்படுகிறது. எனினும் பண்டைய காலத்தில் பெண் தெய்வங்களை விசேடமாக வழிபடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுவதாகவும் மாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே பொதுவாக அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது. தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. அதனை யதார்த்தமாக உணர்த்துகின்ற அன்னையின் பெருமையையும் இலகுவில் வார்த்தைகளாக்கிவிட முடியாது. அது நீலவானில் ஊஞ்சல் கட்டுவது போல் பத்துப் பௌர்ணமிகள் சுமந்து, முத்துப்போல் பெற்றெடுத்துக் காத்து, காலம்முழுவதும் தனக்காகவன்றி குழந்தைகளுக்காக வாழும் தெய்வம் தாய். மானுட வாழ்வில் அன்பின் முதல் வெளிப்பாடாகக் கருதப்படும் தாயன்பு வாழ்வின் அந்தம் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம். இந்நிலையில் அன்னையருக்காக ஒருதினத்தை ஒதுக்குவதென்பது சிரமமான காரியமே. கீழைத்தேய நாடுகளில் தாயைப் பிரிந்துவாழாத நிலையே பொதுவாகக் காணப்படுவதால் அன்னையர் தினம் பற்றிப் பெரிதாக சிந்திப்பதில்லை. எனினும் எம்மை இவ்வுலகுக்கு ஈன்றெடுத்த தாய்க்காக அந்த அன்பை உணர்வதற்காக ஒருநாளை பிரத்தியேகப்படுத்துவதில் தவறில்லை என்றே கூற முடியும்.பெண்ணின் அதியுயர் நிலையாக மதிப்பிடப்படும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்து அன்பான அந்த உறவுக்காக அன்பைப் பகிர்வோம். -ஆர்.நிர்ஷன்

இந்த இணைய தொடர்புகளுக்கு

வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் ...இந்த இணையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் ஆக்கங்களையும் ஊக்கதையும் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் இத்தளத்தில் கோவில் நிகழ்வுகள் ,பாடசாலை ,திருமண பிறந்தநாள் ,மற்றும் நவக்கிரி கிராமத்து நிகழ்வுகள் முதல் கொண்டு இணைக்கவுள்ளோம்.மீண்டும் மறு மடலில் நன்றி இணைய நிர்வாகி

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா (00/00/00)

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம்

உலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை (வீடியோ இணைப்பு)

குழந்தை என்றால் எல்லோருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்புக்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும். இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துகின்றது.

மரக்கறி, தேங்காய் விலைகள் வீழ்ச்சி; உற்பத்தியாளர்கள் சிரமத்தில்

சாவகச்சேரிச் சந்தையில் மரக்கறி மற்றும் தேங்காய் போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 100 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட மரக்கறி வகைகள் தற்போது கிலோ முப்பது ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளன. குடாநாட்டு மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தம்புள்ளவிலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறி வகைகளும் கிலோ 40 ரூபாவாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அண்மைக் காலமாகப் பூநகரிப் பிரதேசத்தில் இருந்தும் பொதுமக்களும் படையினரும் பெருமளவு மரக்கறி வகைகளைச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உற்பத்தியாளர்கள் பெருமம் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். இதேவேளை, சந்தையில் தேங்காயின் விலையும் ஒரு மாதமாக வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. பெரிய தேங்காய் ஒன்று 18 ரூபாவாகவும் சிறிய தேங்காய் 10 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் வன்னிப் பிரதேசத்திலிருந்து பெரும் எண்ணிக்கையில் தேங்காய்கள் வாகனங்களில் கொண்டு வரப்படுவதால் தேங்காயின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையலாம் என்று தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வண்ணார்பண்னை நாச்சிமார் கோவில் அம்பாள் திருவிழா (பட இணைப்பு)

வண்ணார்பண்னை நாச்சிமார் கோவில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் வருடாந்தத் தேர்த் திருவிழா இ;ன்று நண்பகல் இடம் பெற்றது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து அடியார்கள் வருகை தந்து தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டனர். அம்பாள் வீதியுலா வரும் காட்சியைப் படங்களில் காணலாம்.
Powered by Blogger.