பகவத் கீதையை மொழிபெயர்க்கும் போலாந்து பெண்
ரஷ்யாவில் சர்ச்சைக்கு உள்ளாகி வெற்றி பெற்ற பகவத்கீதையை போலந்து பெண் ஒருவர் போலிஷ் மொழியில் மொழிபெயர்கிறார். போலந்து நாட்டை சேர்ந்த அன்னாரசின்ஸ்கா (வயது 60). இவர் வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது கணவரையும் குழந்தைகளையும் சமஸ்கிருத மொழியில் பேசவும் எழுதவும் ஆர்வத்தை உருவாக்கினார்.
தற்போது அவர்கள் வீட்டில் சமஸ்கிருத மொழி சரளமாக பேசப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது இவரது சகோதரரும் தன்னுடைய பெயரை யோகானந்த் என்று பெயரை மாற்றி வாரணாசியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அன்னா ரசின்ஸ்கா, பகவத் கீதையை போலிஷ் மொழியில் மொழிபெயர்க்க உள்ளார்.
இதுகுறித்து இந்தியா போலந்து கலாசாரத்துறை தலைவர் ஜானுஸ்கிரிஸ்ஜோவ்ஸ்கி, அன்னாவின் சேவைகளை வெறும் வார்த்தைகளால் புகழமுடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலாந்திற்கான இந்திய தூதர் மோனிகா கபிலா மோஹதா, சுயநலமில்லாத இவரது சேவையால் வளரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த புத்தகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
வாழ்க்கை தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்கீதை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :
செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen