சகல தோஷங்கள் விலக - வில்வ பூஜை

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் - என்று அழைக்கப்படும் ஐந்து மரங்களுள் ஓன்று வில்வமரம். மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை. லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. உன் அனுக்ரஹத்தால் உண்டான வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும், என்று மகாலக்ஷ்மியை பிரார்த்திப்பதாக ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் பூரண அருள் கிட்டும். அதோடு சிவனுக்கும் மிகவும் விருப்பமானது வில்வம். வில்வ இலைகளை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும், வேர்கள் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகின்றது. சிவபூஜையின்போது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதால், சகல தோஷங்களும் விலகும். வில்வ இலை தீய சக்திகள் நம்மை நெருங்காதவாறு காக்கும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.