மேலும் இதனால் ஏற்பட்ட ரூ.2500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தது. ஆனால் சாம்சங் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆப்பிள் நிறுவனம் தான் தனது தொழில்நுட்பத்தைத் திருடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தது. |
எங்களது தொழில்நுட்பத்தை திருடுகின்றனர்: சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம்
Tags :
செய்திகள்
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட கப்பல் 70 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, 11:41.21 மு.ப GMT ] |
ஏழு பேர் கொண்ட குழு நாண்டுகெட்டுக்குத் தெற்கே எழுபது மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த கப்பலை கண்டுபிடித்தனர். கடந்த 1944ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி U 550 என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், SSPan Pennsylvania என்ற எரிபொருள் சரக்குக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது. இவ்வாறு முறியடிக்கப்பட்ட கப்பல் எழுபதாண்டுகள் கழித்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜோ மஸ்ராணி, மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் இந்த கடல் பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார். இதற்காக ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்தார். இது குறித்து மஸ்ராணி கூறுகையில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த கப்பலை அமெரிக்க போர்ப் படைக் கப்பலில் பணியாற்றியவர்களின் நட்பு மற்றும் சுற்றத்தை அழைத்து காட்டப்போவதாக தெரிவித்துள்ளார். |
Tags :
செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் முறைகேடு
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
இந்த “ஸ்கோப்” நிறுவனம் சுமார் 500 மாற்றுத்திறனாளிகளிடமும் அவர்களின் பெற்றோர் மற்றும் கவனிப்பாளரிடமும் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆய்வை நிகழ்த்தியது. இந்த ஆய்வில் 46% பேர் தங்களைப் பற்றிய மோசமான அபிப்ராயம்தான் சமூகத்தில் நிலவுவதாகத் தெரிவித்தனர். 40% பேர் தங்களின் பெயர் கெட்டுப்போய்விடவில்லை என்றனர். 16% பேர் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருப்பதாக கூறினர். 64% தங்களை வெறுப்போடும், கசப்போடும் பார்ப்பதாகக் கூறினர். உடற்குறையைச் சுட்டி பெயர் வைத்து அழைப்பதாகவும் தெரிவித்தனர். 73% பேர் தாங்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து சாப்பிடுவதாகப் பொதுமக்களிடம் ஓர் கருத்து இருக்கிறது என்றனர். 87% பேர் தங்களுக்குத் தகுதியில்லாத நலத்திட்ட உதவிகளைப் பெற்று அனுபவிப்பதாகக் குற்றம் சாட்டினர். 84% பேர் ஊடகங்கள் தங்களை போலிப்பயனாளிகளாக மக்கள் மத்தியில் காட்டுவதாகக் கூறி வருந்தினர். “ஸ்கோப்” நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரிச்சர்டு ஹாக்கஸ், அரசு தொடர்ந்து போலிப்பயனாளிகளைக் களையெடுத்த போதும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, என்றார். பணி மற்றும் ஓய்வூதியத்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர், “அரசு முறைப்படி இந்த நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த சட்டங்களும் இருக்கின்றன. ஊடகங்கள் உருவாக்கிய எதிர்மறையான கருத்தாக்கங்களைப் போக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார். மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றுத் திறனாளிகள் அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமும் பயன்பெறலாம். இதற்கான தகுதியைக் கணிப்பது குறித்த தெளிவான விளக்கத்தை பிபிசி அறிவித்த பின்பு இந்த ஆய்வு விபரம் வெளியிடப்பட்டது |
Tags :
செய்திகள்
சீன மொழியில் மொழிபெயர்க்கப்படும் காந்தியின் புத்தகம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
அடுத்த ஆண்டு இந்த புத்தகம் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீன வர்த்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பீஜிங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். “பயங்கரவாதம் வன்முறை தலைவிரித்தாடும் தற்போதைய காலகட்டத்தில் காந்தியின் இந்த புத்தகம் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்” என ஜெய்சங்கர் தெரிவித்தார் |
Tags :
செய்திகள்
கட்டுக்கு அடங்காத காரை நிறுத்திய சிறுமி: தாத்தா மரணம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012 |
அப்போது தாத்தாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்டியரிங்கில் சாய்ந்துவிட்டார். ஆக்சிலேட்டரில் அவருடைய கால் இருந்ததால் கார் கட்டுப்பாடில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த மிராண்டா பயத்தில் அலறியவாறு துணிச்சலாக ஸ்டியரிங்கை கையில் பிடித்துக் கொண்டு பிரேக் மீது கால் வைத்து அழுத்தினாள். கார் தாறுமாறாக பாய்ந்து புதருக்குள் ஓடி நின்றது. அதிர்ஷ்டவசமாக மிராண்டா உயிர் தப்பினாள். ஆனால் முதியவர் மரணமடைந்துவிட்டார். இதுகுறித்து பால் பார்க்கரின் உறவினர்கள் கூறுகையில், அவருக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்தது. மாரடைப்பால் அவர் இறந்துள்ளார் என்றனர். 80 கி.மீ. வேகத்தில் சென்ற காரை துணிச்சலாக நிறுத்தி உயிர் தப்பிய மிராண்டா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் |
Tags :
செய்திகள்
ஜேர்மனியிடமிருந்து கத்தாருக்கு பீரங்கி ஏற்றுமதி: மெர்க்கெல் ஆதரவு
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
கடந்த மாதம், சவுதி அரேபியா தனக்கு 600 முதல் 800 வரையிலான எண்ணிக்கையில் இதே லெப்பர்ட்– 2 பீரங்கிகள் வேண்டும் என்று தன் விருப்பதைத் தெரிவித்துள்ளது. இந்த பீரங்கிகளின் விலை மதிப்பு 10 பில்லியன் யூரோவாகும். இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல தன் சொந்தக்கட்சியினர் கூட பிரதமர் மெர்கெல்லிடம், மத்திய கிழக்கு நாடுகளில் போரும், பூசலுமாக இருப்பதால், ஆயுத ஏற்றுமதி கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஜேர்மன் அரசு நேட்டோவிடம் ஆயுத விற்பனை நடக்கக்கூடிய நாடுகளின் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தியது. ஆனால் கடந்த மே மாதத்தில் சிகாகோவில் நடந்த நேட்டோ மாநாட்டில் இதற்காக கொண்டு வந்த தீர்மானம் உறுப்பினர் ஆதரவின்மையால் தோற்றுவிட்டது. எனினும் பிரதமரின் அலுவலகமும், பொருளாதார துறையும் கத்தாருக்கு 2 பில்லியன் யூரோ பீரங்கி விற்பனைக்கு ஆதரவளிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது. |
முகப்பு |
Tags :
செய்திகள்
சமயச்சடங்கை நிறைவேற்றும் உரிமை கோரி இளைஞர்கள் முறையீடு
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
மிக்கே டெல்பெர்க், மைக்கேல் கிராய்ஸ் மற்றும் அனில் செலிக், ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அரசிடம் கொடுப்பதற்காக ஒரு முறையீட்டைத் தயார் செய்து வருகின்றார். இதுவரை முந்நூறு பேரிடம் கையெழுத்துப் பெற்றுள்ளனர். யூதர்களும், முஸ்லீம்களும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய சுன்னத் சமயச் சடங்கை ஜேர்மானிய மருத்துவமனைகள் செய்ய மறுத்தால், பின்பு இவர்கள் நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று இந்த அறுவையை மேற்கொள்ள வேண்டிவரும். மேலும் இந்தத் தீர்ப்பு தங்களின் அடிப்படை சமய உரிமைகளை மறுப்பதாகவும் தெரிவித்தனர். இத்தீர்ப்பு குறித்த தகவல், அண்டை நாடுகளிலும் பரவியதால் இப்பிரச்னையில் ஜேர்மனி மற்றும் சுவிஸ் வாழ் இளைஞருடனான தாமும் இணைந்து கொள்வதாகத் ஆஸ்திரியாவின் யூத சமூகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிததது. ஜேர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும் இச்சமயச்சடங்கிற்கு சட்ட அந்தஸ்து வழங்குமாறு வற்புறுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த 1 KG அமைப்பின் தலைவரான ஆஸ்கார் டியூஷ் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார். ஜேர்மனியிலும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இச் சமயச்சடங்கைப் பாதுகாக்குமாறு அரசுக்கு தெரிவித்துள்ளனர் |
Tags :
செய்திகள்
தமிழர்களிடம் தொடரும் அவுஸ்திரேலியக் கனவும் ஆபத்துக்களும்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
வடக்கு கிழக்கில், கல்குடா, திருகோணமலை மற்றும் வாழைச்சேனைக் கடற்பரப்பினூடாகவும், மேற்குப் பகுதியில் காலி, நீர்கொழும்பு கடற்பகுதியிலிருந்தும் தமது பயணத்தை சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்கின்றனர்.
இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும், புகலிடம் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றமை சற்றே அவதானிக்கப்பட வேணடியது அவசியமாகின்றது.
இதற்கான காரணம் உள்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய நிரந்தர தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதே ஆகும்.
எனினும், யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கழிந்த பின்பே புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டவிரோத பயணங்கள் அதிகரித்துள்ளன. இனப்பிரச்சினை காலத்தில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சில குடும்பங்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு புகலிடம் தேடிச் சென்றுள்ளனர்.
ஆனால், தற்போது அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டில் 211 புகலிடக் கோரிக்கையாளர்கள் மாத்திரமே அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் ஆனால் இந்த ஆண்டில் மாத்திரம் அவ் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், இவ்வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கி பயணமானோரின் எண்ணிக்கை 1500இற்கும் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சரியான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இவ்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச் சென்றுள்ளனர். இவர்களில் 99 சதவீதமானோர்கள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் என்பதே அங்கு அதிர்ச்சியளிக்கும் விடயம்.
இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 700இற்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது இவர்களின் எதிர்கால வாழ்க்கையினை மேலும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இதேவேளை, வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களிடம் ஆசை வார்த்தைகளைக் காட்டி ஒரு சில மோசடிக் கும்பல் ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதுவும் அரசியலில் உயர்மட்டத்திலுள்ள அதிகாரிகளே இதற்கு துணை நிற்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் விடயம்.
யுத்தம் நிறைவடைந்த பின் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மிக விரைவாக பரப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றிற்கெதிரான போராட்டங்களும் அறிக்கைகளும் நமது தமிழ் அரசியல்வாதிகளால் தினம் தினம் செயற்படுத்தப்பட்டாலும் “செவிடன் காதில் சங்கூதினதைப்” போலாகிவிட்டது என்றே கூறலாம் அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இவ்வாறு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களின் நிலம் மற்றும் தொழில் வளங்களைச் சுரண்டத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வடக்கு கிழக்கில் மொத்தமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலின் ஒன்றெ இந்த சட்டவிரோத ஆட்கடத்திலின் பின்னணியில் உள்ளது எனலாம்.
அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளில் ஜனாதிபதியில் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சட்டவிரோத ஆட்கடத்தலின் பின்னணியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அடிக்கடி வடபகுதிக்கு சென்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் அவரது சகாக்களும் இச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு கடற்படையினர் துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“நெருப்பில்லாமல் புகையாது” என்பது போல எங்கேயோ இந்த தகவல் வெளிவந்த படியால் தான் ஜனாதிபதியில் புதல்வரின் பெயரும் இதில் அடிபட்டுள்ளது என்பதில் மறுப்பதற்கில்லை. காரணம் வடபகுதியில் சிங்களவர்களை விரைவாகக் குடியமர்த்தும் மகிந்த சிந்தனையின் ஒரு பகுதியாகக் கூட இது இருக்கலாம்.
வன்னியில் இராணுவக் கட்டுப்பாட்டில் வாழ்வாதார வசதிகள் இன்றித் தவிக்கும் மக்கள் தமது சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்றாவது தமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்குத் துடிக்கின்றார்கள்.
அந்தவகையில், கைக்கு கைமாறும் பணத்தினைப் போல பல முகவர்களின் கைமாறி பாதுகாப்பற்ற படகுப் பயணங்களை தொடர்கின்றனர் தமிழர்கள்.
இந்நிலையில், தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களினால் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் மற்றும் கொக்கோஸ் தீவகளிலுள்ள தடுப்பு முகாம்களில் பாரிய இட நெருக்கடி தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த ஆண்டில் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5100 புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதிக சன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவுஸ்திரேலியத் தகவல்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
எனினும், கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ளோர் நாளுக்கு நாள் புகலிடம்கோரி வரும் அகதிகளை புறக்கணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தக் கூடாது என, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் த மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்திருந்தாலும், அகதிகள் வருகின்றமையை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறிருக்கையில், புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
உயிரைப் பணயம் வைத்து பல நாட்கள் பட்டினிப் போராட்டத்தில் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச் செல்வோரை மீண்டும் அங்கிருந்து நாடு கடத்துவதால் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக புகலிடம் தேடிப் பயணிப்போர் எண்ணிக்கை குறையுமா என்பது கேள்விக்குறி.
பல லட்சங்கள் கொடுத்து, கஸ்டங்களை மீண்டும் விலைக்கு வாங்கும் இப்படகுப் பயணங்களால் எதிர்நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் மீண்டும் புகலிடம் கோரி இலங்கையிலிருந்து செல்பவர்கள் எண்ணிப் பார்ப்பார்களா?

கைபேசி கோபுரத்தால் புற்று நோய் வரும் அபாயம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
குடியிருப்பு பகுதிகளில் மொபைல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருக்கிறார். தனது மனுவிற்கு வலு சேர்க்கும் காரணங்களையும் அவர் மனுவில் கூறியிருக்கிறார். 30 வயதான தனது மகன் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாகவும், இதற்கு தனது வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த மொபைல்போன் கோபுரத்திலிருந்து வெளியான வீரியம் மிக்க கதிர்வீச்சே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார் |
Tags :
செய்திகள்
வடபகுதிக்கான பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்கியது
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு, அவுஸ்திரேலியா தமது பிரஜைகளை பயணிக்க வேண்டாம் என தடை விதித்திருந்தது.
எனினும் இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை சீரடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இப்தார் விருந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி, 427 பேர் கவலைக்கிடம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
இப்தார் விருந்தின் போது அளிக்கப்பட்ட உணவு விஷமானதில் இந்த சம்பவம்
ஏற்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்ற 437 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மேற்கு வங்கமாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
Tags :
செய்திகள்
கிளி. அக்கராயனில் புலி தப்பியதால் இராணுவத்தினர் கிலி
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
குறித்த புலியை சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியைத் தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இராணுவத்தினர் முயற்சி தோல்வியடைந்தமையானது, பிரதேச மக்களுக்கு மகிழச்சியை அளித்ததுடன், புலியை சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் கிராம மக்கள் கிண்டலாக பேசித் திரிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்! யாழ். அரியாலையில் சம்பவம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில் பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இவ் வாள்வெட்டு இடம்பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் யாழ். பொலிஸ் நிலைய உப பரிசோதகர் குறிப்பிட்டார்.
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் தீவிர தேடுதலில் பொலிஸார் அவர்களைத் தேடி வருவதாகவும் கூறினார்

யாழ். மானிப்பாயில் 15 பவுண் நகையுடன், 150,000 ரூபா பணமும் கொள்ளை
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது மகன் சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் வெளியில் சென்ற சமயம் வீட்டு வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைகளைப் பின்னால் இறுக்கிப் பிடித்தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சுறுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச்சீட்டைக் கிழித்து எறிந்து விடுவோம் என மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாடியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை இனங்காண்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன், இந்த மோப்பநாய்கள் மதவாச்சிப் பகுதியிலிருந்தே கொண்டுவரப்படவுள்ளதால் தற்போது இரண்டு பொலிஸ் காவலாளிகளை பாதுகாப்பிற்காக வீட்டிற்கு முன்னால் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தரம் குறைந்த டீசலினால் வாகனங்களுக்கு பாதிப்பு
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இதுவரையில், தரம் குறைந்த டீசலினைப் பயன்படுத்தி வாகனங்கள் பழுதடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த டீசலின் மாதிரி மேலதிக பரிசோதனைக்காக டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரம் குறைந்த டீசலைப் பயன்படுத்திய ஆறு புகையிரத என்ஜின்கள் சேதமடைந்துள்ளன.
புகையிரத என்ஜின்கள் பழுதடைந்திருப்பதால் போக்குவரத்து சேவைகளை நடாத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தரம் குறைந்த டீசலைப் பயன்படுத்திய 50 தனியார் பேரூந்துகள் பழுதடைந்துள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் தரம் குறைந்த எரிபொருட்களை இறக்குமதி செய்த காரணத்தினால் வாகனங்கள் பழுதடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பழுதடைந்த வாகனங்களுக்கு அரசாங்கம் நட்ட ஈட்டையும் வழங்கியிருந்தது.

கத்தாருக்கு பயிற்சி விமானங்கள் விற்பனை செய்யும் சுவிஸ்
.31.07l 2012, |
இதனால் உலகத்தரத்தில் தனது விமானப்படையின் தரத்தையும் உயர்த்த கத்தார் எமிரி விமானப்படை முடிவு செய்துள்ளதாக பிரேட்டுஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக பிளேட்டுஸ், இந்த கத்தார் வியாபாரத்தைக் கருதுகிறது. மே மாதம் இதே நிறுவனம் சவுதி அரேபியாவுக்கு 55, Pc – 21 ரக விமானங்களை அனுப்பியது. இந்தியாவுக்கு 75, PC – 7 ரக விமானங்களை அனுப்பியது. பிளேட்டுஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு கத்தார், சௌதி அரேபியா மற்றும் இந்தியாவுக்கு பயிற்சி விமானங்களை விற்பதால் 400 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பேஸிஃபிஸ்ட் என்ற சமாதான அமைப்பு தனக்கென்று ராணுவம் வைத்துக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, மனித உரிமை மீறலில் குற்றம் சாட்டப்பட்ட கத்தாருக்கு போர் விமானங்களை விற்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்த்தார் தனது குடிமக்களுக்கு எதிராகக் கூட இந்தப் போர் விமானங்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பயிற்சி விமானங்களை சட்டத்தின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வது மாபெரும் தவறாகும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. |
Tags :
செய்திகள்
ஒற்றுமை உணர்வை உணர்த்திய சுவிஸ் போராட்டம்
31.07. 2012, |
சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினிலும் இந்த ஆய்வை நிகழ்த்தியது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போராட்டக்காரர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். போராட்டக்காரர்களின் நோக்கத்தையும் அவர்களின் சமூகப் பின்புலத்தையும் அறிய விரும்பி, போராட்டம் நடைபெறும் வேளையில் இது குறித்து விசாரிப்பது சிறப்பானதாக இருக்கும் என்பதால் போராட்டக்களத்திலேயே ஆய்வை நடத்தியதாக ஜெனீவா பல்கலைக்கழகத்தின் மார்கோ கியூக்னி கூறினார். இந்தப் போராட்டங்களில் 40 – 64 வயதுள்ளவர்களும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களும் கலந்து கொண்டனர். கல்வியும் அரசியல் சிந்தனையும் இணைந்து செல்வதை இப்பங்கேற்பு உணர்த்தியது. பங்கேற்பாளரில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே கல்வியறிவில் குறைந்தவராக இருந்தனர். |
Tags :
செய்திகள்
கடுமையான சட்டங்களை தொடர்ந்து சுவிஸ்சில் குறைந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்கள்
31.07. 2012, |
கடந்த ஆண்டு 26,554 ஆக இருந்த குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 2011ல் 26,100 ஆக குறைந்துள்ளது. கடைபிடிக்கப்பட்ட சில நெறிமுறைகளை தொடர்ந்து விண்ணப்பத் தாரர்களின் எண்ணிக்கை தானாகவே குறைந்துள்ளது. பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை அலுவலகங்களில், கடைபிடிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தகுதியான கட்டாய மொழி படிப்பு, ஆகியவை விண்ணப்பங்கள் குறைவதற்கு காரணமாக இருந்ததாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2004ல் 32000மாகவும், 2008ல் 34,965மாகவும் அதிகரித்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை தற்போது நடப்பு ஆண்டுகளில் குறையத் தொடங்கியுள்ளன. |
Tags :
செய்திகள்
கிளி. அக்கராயனில் புலி தப்பியதால் இராணுவத்தினர் கிலி
.
கிளிநொச்சி மாவட்டம், அக்கராயன் கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குளிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
குறித்த புலியை சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியைத் தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இராணுவத்தினர் முயற்சி தோல்வியடைந்தமையானது, பிரதேச மக்களுக்கு மகிழச்சியை அளித்ததுடன், புலியை சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் கிராம மக்கள் கிண்டலாக பேசித் திரிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியைத் தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இராணுவத்தினர் முயற்சி தோல்வியடைந்தமையானது, பிரதேச மக்களுக்கு மகிழச்சியை அளித்ததுடன், புலியை சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் கிராம மக்கள் கிண்டலாக பேசித் திரிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Tags :
செய்திகள்
காய்கறி விற்கும் தாய்வான் பெண்ணுக்கு நோபல்பரிசுக்கு நிகரான ராமன் மகசேசே விருது
| ||||||||
இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி விற்கும் இப்பெண்ணும் தெரிவாகியுள்ளார். இது குறித்து மகசேசே அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்வானைச் சேர்ந்த சென் ச்சூ-சூ காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஆறாம் தரம் வரை மட்டுமே படித்துள்ள இவர் வீடின்றி வீதியோரம் உறங்குகிறார்.ஆனால், தினந்தோறும் காய்கறி விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் பல சிறார்களின் அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி செய்கிறார். இதன் மூலம் தாய்வான் சிறார்களின் எதிர்காலத்தையே மாற்றியமைத்து வருகிறார். ஆயிரக்கணக்கான சிறார்கள், சென்னுடைய நிதியுதவியில் படித்துள்ளனர். இதுவரை 333,000 டொலருக்கு சிறார்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புறுபவர்களுக்கும் பாடசாலை நூலகங்கள் கட்டவும் இவர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். இவரது சிறந்த சமூக சேவையைப் பாராட்டி மகசேசே விருது வழங்கப்படுகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென் தெரிவிக்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார். பிலிப்பைன்சின் முன்னாள் அதிபரின் பெயரால் ராமன் மகசேசே விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது |
Tags :
செய்திகள்
மனம் மாறிய திருடன் நகையுடன் மன்னிப்புக் கடிதமும் வழங்கினான்
| ||||||||
இவரது வீட்டில் திருடிய திருடன் , தான் திருடிய நகையை மீண்டும் எடுத்த வீட்டில் போட்டுவிட்டு மன்னிப்புக் கேட்டு கடிதம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சென்னை கோட்டூர்புர இவரது வீட்டில் கடந்த 22ஆம் திகதி மர்ம நபர் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து,70 பவுண் தங்க நகையையும் ரூ. 2 இலட்சத்தையும் திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார். வீட்டுக்குத் திரும்பி வந்த அசார், வீட்டில் நகையும், பணமும் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர், கோட்டூர்புரம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அந்த வீட்டின் முன் ஒரு பை கிடந்ததுள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் திருடப்பட்ட நகையும் ஒரு கடிதமும் இருப்பதைக் கண்டு அசார் ஆச்சரியமடைந்தார். அக் கடிதத்தில் வீட்டில் திருடியதற்கு மன்னிப்புக் கோரப்பட்டிருந்ததாம். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
Tags :
செய்திகள்
சர்வதேச சந்தையில் பேஸ்புக் பாரிய வீழ்ச்சி: பெரும் நட்டத்தை நோக்கி செல்கிறது
, 30 யூலை 2012, |
நேற்றைய பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, அதன் மதிப்பு சுமார் 15 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. சமீபத்தில் ஒரு பில்லியன் டொலர்களை திரட்டும் வகையில் பங்கு சந்தைக்குள் நுழைந்த பிறகு பேஸ்புக், தனது நிதிநிலை அறிக்கையில் 160 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது என்று வந்துள்ள செய்திகளை அடுத்து, அதில் முதலீடு செய்தவர்கள் குறிப்பாக கவலையடைந்துள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே பேஸ்புக் பங்கின் மதிப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் |
Tags :
செய்திகள்
ஞாபக சக்தியை இழக்க வைக்கும் மாத்திரைகள்
|
Tags :
செய்திகள்
மின்னஞ்சல் மூலம் பெரிய அளவுடைய கோப்புக்களை பரிமாற்றம் செய்வதற்கு
29 யூலை 2012, |
இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிய பின், அதனை இயக்கி Files to upload எனும் பகுதியில் காணப்படும் Add files/Add folder எனும் அம்சத்தின் ஊடாக பரிமாற்றம் செய்ய வேண்டிய கோப்புக்களை இணைக்க வேண்டும். பின்னர் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களது மின்னஞ்சல் முகவரியை உட்செலுத்தி, செய்தி ஒன்றினையும் டைப் செய்த பின்னர் Update now என்பதனை கிளிக் செய்யவும். இதன் பின்னர் குறிப்பிட் கோப்பு தரவேற்றப்பட்டு அனுப்பப்படும். அனுப்பிய பின் மின்னஞ்சலுக்கு செய்திகளுடன் ஒரு இணைப்பு அனுப்பப்படும், அதனை கிளிக் செய்து குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். |
Tags :
செய்திகள்
பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி
, 30 யூலை 2012, |
அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தை விரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது. குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேசமயம் மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், வீட்டில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன |
Tags :
செய்திகள்
கணக்குகளுக்கு மிக எளிதான வகையில் தீர்வுகளை காண
திங்கட்கிழமை, 30 யூலை 2012, |
இந்த கால்குலேட்டரை கூகுளின் முகப்பு பக்கத்தில் பார்க்க முடியாது. ஆனால் தேடல் பக்கத்தில் எளிதான கணக்கு(For Ex: 12+34) ஒன்றை செய்து, Search என்று கிளிக் செய்தால் கால்குலேட்டர் வருகிறது. 34 வகையான பட்டன்களை கொண்ட இந்த கால்குலேட்டரில் எல்லா வகையான கணக்குகளையும் போடலாம் |
Tags :
செய்திகள்
Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
திங்கட்கிழமை, 30 யூலை 2012, |
தற்போது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர். இந்த புதிய பதிப்பில் முக்கிய மாற்றமாக மென்பொருளின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் கொடுத்துள்ளனர். மேலும் மென்பொருளில் தொழில் நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பை விட தற்பொழுது சிறந்து விளங்கும். இருப்பினும் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில்(சோதனை பதிப்பு) வெளியிட்டு உள்ளனர். ஆகவே இந்த மென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது |
Tags :
செய்திகள்
வாழை இலையின் மருத்துவ குணங்கள்
திங்கட்கிழமை, 30 யூலை 2012, |
1. அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். 2. வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள். 3. அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின்(Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும். 4. குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும். 5. மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம் |
Tags :
மருத்துவம்
இயற்கையாகவே எலும்புகளை உருவாக்கலாம்: ஆராய்ச்சியில் தகவல்
30 யூலை 2012, |
இவர்கள் மரபணுக்கள் மூலமாக, அதாவது ஒரு வித புரோட்டீன் மூலமாக எலும்பு திசுவை உருவாக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமாக எந்த விதமான எலும்பையும் உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். முதலில் இவற்றை விலங்குகளுக்கு பொருத்தி சோதனை செய்ய உள்ளனர். பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும். விபத்தில் அடிபட்டாலோ அல்லது இயற்கையாக எலும்பு சேதமடைந்தாலோ அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
Tags :
செய்திகள்
Google Handwrite: இணைய உலகில் புதிய புரட்சி
30. யூலை 2012, |
எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Tags :
காணொளி
ஒன்லைனில் கணனி வைரஸ்களை ஸ்கான் செய்வதற்கு
30. யூலை 2012, |
அவற்றின் அடிப்படையில் தற்போது Avira வும், Cloud Protection எனும் முற்றிலும் இலவசமான தனது ஒன்லைன் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலும் இலகுவாகவும், வேகமாகவும் கணனிகளை ஸ்கான் செய்ய முடிவதுடன், புதிய அப்டேட்களின் பயன்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு காணப்படுகின்றது. மேலும் கணனியில் இதனுடன் தொடர்பான அதிகளவு கோப்புக்களை சேமிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனினும் 1.5 MB கோப்பு அளவுடைய சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். |
Tags :
செய்திகள்
உடல் எடை எளிதில் குறைய
உடல் எடை எளிதில் குறைய |
30. யூலை 2012, |
ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலும் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்து விடுகின்றது. 2. ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும். 3. பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும். 4. ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும். 5. எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும். 6. ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும். 7. எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தி விடும். ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் |
Tags :
சுகாதார செய்திகள்
ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8
|
Tags :
_விஞ்ஞானம்
நல்லூர் உற்சவம் கொடியேற்றம் தொடங்கி இற்றைவரை 20 பவுண் தங்க
29 யூலை 2012,
எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கோவில் வளாகத்தில் பெண்களும், பக்தர்களின் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கோயிலில் தற்போது 600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் 150 பேர் கூடுதலாக அண்மையில் இணைக்கப்பட்டுள்ளனர்

யாழ். அரியாலையில் இனந்தெரியாதோரால் காந்தி சிலை உடைப்பு
29 யூலை 2012,
இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி குணசேகர தெரிவித்துள்ளார்.
Tags :
புகைப்படங்கள்
பிரான்சில் பயங்கர புயல் காற்று: பாதுகாப்புடன் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை
|
Tags :
செய்திகள்
ரயிலின் கூரை மீது பயணத்தை தவிர்க்க இந்தோனேசியா அதிகாரிகள் புது திட்டம்
|
Tags :
தகவல்கள் புகைப்படங்கள்
Powered by Blogger.