சர்வதேச சந்தையில் பேஸ்புக் பாரிய வீழ்ச்சி: பெரும் நட்டத்தை நோக்கி செல்கிறது

 
, 30 யூலை 2012,
சமூக வலைத்தளமான பேஸ்புக் பங்கின் மதிப்புகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
நேற்றைய பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, அதன் மதிப்பு சுமார் 15 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது.
சமீபத்தில் ஒரு பில்லியன் டொலர்களை திரட்டும் வகையில் பங்கு சந்தைக்குள் நுழைந்த பிறகு பேஸ்புக், தனது நிதிநிலை அறிக்கையில் 160 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது என்று வந்துள்ள செய்திகளை அடுத்து, அதில் முதலீடு செய்தவர்கள் குறிப்பாக கவலையடைந்துள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே பேஸ்புக் பங்கின் மதிப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.