மனம் மாறிய திருடன் நகையுடன் மன்னிப்புக் கடிதமும் வழங்கினான்

_
30.07.2012.டாக்டரான சைதாப்பேட்டை ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் எச்.அசார் உசேன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டில் திருடிய திருடன் , தான் திருடிய நகையை மீண்டும் எடுத்த வீட்டில் போட்டுவிட்டு மன்னிப்புக் கேட்டு கடிதம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சென்னை கோட்டூர்புர இவரது வீட்டில் கடந்த 22ஆம் திகதி மர்ம நபர் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து,70 பவுண் தங்க நகையையும் ரூ. 2 இலட்சத்தையும் திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார். வீட்டுக்குத் திரும்பி வந்த அசார், வீட்டில் நகையும், பணமும் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து அவர், கோட்டூர்புரம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அந்த வீட்டின் முன் ஒரு பை கிடந்ததுள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் திருடப்பட்ட நகையும் ஒரு கடிதமும் இருப்பதைக் கண்டு அசார் ஆச்சரியமடைந்தார். அக் கடிதத்தில் வீட்டில் திருடியதற்கு மன்னிப்புக் கோரப்பட்டிருந்ததாம். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.