உங்கள் வீட்டில் கணபதி ஹோமம் ஏன் செய்யவேண்டும் தெரியுமா

கணபதி ஹோமம் புதிய தொழில் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்கும். மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி  ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள்,  மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.
கணபதி ஹோமம் செய்வதினால் திருமண தடை, 
வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், செல்வ செழிப்பும் வந்து 
சேரும். ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள்  உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு
 அடைய செய்யும்.
இறைவழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும். ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும்.
 
கணபதி ஹோமம் செய்வதினால்தொழில் மற்றும் நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம்  ஏற்படும்.
 
ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும். கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள்  அதிகமாகும்.


திரு திருமதி லோவிதன் தம்பதியினரின் திருமண நாள் வாழ்த்து 19.01.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் (12வது) பன்னிஇரண்டாவது திருமண நாள் 19.01.2024..இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 வாழ்த்துகின்றனர்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவையிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் சிவசுப்பிரமணியர் ஆசியுடன்
.தம்பதியினருக்கு 
திருமண வாழ்த்து கவிதை.
.இன்று திருமண நாள் காணும் அன்பு தம்பதியருக்கு
இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட நல்வாழ்த்துக்கள்  
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை "திருமண நாள் வாழ்த்து" ( Wedding Anniversary Wishes ) கவிதை மூலம் வாழ்த்துவோம்
 சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் .





இனைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.
வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக
 கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் தமிழர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மற்றும் உலக வாழ் தமிழர்களுக்கு பிறந்திருக்கும் இந்த தை, புது வழி காட்டட்டும் என் இணையஉறவுகள் முகநூல் நண்பர்கள் 
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் என்  இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகும் 
தை பிறக்க, யாவரின் வாழ்வு சிறக்க, வாழ்க வளமுடன்.






 

ஓட ஓட கெட்ட சக்திகளை துரத்தும் மந்திரம். நம்பிக்கை உள்ளவர்கள் ஓதி நன்மை பெறலாம்

மந்திரங்கள் என்பது ஏதோ ஒரு வகையில் முன்னோர்களால் அனுபவித்து அதன் உண்மையையை உணர்ந்தே கூறிவிட்டு சென்றவை. இம் மந்திரங்களை இந்துக்கள் மற்றும் சைவர்கள் இப்பொழுதும் ஓதி பயனடைகிறார்கள். 

 பல மந்திரங்கள் பல தேவதைகளையோ, அவதாரங்களையோ நோக்கியே ஓதி அவற்றை வசியம் செய்து நன்மை அடைகின்றார்கள். ஒரு மந்திரத்தை தானே உற்சாடம் செய்து ஓதி பயனடைவதே அதிக நன்மையை தரும்.

 சில மந்திரங்களை ஓத ஓத எம்மை சுற்றி உள்ள அல்லது எமக்குள் உள்ளே மனதுள் இருக்கும் எதிர் மறை சக்திகள் வெளியேற்றி எமக்கு ஒரு பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கும். 

 இது பலரின் அனுபவமாகும். தியானம் செய்யும் ஒருவர் சில சில வகை மந்திரங்களை ஒதிவிட்டு தியானம் இருந்தால் விரைவில் தியான உச்சத்தை அடைவார்கள். 
சிலர் தம்மில் ஒரு மின்சார அலை எழுவதையும் உணர முடியும். இது இக்கலி யுகத்திலும் உண்டாவது அனுபவித்தவர்களின் சாட்சியமாகும். எதையும் நாம் செயல் முறையில் உணராமல் விவாதம் செய்ய இயலாது.

அவ்வகையில் நாம் முதலில் விநாயகப் பெருமானின் மந்திரத்தை பார்க்கலாம். எத்தெய்வம் எங்கு இருக்குறதோ இல்லையோ அனத்துக் கோவில்களிலும் இருப்பவர் விநாயகர் ஆவார்.

 அதனால் அவரின் ஒரு சிறிய இரண்டு வரி மந்திரத்தின் பெரிய நன்மையை பார்ப்போம். மந்திரம்:- “ஓம் நமோ ஏரம்ப மத மோதித மம சங்கஸ்ட நிவாரய நிவாரய பிரசித பிரசித” இதன் நன்மைகளும் ஓதும் முறையும்:

1.இம் மந்திரத்தை எவ்வேளையிலும் ஓதலாம். 

2.இம் மந்திரத்தை ஓத துடக்கு அல்லது மாமிசம் ஒரு தடை இல்லை.
 
3.இம் மந்திரத்தை குறைந்தது 16 தடவைகள் அல்லது அதர்க்கு மேலும் ஓதலாம். 
4.அதிகம் ஓத ஓத உங்களை அறியாத மயக்க நிலை உண்டாகும். 

5.இம் மந்திரத்தை ஓத ஓத கனவில் அல்லது தியான நிலையில் மத யானை அல்லது பிள்ளையார் காட்ச்சி கொடுப்பார்.
 
மிகுதி விடயங்களை நீங்களே அனுபவித்து அறியவும்.






 

கண்கண்ட தெய்வமான ஐயப்பா சுவாமி அருளும் பொருளும் அள்ளித்தருவார்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி!
ஐயப்ப வழிபாடு மிக எளிமையானது. இந்த வழிபாட்டுக்குத் தேவை ஒழுக்கம். ஒழுக்கத்துடன் இருந்துவிட்டால் மனதில் அமைதி 
வந்துவிடும். மனதில் அமைதி குடிகொண்டுவிட்டால், ஆரவாரத்துக்கோ
 கர்வத்துக்கோ இடமிருக்காது. கர்வமில்லாத போது, 
பக்தி வந்துவிடும். பக்தியின் உச்சபட்ச நிலை 
என்பதுதான் சரணாகதி. ‘உன்னைத் தவிர எனக்கு எவருமில்லை.
 நீயே எனக்கு கதி’ 
என்று முழுவதும் ஒப்படைத்துவிட்டு செயல்படுகிற
 புத்தி வந்துவிடும்.
‘எனக்கு எப்போ என்ன தரணும்னு அவனுக்குத் தெரியும்யா. அவன் பாத்துக்குவான்’ என்று நாம்பாட்டுக்கு நம்முடைய வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிற மனோநிலை 
வந்துவிடும்.
’’ஐயப்ப விரதத்தின் நோக்கமும் பூஜையின் தாத்பரியமும் அப்படியான சாத்வீக மனநிலைக்கு நம்மை மெல்ல மெல்ல தயார்படுத்துகிற முயற்சிதான்’’ என்கிறார் ஐயப்ப உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமணியம்.ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.
தர்ம சாஸ்தா காயத்ரீ:
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை 
இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும்
 என்பது உறுதி.
இதேபோல், ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம் வலிமை மிக்கது.
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி! அருளும் பொருளும் அள்ளித்தருவார்  சுவாமி.யே சரணம் ஐயப்ப



உங்கள் அனைவர்க்கும் எனது இணையங்களின் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

.இணைய உறவுகள் முகநூல் நண்பர்கள்  உலகவாழ் மக்கள்  அனைவரும் .01-01-2024.இன்று புதிய வருடத்தின் தொடக்க நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஆங்கில நாட்காட்டியில் முதல் நாளில் வருகிறது. இந்த பண்டிகையை ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். இன்னும் சில நாட்களில் தமிழ்  புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. எனவே அதனை நாம் சிறந்த முறையில் 
வரவேற்க வேண்டும்.
இந்த பண்டிகையில் நாம் செய்யும் முக்கியமான செயல்களில் ஒன்று நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதும், ஆகும்.
நாம் இறைவனை பிரார்த்தனை செய்வோம் அனைவர்க்கும் எனது   நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
இணைய உறவுகள் முகநூல் நண்பர்கள்  உலகவாழ் மக்கள்  அனைவருக்கும் அன்பான பாசமான இனிய
01-01-2024-புதிய வருட  நல் வாழ்த்துக்கள் 




பிறந்தநாள் வாழ்த்து திரு ஆறுமுகசாமி மதன் 01.01.2024

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டதிரு ஆறுமுகசாமி மதன்
அவர்களுடைய  பிறந்தநாள். 01.01.2024.இன்று   
பிறந்தநாள் காணும் இவரை அன்பு  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மார் 
 உறவினர்கள் நன்பர்கள்.இவரை  இவரை தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்   இறைஅருள் பெற்று  இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 


Powered by Blogger.