மந்திரங்கள் என்பது ஏதோ ஒரு வகையில் முன்னோர்களால் அனுபவித்து அதன் உண்மையையை உணர்ந்தே கூறிவிட்டு சென்றவை. இம் மந்திரங்களை இந்துக்கள் மற்றும் சைவர்கள் இப்பொழுதும் ஓதி பயனடைகிறார்கள்.
பல மந்திரங்கள் பல தேவதைகளையோ, அவதாரங்களையோ நோக்கியே ஓதி அவற்றை வசியம் செய்து நன்மை அடைகின்றார்கள். ஒரு மந்திரத்தை தானே உற்சாடம் செய்து ஓதி பயனடைவதே அதிக நன்மையை தரும்.
சில மந்திரங்களை ஓத ஓத எம்மை சுற்றி உள்ள அல்லது எமக்குள் உள்ளே மனதுள் இருக்கும் எதிர் மறை சக்திகள் வெளியேற்றி எமக்கு ஒரு பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கும்.
இது பலரின் அனுபவமாகும். தியானம் செய்யும் ஒருவர் சில சில வகை மந்திரங்களை ஒதிவிட்டு தியானம் இருந்தால் விரைவில் தியான உச்சத்தை அடைவார்கள்.
சிலர் தம்மில் ஒரு மின்சார அலை எழுவதையும் உணர முடியும். இது இக்கலி யுகத்திலும் உண்டாவது அனுபவித்தவர்களின் சாட்சியமாகும். எதையும் நாம் செயல் முறையில் உணராமல் விவாதம் செய்ய இயலாது.
அவ்வகையில் நாம் முதலில் விநாயகப் பெருமானின் மந்திரத்தை பார்க்கலாம். எத்தெய்வம் எங்கு இருக்குறதோ இல்லையோ அனத்துக் கோவில்களிலும் இருப்பவர் விநாயகர் ஆவார்.
அதனால் அவரின் ஒரு சிறிய இரண்டு வரி மந்திரத்தின் பெரிய நன்மையை பார்ப்போம். மந்திரம்:- “ஓம் நமோ ஏரம்ப மத மோதித மம சங்கஸ்ட நிவாரய நிவாரய பிரசித பிரசித” இதன் நன்மைகளும் ஓதும் முறையும்:
1.இம் மந்திரத்தை எவ்வேளையிலும் ஓதலாம்.
2.இம் மந்திரத்தை ஓத துடக்கு அல்லது மாமிசம் ஒரு தடை இல்லை.
3.இம் மந்திரத்தை குறைந்தது 16 தடவைகள் அல்லது அதர்க்கு மேலும் ஓதலாம்.
4.அதிகம் ஓத ஓத உங்களை அறியாத மயக்க நிலை உண்டாகும்.
5.இம் மந்திரத்தை ஓத ஓத கனவில் அல்லது தியான நிலையில் மத யானை அல்லது பிள்ளையார் காட்ச்சி கொடுப்பார்.
மிகுதி விடயங்களை நீங்களே அனுபவித்து அறியவும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen