சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.
வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக
கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் தமிழர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மற்றும் உலக வாழ் தமிழர்களுக்கு பிறந்திருக்கும் இந்த தை, புது வழி காட்டட்டும் என் இணையஉறவுகள் முகநூல் நண்பர்கள்
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் என் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகும்
தை பிறக்க, யாவரின் வாழ்வு சிறக்க, வாழ்க வளமுடன்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen