தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி பெருந்திருவிழா அனுமதி தொடர்ப செய்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடாத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை.தொண்டமானாறு 
ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய பெருந்திருவிழா வரும் 08-08-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழாக்களில்
பின்பற்றப்படவேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பெருந்திருவிழாவை
 முன்னிட்டுபுதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் உள்ளிட்டோரின் பங்களிப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
இந்த ஆண்டு பெருந்திருவிழாவை நடாத்துவதற்கு அனுமதியில்லை.ஆலய உள்வீதியில் மட்டுமே வழிபாடுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிறப்பு தனியார், அரச பேருந்துகள் சேவைகள் ஈடுபட அனுமதியில்லை என்பதுடன் வெளியூர் பக்தர்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஆலய சுற்றாடலில் வீதிகளில் மண்டகப்படி வைத்தல், பிரசாதம் வைத்தல், தாக சாந்தி, அன்னதானம் வழங்கல் என்பன முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையில் அங்கபிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், காவடி – தூக்குக் காவடி எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களின் போது கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத நிலை காணப்படுவதால் மேற்படி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது
ஆலய சுற்றாடல் மற்றும் ஆலயத்தை அண்டிய பகுதியில் அடியவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், கலை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன
ஏற்கனவே ஆலய சூழலில் இயங்கி வந்த கடைகள் மாத்திரமே தொடர்ந்தும் இயங்கிவர அனுமதிக்கப்படும். எனினும் இயங்கிவரும் கடைகளை விரிவாக்க அனுமதியில்லை.ஆலய சூழலிலுள்ள வெற்றுக் காணிகளிலோ அல்லது கட்டடங்களிலோ கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதுடன் நடமாடும் வியாபாரமும் 
அனுமதிக்கப்படாது.
இந்த ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்கள பாலத்துடனான போக்குவரத்து இடம்பெறாது.ஆலய வழிபாடுகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.அடியவர்கள் நீண்ட நேரம் ஆலயத்தில் தரித்து நிற்பதற்கு
 அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போக்குவரத்துப் பாதைகள் தடைப்படுத்தப்படும் போது பிரயாணிகள் மாற்றுவழிப் பாதையினைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சினால் காலத்திற்கு காலம் வெளியிடப்படும் சுகாதார சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற்றுடன் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் கூறப்பட்ட சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை செல்வச்சந்திநிதி ஆலய வழிபாட்டுக்காலங்களில் ஆலய சுற்றாடல்களில் அடியார்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





உங்கள் வீட்டில் லட்சுமி கடாச்சம் நிறைய நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
ஓம் மகாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்நீ ச தீமஹி தன்னோ லட்சுமி பிரச்சோதயாத்’இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து, அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி தன்னை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவி உடனடியாக வருவாள்.
உப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். சுத்தம் உள்ள இடத்திற்குத் தான் திருமகள் வருவாள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டும்.
திருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சுமியின் சிலைக்கு, தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும். சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது 
லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான். எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
திருமகளுடன் விநாயகரையும் வழிபடுவது, வீட்டில் செல்வம் கொழிக்கச் செய்யும். எனவே லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் சேர்த்து வைத்து வழி படுங்கள். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் 
கூடுதல் சிறப்பு
துளசி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. லட்சுமி வசிக்கும் இடமாகவும் துளசி செடி கருதப்படுகிறது. எனவே துளசி செடி முன்பு, நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.சங்கு, திருமகளின் கணவரான திருமாலுக்கு பிடித்த ஒன்றாகும். எனவே வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்
தாமரை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். எனவே தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்
ல்லாங் குழலில் ஒரு பட்டுநூலை கட்டி, அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும். 
அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும். 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத் தீர்த்தத்திருவிழா 25.07.21



 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத் தீர்த்தத்திருவிழா 25.07.21..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தீர்த்த திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  பால்குடம், எடுத்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.இன்றைய நாளில் அகிலம் போற்றும் அன்னை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனை  தரிசிக்க பலமாநிலங்களில்வந்திருந்த பக்தர் புடை சூழ புஸ்கரணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்ன    
என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 
தீர்த்தத்திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 24.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா
24-07-2021..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் நான்கா வது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் நாற்பத்தி ஐந்தாவது  பிறந்தநாள்.23.07.2021, இன்று சுவிஸ் சில் குடும்ப  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.
அன்புப் பிள்ளைகள்
அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா சித்தி மார் 
சகோதர சகோதரிகள்  மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,நவற்கிரி அப்பாவையிரவர் நவற்கிரி அப்பாச்அம்பாள் நல்லூர் முருகன் சன்னதி முருகன்  நோர்வேமுருகன் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய்
நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
,வாழ்கவளமுடன்
( இவருக்கு பிள்ளைகள் பிறந்தநாள் அன்பளிப்பாக சுவிஸ் செல்வதற்கு  விமானசீ ட்டைக் கொடுத்துள்ளார் 
என்பதை மிக  மகிழ்ச்சியுடன்  குறிப்பிடத்தக்கது) 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



உங்கள் வீட்டில் சுபீட்சம் பெருக லட்சுமி குபேரனை இப்படி வழிபாடு செய்தல் போதுமாம்

குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார். அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார்.அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, நாணயங்களை வைத்து வழிபட வேண்டும். சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது.வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது. 
லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி 
வரை குபேர காலமாகும்
இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.
இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு
 இருக்காது. 
குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத் தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் 
போட வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என விரதமிருந்து பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க
 வேண்டும்.

மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.ஒன்பது நாட்களும்
 உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். 
அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும்.அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும்.
அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும்.
 செல்வம் நிலைக்கும்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.21

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  தம்பதிகளின் இருபத்தி எட்டாவது திருமண நாள்
 22.07.2021.இன்று இவர்களை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா
தம்பி மார் மச்சாள் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
தம்பதியினர்  நவக்கிரி மாணிக்க பிள்ளையார் சன்னதி முருகன் 
இறை அருள் பெற்று  
   பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென  மனமார வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் (குணம் )-19.07.21

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்மாநிலத்தில்  வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்
  (குணம் )அவர்களின்
பிறந்தநாள் 19.07.2021 இன்று. இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 மைத்துனர் உற்றார் உறவினர்கள் பேர்ண்முருகன்  இறை அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் 
எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தீர்த்தத்திருவிழா 18.07.2021

சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன 
தீர்த்தத்திருவிழா 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  பூசை
 வழிபாடுகளுடன்   . .
அடியவர்கள் கூ ட்டத்துடன்  அருள்மிகு சிவன்கோவில்  தீர்த்தத்திருவிழா 
 பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் தீர்த்தத்திருவிழா  மிகச்சிறப்பாக நடை பொற்றது
 தீர்த்தத்திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 17.07.2021

சுவிற்சர்லாந்து சூரிச்சில்  அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன 
ரதோற்சவம் ( தேர்த்திருவிழா) 17.07.2021,அன்று சனி க்கிழமை  பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக  . .
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக அருள்மிகு சிவன்
திருத் தேரில் அமர்ந்து
வீதி உலாவந்தார் எம் பெருமானின் தேர் திருவிழாமிகச்சிறப்பாக நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் திரு வீதி தேரில் உலா வந்தார்
 தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.21

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் எழுவதாவது  பிறந்தநாள் இன்று 17..07.2021,தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்   கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,நவற்கிரி அப்பா வயிரவர் 
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் 

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





உங்கள் பூஜை அறையில் இதை வைத்தால் நடக்கும் அற்புதங்கள்

இறை வழிபாட்டில், மயில் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.மயில்-
 நம் நாட்டின்
தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து 
ஆடுவது வாடிக்கை.
அப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்.வீட்டின் முன்பகுதியில் 
அந்த மயில் இறகை
சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.-

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.