புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலின் ஒரு கதையுண்டு

கண்ணகை அம்மன் கோயில்.
வரலாற்றில் ஒரு கதையுண்டு கண்ணகி மதுரையை எரிந்து விட்டு இங்குவந்து தங்கியதாக மதுரைக்கும் புங்குடுதீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தமிழரசி அக்காவின் கட்டுரையில் படித்த நினைவு..
https://inithal.blogspot.fr/search…
எதிரிகளிடம் இருந்து தங்கள் பெண்களை காப்பாற்றிக்கொள்ள புங்குடுதீவு வீராமலையில் கொண்டுவந்து பாதுகாப்பாக விடுவார்களாம் மதுரை சிற்றரசர்கள் ..
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேர் திருவிழா அன்றே புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி
 கஞ்சியும் இங்கு சிறப்பு.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


முழு நிலவில் வரும் சித்திரா பவுர்ணமி விரதம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி என்கிற முழு நிலவு வருகின்ற நாளே சித்திரா பவுர்ணமி எனப்படுகிறது. இந்த நாள் தமிழகத்தில் மாபெரும் விழாவாக தேனி மாவட்டம் கோடி நாயக்கனூர் அருகிலுள்ள கோடாங்கி பட்டியிலும், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவிலிலும், மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 
இந்த சுப நாளுக்கு பலவித கதைகள் பேசப்படுகின்றன. மனிதனுடைய வாழ்நாளை நிர்ணயம் செய்கின்ற எமதர்மராஜனின் அமைச்சராக இருக்கக்கூடிய சித்திர குப்தன் என்பவரின் பிறந்த நாளே சித்திரா பவுர்ணமி எனப்படுகிறது. 
அவருடைய கதை ஒரு படிப்பினை கூறுவதாகவும், குழந்தைகளின் ஆயுள் வளர்ச்சி கல்வி மேன்மை ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாகவும் அமைகிறது. இவர் பற்றிய ஒரு புராணக் கதையை நாம் படிப்பதாலும் உயர்ந்த பலன்களை அடையலாம். 
சித்திரகுப்தன் திருக்கதை............... ஒரு சமயம் இந்திரலோகத்தில் தேவேந்திரனின் மனைவி இந்திராணி தன் மாளிகை வாயிலில் நவதானியங்களை உலர்த்திக் கொண்டிருந்தாள். சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பசு அதை நெருங்கி திண்ண தொடங்கியது. இதைக் கண்ட இந்திராணி அதை துடைப்பத்தால் 
அடித்து விட்டாள். 
இதனால், கடுமையான கோபம் கொண்ட பசு, "நான் கோமாதா என்றும் பார்க்காமல் துடைப்பத்தால் அடித்து விட்டதால் என் வயிற்றில் குழந்தைகள் பிறக்காமல் போகட்டும்'' என்று சாபம் விட்டு விட்டது. வீட்டிற்கு திரும்பிச் சென்ற பசு கவலையுடன் நின்று கொண்டிருந்தது. அதன் எஜமானி குழந்தை வரம் பெறுவதற்காக முனிவர் ஒருவரிடம் மாம்பழம் ஒன்று வாங்கி வந்திருந்தார். 
அதை சாப்பிட்ட பின் விதையையும், தோலையும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டாள். அதை பசு சாப்பிட்டு விட்டது. பின் 10 மாதத்தில் எஜமானிக்கு ஒரு பெண் குழந்தையும், பசுவிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த இரு குழந்தையும் எஜமானி அம்மாள் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். அந்த ஆண் குழந்தைக்கு சித்திரகுப்தர் 
என்று பெயரிட்டாள். 

அவன் வளர்ந்து வரும் சூழ்நிலையில் அறிவில் சிறந்தவனாக விளங்கினான். குறிப்பாக கணக்குப் போடுவதில் கெட்டிக்காரணாக திகழ்ந்தான். அந்த சமயத்தில் எமதர்ம ராஜன் சபையில், பிறக்கும் ஜீவன்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் வேலைக்கு ஆள்
 தேவைப்பட்டது. 
வான் வழியாக உலா வந்த எமதர்மன் சித்திரகுப்தனின் நுண்ணறிவைக் கண்டு வியப்படைந்து தனக்கு உதவியாளராக கணக்கு எழுதும்படி கூறினார். சித்திரகுப்தன் அந்த பதிவியை ஏற்றுக்கொண்ட பிறகு கர்ணிகாம்பிகை, பிரபாவதி என்ற 2 பெண்களை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியே பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 
விரதத்தின் சிறப்பு............ முன்னொரு காலத்தில் அமராவதி என்ற பணக்கார பெண்மணி உலகத்தில் உள்ள எல்லாவிதமான தான தர்மங்களையும் செய்து வந்தாள். ஆனால் சித்திரா பவுர்ணமி விரதத்தை மட்டும் இந்த பிறவியில் செய்யாமல் விட்டு விட்டாள். 
அமராவதி காலமான பிறகு பாவ புண்ணிய கணக்குகளை படித்த எமதர்மராஜன் இத்தனை பூஜைகள் செய்து வந்த நீ, சித்திர குப்த விரதத்தை கடைப்பிடிக்காதது ஏன்? என்று கேட்டு, அதை விட்ட காரணத்தால் நீ நரகத்திற்கு போ என்று உத்தரவிட்டார். 
உடனே அமராவதி, தர்ம தேவையான எமதர்ம ராஜனிடம் எனக்கு 3 நாழிகை எனக்கு உயிர் கொடுத்தால் சித்திரகுப்தவிரதத்தை முடித்து விடுகிறேன் என்றாள். எமதர்மன் அதற்கு சம்மதம் கொடுக்க, காலமான அமராவதி உயிர் பிழைத்து எழுந்தாள். 
சித்திரா பவுர்ணமி நாளான அன்று ஆலயங்களிலும், இல்லங்களிலும் நடைபெறுகின்ற பூஜை விதிகளை போல அவளும் முறையாக சித்திரகுப்த பூஜைகளை செய்து அந்த விரதத்தின் பலனாக, சொர்க்க லோகத்துக்கு சென்றாள். அமராவதியின் கதையைக் கேட்ட
 இந்திராணி, சித்திரா பவுர்ணமி விரதத்தினைக் கடைப்பிடித்து அதன் பலனாக பசுவை அடித்த சாபத்தில் இருந்து விடுதலை பெற்று ஜெயந்தன் என்ற மகனையும், ஜெயந்தி என்ற மகளையும் பெற்றெடுத்தாள். 
அவருடைய பரம்பரை சிëத்திர குப்தர் பூஜையால் நன்கு வளர்ந்து அறிவுள்ள குழந்தைகளை பெறும் பயனே ஏற்பட்டது. சித்திரா பவுர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்
. இந்நாளில் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். 
இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். 
பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அனுஷ்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதம் 
அனுஷ்டிக்கக் கூடாது.
 இங்கு அழுத்தவும் நிலாவரை செய்தி >>>

பிறந்தநாள்வாழ்த்து திரு செ.சுமிதரன் 26.04.18

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் திரு  செ.சுமிதரன் அவர்கள் 26.04.2018. இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர் ஐ பி சி தொலைக்காட்சியில் யேர்மன் இணைபாளராக செயலாற்றிவருகின்றார்
இவர் என்றும்வாழவில்
தாாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் அனைவரும்  இவரை  
  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  எல்லாநமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.சிங்கராஜா காண்டீபன் 23.04.18

 யாழ் அரியாலையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில் (டிற்ரிக்கோனில்)  வசிக்கும்  திரு சிங்கராஜா காண்டீபன்.(காண்டீ) அவர்களின்  பிறந்தநாள்
23.04.2018 இன்று. இவரை  அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்   மாமா  மாமி சகோதர்கள் மருமக்கள்  , மசன் மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி
ம​ற்றும் அரியாலை ,ஊர் உறவினர்களும் நண்பர்கள் 
அனைவரும்  இவரை  
நல்லூர் முருகன்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  எல்லாநமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் 22.04.18.

div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் ,22.04.2018. இன்று   ஐம்பதாவது .பிறந்த நாளை மிகசிறப்பாக கொண்டாடினர்   இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருமண நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி நாதன்&சுதா.20.04.18

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .கதிரமலைநாதன் (நாதன்&சுதா) தம்பதிகளின் இருபத்திஆறாவது  ஆண்டு திருமணநாள் 
20.04.2018. இன்று  திருமண நாள் காணும்  
 தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப்பிள்ளைகள்,மாமா மாமி   மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி பேரப்பிள்ளைகள் பெறாமக்கள்   உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து இவர்களை 
 இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ...... 
 வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நாம் கணபதி ஹோமத்தை இப்படிச் செய்வதால் நல்ல பலன் கிடைக்குமாம்

எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம்
 ஏற்பட்டால் 
கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்மையை பெறலாம்.மஹாகணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக அமைகிறது. விக்ன விநாயகர் எல்லா தடையையும் நீக்கி வெற்றியை தேடி தருபவர். இன்னல்களை 
களைபவர்.
எல்லா புது முயற்சிகளுக்கும், கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும், திருமண முயற்சிகள் வெற்றியடையவும் விநாயக பெருமானை துதிப்பது நலம். யார்யாருக்கு கேது தசை நடக்கிறதோ, அவர்களும் மஹாகணபதி ஹோமம் செய்வது நல்லது.
இந்த ஹோமத்தை வருடம் ஒரு முறை செய்தால் வாழ்வில் வளமும், நலமும் பெருகும். ஒவ்வொரு மாதமும் தங்கள் பிறந்த நக்ஷத்திரத்தில் கணபதி ஹோமம் செய்வதால் வாழ்வில் தடைகள் 
அனைத்தும் நீங்கும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
பிறந்தநாள்வாழ்த்துதிரு நயினைவிஐன் 16.04.18

ஜேர்மன்  எசன் நகரில் வாழ்ந்து வரும் நயினைவிஐன் அவர்கள் ஊடவியலாளர், பொதுநலத்தொண்டர், கலைத்தொண்டர் என பல்துறைசார் கலைஞராக நிற்கின்ற நயினை மண் தந்த நயினைவிஐன்
 அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடம்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர்
தாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்தும்   அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை இவரை  இறைஅருள் பெற்று   நோய் நொடி 
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புது வருடபூசை 14.04.18

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புது வருடபூசை  14.04.2018
இன்று  மிக  சிறப்பாக எப்போதும் அன்பு கொண்ட .ஆலயகுருவால்  ஆலயத்தில்  நல்  புது வருட சிறப்புப் பூசை  நடைபெற்ற எம்பெருமான் அனைவர்க்கும்  புதுவருட அருள் கருணை புரிந்தார்  .
எல்லோருக்கும் இனிய புது வருட
 நல் வாழ்த்துக்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா 14.04.18

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம் 2018. பல ஆன்ம கோடிகளின் அல்லல்கள் இடர் நீக்கி அவர்களை ஆட்கொண்டு இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு
 ஈழத்திருநாட்டின் மணிமுடியாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் நகரத்தில் மருதமரத்தடியில் மாபெருங்கோயில் கொண்டு அருள்பாலிக்கும் மருதடி விநாயகருக்கு 14.04.2018 நண்பகல் 12.00 மணிக்கு தேர் உற்சவம்
 சிறப்பாக நடைபெற்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் கைவி­சேட நேரம14.04.18

அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார்  உறவினர் நண்பர்கள்
இணைய  வாசகர்கள்  ஆனந்தம் பொங்கிட
 அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  
தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து    விளம்பி ஆண்டு.14.04.2018 இன்று (சனிக் கிழமை) பிறந்தது.
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது  தமிழ் புத்தாண்டுநல்  வாழ்த்துக்கள் 

இன்று பிறக்­கும் விளம்பி ஆண்­டுக்­கான நல்ல நேரம் மற்­றும் கைவி­சேட நேரங்­கள் 
.14. 04. 2018. (இன்று) பகல் 12.15 முதல் 2. 10 மணி வரை
மாலை 06.21 முதல் 08.13 மணி வரை
16,.04.2018. (திங்­கள்­கி­ழமை) பகல் 12.30 முதல் 02.02 மணி வரை
இரவு 06.13 முதல் 07.24 மணி வரை சுபம் ...
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.18

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்  
(தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12.04.2018. 40வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை
அன்புப்பிள்ளைகள், 
மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து   நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் நோய்நொடிஇன்றி  இன்று போல் என்றும்

சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஆஞ்சநேயப் பெருமானை இப்படி வணங்கினால் குபேரனுக்கு இணையகும்

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது
 பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும். மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை (இதுதான் ஆஞ்சநேயர் அவதரித்த திருநாள்).
நட்சத்திரமும் அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் பூஜையை தொடங்குவது மிகவும் சிறப்பாகும். சித்திரையில் ஸ்ரீ ராமநவமி தினத்தில் தொடங்கலாம்.
மாதம் தோறும் கேட்டை நட்சத்திரத்தில், இவை எதுவும் இல்லாவிட்டால் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பூஜையைத் 
தொடங்கலாம். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு தம்பு. பிரபன் .11.04.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும்   திரு .தம்பு  பிரபன்  அவர்களின் பிறந்தநாள் 11.04..2018.இன்று  இவரை  அன்பு மனைவி  சகோதர்கள் மருமக்கள்  , மசன் மார்  
ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்
 நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  எல்லாநமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள்வாழ்த்து திரு பி.எச்.அப்துல்ஹமீத் 11.04.18

தாயகத்தை பிறப்பிடமாகவும் தற்போது உலகம் எங்கும் அன்றும் இன்றும் மக்களின் பாராட்டை  பெற்ற 
மிக  சிறந்த மூத்த  அறிவிப்பாளர் திரு  பி.எச்.அப்துல்ஹமீத்   அவர்களின். பிறந்தநாள் .11.04.2018 இன்று இவர் தாயகத்தில் புகழ் பெற்ற  மூத்த அறிவிப்பாளர் ஆவர்  அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள்
, நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் மூத்த அறிவிப்பாளர் திரு.பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் என்றும்
அவர்குரலும் அவர் மொழி அழகுபோல்
கலையும் அவர்காதலும் போல
நிலவின் ஒளியழகர்
நீங்கள் நீடுளிவாழ்க வாழ்க எனவாழ்தும்  இவர்களுடன் இணைந்து  இவர்  இறை அருள்பெற்று
 ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்.என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம்
 நீடுழி வாழ்கவாழ்க வென 
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாழ்விடமாகவும்  இப்போது நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி
.(முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபதாவது   திருமண நாள்  10.04.2018.இன்று இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் 
பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  இவர்களை நல்லுர்கந்தன் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார் இறை அருள்பெற்று சகல வளங்களும் பெற்று சந்தோஷசீரும் சிறப்புடன் 
பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
திருமண வாழ்த்து கவிதை திருமண நாள்வாழ்த்து கவிதை வாழ்த்துக்கள் உறவுகளே! வாழ்த்துக்கள் உங்களிற்கு! வாழ்த்துக்கள் உறவுகளே! வாழ்த்துக்கள் எங்களது! உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்! வானும் நிலவும் போல!
 இணைந்து வாழ வேண்டும்! காலச்சுழற்சி கொள்ளும் நிலவு வானுள் கரைந்தும் வளரும்! இன்பம் மட்டும் கூட்டி! இதய இராகம் மீட்டி! எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் 
ஊட்டி! வாழ வேண்டும் நீங்கள் வாழ்த்துகின்றோம் நாங்கள்! தமிழும் சுவையும் போல! கவியும் இசையும் போல! சகல செல்வத்துடன் 
குதுகுலமாய் வாழ வாழ்த்துகின்றோம் 
 எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே! கொட்டும் மழையும் பூவாய் பொழிய அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்! 
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வகுமாரன்.10.04.18.

 பளையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திருமதி  செல்வகுமாரன்(மாலா ) 
  அவர்களின்  பிறந்தநாள். (10.04.2018.) இன்று இவரை அன்புக்கணவர்  அன்புப்பிள்ளைகள்  அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா  மாமி மச்சான் 
மச்சாள் மார்  ,மற்றும்
 உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை    இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி
என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு .அற்புதராஜா இந்துசன் திரு .திருமதி ராம் .09.04.18

யாழ் தோப்பை பிறப்பிடமா​வும் நவற்கிரியிலும் வாழ்ந்து  த்ற்போது சுவிஸ் செங்கலனை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .அற்புதராஜா இந்துசன் மற்றும்  திரு .திருமதி. ஸ்ரீ ராம் .இந்துசா (கனடா) இவர்களின் .பிறந்தநாள்.09.04.2018. இன்று  இவரை அன்பு அம்மா மனைவி--  கணவர் பிள்ளைகள் 
சகோதர்கள் சகோதர்கள்
மாமா மாமி சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா மசன் மச்சாள் மார் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப் பிள்ளையார்  இறை அருள் பெற்று ​வாழ  
வாழ்த்து கின்றனர் 
இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்இவர்களை நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றன
 வாழ்க நலமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பணப்பெட்டியில் நமக்கு செல்வம் பெருக இவற்றை செய்யவும்

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. என்ன தான் கடினமாக உழைத்தாலும் 
கையில் ஒரு பைசா  கூட நிலைக்கவில்லையே 
 தொடர்ந்து எதாவது செலவு வந்துட்டேயிருக்கு என்று சொல்பவர்கள் இதனை முயற்சித்துப் பாருங்கள்….. நல்ல மாற்றங்களை 
உணர்வீர்கள்.வண்ணம் :
பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.
தூக்கம் :
எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல்
 குடிகொள்ளும்.
பூஜையறை :நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்துஇ வருமானம் குறைந்துவிடும். அதே போல உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது.
கடிகாரம் :
கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது.ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.
தரித்திரம் :
தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை துணியை அலசிய பின்னர் உதிரும் தண்ணீர்இதுடைப்பத்தின் புழுதி முற்றத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும்.
குபேரன் ஊறுகாய் பிரியர் :செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.
குப்பை :
மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.
கண் திருஷ்டி :வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.
கண்ணாடி :
வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.
லட்சுமி கடாட்சம்:பால்,தேன் தாமரை, தானியக்கதிர்,நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். இதனை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்திருந்தால் தொழிலுள்ள தடை நீங்க லாபம் கிடைக்கும்.
ஐந்து முக விளக்கு :
வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
செடிகள் :
வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவைஇவசீகர சக்தியைப் பாதிக்கும்.


வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர் சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். அதே போல வீட்டிற்குள் முட் செடிகளும் இருக்க
 கூடாது.
பணப்பெட்டி :பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்
முன் வாசல் :
வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் அதிர்ஷ்டத்தையும் தடுத்திடும்.
சுடுகாடு :
சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது. இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை 
வெளியேறும்.
வறுமை,அவமானம், உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
விளக்கு :
வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும் துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
சுத்தம்:
வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
புதுப்பணக்காரன் :இதையெல்லாம் கடைபிடித்து செல்வ வளம் பெருகியதும், புதுப் பணக்காரன் திமிரைக் காட்டிடக் கூடாது. கிடைத்த செல்வங்கள் நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடலாம்!
நிலாவரை.கொம் செய்திகள் >>

Powered by Blogger.